எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, May 04, 2007

நான் துபாய்காரன் இல்லிங்கோ!

நண்பர் ஒருத்தர் இரண்டு மாத விடுப்பில் நாடு சென்று வந்தார். வந்த நாள் முதல்
முகம் சோகமாக இருக்கவே என்னங்க ஆச்சு இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்கிங்கன்னு
கேட்டேன்.

அட ரெண்டு மாசம் ஊர்ல இருந்தேன் கல்யாணம் பண்ணிட்டு வந்தா கம்பெனில
பேமிலி ஸ்டேட்டஸ் குடுப்பாங்க அப்படின்னு நினைச்சேன்.

"சரி அதுல என்ன பிரச்சினை"?

அட போப்பா அங்கதான் பெரிய பிரச்சினையே இருக்கு. நான் என்னவோ துபாய்
ரிட்டர்ன்னு சொன்னா பொண்ணு தர நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு
பாத்தேன் ஆனா ஒரு பய கூட தரமாட்டேங்குறான். இந்த வடிவேலு, சினிமாகாரனுங்க
எல்லாம் சேந்து இந்த ஊர ஒரு காமெடிதேசமா மாத்திட்டானுங்க. எங்க வேல
செய்றன்னு எவனாச்சும் கேட்டா துபாய்லன்னு சொன்ன உடனே மெகா ஜோக்க
கேட்டவன் மாதிரி சிரிக்கறானுங்க.

என்னங்க சொல்றிங்க?

அட ஆமாப்பா ஒரு வீட்டுக்கு பொண்ணு பாக்க போயிருந்தேன். ஜாதகம் எல்லாம்
ஓரளவுக்கு பொருந்தி வந்து பொண்ணும் பிடிச்சிருந்தது. மத்த விஷயங்கள பத்தி
பேச ஆரம்பிச்சோம் பேச்சு வாக்குல கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்துல பொண்ணு
இங்க வந்துறணும்னு சொன்னேன். அப்பதான் நான் துபாய்ல வேல பாக்குறேன்னு
அவங்களுக்கு தெரியும் போலருக்கு உடனே உங்களுக்கெல்லாம் பொண்ணு தர
முடியாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிட்டானுங்க. அமெரிக்கா, ஐரோப்பா
மாதிரி ஏதாச்சும் ஒன்னுல இருந்தா சொல்லுங்க யோசிக்கலாம்னு வேற சொன்னான்.

அடப்பாவமே!

இப்பவே அரை மண்டையாச்சு அடுத்த முறை போகும்போது கணிசமான முடி
இந்த மண்ணுக்கு காணிக்கையாகிடும் அப்புறம் எவனும் பொண்ணு தர மாட்டான்.
முத்துன கத்திரிக்கான்னு எவனாச்சும் சொல்லிடுவானோன்னு பயமாருக்குப்பா.

நான் வேணா ஒரு ஐடியா தரட்டுங்களா?

சொல்லு...

பேசாம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கோங்க.

அடபோப்பா நீ வேற வெந்த புண்ணுல முள்கரண்டிய விட்டு நோண்டுற. அந்த
கருமம் எல்லாம் வந்தா நான் ஏன் வீடு வீடா போய் பொண்ணு தேடறேன்.

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. பேசாம ஊருக்கு போய் நல்ல வேலையா பாத்து
செட்டில் ஆகிடுங்க.

நானும் அதை யோசிச்சேன். நான் பாக்குற வேலைக்கு மிஞ்சி மிஞ்சி போனா நாலு
L தான் தருவானுங்க அப்புறம் இங்க வாழ்ந்த சுகவாழ்க்கை அங்க கிடைக்காது.
உள்ளதும் போச்சுடா நொள்ளன்னு முட்டிக்கணும்.

"உன் வாழ்க்கை உன் கையில்"

இப்படி ஒரு ஆபத்து இருக்குன்னு தெரியாம நான் வேற ஊரெல்லாம் தமுக்கு
அடிச்சிட்டனே. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடல நான் துபாய்காரன்
இல்லிங்கோன்னு ஒரு பதிவு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்.

ஆகவே மக்களே...

இந்த மாசத்துலருந்து நான் துபாய்வாசி இல்ல, அபுதாபிவாசி :)

இந்த மாதம் தாயகம் செல்ல இருக்கும் ஷார்ஜாவாசி அஞ்சா நெஞ்சன் கோபி
அவர்களுக்கு மேற்சொன்ன விபத்து நடக்காமலிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

43 comments:

கோபிநாத் said...

