எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, August 30, 2006

தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

சென்னைல ஒரு மூணு மாசம் தங்க வேண்டி
வந்தது. ப்ராஜெக்ட் செய்ய வேண்டி தாம்பரத்தில
நண்பர்களோட தங்கினேன். கோடம்பாக்கத்துக்கும்
தாம்பரத்துக்கும் தினமும் ட்ரெயின்ல போய் வந்து
கொண்டிருந்தேன். காலையில மெட்ராஸ் க்றிஸ்டியன்
காலேஜ் வாசல்ல கொஞ்சம் ஜொள்ள சிந்திட்டு.
ட்ரெயின புடிச்சு அங்க மீனாட்சி வாசல்ல மீதிய
சிந்தறதுதான் தினமும் வேலையே. இதுக்கு கூடவே
நாலு பேர் கூட்டு. ரவுசுக்கு கேக்கவே வேணாம்
ஒரே கும்மாளமா போயிகிட்டு இருந்தது.

வீட்ல இருந்து கொண்டு வந்த காசை எங்கன
ஒளிச்சு வச்சாலும் சிரமப்படாம கண்டுபிடிச்சுடற
அருமையான நண்பர்கள். நம்மளுக்கு ஒளிச்சு வச்சி
பழக்கமில்ல, அவனுங்களுக்கு ஒளிச்சு வைக்கறத
கண்டுபிடிக்கறதில கஷ்டமில்ல. பர்சுல காசு
இல்லன்னா கடுப்புல தூக்கி எறிஞ்சிடுவானுங்க
அப்படி ஒரு பாசக்கார பயலுங்க. வழக்கமா
ட்ரெயின் பாஸ் பர்ஸுல வைக்கிறதுதான் வழக்கம்.
நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தன் காசு வைக்கிற
எடத்தில கண்டதை வச்சிருக்கான்னு சில்லறை
இல்லாத கடுப்பில தூக்கி எறிஞ்சிடுச்சி அதை தேடி
கண்டுபிடிச்சி பின்னாடி சொருவிகிட்டு நானும்
கிளம்பிட்டேன்.

இந்த ட்ரெயின்ல செக்கர் வந்துட்டான்னா சுலபமா
கண்டுபிடிச்சிடலாம் எப்படின்னா, டிக்கெட் எடுக்காத
வித்தவுட்டுங்க கதவோரமாவே நிப்பானுங்க எந்த
நேரத்திலும் எஸ்கேப் ஆகறதுக்கு. வாரத்துக்கு
மூணு நாள் செக்கர் வந்தாலும் இவனுங்க அஞ்சவே
மாட்டானுங்க. ஒருநாள் மீனம்பாக்கத்தில நிறுத்தும்
போது செக்கர் வந்துட்டாடு, வாசப்பக்கம் நின்னுகிட்டு
இருந்ததுல ஒரு மூணு தெறிச்சு ஓடினானுங்க, அதில
ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!

நமக்கு ஒண்ணாம் க்ளாசில இருந்து பின்னால உக்காந்து
பழக்கம் அந்த பாசத்தில பின்னாடி இருந்தேன்.
வரிசையா செக் பண்ணிகிட்டு நம்மகிட்ட வந்தாரு
டிக்கெட் எடுக்காதவனை விட்டுடுங்க, டிக்கெட்
எடுக்கறாம்பாரு அவனை புடிச்சி நோண்டுங்கன்னு
முனகிக்கிட்டே பர்ஸை பிரிச்சா பக்குன்னு ஆயிடுச்சி
உள்ளாற அது இல்ல. நெலவரம் கலவரம் ஆகறதுக்குள்ள
எப்படியும் இவங்கிட்டருந்து தப்ப முடியாது நந்தி
மாதிரி நிக்கறான். பாக்கெட்லயும் பத்து ரூபாய்க்கு மேல
ஒரு பைசா கூட இல்ல. அசடு வழியுது முகத்தில,
சாரி சார் பாஸ் கொண்டு வர மறந்திட்டேன் நாளைக்கு
எடுத்திகிட்டு வரேன்னு சொன்னேன்.

அவ்வளவு கேவலமான லுக்கு இதுவரைக்கும்
யாரும் என்கிட்ட காட்டல. எத்தன பேருடா கிளம்பி
இருக்கீங்க?எல்லாரும் என்னையே பாக்கறானுங்க
ரொம்ப அசிங்கமா போயிடுச்சி.

நீட்டா ட்ரெஸ் மட்டும் போடத்தெரியுதுல்ல
டிக்கெட் எடுக்கணும்னு அறிவு வேணாம்?
எவ்வள்வு சொல்லியும் கேக்காம ப்ளாட்பாரத்துக்கு
கூட்டி வந்துட்டாரு அந்த ஹமாம் சோப்பு.

டிக்கெட் எடுக்கலன்னா 75 ரூபா அபராதம்
தெரியும்ல. தெரியாது சார் எங்கிட்ட அவ்ளோ
காசு இல்ல. சரி எவ்வளவு வச்சிருக்க?
12 ரூபா இருக்கு சார். அப்போ 15 நாள்
ஜெயில்ல இருக்க வேண்டியதுதான். சார் சார்
வேணாம் சார் அபராதமே கட்டறேன். சாயந்திரம்
ரூம்ல இருந்து எடுத்துகிட்டு வந்து கட்டறேன்.
அதுவரைக்கும் இந்த வாட்சை வச்சிக்குங்கன்னு
அவர் கைல குடுத்தேன். உடனே அபராதத்துக்கான
ரசீதை எழுதி கூடவே அவர் பெயர், சர்வீஸ் நம்பர்.
கொடுத்தார். வாட்சை திருப்பணும்ல அதுக்குதான்.
தம்பி இன்னிக்கு பூரா எத்தனை முறை வேணாலும்
இந்த ரயில்ல போய் வரலாம்னு சொன்னாரு.

மனசனுக்கு எவ்வளவு நக்கல் பாருங்க. மூடு
அவுட்டாயி ப்ளாட்பாரத்து பெஞ்ச்ல உக்கார்ந்தேன்.
எனக்காகவே காத்திட்டிருந்தா மாதிரி ஒருத்தன்
பின் பெஞ்சுலருந்து எழுந்து உக்காந்தான்.

என்னா சார் என்ன மாதிரிதானா நீயும்னு கேட்டுகிட்டெ
பக்கத்தில வந்தான். நான் செஞ்சது இருக்கட்டும் நீ
என்னடா செஞ்சே அத சொல்லு முதல்ல.

ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?

இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.

ம்ஹூம் இவங்கிட்ட எல்லாம் அசிங்கப்படணும்னு
எழுதி இருக்கு போல.

ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.

127 comments:

இலவசக்கொத்தனார் said...

