எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, May 29, 2007

VCC - 606207

சந்தேகமே வேணாங்க தலைப்புல இருக்கறது கிரிக்கெட்டு கிளப்பு பேருதான். வெங்கட்டாம்பேட்டை (ரோடு) கிரிக்கெட் கிளப் (VCC). மொதல்ல எங்க ஊரு கச்சிராப்பாளையம் கிரிக்கெட் கிளப்புன்னு வைக்கறதாதான் இருந்துச்சி ஆனா பாருங்க
வேற சில வெட்டி ஆபிசருங்க அதே பேர வச்சிட்டானுங்க அதனால VCC ன்னு
வச்சாச்சி இந்த பேரும் நாங்களா வச்சிக்கல தானா வந்துச்சி (இது என்ன பெருமையா?)
எங்க ஊர்ல இருக்கற மொத்தம் பத்து தெருவுக்கு எட்டு டீம் இருக்கும் இதுல
எல்லாரும் KCC ன்னு வச்சிகிட்டா டோர்னமெண்ட்ல கொழப்பம் வந்துடும். ஒருமுறை
வந்துச்சி டேய் இவனுங்க வெங்கட்டாம்பேட்டை தெருப்பசங்கடான்னு எவனோ
ஒருத்தன் சொல்ல எவனோ ஒருத்தன் எழுத அதுவே நிலைச்சி போச்சு.

அண்ணே வெங்கட்டாம்பேட்டைன்னு பக்கத்து குக்கிராமத்து பேர நம்ம டீமுக்கு
ஏன் வச்சிங்க ரொம்ப கேவலமா இருக்கு அதுவுமில்லாம அந்த ஊர் பசங்க
எங்கனாச்சும் ரப்பர் பந்துல விளாண்டு தோத்துட்டு வந்தா கூட நாமதான்
தோத்தோம்னு பேசிக்கறானுங்க அதனால அடுத்த போட்டி வர்றதுக்குள்ள
பேர் வச்சே ஆகணும்னு அடம்பிடிச்சானுங்க.

நாம பேர எவனுமே கேள்விப்பட்டுருக்க கூடாது ஆனா பயங்கர அர்த்தமுள்ளதா
வைக்கணும்னு யோசிச்சி யோசிச்சி வச்சதுல மூளை காய்ஞ்சதுதான் மிச்சம்.
ஏதேச்சையா ஸ்டார் மூவீஸ் பாக்கும்போது டெஸ்பெரடோ (Desperado )ன்னு
ஒரு படம் ஓடுச்சி ஆக்ஷன் படம் அட சூப்பரா இருக்குதேன்னு இந்த வார்த்தைக்கு
பாக்கறவன்கிட்டலாம் அர்த்தம் கேட்டேன் எவனுக்கும் தெரில. நம்ம சொக்கன்கிட்ட
கேப்பம்னு அவன்கிட்ட கேட்டா நாதாறி தெரியாததை தெரியாதுன்னு சொல்லவே
கூச்சப்படற நல்ல பய. அட அதுவாடா... அப்படின்னா பயங்கரமான மிருகம்
டைனோசர் மாதிரி ஆனா அது இப்ப அழிஞ்சி போச்சிடானு ஒரு பீலா விட்டான்.
நானும் நல்லாதான் இருக்குன்னு அந்த பேரையே வச்சிட்டேன்.

DCC (Desperado Cricket Club) இனிதே உதயமாகியது.

இப்பதாங்க ஒரு சிக்கல். இந்த பேர எந்த நாயுமே ஒழுங்க சொல்ல மாட்டீகிதுங்க

தாஸ்பார்டா
டாஸ்போடட்டா
டொஸ்பொராட்டா

கொஞ்சம் தேய்ஞ்சி போய் புரோட்டான்னு சொல்ல ஆரம்பிச்சானுங்க.

