எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, April 03, 2008

டகீலா கவுஜையுடன் இரு அழுகைகள்

தனியனான என் அறையில் மிக சமீப காலமாய்
சில பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.
முதல் முறையாக கேட்டது நாராயணனின் குரல்தான்
பலவீனப்படுத்தும் விதம் அவனின் வருகை
இருந்தது பின் குட்டினோவும் வந்தபோது
வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
என் மந்தமான புத்திக்கு பெண் வீழ்த்துதல்
பற்றித் தெளிய வெகுநேரம் பிடித்தது.
அதற்கும் மந்தத்திற்கும் தொடர்பில்லை
என்று தெரியவந்தபோது கஸ்தூரியின் மீது
வியப்பு ஏற்படவில்லை. இப்போதைக்கு
நகுலனையும் நவீனனையும் பிரித்தாளுவதுதான்
பெரிய பிரச்சினையாக இருக்கிறது நடுவில்
சுசீலாவின் பிரதி வேறு.

வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?

டகீலா கவிதைகள் என்று வகைப்படுத்தக் கூடிய கவுஜைகள் இவை.
டகீலா சாப்பிட்டவுடன் பழைய ஞாபகங்கள் வரும் என்று ஆப்பிரிக்க டகீலாக்காரி
சொன்னது உண்மைதான் என்ற ஞானம் விடியலில் வந்தது.

நன்றி - நகுலன்

------------

ஒரேநாளில் இரண்டு விதமான அழுகையை பார்க்க நேர்ந்தது. இரண்டுக்குமான
வித்தியாசத்தை நீங்களே பிரித்தறியலாம்.

ஏசியா நெட் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவுகளில் ஐடியா (Idea)
ஸ்டார் சிங்கர் என்றொரு நிகழ்ச்சி. நல்ல குரல் வளம் உள்ள ஆரம்ப நிலை
பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. முதல் பரிசு நாப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள
வீடு, இரண்டாம் பரிசு கார் இப்படியாக. இந்நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களுக்கு
மேலாக நடந்து வருகிறது. விறுவிறுப்பான நிகழ்ச்சி. தங்களது திறமையை
எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.
தரமான, கேட்க இனிமையாகவும் இருந்தது.

நேற்று முந்தைய தினம் பாடிய ஒருவர் பெயர் மறந்து விட்டது. ஏதோ ஒரு
ராகத்தில் பாட ஆரம்பித்தார். அரங்கமே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது
ராகம் தாளம் லயம் தெரியாத நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்கு
மேலாக அதை பாடிக்கொண்டிருந்தார். உருகி உருகி பாடுவதென்பது அதுவாகத்தான்
இருக்கவேண்டும். அவர் பாடி முடிக்கும்போது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டே
அழுது விட்டார். அவர் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த மலையாளத்தின் புகழ்பெற்ற
பாடகர்கள் இரண்டு பேர் (M.G. Sreekumar தமிழில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார்
சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசக் காற்றே இன்னொருவர் சரத்), ஒரு இசையமைப்பாளர், மற்றும் உஷா உதூப் எனஅனைவர் கண்ணிலும் கண்ணீர்.

பாடினவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அவர் பாடி
முடித்தவுடன் தான் அரங்கத்தில் உள்ளவர்கள் கூட இயல்பு நிலைக்கு திரும்பினர்.
நடுவர்கள் 96 மதிப்பெண்கள் வழங்கினர்.இதுவரை பெற்ற மதிப்பெண்களில்
அதிகபட்சம் இதுவே.

புரியாத கர்னாடக இசையென்றாலும் அதனை கேட்கையில் அப்படி ஒரு சாந்தம்.

ஒரு நல்ல இசையின் உச்சம் என்பது கேட்பவரையும், பாடுபவரையும்
நெகிழ்ச்சிப் படுத்துவதாக, பலவீனப்படுத்துவதாக கூட இருக்கலாம்.


இரண்டாவது அழுகையை பாருங்கள்

மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்ததை
என்னவென்று சொல்வது? எனக்கு ஏன் இரண்டு கண்களை படைத்து பின்
மானாட மயிலாட நிகழ்ச்சியையும் பார்க்க வைத்தாய் எங்கள் இறைவா...

இது நடன நிகழ்ச்சி (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்)

ஒரு மூதாட்டி (இவரை மூதாட்டி என்றே சொல்ல வேண்டும்) கலவையான குத்துப்
பாடல்களுக்கு கலவையாக காலை அகட்டி அகட்டி வைத்து ஆடிக்கொண்டிருந்தார்.
குத்துப்பாடல்களுக்கேற்ற வேக அசைவுகள் தோன்ற இயலாத வகையில் பருத்த
உடலமைப்பு. இசைமாறுதல்களுக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள அவர்
எடுத்துக்கொள்ளும் ஒரு வினாடி நேரத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தையால்
திட்ட வேண்டும் என்று நமக்கு தோன்றும் அடுத்த வினாடி ஆட ஆரம்பிக்கிறார்.