நாட்டாமை தீர்ப்பு இதாம் - தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்புதான். தப்புதான். தப்புதான். (கடைசி ரெண்டு தடவையும் எக்கோ எபெக்ட்டுங்க.)

கதிர் said...

//நாட்டாமை தீர்ப்பு இதாம் - தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்புதான். தப்புதான். தப்புதான். (கடைசி ரெண்டு தடவையும் எக்கோ எபெக்ட்டுங்க.) //

இத நாம அவன்கிட்ட விளக்கினோம்னு வைங்க, அவன் துணைக்கு அரசியல்வாதிங்க பண்ற துணைக்கு இழுத்து நியாயம் சொல்லுவான்.

இதெல்லாம் தேவையா நமக்கு. :(

கதிர் said...

நாட்ட்ட்ட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு!!

இப்படின்னு யாரு சொல்லக்கூடாது ஆமா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில//

ஆகா...என்ன ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டீங்க!
ஒரு தப்பை, "இதெல்லாம் ஒரு தப்பா" ன்னு சாதிக்கிற அளவுக்கும்
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில !!

ஆமா அது என்னங்க ஹமாம் சோப்பு??

VSK said...

தப்புதான்!

ட்ரெயின் வளுக்கி விளுந்திரிச்சின்னா?

அப்பறம், அவன் அப்பனா குடுப்பான்!?

நாட்டாமை இன்னும் பத்து எக்கோ போட்டு சொல்லுங்கையா..
. தப்புன்னு!

:))

கதிர் said...

வாங்க SK அய்யா,

//ட்ரெயின் வளுக்கி விளுந்திரிச்சின்னா?//

இதுவும் சரிதான், இப்படி யோசிக்கவே இல்லையே நானு.

இப்போல்லாம் வெள்ளம் வந்தாவே வளுக்கி விளுறதில்ல, இதில கொஞ்ஞூண்டு 1 போனா வளுக்கிறுமா?

துளசி கோபால் said...

தப்புதான்ய்யா, தப்புதான்.

பப்ளிக் ப்ராப்பர்ட்டியை அசிங்கம் செய்யறது தப்பு இல்லையாமா?

கதிர் said...

//ஆமா அது என்னங்க ஹமாம் சோப்பு?? //

ஹமாம் சோப்பு விள்ம்பரமே பாக்கலியா நீங்க?

அந்த விளம்பரத்தில ஹமாம் சோப்புன்னா நேர்மைன்னு ஒரு அம்மா சொல்லுவாங்க. அதனால நேர்மையா வேலை செய்யற ஆபிசருங்கள ஹமாம் சோப்புன்னு கிண்டல் பண்றது தமிழ்நாட்டு பண்பாடு.

நேர்மைக்கே விளக்கம் கொடுக்க வெண்டியதா போச்சு.

கதிர் said...

வாங்க துளசி டீச்சர்,

நானும் தப்புதான்னு சொல்றேன். அவனை பாத்தேன்னா குச்சியால அடிச்சு சொல்றேன்.

கதிர் said...

கண்ணுல பூச்சி பறக்குது. இதுக்கு மேல உக்காந்திருந்தா நாளைக்கு டாக்டருக்கு அழுவ வேண்டி வரும்.
அய்யா ஜூட்

VSK said...

இப்பல்லாம் எது எப்போ விளும், வளுக்கும்னு சொல்ல முடியாது, தம்பி!
:)

-L-L-D-a-s-u said...

:) ;) ;)

Thamil said...

"அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்."

எப்படி இப்படி எல்லாம் எழுதிறீங்க சார், சிரிச்சு கண்ணுல நீர் வந்திடிச்சு போங்க:-))

கதிர் said...

வாங்க தாஸு

//:) ;) ;) //

இப்படி சிரிப்பான் மட்டும் போட்டுட்டு போயிட்டிங்கன்னா நாங்க என்ன நினைக்கறதாம்?

கதிர் said...

//இப்பல்லாம் எது எப்போ விளும், வளுக்கும்னு சொல்ல முடியாது, தம்பி!
:) //

சரியா சொன்னீங்க SK,
இந்தியாவின் மோசமான முதல்வர்னு பேயரெடுத்த லாலு, இப்போ சிறந்த நிர்வாகின்னு பெயரெடுத்திருக்கார்.

கதிர் said...

//எப்படி இப்படி எல்லாம் எழுதிறீங்க சார், சிரிச்சு கண்ணுல நீர் வந்திடிச்சு போங்க:-)) //

கண்ணுல நீர் வந்தா நல்லதாம் எங்கூரு பக்கம் சொல்வாங்க.

எம்பொழப்ப பாத்து ஊரே சிரிக்குது, நீங்களும் சேர்ந்து சிரிங்க.

Unknown said...

ஆமா நிஜமாலே ட்ராக்கில ஒன்னுக்கு போனா தப்பா? அதனால் ட்ரெய்ன் கவிழ்ந்து போகுமா ?:)))))

Prophet Muhammad said...

இரயிலை கவிழ்க்க இப்படி ஒரு கொளைபாதகச் செயலை உழைக்கும் வற்க்கத்திற்கு எதிராக செய்துள்லவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள். குண்டு வச்சால் மட்டும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூக்குறலிடுகிறார்கல். மணு நீதியை வளியுருத்தும் இவர்களிடம் வேரு என்னதான் எதிர்பார்க்கமுடியும்?

கார்த்திக் பிரபு said...

indha padhivai nan eppadi miss paniane..nalla irukyya..andha madhiri kadamai thavara hamam soppugalai nanum pathirukane..appuram padhiavi vida pinootnagala suvarasiyama irukira madhiri theriyudhau..kalakkungal thambi

லொடுக்கு said...

//ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!//
டை கட்டுனவன் எல்லாம் ஹமாமும் இல்ல, டை கட்டாதவனெல்லாம் பொறம்போக்கும் இல்ல.

//ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.//

சந்தடி சாக்குல சுட்டுட்டீங்க போல இருக்கு.... அடிச்சு ஓட்டுங்க...!!!

Anonymous said...

//வலையுலகத்தை புன்னகை தேசமாகவும் போர்க்களமாகவும் மாற்றும் வல்லமை படைத்த அன்பு அனானிகளே.
போட்டாச்சி! போட்டாச்சி!//

எல்லோரும் தம்பிக்கு ஒரு "ஓ" போடுங்க....

Anonymous said...

//
மகேந்திரன்.பெ said...
ஆமா நிஜமாலே ட்ராக்கில ஒன்னுக்கு போனா தப்பா? அதனால் ட்ரெய்ன் கவிழ்ந்து போகுமா ?:)))))
//

டலிவா நீ என்ன தத்தியா?

ALIF AHAMED said...

தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்புதான்..

டாய்லெட் ஒழுங்கா இருந்தா ஏன் இங்க போறாங்க..

என்ன அவசரமோ..ஆத்திரத்தை அடக்கலாம்..ஆனால்..........????

கதிர் said...

//இரயிலை கவிழ்க்க இப்படி ஒரு கொளைபாதகச் செயலை உழைக்கும் வற்க்கத்திற்கு எதிராக செய்துள்லவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள். குண்டு வச்சால் மட்டும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூக்குறலிடுகிறார்கல். மணு நீதியை வளியுருத்தும் இவர்களிடம் வேரு என்னதான் எதிர்பார்க்கமுடியும்? //

அய்யா உங்க கீபோர்டுல எதுனா மிஸ்டேக்கா?

கதிர் said...

//appuram padhiavi vida pinootnagala suvarasiyama irukira madhiri theriyudhau..kalakkungal thambi//

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கறதில்லையா அது மாதிரிதான் இதுவும், கண்டுக்காதிங்க கார்த்திக்.

கதிர் said...

//மகேந்திரன்.பெ said...
ஆமா நிஜமாலே ட்ராக்கில ஒன்னுக்கு போனா தப்பா? அதனால் ட்ரெய்ன் கவிழ்ந்து போகுமா ?:)))))
//
டலிவா நீ என்ன தத்தியா? //

யோவ் அனானி எவ்ளோ மருவாதியா உனக்கு பட்டம் குடுத்தேன், அவரை ஏன்யா வம்புக்கு இழுக்கற?

கதிர் said...

//என்ன அவசரமோ..ஆத்திரத்தை அடக்கலாம்..ஆனால்..........????//

கண்டிப்பா முடியாதுங்க மின்னல்!!!

கதிர் said...

//ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!//
டை கட்டுனவன் எல்லாம் ஹமாமும் இல்ல, டை கட்டாதவனெல்லாம் பொறம்போக்கும் இல்ல//

அடடே வாங்க லொடுக்கு!!

அன்பே சிவம் கமல் மாதிரி அட்வைஸ் குடுக்கறிங்களே. ம்ம்

Anonymous said...

May we come in?


அனானி அண்ணாமலை
அமைப்பாளர்
அனானிகள் முன்னேற்றக் கழகம்
அமைந்தகரை

Anonymous said...

//இரயிலை கவிழ்க்க இப்படி ஒரு கொளைபாதகச் செயலை உழைக்கும் வற்க்கத்திற்கு எதிராக செய்துள்லவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள். குண்டு வச்சால் மட்டும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூக்குறலிடுகிறார்கல். மணு நீதியை வளியுருத்தும் இவர்களிடம் வேரு என்னதான் எதிர்பார்க்கமுடியும்?//

ரூம் போட்டு குந்திகினு யேசிப்பாங்களோ.......

Unknown said...

வண்டவாளம் தண்டவாளமேறுன கதை இது தானா சாமி?

கதிர் said...

//May we come in?//

தாராளமா வாங்க அனானி,

Anonymous said...

இங்க நாங்க ஒன்னுக்கு போவலாமா?..

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

கதிர் said...

ரூம் போட்டு குந்திகினு யேசிப்பாங்களோ.......

உனுக்கும் அதேதான்!!

//வண்டவாளம் தண்டவாளமேறுன கதை இது தானா சாமி? //

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்..

அவ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

//தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா? //

தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்பில்லே. தண்டவாளத்தை உருவிக்கிட்டு போனாதான் தப்பு.

Anonymous said...

இது தண்டவாளம் இல்லே. தண்ட வாளம்.

Anonymous said...

//தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்பில்லே. தண்டவாளத்தை உருவிக்கிட்டு போனாதான் தப்பு//

உங்களுக்கெல்லாம் வேலை வெட்டியே இதானா?

கதிர் said...

//இங்க நாங்க ஒன்னுக்கு போவலாமா?..
அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.//

கவலப்படாத அனானி, பெஞ்சுல படுத்திருந்தவன திட்டுன அளவுக்கு உன்னை வைய்ய மாட்டேன்.

ஏன்யா கழகம் வச்சிருக்கிங்க, ஒரு கழிவறை கட்டப்பிடாது?,

Anonymous said...

ஏன்யா கழகம் வச்சிருக்கிங்க, ஒரு கழிவறை கட்டப்பிடாது?,"

சூப்பரப்பூ சூப்பர்.

கதிர் said...

//தண்டவாளத்தில் ஒண்ணுக்கு போனா தப்பில்லே. தண்டவாளத்தை உருவிக்கிட்டு போனாதான் தப்பு. //

ரெண்டுமே தப்புதான் அனானி, முன்னது சின்ன தப்புன்னா அடுத்தது மா
தப்பு.

Anonymous said...

//ஏன்யா கழகம் வச்சிருக்கிங்க, ஒரு கழிவறை கட்டப்பிடாது?,//

கழகத்தையே கழிவறையாகத் தான் கழகத்தோர் கருதுகிறார்கள்

Anonymous said...

கழகம் நமது கழகம்
இது அனானி முன்னேற்றக் கழகம்
அனாதைகளை ஆதரிக்க வந்த கழகம்

கோவி.கண்ணன் [GK] said...

தண்டவாளம் கூட பரவாயில்லிங்க..!
சென்டரல் ஸ்டேசனிலும், எக்மோர் ஸ்டேசனிலும் பயணிகள் ஏறுவதற்காக காத்திருக்க்கும் புறநகர் ரயிலில், வண்டி ஸ்டேசனில் தான் நிற்கிறது என்ற அறிவே இல்லாமல் இரண்டுக்கும் போறவங்களை நினைச்சா .....!

கதிர் said...

//சூப்பரப்பூ சூப்பர்//

டேங்ஸ் அனானி

கதிர் said...

//தண்டவாளம் கூட பரவாயில்லிங்க..!
சென்டரல் ஸ்டேசனிலும், எக்மோர் ஸ்டேசனிலும் பயணிகள் ஏறுவதற்காக காத்திருக்க்கும் புறநகர் ரயிலில், வண்டி ஸ்டேசனில் தான் நிற்கிறது என்ற அறிவே இல்லாமல் இரண்டுக்கும் போறவங்களை நினைச்சா .....! //

அவனுங்களை எல்லாம் மைனர் குஞ்சை சுட்ட மாதிரி சுடணும், அப்போதான் திருந்துவாங்க.

கதிர் said...

//உங்களுக்கெல்லாம் வேலை வெட்டியே இதானா?//

உங்களுக்கு இல்ல, நம்மளுக்குன்னு சொல்லுங்க.

Anonymous said...

