எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 18, 2006

வெட்டிப்பயலின் பார்வைக்கு!!!

கொஞ்ச நேரத்திக்கு முன்ன வெட்டிப்பயலின்
கவிதை, கவுத, கவுஜ ன்ற பதிவில கவிதைகள்னா
ஒண்ணுமே புரியலன்னு பதிவிட்டிருந்தாரு.
கவிதைகளோடு அதுக்கு தங்கச்சியான ஹைக்கூவையும்
சேத்துக்கணும். ஏன்னா அதுவும் எனக்கு புரியல. முதலில்
ஹைக்கூ ஹைக்கூன்னு சொல்றாங்களே அதுக்கு
அர்த்தம் என்னான்னு எல்லாம் எனக்கு
தெரியாது. ஆனா அந்த மாதிரி கவிதைகள கொஞ்சமே
பார்த்திருக்கறதினால, ஒரு முயற்சியா நாலு
வார்த்தைகள ஒன்றன்கீழ் ஒன்றாக போட்டு
அதை ஹைக்கூன்னு நானே பேரு வச்சிக்கிட்டேன்.
இந்த கவிதை எழுத இலக்கணம் தேவையா
இல்லையா, ஒரு கவிதை எந்த மாதிரி இருக்கணும்
அதெல்லாம் தெரியாமலே இவ்ளோ நாளா
கவிதைன்ற பேர்ல உங்களையெல்லாம் சிரமப்பட
வச்சிட்டேன்.

பெரியார்

தெரியாமல் கால்
பட்டுவிட்டதெனத்
தொட்டுத் துதித்தான்
பெரியார் புத்தகத்தை

வாத்தியார்

செலவினம் கற்றுத்
தந்த கணக்கு வாத்தி
மாத இறுதிகளில்
வட்டிக்கடை வாசலில்

விடுதலை

சித்திரை பிறந்தால்
ஏழரையிலிருந்து விடுதலை
என்றது கூண்டுக்குள்
சிறையிருந்த சோதிடனின்
கிளி.

என் வீட்டு நிலா

என் வீட்டுத் தண்ணீர்
தொட்டியில் தினமும்
கலைக்கிறேன் பாட்டியின்
வடை சுடும் படலத்தை.

விற்பனைக்கு

பத்துப் பாத்திரம்
தேய்ப்பவளின் எட்டுப்
பாத்திரங்கள் "சேட்"
வசம் தயாராக
விற்பனைக்கு.

இதெல்லாம் எந்த வகையில சேத்தின்னு
சொல்லுங்க.

36 comments:

நாமக்கல் சிபி said...

கவிதையே நமக்கு புரியல... இதுல இது வேறையா???

தம்பி உன் திறமை என்ன ஆச்சரியப்படுத்துது!!!

இருந்தாலும் இப்படி நம்மல கூப்டு வெச்சி மானத்த வாங்க கூடாது :-)

Santhosh said...

என்ன தம்பியண்ணே தமிழில எழுதிட்டு இருந்திங்க என்ன ஆச்சி உங்களுக்கு திடீரென வேற ஏதோ மொழியில எழுத ஆரம்பிச்சிடிங்க.

Sivabalan said...

தம்பி,

//பெரியார், விடுதலை //

எல்லாமே நல்லாயிருக்கு..

குறிப்பாக இவை இரண்டும் சூப்பர்..

வேந்தன் said...

ஹை-கூ ன்னா கடைசி வரியில் ஒரு ஷாக் இருக்கும். அதனால தாராளமா உங்களுடையதை ஹை-கூ ன்னு சொல்லலாம்.ஆனா கவுஜ லிஸ்ட்ல சேராதுன்னு நெனைக்கிறேன்.ஏன்னா எல்லமே புரிந்துக்கற மாதிரி இருக்கறதால:)))

SP.VR. SUBBIAH said...

படித்து முடிதவுடன் அட என்று சொல்ல வைப்பதுதான் கைக்கூ கவிதை
இரண்டு வரியில் இருக்கும் கவிதையில் ஏதாவது ஒருவரியை மறைத்தாலும் பொருள் தெரியாது முழிக்க வேண்டும்

இரன்டு வரிகளையும் சேர்த்து படிக்கும்போது அட என்று சொல்லவைக்கும்

தெரியாமல் கால்பட்டு விட்டதெனத்
தொட்டுக் கும்பிட்டான்

(எதை?)

பெரியார் புததகததை!

என்று அடுததவரியை படிக்கும்போது தான் அட என்போம்!

கார்த்திக் பிரபு said...

yov thabi padam katryyeppa..nall iruku ellam nall iruku ..idhu endha vagai kavidhaigal nu namma thamilmana kavinargal than sollanum..

கதிர் said...

//இருந்தாலும் இப்படி நம்மல கூப்டு வெச்சி மானத்த வாங்க கூடாது :-)//

இதுல என்ன வெட்டி கப்பலேறிப்போச்சி?

உனக்கு கவிதை புரியலன்னு சொன்னே நான் அதுக்கு தங்கச்சியான ஹைக்கூவே புரியலன்னு சொன்னேன்.

