எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, April 17, 2007

எனக்குள் நான்...

தினமும் சந்திக்கும் நபர்தான்
தினமும் சிறிதளவேனும் புன்னகை சிந்துபவர்தான்
இன்று வினோதமாக...

தாயின் கரம்பற்றிய குழந்தை
தெருமுனையை தாண்டும் வரை திரும்பியபடி
பார்க்கிறது வினோதமாக....

இளைஞர்கள் சிரித்தபடி வருகிறார்கள்
என்னைக் கடந்தபின் அவர்களின்
சிரிப்புக்கு கருப்பொருளானேன்

பாவத்தையும் கழிவிரக்கத்தையும்
வெளிக்காட்டியபடி
என் வயதையோத்த வயசாளிகள்

பார்ப்பவர்களின் பேசுபொருளானேன்
நான் பேசாதிருந்தும்

அனைவரும் விலகுகிறார்கள்
எனக்குள் நான் பேச ஆரம்பித்ததும்...


சமீபத்தில் படித்த இந்த கவிதை கண நேரம் சிந்திக்க வைத்தது கவிதையின்
ஒவ்வொரு ஆழ்ந்து ரசித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் தனக்குள் பேச
ஆரம்பிக்கும்போது உலகம் அவனுக்கு அந்நியமாகிறது. கிட்டத்தட்ட தியானத்தை போன்றதொரு நிலை.

எழுதியவர் கண்டிப்பாக இப்புற உலகினை மௌனக்கண் கொண்டு பார்த்திருக்கிறார்
என்பது புலனாகிறது. எந்நேரமும் சலசலவென்று பேசும் மக்கள் கூட்டத்தில் இருந்து
விலகி மௌனம் காத்தலே ஒரு வித்தியாசம் என்றாகிப்போன இந்த உலகத்தில்
தனக்குள் ஒருவன் பேசினால் எப்படி இந்த சமூகம் பார்க்கும் என்பதை இயல்பாக
கவிதையில் வடித்திருக்கிறார். எதுவுமே மிகையாகிப்போனால் சலிப்பு தட்டி விடும்
நம் கவிஞர்கள் காதல், பெண், நிலா, மலர்கள், தேவதைகள், கனவுகள்
இதையெல்லாம் தாண்டி வெளிவந்து இயல்பான கவிதைகள் வடிக்க ஆர்வம்
காட்ட வேண்டும். அதற்கு முன் உதாரணமாக இக்கவிதையினை சொல்லலாம்.

பி.கு

இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.

20 comments:

Anonymous said...

இப்ப தான் விளையாட் உன்னைய தேடிக்கிட்டு இருந்தேன். வந்துட்ட

கவுஜ போட்டிருக்க. இதோ படிச்சிட்டு வரேன்

Anonymous said...

//இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.//

அய்யனார்

Anonymous said...

//இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.//

இது நிச்சயம் எங்க தம்பி தங்க கம்பி எழுதியதுதான்

Anonymous said...

//இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.//

அபி அப்பா

Anonymous said...

//இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.//

கண்டிப்பா கோபி இல்ல

கதிர் said...

இது ஒரு கடுமையான சீரியஸ் பதிவு அதனால் இங்கே கும்மிகளுக்கு தாமதமாக அனுமதி வழங்கப்படும்.
(பதிவில் தொய்வு ஏற்படுவதாக எண்ணம் தோன்றினால் உங்கள் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படும்)

மக்கா
மன்னிச்சிடுங்க மக்கா
ஒரிஜினலா ஒரு பின்னூட்டம் போடுங்க. வேற யாரும் வராம போயிடுவாங்களோன்னு ஒரு பயம்தான்.

புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

யாழினி அத்தன் said...

தம்பி

உங்க ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்

சீரியஸ் மேட்டர்;

கவிதைல வயதையொத்த-ங்கற கொஞ்சம்
சீர்பட்டிருக்கிறது. கொஞ்சம் உங்க கவனிப்பு தேவைன்னு நினைக்கிறேன்.

ALIF AHAMED said...

//
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
//புரியலயே..::))

Anonymous said...

//
மக்கா
மன்னிச்சிடுங்க மக்கா
ஒரிஜினலா ஒரு பின்னூட்டம் போடுங்க.
//


அப்ப நாங்க போடுவதெல்லாம்
ஒரிஜினல் இல்லை


நம்மலேயே டூப்ளிகெடுனா அனானிகலே
ஆதரவு தராதீர்..::))

நாகை சிவா said...

போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாஆங்க

Anonymous said...

//தம்பி said...

இது ஒரு கடுமையான சீரியஸ் பதிவு அதனால் இங்கே கும்மிகளுக்கு தாமதமாக அனுமதி வழங்கப்படும்.//

இத தலைப்பில போட வேண்டியதுதானே

வெட்டிப்பயல் said...

தம்பி,
கவிதைய பத்தி நான் ஏதாவது சொன்னா அத யாரும் நம்ப மாட்டாங்க...

ஆனா யாருனு கண்டுபிடிக்க சொன்னதால ஒரு முயற்சி செய்யறேன்...

நீ தான அது???

Santhosh said...

தம்பி உள்ளேன் அய்யா. 40 க்கு அப்புறமா இதை போட்டுக்கோ. கிணறு வாங்க யாரும் வராட்டி சொல்லி நான் எடுத்துக்குறேன் உனக்கு எதுக்கு கஷ்டம் சொல்லு.

காட்டாறு said...

//ஒருவன் தனக்குள் பேச
ஆரம்பிக்கும்போது உலகம் அவனுக்கு அந்நியமாகிறது. கிட்டத்தட்ட தியானத்தை போன்றதொரு நிலை. //

சரியா சொன்னீங்க. திருவண்ணாமலையில பாத்தீங்கன்னா... நிறையா பேர் தனக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள். இவர்களை ஆதரித்து ரமணா மடத்தில் சாப்பாடு தந்து, இருக்க இடமும் தருவார்கள். ஏன் என்று கேட்ட போது, அவர்களின் விளக்கம் இது ஒரு தியான நிலை!

Ayyanar Viswanath said...

இதை எழுதியது

தம்பி ...தம்பி......தம்பி யேதான்

யோவ் தம்பி உனக்கு இந்த குத்து பின்னூட்டம் போடுறது யார் யா?
செம கலக்கல் போ..போன பதிவிலேயே கேட்டேன்..எவ்ளோ ன்னு :)

அய்யனார் கொலை வெறிபடை
அடப்பாவிகளா ..:)

Naufal MQ said...

தொய்வு ஏற்படுவது போல் தோன்றுகிறதே!

களவாணி said...

//இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.
//

இது ஒங்களுக்கு சீரியசாண்ணா...

முதல்ல அந்த கிணறு யாருக்கு சொந்தம்ன்னு சொல்லுங்ண்ணா, கவிதை யாருக்கு சொந்தம்ன்னு நாங்க சொல்றோம்...

Ayyanar Viswanath said...

/திருவண்ணாமலையில பாத்தீங்கன்னா... நிறையா பேர் தனக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள். /

அப்படியா ?
:)))

ALIF AHAMED said...

//
இது ஒரு கடுமையான சீரியஸ் பதிவு அதனால் இங்கே கும்மிகளுக்கு தாமதமாக அனுமதி வழங்கப்பபடும்.
///


பதிவை நகைசுவை நைய்யாண்டி யில் இணைத்து விட்டு சீரியஸ் பதிவு என கூறும் தம்பியை என்ன செய்வது என்று செயற்குழு முடிவு செய்யும்..

Anonymous said...

இது நீங்க தானே தம்பிஸ்????