//
ஏன்யா கழகம் வச்சிருக்கிங்க, ஒரு கழிவறை கட்டப்பிடாது?
//

இந்தியா போல் திறந்த"வெளி" கழகத்தில் போகனுன்றது வாழ்நாள் ஆசை....

அது நிறைவேறுமா?

//கழகத்தையே கழிவறையாகத் தான் கழகத்தோர் கருதுகிறார்கள்//

பாருங்க கொஞ்சநேரம் கழிவறைக்கு போய்ட்டு வரதுக்குள்ள கழகத்தையே கழிவறையாக்கிட்டாங்க.

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

கதிர் said...

சரி சரி கழகத்தை கரையேத்துற மாதிரி ஒத்துமையா இருக்கணும்.

கப்பி | Kappi said...

தப்பை தப்பா பாத்தாதான் அது தப்பு..தப்பை 'தப்பா' பாத்தா அது தப்பா தெரியாது...தப்பை தப்பா பாக்கறதை தப்புன்னும் சொல்ல முடியாது..தப்பை சரின்னு சொல்றதை சரின்னும் சொல்ல முடியாது...

கப்பி | Kappi said...

அவன் பண்ண காரியத்தால வர்ற கப்புக்கு மூக்கைப் பொத்தினா தப்பில்லன்னு அடித்தொண்டையில இருந்து கத்துவேன் :)))

Unknown said...

//அதனால நேர்மையா வேலை செய்யற ஆபிசருங்கள ஹமாம் சோப்புன்னு கிண்டல் பண்றது தமிழ்நாட்டு பண்பாடு.//

ரொம்ப டேங்ஸ் தம்பி. ரொம்ப காலமா டமிலர் பண்பாட்டுல இந்த விசயம் மட்டும் தெரியாமல் இருந்தேன். இப்போ புரிஞ்சுருச்சு. :-)))


//ட்ரெயின் வளுக்கி விளுந்திரிச்சின்னா?

அப்பறம், அவன் அப்பனா குடுப்பான்!?//


ட்ரெயின் வளுக்கி எல்லாம் விழாது வழுக்கித்தான் விழும்.:-))

//ஆமா நிஜமாலே ட்ராக்கில ஒன்னுக்கு போனா தப்பா? அதனால் ட்ரெய்ன் கவிழ்ந்து போகுமா ?:)))))//

மகேந்திரன் ரொம்ப குசும்பு :-)

ட்ராக்கில ஒன்னுக்கு போனா தப்புத்தான். அதுக்குத்தான் ட்ரெயின்ல இருக்க கக்கூசுல இருந்து வரும் கழிவு எல்லாம் ட்ராக்கில விழாம ரெண்டு ட்ராக்குக்கும் நடுவுல விழறமாதிரி டிசைன் பண்ணி இருக்காங்க.

என்ன ட்ராக்கில நின்னுக்கிட்டு ஒன்னுக்கு போகக் கூடாது. ட்ரெயின் பொட்டிக்குள்ளார இருந்து போலாம்.

அதுபோல ஸ்டேசன்ல வண்டி நிக்குறப்ப போகக்கூடாது. அப்புறம் ட்ராக்குக்கு அப்பால இப்பால ரெண்டு பக்கமும் சுதந்திராமாப் போலாம். :-))

//அதனால் ட்ரெய்ன் கவிழ்ந்து போகுமா ?//
அடச்சீ நீங்க வேற... இட்ரெயினுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது. நீங்க ஒன்னுக்குப் போனா அது எதுக்கு கவிழ்ந்து போணும்?

தலை கவிழ்ந்து போகுமான்னுதான கேட்டீங்க?
:-)))

//அவனுங்களை எல்லாம் மைனர் குஞ்சை சுட்ட மாதிரி சுடணும், அப்போதான் திருந்துவாங்க.//

தம்பி,
கரீட்டா பேசுங்க .
மைனா குஞ்சா இல்லா மைனர் குஞ்சா?

--------
வலைப்பதிவில் இப்பல்லாம் அனானிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கிறது.அதே சமயம் படித்து இரசிக்கும் படியாகவும் இருக்கு.
வாழ்க நல்ல நகைச்சுவை அனானிகள்

காழியன் said...

//அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட//

"நான் யோக்கியன்டா"ன்னு கைப்புள்ள ஸ்டைல்ல சொல்லவேண்டியதுதான தலைவா?

கதிர் said...

//தப்பில்லன்னு அடித்தொண்டையில இருந்து கத்துவேன் :)))//

பாத்துங்க தொண்டை கட்டிக்க போகுது.


கப்பி,

அந்த விசுப்பய மாதிரி மட்டும் பேசாதிங்க. நாங்கூட மதிப்பு கொடுத்து வச்சிருந்தேன் அந்த மனிதருக்கு.

ஆனா இப்ப இல்ல!

கதிர் said...

//தம்பி,
கரீட்டா பேசுங்க .
மைனா குஞ்சா இல்லா மைனர் குஞ்சா?//

மைனர் குஞ்சேதான் இதில் எள்ளலவும் சந்தேகமில்லை

கதிர் said...

கல்வெட்டு,

முதல்முறையா நம்ம வலைப்பக்கம் வந்துருக்கிங்க, மறக்கவே முடியாத மாதிரி பதிவை விட பெரிய பின்னூட்டமா இட்டு பெரிய ஆளுன்னு காமிச்சிட்டிங்க,

நன்றி ! நன்றி ! நன்றி

கதிர் said...

//வலைப்பதிவில் இப்பல்லாம் அனானிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கிறது.அதே சமயம் படித்து இரசிக்கும் படியாகவும் இருக்கு.
வாழ்க நல்ல நகைச்சுவை அனானிகள்//

கேளுங்க அனானிகளே உங்களுக்கு வலையுலகம் என்றுமே எதிரியாக பார்த்ததில்லை.

வாருங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

கதிர் said...

//"நான் யோக்கியன்டா"ன்னு கைப்புள்ள ஸ்டைல்ல சொல்லவேண்டியதுதான தலைவா?//

அந்த வேதனை இதெல்லாம் தோணலை தலிவா. :-(

கைப்புள்ள said...

//ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?//

சே! இப்படி ஒரு அப்பாவியைப் போய் புடிச்சு ஒக்கார வச்சிட்டாங்களே?
:)

Anonymous said...

//என்ன ட்ராக்கில நின்னுக்கிட்டு ஒன்னுக்கு போகக் கூடாது. ட்ரெயின் பொட்டிக்குள்ளார இருந்து போலாம்.//

பொட்டி கொண்டுவந்தவன் சண்டைக்கு வரமாட்டான்?..

Anonymous said...