மதிப்பெண் வழங்கும்போது குறைவாகவோ அல்லது எதோ விமர்சனத்தை
அந்த நடுவ நாட்டாமைகள் வழங்க அம்மணி அங்கிருந்தே முகத்தை பொத்திய
வாறு குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தார். நாலு ஆங்கிள்களில் அதை
மறக்காமல் படமெடுத்து சோக பிண்ணனி இசையில் ஒளிபரப்பினர். பார்க்கவே
நாராசமாக இருந்தது.

ஏண்டா அழுவுறத கூடுமா காப்பி அடிக்கறதூ???

மேலே சொன்ன இரண்டு அழுகைக்குமான வித்தியாசத்தை நீங்களே புரிந்து
கொள்ளுங்கள்.

-----------

இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? :)

13 comments:

கோபிநாத் said...

\\இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? \\


இது கண்டனத்துக்குறியது ;))

Thamiz Priyan said...

ஏஷியாநெட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் போது மட்டும் மற்ற தமிழ் சேனல்கலைப் பார்ப்பது இல்லை. ஒன்லி குத்தாட்டம் மட்டுமே காணக் கிடைக்கிறது. ஸ்டார் சிங்கர் நல்ல நிகழ்ச்சி. எம்.எஸ்.வி, கங்கை அமரன் போன்ற தமிழ் இசையமைப்பாளர்கள் கூட நடுவர்களாக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்... :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

'நன்றி - நகுலன்' வரும் வரை ரசித்துப் படித்தேன். பிறகு, படித்தேன்.

கதிர் said...

கோபி நான் ஒவ்வொரு போஸ் போடும்போதும் உன்னோட முதல் கமெண்ட்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீ மட்டும்தாண்டா நல்லவன். :)
________

தமிழ் பிரியன்

எம்.எஸ் விஸ்வநாதனை அவர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்பதை நானும் பார்த்தேன். நல்ல நிகழ்ச்சி
நிகழ்ச்சியின் பிண்ணனியில் வியாபார நோக்கங்கள் இருப்பினும் சில தரமான பாடகர்களை வெளிக்கொண்டுவரும்.
பார்க்கவும் சுவாரசியமாக இருக்கிறது.

கதிர் said...

//'நன்றி - நகுலன்' வரும் வரை ரசித்துப் படித்தேன். பிறகு, படித்தேன்.//

அப்ப அடுத்த பதிவில் நகுலன் என்று ஆயிரம் முறை எழுதினால் அதை ஆயிரம் முறை படிப்பீர்களா?

ஜிங்லி ஜிங்லி ஜிங்லி :)))

ஆனா எனக்குதாங்க நிறைய புரியமாட்டேங்குது. :(

ஆயில்யன் said...

//கோபிநாத் said...

\\இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? \\


இது கண்டனத்துக்குறியது


சாதாரண கண்டனமன்று
கன்னாபின்னானு கண்டனத்துக்குரிய விடயம் :)

ஆயில்யன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
'நன்றி - நகுலன்' வரும் வரை ரசித்துப் படித்தேன். பிறகு, படித்தேன்.
//
''-------- ‘' வரும் வரை பார்த்தேன் பிறகு ரசித்து படித்தேன் :))

ஆயில்யன் said...

கண்ட ஃபிகர்களை அல்லது சென்ற ஃபிகர்களை திரும்ப காண செய்ய இயலுமா???????

(பலரும் கேட்க நினைத்த விஷயத்தை நான் கேட்டு முந்திக்கொள்கிறேன் :))))

ILA (a) இளா said...

அழுவாச்சி காவியம் நல்லா இருக்கு,,,

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? \\


இது கண்டனத்துக்குறியது ;))//

ரிப்பீட்டு :))

சென்ஷி said...

//தனியனான என் அறையில் மிக சமீப காலமாய்
சில பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.//

செல்போன காதுல வச்சு கேட்டுக்கிட்டு இருந்தா அப்படித்தான் இருக்கும்..

சென்ஷி said...

//வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?//

கராமா பார்க்குக்கு.. சிம்ரன் ஆப்பக்கட்டை எதிர்லங்கோஓஓஓஓஓஓஓஓ

சென்ஷி said...

//ஒரு நல்ல இசையின் உச்சம் என்பது கேட்பவரையும், பாடுபவரையும்
நெகிழ்ச்சிப் படுத்துவதாக, பலவீனப்படுத்துவதாக கூட இருக்கலாம்.//

இவ்வளவு நாளா நான் உன்னை எலக்கிய வாதியா மட்டும்தான் நெனச்சேன். உனக்குள்ள ஒரு போத்தோவனே ஒளிஞ்சுட்டு இருக்கறத நீ இப்ப தொறந்து காட்டிட்ட:))