கதிர் said...

//என்ன தம்பியண்ணே தமிழில எழுதிட்டு இருந்திங்க என்ன ஆச்சி உங்களுக்கு திடீரென வேற ஏதோ மொழியில எழுத ஆரம்பிச்சிடிங்க.//

நிஜமாவே அந்த வரிகள் உங்களுக்கு புரியலன்னா நான் ஒரு கவிஞன். புரிஞ்சா நான் ஒரு வளரும் கவிஞன்.

அதெல்லாம் கண்டுக்கப்பிடாது! :)

Anonymous said...

Nalla hikoos, :)

கதிர் said...

நன்றி சிவபாலன்.

//ஹை-கூ ன்னா கடைசி வரியில் ஒரு ஷாக் இருக்கும். அதனால தாராளமா உங்களுடையதை ஹை-கூ ன்னு சொல்லலாம்.ஆனா கவுஜ லிஸ்ட்ல சேராதுன்னு நெனைக்கிறேன்.ஏன்னா எல்லமே புரிந்துக்கற மாதிரி இருக்கறதால:)))//

கவுஜ லிஸ்ட்ல சேராதா, அப்படீன்னா ரொம்ப சந்தோஷம்!

வேந்தன் நீங்களும் கவிதை எழுதணும்.

கதிர் said...

//படித்து முடிதவுடன் அட என்று சொல்ல வைப்பதுதான் கைக்கூ கவிதை
இரண்டு வரியில் இருக்கும் கவிதையில் ஏதாவது ஒருவரியை மறைத்தாலும் பொருள் தெரியாது முழிக்க வேண்டும்

இரன்டு வரிகளையும் சேர்த்து படிக்கும்போது அட என்று சொல்லவைக்கும்

தெரியாமல் கால்பட்டு விட்டதெனத்
தொட்டுக் கும்பிட்டான்

(எதை?)

பெரியார் புததகததை!

என்று அடுததவரியை படிக்கும்போது தான் அட என்போம்!//

இதுவல்லவோ வாத்தியாரின் திறமை.
உங்கள் விளக்கம் மிக அருமை.
உங்கள மாதிரி வாத்தியார் எல்லாருக்கும் கிடைச்சுட்டாங்கன்னா பிரச்சினயே இல்ல.

கதிர் said...

//yov thabi padam katryyeppa..nall iruku ellam nall iruku ..idhu endha vagai kavidhaigal nu namma thamilmana kavinargal than sollanum.. //

அவங்க எல்லாம் சொல்ல மாட்டாங்க அதனாலதான் நானே இதுக்கு பேரு ஹைக்கூன்னு வச்சிக்கிட்டேன்.

நன்றி கார்த்திக்.

Unknown said...

கடைசி ரெண்டும் எனக்குப் புரியல. அதனால் கடைசி ரெண்டைத் தவிர மற்றது நல்லாருக்கு தம்பி. அதில் பெரியார் சூப்பர்.

புரியாமலேயே இப்படி எழுத முடிந்தால் புரிஞ்சா எப்படி? வாழ்க! வாழ்க!

கதிர் said...

//புரியாமலேயே இப்படி எழுத முடிந்தால் புரிஞ்சா எப்படி? வாழ்க! வாழ்க! //

இப்பதான் சந்தோஷம்!
உங்களுக்கு புரியலயா?

Unknown said...

//என்ன தம்பியண்ணே //

தம்பி இதைக் கவனிச்சிங்களா.. சந்தோஷ் பின்னூட்டத்திலே சொன்னது..

இதுவும் கூடப் புரியல்ல அப்படின்னா இதுவும் ஹைக்கூவா:)

கதிர் said...

//இதுவும் கூடப் புரியல்ல அப்படின்னா இதுவும் ஹைக்கூவா:)//

அதெல்லாம் கண்டுக்கபடாத்துன்னு சென்னேன்ல போர்வாள்!

என்னாதிது!

கதிர் said...

//C.M.HANIFF said...
Nalla hikoos, :)//

நன்றி HANIFF!

வேந்தன் said...

//வேந்தன் நீங்களும் கவிதை எழுதணும்//
நல்லவேளை அப்படியெல்லாம் நான் போகறதுக்கு முன்பே வெட்டி எழுதிட்டாருல்ல.நான் கவுஜ பக்கமெல்லாம் போகமாட்டேன்.ஆள விடுங்க சாமிகளா

கதிர் said...

//நல்லவேளை அப்படியெல்லாம் நான் போகறதுக்கு முன்பே வெட்டி எழுதிட்டாருல்ல.நான் கவுஜ பக்கமெல்லாம் போகமாட்டேன்.ஆள விடுங்க சாமிகளா//

ஏம்பா இப்படி தெறிச்சி ஓடறீங்க?
நீங்க கவிதை எழுதுங்க. அத படிச்சுட்டு சூப்பர்னு பின்னூட்டம் போட நாங்க இருக்கோம்.

மனச தளர விடாம எழுதுங்க!