//
//"நான் யோக்கியன்டா"ன்னு கைப்புள்ள ஸ்டைல்ல சொல்லவேண்டியதுதான தலைவா?//

அந்த வேதனை இதெல்லாம் தோணலை தலிவா. :-(
//
இன்னுமா நம்மள இந்தூர்ல நம்புராங்க.....

Anonymous said...

//ரொம்ப டேங்ஸ் தம்பி. ரொம்ப காலமா டமிலர் பண்பாட்டுல இந்த விசயம் மட்டும் தெரியாமல் இருந்தேன். இப்போ புரிஞ்சுருச்சு. :-)))//

அது என்ன டமிலர் பண்பாடா இல்ல டம்லர் பண்பாடா?

கதிர் said...

//என்ன ட்ராக்கில நின்னுக்கிட்டு ஒன்னுக்கு போகக் கூடாது. ட்ரெயின் பொட்டிக்குள்ளார இருந்து போலாம்.//

//பொட்டி கொண்டுவந்தவன் சண்டைக்கு வரமாட்டான்?.. //

நெசமாவே ச்சிப்பு வந்திடுச்சி அனானி :-)))))

கதிர் said...

//அது என்ன டமிலர் பண்பாடா இல்ல டம்லர் பண்பாடா? //

ரெண்டுமேதான்!!

Anonymous said...

//
அந்த விசுப்பய மாதிரி மட்டும் பேசாதிங்க. நாங்கூட மதிப்பு கொடுத்து வச்சிருந்தேன் அந்த மனிதருக்கு
//
விசுவை பற்றி பேசினிர்கள் தங்கள் பதிவில் அரட்டை அரங்கம் நடத்துவோம்.

நாமக்கல் சிபி said...

//ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?

இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.
//

ROFL :-))

நான் சிரிக்கறத பாத்துட்டு என் மேனஜர்... என்னடா லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு இருக்குறனு கேக்கறாரு... இந்த லிங்க அனுப்பனன்.. இப்ப அவர் அந்த மாதிரி சிரிச்சிட்டு இருக்காரு :-))

//ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில//

தம்பி, இந்தியன் தாத்தா இன்னும் சாகலையா???

Anonymous said...

//
பப்ளிக் ப்ராப்பர்ட்டியை அசிங்கம் செய்யறது தப்பு இல்லையாமா?
//

அய்ய... இவருக்கு சனநாயகமுனா என்னானு தெரியாதா?..

Anonymous said...

வலை பதிவில் அதர் மற்றும் அனானி ஆப்சென் என்றாலே டவுசரில் ஒன் பத்ரூம் போவதுதான் தப்பு,
மற்றபடி தண்டவாளத்தில நின்னுகினு ஒண்ணுக்கு போவது, குந்திகினு ரண்டுக்கு போவது ஆங்கிலேயர்கள் காலத்துக்கு முன் இருந்து வரும் ஜனநாயக உரிமை மற்றும் ஜனநாயக கடமை..

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

கதிர் said...

//அய்ய... இவருக்கு சனநாயகமுனா என்னானு தெரியாதா?..//

சத்தியமா தெரியாதுங்க!!

இப்படிக்கு

அப்பாவி பொதுசனம்

கதிர் said...

//நான் சிரிக்கறத பாத்துட்டு என் மேனஜர்... என்னடா லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு இருக்குறனு கேக்கறாரு... இந்த லிங்க அனுப்பனன்.. இப்ப அவர் அந்த மாதிரி சிரிச்சிட்டு இருக்காரு :-))//

நல்லா சிரிங்க பாபாஜி!

நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது, என்ன செய்ய????????

கதிர் said...

//விசுவை பற்றி பேசினிர்கள் தங்கள் பதிவில் அரட்டை அரங்கம் நடத்துவோம். //

அதுக்குதான்யா பின்னூட்டபொட்டிய திறந்து வச்சிருக்கேன்.

வேணுமின்னா செவப்பு கம்பளம் போடட்டுமா?

Anonymous said...

//
//அய்ய... இவருக்கு சனநாயகமுனா என்னானு தெரியாதா?..//
சத்தியமா தெரியாதுங்க!!
இப்படிக்கு
அப்பாவி பொதுசனம்
//
ஐயையோ இந்த ஆளு இந்தியன் இல்ல, அமெரிக்கா உளவாளி

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

கதிர் said...

//ஐயையோ இந்த ஆளு இந்தியன் இல்ல, அமெரிக்கா உளவாளி//

அக்மார்க் இந்தியன், மறத்தமிழன்,
பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவன்.

ஹி ஹி ஹி ....
எல்லாமே நாந்தான்.

கதிர் said...

முதல் போணி செய்து இந்த பதிவுக்கு இத்தனை ஆதரவு தந்த பின்னூட்ட புயலார், தமிழ்மணத்தின் செல்லப்பிள்ளை, எக்கணமும் தமிழ்மணத்தில் நிலைத்து நிற்கும், எங்கள் பின்னூட்ட பிதாமகராம் திருவாளர் கொத்ஸ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

Anonymous said...

//முதல் போணி செய்து இந்த பதிவுக்கு இத்தனை ஆதரவு தந்த பின்னூட்ட புயலார், தமிழ்மணத்தின் செல்லப்பிள்ளை, எக்கணமும் தமிழ்மணத்தில் நிலைத்து நிற்கும், எங்கள் பின்னூட்ட பிதாமகராம் திருவாளர் கொத்ஸ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.//

அப்ப அனானிகளுக்கு என்ன அல்வாவா?

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

சிறில் அலெக்ஸ் said...

ஆட்களுக்கும் கழிப்பிடங்களுக்கான விகிதத்தையூம்... கல்வி அறிவு விகிதத்தையும்.. சுகாதார/ஒழுக்கப் பாடங்கள் எவ்வளவு முக்கியமாக கற்றுத் தரப் படுகின்றன என்பதையும்..ஒருவரின் அடக்கமுடியாத அவசரத்தையும் தூக்கிப் பார்த்து தீர்ப்பைச் சொல்லுங்கோ சாமி..

கதிர் said...

//அப்ப அனானிகளுக்கு என்ன அல்வாவா?//

என்ன மேக்ரோ இப்டி சொல்லிட்டிங்க?

மேல கல்வெட்டு அய்யா பாராட்டு பத்திரம் கொடுத்துட்டு போனாரு பின்னாடியே நானும் கண்ணியமாக ஒரு பின்னூட்டம் போட்டேன். அப்படியும் உங்களுக்கு திருப்தியில்லன்னா நாளிக்கு உக்காந்து யோசிச்சு ஒரு வாழ்த்துப்பாவே போட்டுறேன் போதுமா?

இப்போதைக்கு இத வச்சிக்கோ!!