\\இந்த மாதம் தாயகம் செல்ல இருக்கும் ஷார்ஜாவாசி அஞ்சா நெஞ்சன் கோபி
அவர்களுக்கு மேற்சொன்ன விபத்து நடக்காமலிருக்க இறைவனை வேண்டுகிறேன்.\\

இது ரொம்ப முக்கியம்

கோபிநாத் said...

\\இந்த மாசத்துலருந்து நான் துபாய்வாசி இல்ல, அபுதாபிவாசி :)\\

நீ எந்த வாசியாக இருந்தால் என்ன பெண்ணு கிடைக்காது ராசா ;-)

முத்துகுமரன் said...

கிளம்பு! காத்து வரட்டும்!!:-)

அபுதாயில் வலையுலக பிரிவைத் துவக்கி அரசாள இருக்கும் தம்பியே!! புது இடமும், புதுப் பணியும் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்

அன்புடன்
முத்துகுமரன்

Anonymous said...

டியர்,
உங்களுக்கென்ன கவலை.
நான் தான் 45 வருஷமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கனே.

நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான்.

கதிர் said...

//இது ரொம்ப முக்கியம் //

இல்லயா பின்ன????

கோபிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்ங்கறதுதான எங்க எல்லாரோட விருப்பம்.

கதிர் said...

//நீ எந்த வாசியாக இருந்தால் என்ன பெண்ணு கிடைக்காது ராசா ;-) //

கிடைக்காட்டி ரொம்ப சந்தோஷம்பா
கடைசி வரைக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ வா இருந்துட்டு போறேன்
கூட்டணி சேர்ந்தாவே குழப்பம்தான் மிஞ்சும்.

கதிர் said...

//கிளம்பு! காத்து வரட்டும்!!:-)//

வற்புறுத்தினாலும் இங்க இருக்கறதா இல்லங்க முத்து.

//அபுதாயில் வலையுலக பிரிவைத் துவக்கி அரசாள இருக்கும் தம்பியே!! புது இடமும், புதுப் பணியும் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்//

நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்புடன்
முத்துகுமரன்

MyFriend said...

கோபிக்கு ஏகப்பட்ட உள்குத்து இருக்கும்போல இருக்கு?

கோபி, வீட்டுல பொண்ணு பார்க்குறாங்களா? ;-)

கதிர் said...

//டியர்,
உங்களுக்கென்ன கவலை.
நான் தான் 45 வருஷமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கனே.//

உங்கள யாரு காத்துகிட்டு இருக்க சொன்னது. எனக்கு கல்பனாவையும் தெரியாது கல்கோணாவையும் தெரியாது
ஆள விட்றா சாமி.

//நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான். //


வந்தாதான!

MyFriend said...

//@கல்பனா said...
டியர்,
உங்களுக்கென்ன கவலை.
நான் தான் 45 வருஷமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கனே.

நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான்.
//

ஆஹா.. தம்பியும் வலையில் சிக்கிட்டாரு போல.. ஓ.. அதுக்குதான் நீங்க துபாய்வாசி இல்லை.. அபுதாபிவாசின்னு சொன்னீங்களோ? :-P

கதிர் said...

//கோபிக்கு ஏகப்பட்ட உள்குத்து இருக்கும்போல இருக்கு?//

இதுல எங்க உள்குத்து இருக்குன்னு சொன்னா நானும் பாப்பேன்ல.


//கோபி, வீட்டுல பொண்ணு பார்க்குறாங்களா? ;-)//

அவங்க வீட்டுல பாக்கறாங்களா இல்லையான்னு தெரியல, ஆனா கடந்த ஒரு மாசமா பய ஊர் போற நினைப்புலயே இருந்துகிட்டு மேட்ரிமோனியலா பாத்துகிட்டு இருக்கறதா சேதி.

நல்லது நடந்தா சந்தோஷம்தான்

ALIF AHAMED said...

//
இந்த மாசத்துலருந்து நான் துபாய்வாசி இல்ல, அபுதாபிவாசி
//


welcome to abudhabi..:)

Anonymous said...

வாங்க மச்சான் அபுதாபிக்கு

கல்யாணம் தான ராசா நான் பண்ணிக்கிறேன் எய்யா உன்னை
எம்புட்டு செவப்பு நீ

ALIF AHAMED said...

///
ஆஹா.. தம்பியும் வலையில் சிக்கிட்டாரு போல.. ஓ.. அதுக்குதான் நீங்க துபாய்வாசி இல்லை.. அபுதாபிவாசின்னு சொன்னீங்களோ? :-P
///


அபுதாபிவாசினா மட்டும் அடிச்சி புடிச்சி பொண்னு குடுப்பாங்களா...

