எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, October 09, 2008

முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்


Hi Malini
i am krishnan
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்...
இவ்ளோ அழக பாத்துருக்க மாட்டாங்க
and i am in love with you

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love

பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

பாடகர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி

இப்போதிருக்கும் நடிகர்களில் மாதவனுக்கு அடுத்து மிகவும் வசீகரமான
குரலுக்கு சொந்தக்காரர் சூர்யா. கவர்ச்சியும் கம்பீரமும் இளகும் தன்மையும் ஒருசேர
அமைந்ததுவிட்டது. வாரணம் ஆயிரம் படத்தின் "முன் தினம் பார்த்தேனே" பாடலின்
வரிகள் மேலே உள்ளவை. மணிரத்னத்திற்கு பிறகு காதல் காட்சிகளில் தேர்ந்த
ரசனையை வெளிப்படுத்துவது கௌதம் மேனன் மட்டுமே.

இந்தப்பாடலிலும் பெண்ணை மயக்க வைக்க கவிஞர்கள் பல நூற்றாண்டுகளாக, நிலா,
பெண், பூ, போன்றவை இருந்தாலும் சூர்யாவின் குரல், பிரசாந்தினியின் குரல்
மற்றும் தாமரையின் கவித்துவமான வரிகள்.

"துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே"

கண் திறந்தால் ஆல்ப்ஸ் மலை உச்சியிலோ அல்லது ஜெர்மனியின் ரோட்டோரங்களிலோ
இருபது முப்பது பேரை ஆட வைத்து பிரதானமாக நாயகன். நாயகிய அணைப்பது,
தடவுவது, முத்தமிடுவது, உரசுவது போன்றவை மட்டுமே உள்ளதுதான் பாடல்கள்.
நிஜவாழ்க்கையில் எந்தக் காதலரும் இப்படி செய்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனாலும்
கனவுப்பாட்டு இல்லாமல் 90 சத படமே இல்லை எனலாம். கூர்ந்து கவனித்தால்
உரையாடலுடனான பாடல்கள் பெரும்பாலானவர்களின் விருப்பப் பாடலாக அமைந்து
இருக்கிறது. "முன் தினம் பார்த்தேனே" கூட அந்த வகையில் சேர்க்கலாம். கீழே எனக்குப்
பிடித்த பாடல்கள்.

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச... நான் அடவுகட்டி ஆட்டம்போட ஆச
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு தெரியும்
ஆலங்குயில் பாடுகையில் ஆரிரரோ எலே லேலோ யாவும் இசை ஆகுமடா
கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி... நுமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி...

இந்தப்பாடல்களில் எல்லாம் பாடுவது போல. பேசவும் செய்வதால் நிஜத்திற்கு
அருகிலே என சொல்லலாம்

அபூர்வமா வர்ற இந்தப்பாடல்கள்ல கூட கமலின் மூன்று பாடல் இருக்கறது ஆச்சரியம்.

.

5 comments:

Anonymous said...

I am also like this song very much.....!!!!!!!!

Anonymous said...

பாட்டு நிஜமாகவே சூப்பர். களின் பாடல்கள் போல படமாக்கிய விதமும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். சிம்ரன் வேறு இருக்கிறார். ;)

ஆனாலும், கௌதம் சில பாடல்களில் கொஞ்சம் சொதப்பித் தான் விடுகிறார். பார்ப்போம்

தமிழன்-கறுப்பி... said...

சின்னச்சின்ன தூறல் என்ன...

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பாட்டும் பிடிக்கும்...

சுரேகா.. said...

நல்லா விவரிச்சிருக்கீங்க!

இந்த வகையா பாடல்களை
பிரிக்கிற யோசனையே வரலை !

ரொம்ப நன்றி...வரும் திங்களன்று
ஒலிபரப்புக்கு பாடல்கள் ரெடி..!

அதோட..

கண்மணியே கண்மணியே....-சின்னவாத்யார்
கூவுற குயிலு - சோலையம்மா

மறுபடியும்...நன்றிபா...!
:)