அண்ணே நாம அங்கங்க போய் தோத்துட்டு வரும்போதுல்லாம் பரோட்டா டீம்
கொத்து பரோட்டோ ஆகிடுச்சிடோய்னு கிண்டல் பண்றானுங்க வேற பேர்
வைக்கணும். வாய்ல நொழையாத இங்கிலிசு பேரெல்லாம் இருக்ககூடாது நல்ல
பேரா அழகா வைக்கணும்னு ஒருத்தன் அழாத குறையா வேண்டிகிட்டான்.

டேய் அடிக்கடி டீம் பேர மாத்தினா நல்லா இருக்காதுடா பாக்கறவனுங்க
பேர் கூட வைக்க தெரிலன்னு கிண்டல் பண்ணுவானுங்க.

இப்ப மட்டும் என்ன வாழுதாம். பேர மாத்துங்க இல்லாட்டி நான் கெஸ்ட்
ப்ளேயரா பக்கத்து தெரு டைகர் டீமுகு போயிடுவோம்னு மிரட்டிய பிறகு
பழைய பேரான வெங்கட்டாம்பேட்டை கிரிக்கெட் கிளப்புன்னு வச்சாச்சி.

ஆரம்பத்துல எந்த ஒரு நோக்கமும் இல்லாம சாயந்திரம், ஞாயிறுகள்ல பொழுது
போகணுங்கறதுக்காக விளையாட ஆரம்பிச்சது, பிறகு ஆள் அதிகம் சேந்து போனா
ரெண்டு டீமா பிரிச்சி விளையாடறது. அப்படி விளையாடும்போதுதான் பக்கத்து
ஊர்காரனுங்க பெட் மேட்ச் விளையாட வாங்கன்னு கூப்பிட, போனா செம அடி
குடுத்து அனுப்பனானுங்க. அப்படியே அடி வாங்கி அங்கங்க செயிச்சி நாமளும்
ஒரு டீம்னு ஆகிப்போச்சி. எங்க டோர்னமெண்ட் நடந்தாலும் நமக்கு ஒரு கடுதாசி
குடுத்து விடுவாங்க. தோ பார்றா நம்மளையும் ஒரு டீம்னு கூப்பிடறானுங்க
பத்திரிக்கைல பேரெல்லாம் போடறானுங்கன்னு ஊர் ஊரா போய் விளையாடினோம்.
மொத்தமா இருவது இருவத்தஞ்சு டோர்னமெண்ட் விளையாடியிருப்போம் ஆனா
ஒரே ஊர்ல மட்டும்தான் முதல் பரிசு வாங்கினோம்.

மொத மொதல்ல கிரிக்கெட் மட்டைய பிடிச்ச இடமே ரொம்ப வசதியான இடம்
நாலு பக்கமும் தடுப்புச்சுவர் வச்சிருக்க நெல்லு காய வைக்கிற களம். எங்க வீட்டு
பக்கத்துலயே இருந்ததால ரொம்ப வசதி. வெப்பன்ஸ்(பேட், ஸ்டிக்) எல்லாம் எங்க வீட்டு
மாட்டு கொட்டாய் ஓரமா இருக்கும் யார்வேணா எப்ப வேணா வந்து எடுத்துக்கலாம்
ஆனா பேட்டும் பந்தும் என்கிட்டதான் இருக்கும்.

அந்த நெல்லு காயவைக்கிற களம் எங்க ஊரு நாட்டாமைக்கு சொந்தமான இடம்.
அண்ணன் தம்பிக்குள்ள சண்டையா இருந்ததினால யார் மில் நடத்துறதுன்னி சண்டை
வந்து எவனுமே நடத்தாம நாங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம்.
கட்டாந்தரையா இருக்கறதுனால கார்க் பால் அடிக்கடி ஒடஞ்சு போகவே ஏரிக்கு மாறியது
எங்க மைதானம்.