அப்படினா எனக்கு எத்தனை கல்யாணம் நடந்து இருக்கனும்...:((

ALIF AHAMED said...

//
அபுதாபி அழகி said...
வாங்க மச்சான் அபுதாபிக்கு

கல்யாணம் தான ராசா நான் பண்ணிக்கிறேன் எய்யா உன்னை
எம்புட்டு செவப்பு நீ
///

நீயும் அபுதாபியா....ஹி ஹி
நீ எங்க இருக்க அழகி போன் நம்பர் குடு....:)

ALIF AHAMED said...

//
கிடைக்காட்டி ரொம்ப சந்தோஷம்பா
//

விரக்த்தில பேசுர மாதிரி இருக்கு அந்த நன்பன் நீதானா...???


//
கடைசி வரைக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ வா இருந்துட்டு போறேன்
கூட்டணி சேர்ந்தாவே குழப்பம்தான் மிஞ்சும்.
//

கேப்டன் மாதிரினு சொல்லுங்க....:)

Ayyanar Viswanath said...

கராமாவின் நாயகனே ..எங்கள் தங்க ராசாவே போய் வா ..வென்று வா சென்று வா

இராம்/Raam said...

கதிரு,

புதிய இடமாற்றத்துக்கு வாழ்த்துக்கள்.... :)

ALIF AHAMED said...

///
அய்யனார் said...
கராமாவின் நாயகனே ..எங்கள் தங்க ராசாவே போய் வா ..வென்று வா சென்று வா
///

போய் வா ..வென்று வா சென்று வா
என கூப்பிட்டு திரும்பவும் துபாய்வாசியாக மாற்ற திட்டம் போடும் அய்யனாரின் செயலை கண்ணடிக்கிறேன்....:)

இராம்/Raam said...

// கல்பனா said...

டியர்,

உங்களுக்கயென்ன கவலை. நான் தான் 45 வருஷமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கனே.

நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான். //

கல்பனா'வா அப்போ அந்த எலி புகழ் மஞ்சுளா என்னாச்சு செல்லம்????

Anonymous said...

//டியர்,
உங்களுக்கென்ன கவலை.
நான் தான் 45 வருஷமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கனே.

நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான்.//

இதுக்கெல்லாம் உங்களுக்கு இருக்கு..... துபாயிலே வேலை பார்க்க போறேன்னு சொல்லிட்டு இதெல்லாம் வேற நடக்குதா?? :(((((

Anonymous said...

யார் அந்த சக்களத்தி கல்பனா??? :-(

Anonymous said...

//நான் துபாய்ல வேல பாக்குறேன்னு
அவங்களுக்கு தெரியும் போலருக்கு உடனே உங்களுக்கெல்லாம் பொண்ணு தர
முடியாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிட்டானுங்க.///

நானெல்லாம் அப்பிடி சொன்னேனா???

CVR said...

அட!!
இதுல இம்புட்டு மேட்டர் இருக்குதா???
நாளைக்கு அமெரிக்கா மாப்பிள்ளையை வெச்சு எவனாவது காமெடி கீமெடி பண்ணிட்டாய்ங்கனா(அதான் இப்பவே எல்லா படத்துலயும் பண்ணுறானுங்களே!! :P) நம்ம கதியும் உங்கள மாதிரி ஆகிடும் போல!! :-D

வெட்டிப்பயல் said...

ஆஹா நம்ம வரதுக்குள்ள ஆட்டம் ஆரம்பாகிடுச்சா???

உனக்கென்னப்பா குறைச்சல் கதிரு, கல்பனா, மஞ்சுளா, கவிதா, வினிதா, சுனிதானு பல பெண்கள் காத்துக்கிட்டு இருக்காங்க. அப்பறம் என்னப்பா?

Anonymous said...

//நீயும் அபுதாபியா....ஹி ஹி
நீ எங்க இருக்க அழகி போன் நம்பர் குடு....:) //

050 7495127

லொடுக்கு said...

புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தம்பி!!

Anonymous said...

அபுதாபியில்
பேரன்பு கொண்டோருக்கு இடமுண்டாம்
இடமில்லை 'பேச்சிலருக்கு'

-அண்ணன்

கானா பிரபா said...

தம்பிக்கு எந்த ஊரு

கதிர் said...

வாங்க கானா ப்ரபா!

இப்போதைக்கு நான் துபாய்வாசி இல்லிங்க...

கதிர் said...