மதி said...

//நிஜமாவே அந்த வரிகள் உங்களுக்கு புரியலன்னா நான் ஒரு கவிஞன். புரிஞ்சா நான் ஒரு வளரும் கவிஞன்.//

எனக்குத்தோணுது நீங்க ஒரு வளரும் கவிஞன்னு

Anonymous said...

இதெல்லாம் துணுக்கு வகைல சேத்தி.

கதிர் said...

//எனக்குத்தோணுது நீங்க ஒரு வளரும் கவிஞன்னு//

நான் வளர்கிறேனே மம்மி!

கதிர் said...

//நக்கீரன் said...
இதெல்லாம் துணுக்கு வகைல சேத்தி.//

நல்ல வேளை நெற்றிக்கண்ண தொறந்து பொற்றாமரைக்குளத்துல விழச்செய்யல
அதுவரைக்கும் சந்தோஷம்! :)

நன்றி நக்கீரன்.

கப்பி | Kappi said...

இப்பத்தான் உனக்குள்ள தூங்கிட்டிருக்க மிருகத்தைத் தட்டி எழுப்பியிருக்க...அப்படியே டாப் கியர்ல போயிட்டே இரு..ஆனா ஆக்ஸிடெண்ட் ஆகாம பார்த்துக்க ;)

பெரியார், விற்பனைக்கு இரண்டும் அருமை..

இராம்/Raam said...

கதிரு,

அடுத்த வாரம் வந்து ஒரு கவிதை போஸ்ட் போடுறேன். ரொம்ப நாளா ட்ரப்ட்'லே கெடக்கு...

இராம்/Raam said...

கவிதை எல்லாம் சூப்பரப்பு!!!!

கதிர் said...

//இப்பத்தான் உனக்குள்ள தூங்கிட்டிருக்க மிருகத்தைத் தட்டி எழுப்பியிருக்க...அப்படியே டாப் கியர்ல போயிட்டே இரு..ஆனா ஆக்ஸிடெண்ட் ஆகாம பார்த்துக்க ;)//

கேப்புல மிருகம்னு சொல்லிட்டியே கப்பி.

//பெரியார், விற்பனைக்கு இரண்டும் அருமை.. //

அருமையா?, நன்றி கப்பி!

கதிர் said...

//கதிரு,

அடுத்த வாரம் வந்து ஒரு கவிதை போஸ்ட் போடுறேன். ரொம்ப நாளா ட்ரப்ட்'லே கெடக்கு...//

நீங்க ஏற்கனவே எழுதின கைப்புள்ள காவியமே சூப்பரா இருந்திச்சி.

கண்டிப்பா எழுதுங்க ராம்.

கதிர் said...

//கவிதை எல்லாம் சூப்பரப்பு!!!! //

அய்யே, அது ஹைக்கூவாம். நீங்க கவிதன்னு சொல்லறிங்க! :)

BadNewsIndia said...

தம்பி, கலக்கல் கவிதைகள்.
ஹை-கூக்கு ஆங்கிலத்தில் விதி முறை வச்சிருக்காங்க.
தமிழுக்கு நீங்க சொல்றதுதான் விதிமுறை.

தொடர்ந்து தொடுங்கள் ஹை-சரத்தை!

லொடுக்கு said...

தம்பி!!!!!!!!!!!

கலக்கல்!! நான் கூட நீங்க வளரும் கவிஞர்னு தான் நினைச்சேன். ஆனா, முதிர்ச்சி தெரியுதே!!

ஹைக்கூக்கள் நன்று!!!

கதிர் said...

//தம்பி, கலக்கல் கவிதைகள்.
ஹை-கூக்கு ஆங்கிலத்தில் விதி முறை வச்சிருக்காங்க.
தமிழுக்கு நீங்க சொல்றதுதான் விதிமுறை.//

அப்சல் மேட்டர்ல பிசியா இருக்கீங்கன்னு நினைச்சேன்.
ஹைக்குவுகு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி!

//தொடர்ந்து
தொடுங்கள்
ஹை-
சரத்தை! //


இதுவே ஒரு ஹைக்கூதானே :))

கதிர் said...

//தம்பி!!!!!!!!!!!

கலக்கல்!! நான் கூட நீங்க வளரும் கவிஞர்னு தான் நினைச்சேன். ஆனா, முதிர்ச்சி தெரியுதே!! //

வேற ஒண்ணும் இல்ல ,அது பித்தநரை.
அதத்தான் முதிர்ச்சினு சொல்லறிங்களா?

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் லொடுக்கு!

லொடுக்கு said...

தம்பி,
நான் உங்கள் கவிதையில் உள்ள முதிர்ச்சியை சொன்னேன்.

வாழ்த்துக்கு நன்றி தம்பி.

சுந்தர் / Sundar said...

கவிதை எல்லாம் சூப்பரப்பு!!!!

Anonymous said...

it belongs to which category -

solla theriyavillai

but - nice - can be understood easily -
parti... 2-3-4

meaningfull -

1st one about - vizhipunarvu -bask