பரந்து விரிஞ்ச ஏரி. நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)
அவ்ளோ தூரமெல்லாம் போக முடியாது நீயே போய் எடுத்து வந்தா அடுத்த பால்
போடுவேன். அடுத்த முறை ரொம்ப தூரம் போச்சின்னா அடிச்சவனே போய
எடுத்துக்கணும்னு அவசர ரூல் போட்டானுங்க. இப்படி பள்ளத்துல விழுந்தா அவுட்டு
கம்பத்த தாண்டி தூக்கி அடிச்சா அவுட்டுன்னு மேட்சுக்கு மேட்ச் விதிகள் மாறும்.
திடீர்னு அவுட்டாகிட்டோம்னா "டேய் போன மேட்சுல வச்ச ரூல்ஸ் அது, ஆட்டம்
ஆரம்பிக்கும்போதே அந்த ரூல்ச தூக்கியாச்சி தெரியாதா உனக்குன்னு ஏமாத்தலாம்.

வெளியூர் டோர்னமெண்ட் ஆடபபோனோம்னா மேக்சிமம் ஜெயிக்கணும்னு வெறியோட
விளையாடுவேன். கிரவுண்ட்ல கன்னாபின்னான்னு கோவம் வரும். சொந்த தம்பியா
இருந்தாலும் திட்டுவேன். எதிரணியெல்லாம் எனக்கு எதிரி அணியே இல்ல டீமுக்குள்ளயே
ஒரு எதிரி இருக்கான் அவந்தான் எந்தம்பி. கேட்ச் மிஸ் பண்ணிட்டான்னு திட்டுனோம்னா
உடனே கிரவுண்ட்லருந்து கிளம்பிடுவான் சரி அவன் மட்டும் போனா பரவாயில்ல வேற
ஆள போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஆனா இவரோட ஆதரவாளர்கள்னு நாலு
பேர கூட்டிட்டு போவாரு. அடுத்தமுறை திட்டமாட்டேன்னு சொன்னாத்தான் போராட்டத்த
வாபஸ் வாங்குவாரு.

சங்கராபுரத்துல பைனல்ல ஜெயிச்சி கப்பு வாங்கினது ஒருமுறைதான் எங்கள் அணி
முதல் பரிசு வாங்கியது. அதுக்கப்புறம் எங்க போனாலும் நாலாவதோ மூணாவதோ
உறுதி.

எல்லாருக்கும் சொந்த பேரு இருந்தாலும் கிரவுண்டுன்னு வந்துட்டா எவனுக்கும் ஒரு
பட்டப்பேரு வச்சே ஆகணும். பேட் மாதிரி கிரிக்கெட் விளாட அது ரொம்ப
அவசியம். அதனால அப்படியே கீழ குடுக்கறேன்.

கதிர் (நாந்தாங்க கேப்டன்)

சளி எ ஞானம் (கிரவுண்ட்ல எச்ச துப்பிகிட்டே இருப்பான் அதனால சளி)

கொப்பர எ சுப்பிரமணி (பீல்டிங் புலி)

சொக்கன் எ அசோக் (எங்கள் அணி வேகப்பந்துப்புயல்)

பீலாக்காடு எ மாதவன் (வாய்திறந்தாவே பொய்தான் அதனால இந்த அடைமொழி)

ஸ்லாட்டர் சக்தி (ஆஸி ப்ளேயர் ஒருத்தன் பேரு எதுகையா வருதுன்னு சேத்துகிட்டான்)

சோனி எ கவி (டீம்ல எனக்கு ஒரே எதிரி இவந்தான். சொந்த தம்பி வேற!!)

சொங்கி எ மணிவண்ணன் (இந்திய அணிக்கு ஏத்த பய)

ஏக்கே எ சரவணன் (பாதி மேட்சுல காணாம போயிடுவான்)

வெங்கலக்குண்டான் எ வெங்கடேசன் (குண்டானுக்குள்ள கோலிகுண்ட போட்டு உருட்டினா
என்ன சத்தம் வருமோ அதே மாதிரி பேசுவான், ஒண்ணுமே புரியாது)