காய்ச்சல் அடித்து படுத்துப்போன பதிவுகளை ஊக்க மாத்திரை கொடுத்து தட்டியெழுப்பும் அனானி முன்னேற்ற சங்க தலைவர் திரு மேக்ரோ அவர்கள் நீடூழி வாழ்க!!

நாமக்கல் சிபி said...

Rolling on the floor laughing...

விழுந்து விழுந்து சிரித்தேன் ;)

Anonymous said...

//காய்ச்சல் அடித்து படுத்துப்போன பதிவுகளை ஊக்க மாத்திரை கொடுத்து தட்டியெழுப்பும் அனானி முன்னேற்ற சங்க தலைவர் திரு மேக்ரோ அவர்கள் நீடூழி வாழ்க!!//

தலைவர் நான் இல்ல ...
நானும் தலைவர பாக்கனுமுனு ஏங்கிகிட்டு இருக்கேன்.

அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா.

கதிர் said...

//ஆட்களுக்கும் கழிப்பிடங்களுக்கான விகிதத்தையூம்... கல்வி அறிவு விகிதத்தையும்.. சுகாதார/ஒழுக்கப் பாடங்கள் எவ்வளவு முக்கியமாக கற்றுத் தரப் படுகின்றன என்பதையும்..ஒருவரின் அடக்கமுடியாத அவசரத்தையும் தூக்கிப் பார்த்து தீர்ப்பைச் சொல்லுங்கோ சாமி.. //

வருகைக்கு மிக்க நன்றி சிறில்!

சிறில் என்ன எப்படி சொல்லிட்டிங்க, ஒவ்வொரு ரயில் நிறுத்ததிலயும் ஒரு கழிப்பறை இருக்கு, அதுல போகலாமில்ல, அதை உட்டுட்டு பொது எடத்தில நாலு பேரு பாக்கற நேரத்தில லுங்கிய தூக்கறவனுக்கு தீர்ப்ப தூக்கி பாக்கணும் தோணுதா உங்களுக்கு!!

ரொம்ப நியாயவாதியா இருக்கிங்க!!

கதிர் said...

யாருபா து ROFL க்கு விளக்கம் கேட்டது!

//Rolling on the floor laughing...

விழுந்து விழுந்து சிரித்தேன் ;)//


இணையம் வந்த பிறகு உலகம் சுருங்கிடுச்சின்னு சொன்னாங்க, இப்போ வார்த்தையும் சுருங்கிடுச்சா?

கதிர் said...

//தலைவர் நான் இல்ல ...
நானும் தலைவர பாக்கனுமுனு ஏங்கிகிட்டு இருக்கேன்.//

அப்போ கொ.ப.செ வா?

பதவியெல்லாம் அவிங்களா தரமாட்டாங்க நாமளாதான் எடுத்துக்கணும்.

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!

நாமக்கல் சிபி said...

//பதவியெல்லாம் அவிங்களா தரமாட்டாங்க நாமளாதான் எடுத்துக்கணும்.
//

பேசறத பாத்தா தம்பி நீயே அனானி கமெண்ட் போட்டுக்கிட்ட மாதிரி தெரியுதே!!! :-))

மா.கலை அரசன் said...

தம்பி நல்ல பதிவுங்க. நம்மவர்கள் நிறைய விசயங்களில் தப்பை நியாயப்படுத்தியே பழகிவிட்டார்கள்.

கதிர் said...

//பேசறத பாத்தா தம்பி நீயே அனானி கமெண்ட் போட்டுக்கிட்ட மாதிரி தெரியுதே!!! :-))//

அய்யய்யோ அப்டியெல்லாம் இல்லிங்க பாபாஜி,

அனானி சங்கத்து மேல ஸத்தியமா, அனானிங்க மேல ஸத்தியமா அந்த மாதிரி அழுகுனி விளாட்டு நம்மளுக்கு தெரியாதுங்ணோவ்!!

கதிர் said...

//தம்பி நல்ல பதிவுங்க. நம்மவர்கள் நிறைய விசயங்களில் தப்பை நியாயப்படுத்தியே பழகிவிட்டார்கள்.//

மொக்கை பதிவுகளையும் நல்ல பதிவுன்னு வாழ்த்திய மா. கலை அரசன் நீங்கள் ஒரு மாபெரும் கலை அரசன்.

Murali Venkatraman said...

I am reading your blog for the first time. Fantastic writing style !

கதிர் said...

வருகைக்கு நன்றி முரளி!!

ஹீரோ கணக்கா இருக்கிங்க!!!

கதிர் said...

அ.மு.க தொண்டர்களே எல்லாரும் தூங்க போயிட்டிங்களா?

ஊண் உறக்கம் இல்லாமல் களப்பணி செய்யறத விட்டுட்டு இப்படி உறங்குவது கழகத்துக்கே பெருத்த அவமானம்.

சிங்கங்களே எழுங்கள்!!

கப்பி | Kappi said...

//ஊண் உறக்கம் இல்லாமல் களப்பணி செய்யறத விட்டுட்டு இப்படி உறங்குவது கழகத்துக்கே பெருத்த அவமானம்.

சிங்கங்களே எழுங்கள்!!
//

தம்பி..வொய் டென்சன்?? பொறுமையா அடிச்சு ஆடலாம் வாங்க :))

கதிர் said...

வந்துட்டேன் கப்பி,

நமக்கு டென்சனே ஆகாதுங்ணா!

கப்பி | Kappi said...

//பேசறத பாத்தா தம்பி நீயே அனானி கமெண்ட் போட்டுக்கிட்ட மாதிரி தெரியுதே!!! :-))
//

சேச்சே..தம்பி நல்லவர், வல்லவர்..அவரைப் போய் இப்படி குத்தம் சொல்லிட்டியே வெட்டி...

தம்பி இதுக்காக நீங்க தீக்குளிக்க வேணாம் ;)

கப்பி | Kappi said...

//
நமக்கு டென்சனே ஆகாதுங்ணா! //

அப்ப ஒன்னுக்கு போனவனைப் பாத்ததும் வந்தது விரக்தியா?? நான் அதுவும் டென்சன்னு தான் நினைச்சேன் :))

கதிர் said...

//தம்பி இதுக்காக நீங்க தீக்குளிக்க வேணாம் ;) //

டீயக் கூட நாங்க சூடு ஆறிப்போன பிறகுதான் குடிப்போம், இதில தீக்குளிக்கறதா?

நெவெர்.

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்

அவ்வ்வ்வ்வ்வ்....

நாமக்கல் சிபி said...

//அனானி சங்கத்து மேல ஸத்தியமா, அனானிங்க மேல ஸத்தியமா அந்த மாதிரி அழுகுனி விளாட்டு நம்மளுக்கு தெரியாதுங்ணோவ்!!//

பக்கத்துல தான் ஸ்மைலி போட்டுட்டனே கவனிக்கலையா தம்பி???

அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது ;)

கதிர் said...

//அப்ப ஒன்னுக்கு போனவனைப் பாத்ததும் வந்தது விரக்தியா?? நான் அதுவும் டென்சன்னு தான் நினைச்சேன் :)) ///

சும்மா ஒரு பேச்சிக்கு கூட சொல்ல விட மாட்டேங்கிறாங்களே!!

நாமக்கல் சிபி said...

கப்பியோட சேந்து ஆட ஆரம்பிச்சிட்டீங்களா இனி 100 தான்...
கவலைப்படாத தம்பி...
அனானி உதவியெல்லாம் இனி தேவையில்லை ;)

கதிர் said...

//அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது ;)//

விளையாட்டுக்கா?,, நாங்கூட தமாசுக்கு சொன்னீங்களோன்னு நினைச்சேன் ..

நல்ல வேளை!!

கப்பி | Kappi said...

//சும்மா ஒரு பேச்சிக்கு கூட சொல்ல விட மாட்டேங்கிறாங்களே!! //

பேச்சி பேச்சி..நீ பெருமை உள்ள பேச்சி

கப்பி | Kappi said...

//கப்பியோட சேந்து ஆட ஆரம்பிச்சிட்டீங்களா இனி 100 தான்...
கவலைப்படாத தம்பி...
அனானி உதவியெல்லாம் இனி தேவையில்லை ;)
//

இந்த நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்?? :))

கப்பி | Kappi said...

100!!??

நாமக்கல் சிபி said...

101...
மொய் வெச்சாச்சு

கதிர் said...

//இந்த நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்?? :)) //

கப்பி, இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட
கூடாது, நம்ம உறவு இத்தோட முடிஞ்சி போற உறவா?

இன்னிக்கு நீ பை-ரன்னர் னா நாளைக்கு நான் அம்பயராவே மறி உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்.

கைம்மாறு, கால்மாறுன்னு, நீ கொஞ்சம் சும்மாறு.

கப்பி | Kappi said...

//கப்பி, இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட
கூடாது, நம்ம உறவு இத்தோட முடிஞ்சி போற உறவா?

இன்னிக்கு நீ பை-ரன்னர் னா நாளைக்கு நான் அம்பயராவே மறி உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்.
//

அட்ரா சக்கை..அட்ரா சக்கை

//
கைம்மாறு, கால்மாறுன்னு, நீ கொஞ்சம் சும்மாறு. //

சரிங் ஆபிசர் ;)

சிறில் அலெக்ஸ் said...

உங்களுக்கு பதில் எழுதலாம் என்றுதான் நினைத்தேன்.. ஆனா ஒழுங்கா தன் வேலையை பார்க்கிர ஆபிசரை 'ஹமாம் சோப்பு' என சொல்கிறீர்களே..

அறியாமை/அவசரம் காரணமாய் தண்டவாளத்தில் ஒன்னுக்கடிக்கிற நம் அடிமட்டத் தொண்டனைப் பார்த்து ஓடாமல், 'நாதாரி' என ஏசாமல், ஒரு சின்ன அறிவுரை சொல்லிட்டு வந்திருக்கலாமே?

அவர் அடுத்தமுறையும் தண்டவாளத்தைக் கழுவ நினைத்தால் குற்றத்தில் உங்களுக்கும் பங்குள்ளது..

கதிர் said...

//101...
மொய் வெச்சாச்சு//

மொய் வைக்க உதவிய அனானிகள் (குறிப்பாக மேக்ரோமண்டையன்), தோழமைகள், வெட்டி, கப்பி ஆகியவர்களுக்கு கோடானுகோடி (காசா பணமா அள்ளிவிடு நைனா)
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தம்பியின் தீர்ப்பு

தண்டவாளத்திலும், அதன் ஓரங்களிலும் எண்கள் முறையே 'ஒன்று' மற்றும் 'இரண்டு' ஆகியவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என இந்த வலைத்தளம் உத்தரவிடுகிறது.

இலவசக்கொத்தனார் said...

100 அடிச்சுட்டீங்களா தம்பி! வாழ்த்துக்கள்!

கதிர் said...

//100 அடிச்சுட்டீங்களா தம்பி! வாழ்த்துக்கள்!//

எல்லாம் உங்க "கைராசிதான்" கொத்ஸ்!!

கதிர் said...

//உங்களுக்கு பதில் எழுதலாம் என்றுதான் நினைத்தேன்.. ஆனா ஒழுங்கா தன் வேலையை பார்க்கிர ஆபிசரை 'ஹமாம் சோப்பு' என சொல்கிறீர்களே..//

மன்னிக்கவும்..

இப்போ நேர்மையா இருக்குற ஆளப்பாத்து கௌரவம் சிவாஜிக்கு ஒப்பிடுறோம் இல்லையா?

அதுமாதிரி தான் இதுவும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அப்படி போட்டது. மத்தபடி கிண்டல் எல்லாம் இல்லை.

ரிஷி (கடைசி பக்கம்) said...

இதெல்லாம் பரவாயில்லை!

ஒரு முறை இரண்டு பெட்டிகளுக்கிடையே உள்ள சிறிய இடைவெளியை வசதியாக உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.

ஏன்ன ஒரு applied mind என்று வியந்து மூக்கை பிடித்துக்கொண்டே சென்றேன்.

Anonymous said...

ஒரு உண்மையான நாட்டுபற்றாளன் தண்டவாளத்தை கழுவி சுத்தபடுத்துவதை தவறு என்று கூறுபவர்களை நான் கடுமையாக கண்டிகிறேன்.
சென்னையில் உள்ள தண்ணி பஞ்சத்தில் அவனுக்கு கிடைத்ததை வைத்து கழுவி இருக்கிரான்....

ஆமா உங்களுக்கு அன்னைக்கு ட்ரெயின்ல புரா பீரின்னு ஹமாம் சோப்பு ஆபிசர் சொன்ன மாதிரி அவனுக்கும் பைன் கட்டுன பிறகு பீரின்னு சொன்னாரானு கேட்டு சொல்லுங்களேன்?.....

கார்த்திக் பிரபு said...

thabi 108 adicheeteengaley valthukal

கதிர் said...

//ஆமா உங்களுக்கு அன்னைக்கு ட்ரெயின்ல புரா பீரின்னு ஹமாம் சோப்பு ஆபிசர் சொன்ன மாதிரி அவனுக்கும் பைன் கட்டுன பிறகு பீரின்னு சொன்னாரானு கேட்டு சொல்லுங்களேன்?..... //

அவன் பைன் கட்டவில்லை அதனால அவன்கிட்ட இருந்த ஐ.டி அட்டை, அப்புறம் அவன்கிட்ட இருந்த சில பொருள்களை புடுங்கி ஹமாம் வச்சிகிட்டாரு, இல்லன்னா அவர் எப்பவோ எஸ்கேப் ஆயிருப்பாரு.