அபி அப்பா அபுதாபி அழகி ஆனதன் மர்மன் என்ன????

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

அபி அப்பா அபுதாபி அழகி ஆனதன் மர்மன் என்ன???? //

எலேய்,
இது தப்பாட்டம். வீரனுக்கு அழகில்லை...

நீ என் பதிவுல எத்தனை தடவை வேற பேர்ல போட்டு, நான் கண்டு பிடிச்சிருக்கேன். ஆனா வெளிய சொன்னனா?

வீரனா பதில சொல்லு மேன்

ஜி said...

வாங்கைய்யா வாங்க.. எங்க சங்கத்துல உங்களையும் சேத்துப்புட்டாங்களா?? அமெரிக்கா மாப்பிள்ளைக்குத்தான் அப்படிச்சுட்டு இருந்தாங்க. இப்ப உங்களுக்குமா??

நாகை சிவா said...

அபுதாபிவாசி ஆகிட்ட, அதை நாங்களே வந்து தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. ரொம்ப சந்தோஷம் மக்கா.

நல்லா இரு

கதிரவன் said...

தம்பி,

புது இடம்&பணி மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்.

//நீங்க இந்தியா வந்தவுடனே நம்ம கல்யாணம் தான். //

வந்தாதான!


அங்கேயே ஏதாவது செட் பண்ணிட்டீங்களா, என்ன ? ஹனிமூனுக்காவது இந்தியா போயிட்டு வாங்க தம்பி ;-)

ஆனாலும் இங்க கல்பனா, மஞ்சுளா, கவிதா,அபுதாபி அழகின்னு பல பேர் கும்மி அடிச்சிருக்கறதப் படிக்கும்போது சிரிப்ப அடக்க முடியலீங்க :))

கப்பி | Kappi said...

அபுதாபி ஆணழகன் தம்பியண்ணன் வாழ்க வாழ்க!!

அபி அப்பா said...

//abudhabi azhahi said...
//நீயும் அபுதாபியா....ஹி ஹி
நீ எங்க இருக்க அழகி போன் நம்பர் குடு....:) //

050 7495127 //

yaaruppaa en nambar kuduththathu? paavi makka naanee aani jaasthi aanathala othungki irukkeen, ennaya vatchi kaamadi panreenggale:-))

Anonymous said...

டேய் அபுதாபில ரஸ்ணா கெடைக்குமாடா

Anonymous said...

கொல்டி காரு எங்கள மறக்காம இருக்காரு நீ மறந்திட்டியே கதிரு

இரு அந்த சக்களத்திகளை வச்சிக்கிறேன்

Anonymous said...

//abudhabi azhahi said...
//நீயும் அபுதாபியா....ஹி ஹி
நீ எங்க இருக்க அழகி போன் நம்பர் குடு....:) //

050 7495127 //
///


அபுதாபி அழகினு நெனைச்சி போன் போட்டு தொல்லைஞ்ட்டேன்

அபிஅப்பா போட்டு குடுத்துடாதேப்பா..:)


Mr.x

மணிகண்டன் said...

தப்பியது துபாய் :)

அலறும் அபுதாபி..

Unknown said...

துபாய் துபாய் என்று சொல்லுபவர்கள் துபாய் வந்து பார்த்தால் தெரியும் எங்கு
எவ்வளவு கஷ்டம் என்று இன்னும் சொல்ல போனால் இங்கு இன்னும் சம்பளம்
வெகுவாக குறைந்து கொண்டே போகிறது மற்ற அத்தியாவசிய பொருட்களின்
விலையோ கூடிகொண்டே போகிறது, வேலை பளு பண்ணி ரெண்டு மணி நேரம்,
என்ன துபாய் வாழ்க்கை, வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது என்ன
நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, அப்படி பட்ட வாழ்க்கையே இங்கு
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்ன துபாய்

Unknown said...

துபாய் துபாய் என்று சொல்லுபவர்கள் துபாய் வந்து பார்த்தால் தெரியும் எங்கு
எவ்வளவு கஷ்டம் என்று இன்னும் சொல்ல போனால் இங்கு இன்னும் சம்பளம்
வெகுவாக குறைந்து கொண்டே போகிறது மற்ற அத்தியாவசிய பொருட்களின்
விலையோ கூடிகொண்டே போகிறது, வேலை பளு பண்ணி ரெண்டு மணி நேரம்,
என்ன துபாய் வாழ்க்கை, வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது என்ன
நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, அப்படி பட்ட வாழ்க்கையே இங்கு
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்ன துபாய்