மாண்டி எ ராஜேந்திரன் (இந்த பேர்எப்படி வந்துச்சின்னே தெரில, இவனுக்கு கட்டை
விரல் கிடையாது,நகங்கடிக்கிற பழக்கம் இவனுக்கு ஜாஸ்தி உணர்ச்சிவசப்பட்டு கடிச்சி
கடிச்சி கட்டை விரல் காணாமப்போயி மொழுக்குனு இருக்கு விரல் இருந்த ஏரியா.
இதனாலேயே கேட்ச் அடிக்கடி மிஸ் பண்ணுவான்)

இதத்தவிர சப்ஸ்டிடூட்னு ஒரு மூணு நாலு பேர் இருப்பானுங்க, பஸ்ல போக காசு
இல்லன்னா மட்டும் மாட்டு வண்டி வச்சிருக்க கோவிந்தன கூப்பிட்டுக்குவோம்
அப்பதான அவன் மாட்டு வண்டில ஓசில போக முடியும்.

விட்டா நான் மங்களம் போடாமா மங்களம் பாடிட்டு இருப்பேன். இத்தோட
முடிச்சிக்கிறேன்.

33 comments:

Anonymous said...

ஐத்தான் உங்க பதிவு தான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.

இதோ ஆரம்பிச்சிடலாம் ஆட்டத்த

Anonymous said...

இது சீரியஸ் பதிவா? இங்கே கும்மிக்கு இடமுண்டா? சீக்கிரம் சொல்

கதிர் said...

கண்ணே மஞ்சுளா

தனிமெயில் அனுப்புவாயாக.

எலே அனானி
பாத்தா எப்படி தெரியுது, நானெல்லாம் என்னிக்கு சீரியஸ் பதிவு போட்டுருக்கேன்??

Anonymous said...

//நம்ம சொக்கன்கிட்ட
கேப்பம்னு அவன்கிட்ட கேட்டா நாதாறி தெரியாததை தெரியாதுன்னு சொல்லவே
கூச்சப்படற நல்ல பய. அட அதுவாடா... அப்படின்னா பயங்கரமான மிருகம்
டைனோசர் மாதிரி ஆனா அது இப்ப அழிஞ்சி போச்சிடானு ஒரு பீலா விட்டான்.//

அடப்பாவி. அப்படி சொன்னது நீ தானடா. ஏன் இப்படி எல்லார்கிட்டயும் பொய் பேசற

மக்களே,
இந்த கதிர நம்பாதீங்க

Anonymous said...

என் மச்சானுக்கு பட்டப்பேர் இல்லைனு பாக்கறீங்களா?

அவர் பேரு மன்மதன். எங்க ஊர்ல அப்படித்தான் எல்லா புள்ளைகளும் கூப்பிடுவாக

களவாணி said...

// நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)//

நம்பிட்டேன் தல

//வெங்கலக்குண்டான் எ வெங்கடேசன் (குண்டானுக்குள்ள கோலிகுண்ட போட்டு உருட்டினா
என்ன சத்தம் வருமோ அதே மாதிரி பேசுவான், ஒண்ணுமே புரியாது)//

:-)

//மக்களே,
இந்த கதிர நம்பாதீங்க //

நான் உங்களைத்தான் நம்ப மாட்டேன் ;)

//எலே அனானி
பாத்தா எப்படி தெரியுது, நானெல்லாம் என்னிக்கு சீரியஸ் பதிவு போட்டுருக்கேன்??//

தம்பி அப்ப "எனக்குள் நான்" பதிவ நீங்கதானே சீரியஸ் பதிவுன்னு சொன்னீங்க. இப்ப என்னடான்னா சீரியஸ் பதிவே நான் போட்டதில்லன்னு பீலா உடுறீங்க. ஓஹோ மறந்துட்டீங்களா?.

//சோனி எ கவி (டீம்ல எனக்கு ஒரே எதிரி இவந்தான். சொந்த தம்பி வேற!!)//

தம்பியோட தம்பியே தம்பிக்கு எதிரியா?. என்னங்கடா இது?