கதிர் said...

//ஒரு முறை இரண்டு பெட்டிகளுக்கிடையே உள்ள சிறிய இடைவெளியை வசதியாக உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.
//

சில பேரு அகராதிக்குன்னே செய்வானுங்க.

Anonymous said...

You write excellent.

Enjoyed it very much.

கதிர் said...

ரொம்ப நன்றிங்க அனானி!!

வணக்கத்துடன் said...

தம்பி,

உங்கள் அனுபவத்தை அழகாய் பதிந்திருக்கிறீர்கள்.

வாசித்தவர்களும் அந்த அழகு கெடாமல், சுவை கூட பின்னூட்டியுள்ளனர் - அனானிகள் உட்பட.

சரி இனி ஒரு spoiler.

தண்டவாளத்தில் ஒன்னுக்கு ரெண்டுக்கு உடுரது (இரயில்வே சட்டப்படி) சரியா தப்பாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அதை சுத்தம் பண்றது யாரு? அவிங்க எப்படி அதை அள்ளுறாங்க? (அவிங்க கையால சுத்தம் பண்றத யாரவது நேர்ல பாத்திருக்கிங்கீங்களா கண்ணுங்களா? )

சுமார் 64 ஆயிரம் கி.மீ தூரமுள்ள இந்திய இரயில்வேயில, பிரயாணிகள் பேளுரத அள்ளுரதுக்கு எத்துனை பேரு தேவைப்படும்?

அட சும்மா யோசிங்கய்யா.

கதிர் said...

அய்யா வணக்கத்துடன்!!

உங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

//சுமார் 64 ஆயிரம் கி.மீ தூரமுள்ள இந்திய இரயில்வேயில, பிரயாணிகள் பேளுரத அள்ளுரதுக்கு எத்துனை பேரு தேவைப்படும்?//


இந்த கேள்விக்கு நான் பதில சொல்லணும்னா கொஞ்சம் கவிச்சியா இருக்கும், இருந்தாலும் கேட்டுட்டிங்க சொல்லித்தான ஆகணும்.

64 ஆயிரம் கிலோ மீட்டர்லயும் மக்கள் ரயிலுக்காக காத்திருக்காங்களா?

இல்லையே,... ரயில் நிறுத்தங்களில்தானே காத்திருக்காங்க..

சரி அதை விடுங்க.

மக்கள் இருக்கற எடத்தில சுத்தம் பண்ணாலே போதும், நடமாட்டம் இல்லாத இடத்தில எல்லாம் அவசியமில்லை அது தானாவே ஆவியாகிடும்....

என்னை விட்ட அதிகமா சிந்திச்சுருக்கீங்க.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஓ.. ஹமாம் என்றால் நேர்மை. சாரி.. ரெம்ப நாளா ஊர்ல இல்லாததால ட்யூப் லைட் மண்டைல ஏறல.

:)

பரத் said...

//ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில//
ஆகா...என்ன ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டீங்க!

Sonnathu thambi illa.Kamal inthiyan padathula(vasanam-balakumaaran).
:))

பரத் said...

sorry..vasanam:sujathaa

Unknown said...

யோவ் தம்பி இன்னுமா ஒன்னுக்கு வருது ? உட்டுட்டு வேற எடத்துக்கு போயேன்பா இன்னுமும் இங்கனயே நின்னுகினு

லொடுக்கு said...

அனானிகளை நம்பினோர் கைவிடப்படார் என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுவிட்டது. வாழ்த்துக்கள் தம்பி 100-க்கு. வாழ்க அ.மு.க - வின் களப்பணி.

கதிர் said...

//யோவ் தம்பி இன்னுமா ஒன்னுக்கு வருது ? உட்டுட்டு வேற எடத்துக்கு போயேன்பா இன்னுமும் இங்கனயே நின்னுகினு//

"மழை விட்டும் தூவானம் விடலைன்னு சொல்வாங்களே"

அது இதான் போலருக்கு!!

பின்னூட்ட பொட்டிய தொறந்தா ரெண்டு பின்னூட்டம் நிக்குது, அதை பப்ளிச் பண்ணா தமிழ்மணத்தில நம்ம பதிவு மணக்குது.

என்ன செய்ய!

வாங்க லொடுக்கு!
அனானிகளின் களப்பணி ரொம்ப சிறப்பா செயல்படுது!!

கதிர் said...

//Sonnathu thambi illa.Kamal inthiyan padathula(vasanam-balakumaaran).
:)) //

வாங்க பரத். ரொம்ப நாளா ஆளையே காணும்.

என்ன ஆச்சரியம் பாருங்களேன் சுஜாதாவுக்கும் எனக்கும் ஒரே மாதிரி தோணியிருக்கு.

ரொம்ப ஓவரா இருக்கோ!!!
இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாமே நல்லதுக்குதான்!

மதி said...

ஐயா, public toilet பக்கம் கப்பு தங்கலைங்க, மூக்க புடிச்சிகிட்டுக் கூட போக முடியலிங்க, ஏலம் எடுத்து toilet நடத்தறவங்க ஒன்ணுக்கனாலும்,ரெண்டுக்கானாலும் கறாறா 2 ரூபாய் கேக்கிறான். எப்ப‌யோ படித்த துணுக்கு ஞாபகத்துக்கு வ‌ருதுங்க.
'மேல் நாட்டுக்காரன் பஸ்நிலயத்தில Toilet உள்ளப் போக காசு கேட்டதுக்கு, "எங்க நாட்ல Toiletக்கு வெளியில publickல போனாதான் fine போட்டு காசு கேட்பான். இங்க வெளிய போறவன விட்டுட்டு toiletஐ தேடி வ‌ந்து போற என் கிட்ட காசு கேக்கிறியே ஞாயமான்னு கேட்டாராம்.
முதல்ல அநியாயமா toiletக்கு வசூலிக்கறத் நிறுத்த்ச் சொல்லுங்க, அப்பறமா தீர்ப்பச் சொல்லுங்க‌

கதிர் said...

//ஒன்ணுக்கனாலும்,ரெண்டுக்கானாலும் கறாறா 2 ரூபாய் கேக்கிறான்.//

பாவங்க! அவனும் தொழில விருத்தி பான்ன வேணாமா?

ரிஷி (கடைசி பக்கம்) said...

தம்பி!

நானும் ரயில்வே அனுபவத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்!

சந்தேகத்திற்க்கு என்னுடைய "நோ பார்க்கிங்" பதிவை பார்க்கவும்