ஆமா, இது என்ன கிரிக்கெட் மாசமா? ஆளாளுக்கு கிரிக்கெட் பதிவாப் போடுறீங்க

கதிரவன் said...

தம்பி, வெங்கட்டாம்பேட்டையில ஹீரோயின் யாராவது உண்டா ;-)??

இராம்/Raam said...

கதிரு,

சீக்கிரமே மதுரை-625001 போஸ்ட் போட்டுட்டு வந்து கருத்து சொல்லுறேன்..... :)

கதிர் said...

test = kayamai

Anonymous said...

ஐத்தான், பந்து படாத எடத்துல பட்டுட போவுது, பாத்தி வெளயாடுங்க ராசா!

கதிர் said...

எலே சொக்கா! எப்படிடா இருக்க? இந்த மாதிரி பதிவு போட்டாதான் வருவியா?

அம்மணி கவிதா,
நீ யாரு? எங்கருந்து கமெண்ட் போடற எல்லாமே எனக்கு தெரியும்.
ஏன்யா இந்த லொள்ளு பண்றிங்க?

கதிர் said...

// நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)//

நம்பிட்டேன் தல//

இதான் நல்ல புள்ளைக்கு அழகு.

//மக்களே,
இந்த கதிர நம்பாதீங்க //

நான் உங்களைத்தான் நம்ப மாட்டேன் ;)//

very good. :)

//தம்பியோட தம்பியே தம்பிக்கு எதிரியா?. என்னங்கடா இது?//

அட ஆமாங்க. இப்பலாம் சண்டை போடறதில்ல. அதெல்லாம் சின்ன வயசில மட்டும்தான்.

//ஆமா, இது என்ன கிரிக்கெட் மாசமா? ஆளாளுக்கு கிரிக்கெட் பதிவாப் போடுறீங்க /

பதிவெழுத மேட்டர் இல்லாத நேரத்துல, அழகு ஆறு, ஆறு விளையாட்டு, கவுஜ, சினிமா விமர்சனம், ஜல்லி, மொக்கை இதெல்லாம் ஜகஜம். கண்டுக்க கூடாது.

நன்றி செந்தில்

கதிர் said...

//கதிரவன் said...
தம்பி, வெங்கட்டாம்பேட்டையில ஹீரோயின் யாராவது உண்டா ;-)?? //

ஹீரோயின் சொல்லக்கூடாது. குயில் என்று சொல்லவேணும்.

நிறைய குயில் என் வாழ்க்கைல கூவிட்டு போயிருக்குங்க கதிரவன்.

எம்பேர்ல ஒரு ப்லாகர்! பேர்க்குழப்பம் வந்திடக்கூடாதுங்க

Anonymous said...

கதிர் மாமா

அது போலி அத நம்பாத

Ayyanar Viswanath said...

தம்பி நல்லா எழுதுறய்யா..நம்ம வட்டார வழக்கு,புழங்கும் பெயர்கள்,சொலவட இதெல்லாம் இன்னும் பயன்படுத்து ராசா...நம்ம ஏரியா மண் சார்ந்த இலக்கியம் பெரிசா எழுதப்படல ,,நீ எழுதுய்யா

கதிர் said...

//ஒரிஜினல் மஞ்சுளா said...
கதிர் மாமா

அது போலி அத நம்பாத //


இன்னொருக்கா இந்த பக்கம் பாத்தேன் உன்ன... அப்புறம் நீ மஞ்சுளாவா இருக்க மாட்டடீ..

கதிர் said...

//தம்பி நல்லா எழுதுறய்யா..நம்ம வட்டார வழக்கு,புழங்கும் பெயர்கள்,சொலவட இதெல்லாம் இன்னும் பயன்படுத்து ராசா...நம்ம ஏரியா மண் சார்ந்த இலக்கியம் பெரிசா எழுதப்படல ,,நீ எழுதுய்யா //

உங்க வாழ்த்துக்கு நன்றிகள் கோடி. ஆனா நமக்கு இந்த இலக்கியமெல்லாம் சுட்டு போட்டாலும் பராது, அத படிச்சாவே நமக்கு வெளங்க மாட்டிகிது, இதுல மண்சார்ந்த இலக்கியம் வேற எழுதணுமா?
எம்மேல இம்புட்டு நம்பிக்கையாய்யா உனக்கு?

தேவதச்சன், அபி இவங்களோட கவிதைகள படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே இருக்கேங்க.

Anonymous said...

//இன்னொருக்கா இந்த பக்கம் பாத்தேன் உன்ன... அப்புறம் நீ மஞ்சுளாவா இருக்க மாட்டடீ.. //

போங்க அய்த்தான், உங்களுக்கு எப்பவுமே குரும்பு ஜாஸ்தி! பாருங்க எல்லாரும் சிரிக்கிறாங்க!!

Anonymous said...

அடியே மஞ்சுளா அய்த்தான் நமக்காக கமெண்ட் மாடரேஷன் தூக்கிட்டாருடீ! வா வந்து சக்களத்தி சண்டை போடுவோம்!

Anonymous said...

போங்கடீ சக்காளத்திகளா! மச்சான் எனக்கு தான்!

Anonymous said...

கவிதா வேண்டாம் மச்சானை விட்டுடு, நீ வேண்ணா வெட்டி பாலாஜிய புடிச்சுக்கோ!

Anonymous said...

போடி நீ அய்யனார் கூட அலஞ்சவதான எனக்கு தெரியாதா!உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்திடுவேன், சாக்கிரதை!

Anonymous said...

வாட் நான்சென்ஸ் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்! அவர் எனக்குதான்!

Anonymous said...

டேய் மலையாளத்தி! உனக்கு இருக்குடீ ஒரு நாளு, என் அய்த்தான கொத்திகிட்டு போகலாம்ன்னு பாத்தியா?

Anonymous said...

மச்சானுக்கு 25 நான் தான போட்டேன்! இப்ப என்னங்கடி செய்வீங்க!

Anonymous said...

அய்த்தான் வெளிய போறீங்க ஆனா சுருக்குன்னு வந்துடுங்க, நாட்டு கோழி ந்ல்லெண்ணையில வருத்து கொழம்பு வச்சிருக்கேன்!

Anonymous said...

ராம் கூட ரகசிய தொடர்பு வச்சிருந்த நாயி, கோழி கொழம்ப பத்தி பேசுதா...த்த்த்தூஊஊஊஉ

கப்பி | Kappi said...

தென்னாட்டின் டெண்டுல்கர் தம்பி :))

கதிர் said...

கவிதாக்கள், மஞ்சுளாக்கள், அபுதாபி அழகிகள், பாவனா, மற்றும் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்.

இங்க ஒருத்தர் ரெண்டு பேர் வந்து போறது பிடிக்கல உங்களுக்கு அம்புட்டுதான?

நடத்துங்க நடத்துங்க.

மாடரேட் பண்ணிட்டேன் அம்மணிகளா...
இனிமே ஒண்ணும் நடக்காது.

கதிர் said...

//தென்னாட்டின் டெண்டுல்கர் தம்பி :))//


ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரிஜினல் கமெண்ட் ஒண்ணு வந்திருக்கு. :)

வா கப்பி

இங்க என்னையத்தான் எல்லாரும் சேர்ந்து பந்தாடறாங்க.

Ayyanar Viswanath said...

யாரு தம்பி இதெல்லாம்

மின்னலா?
அபிஅப்பாவ?

இரண்டுல ஒரு ஆள்தான் யா
என்ன சந்தேகப்படாத :(
நான் நல்லவன்..நல்லவன்..நல்லவன்

அபி அப்பா said...

யாரு தம்பி இதெல்லாம்

மின்னலா?
அய்யனாரா?

இரண்டுல ஒரு ஆள்தான் யா
என்ன சந்தேகப்படாத :(
நான் நல்லவன்..நல்லவன்..நல்லவன்

M0HAM3D said...

அருமை