எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, February 15, 2007

போகாதே... போகாதே... - தீபாவளி

யுவன் இசையில் சோகமான சோலோ பாடலை பெரும்பாலும் அவரே பாடிவிடுவார்
மொட்டையின் குரல் அளவுக்கு சோகத்தை வரவழைக்க முடியாவிட்டாலும்
ஓரளவுக்கு அருகில் வருகிறார் மோசமில்லை. படத்தின் கதை மூன்றாம்பிறையின்
ஒன்றுவிட்ட சித்தப்பா கதைதான். கதாநாயகிக்கு நடந்த ஒரு விபத்தில் கடந்த
மூன்று வருடங்களாக நடந்த சம்பவங்கள் யாவையும் மறந்து விடுகிறார்.
மாறுதலுக்காக சென்னை வருபவர் (பில்லுவை)ஜெயம் ரவி காதலிக்கிறார். பின்னர்
ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடந்தது எல்லாம்
ஞாபகத்திற்கு வர பில்லுவை மறந்துவிடுகிறார். (இதுக்கு பேரு வியாதியாம்)
சமீபத்தில் விகடன் கட்டுரையில் ஒரு பெண் இதுமாதிரி பாதிக்கப்பட்டதாக படித்த
ஞாபகம். மறுபடி அவரை கைபிடிக்கிறாரா அவருக்கு நினைவு திரும்புகிறதா
என்பது மீதி கதை. ரவிக்கு சோக காட்சிகள் சுத்தமாக வரவில்லை. ஆள் மட்டும்
பாக்குறதுக்கு HULK படத்துல வர்ற ஹீரோ மாதிரி உடம்பு அளவுக்கு மீறிய
ஆஜானுபாகு என்று சொல்ல முடியாது கை கால் எல்லாம் ரொம்ப ஓவரா
வளர்ந்துடுச்சி மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு ஞாபகம் வர கமல் செய்யும்
நடிப்பு ஏனோ கண் முன் வந்து போனது. தமிழ்சினிமா ரசிகர்கள் யாரும் இன்னும்
மறந்திருக்க மாட்டார்கள் அந்த ரயில் காட்சியை.

சொன்ன விதத்தில் சுவாரசியமாக இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். படம்
முழுக்க காமெடி தூவி அழகாக இருக்கிறது. இந்த தமிழ்சினிமாவில ஹீரோவ என்ன
ஏதுன்னே தெரியாம ஊரே கொண்டாடும் அதே மாதிரி இந்த படத்துலயும் இருக்கு.
படத்துல பெரிய ப்ளஸ் பாயிண்ட் பாவனாவும் அவரின் நடிப்பும். ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.

சில பாடல்கள் கேட்டவுடன் நச்சென்று மனதில் பதியும். சில பாடல்களை பலமுறை
கேட்டால்தான் மனதில் பதியும். முதலில் சொன்ன வகையை சேர்ந்து இந்த பாடல்.
வரிகள் சாதாரணமான வார்த்தைகளாக இருந்தாலும் பாடலின் இசை பலமுறை
கேட்க வைக்கிறது. பாடலின் நடு நடுவே வீணையோ, மேண்டலினோ தெரியவில்லை
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இனிமையாக உள்ளது. இன்னும் கொஞ்ச நாள்
இளைஞர்களின் உதடுகளில் குடியிருக்க போகும் பாடலாக அமையும் போல இருக்கு.
பாடலை கண்ண மூடிகிட்டு மனசுக்குள்ள பாவனாவை கொண்டு வந்தீங்கன்னா
பாடலை முழுமையாக ரசிக்கலாம். அதுக்கு வசதியா ஒரு போட்டோ கீழ ஒரு
போட்டோ இருக்கு பாத்து ரசிக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் எனைப் பார்கும்போது
உயிரே உயி போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒணு வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போலதானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ.. ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ..ஓ

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தேவானாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்


பாடல் தரவிறக்கம் செய்ய ஏராளமான தளங்கள் உள்ளது.
www.123musiq.com
www.indiamoviezone.com
www.tamilmp3world.com

ராகாவில இன்னும் போடவில்லை.

பாட்டை மட்டும் எழுதலாம்னு நினைச்சி எழுதினேன் படத்தோட விமர்சனமும்
எழுதற மாதிரி ஆயிடுச்சி. இந்த கலப்பைய கைல புடிச்சாவே இப்படிதான் சுலபத்துல
கீழ வைக்க முடியல. போன சென்மத்துல வெவசாயியா பொறந்துருப்பனா தெரில.

17 comments:

இராம்/Raam said...

அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழமை பார்த்துற வேண்டியதுதான் :))

ஜி said...

பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவியையும் சேத்துப் போட்ட்டுட்டியே தம்பி...

மனசுல நெனச்சா... அவனும் சேந்து வந்து நம்மள வெறுப்பேத்துறான்...

பாட்டக் கேட்டுப் பாக்குறேன்.. ;)))

அபி அப்பா said...

தம்பி,
நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்பா வச்சிட்டீங்களே! படிக்கிறவங்க தப்பா புரிஞ்சிகிட்டு போகாம இருந்துட போறாங்க.

நாகை சிவா said...

ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொரு படம் (சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் ஒரு பாட்டுக் கூட வருமே) போன்ற படங்களை எல்லாம் என் போன ஜென்ம பாவத்தினால் காண நேர்ந்தது. ஆதனால இந்த படத்துக்கு ரிஸ்க் எடுக்க விரும்பல. இன்னும் ஒரு நாலு ஐந்து பேர் சொல்லட்டும் படம் பரவாயில்லை என்று. அப்பால இத பத்தி திங்க் பண்ணலாம். ( அந்த 4, 5 பாவனா இருக்கும் காரணத்தால் தான் இல்லாட்டி....)

நாகை சிவா said...

//ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. //

உன் ஏக்கத்தை போக்கிடலாமா சொல்லு ;-)

செய்திடலாம்.....

கதிர் said...

//அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழமை பார்த்துற வேண்டியதுதான் :)) //

பாருங்க என்சாய் பண்ணுங்க ராம்.

தனியாதான் போறிங்களா?

கதிர் said...

//பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவியையும் சேத்துப் போட்ட்டுட்டியே தம்பி...

மனசுல நெனச்சா... அவனும் சேந்து வந்து நம்மள வெறுப்பேத்துறான்...

பாட்டக் கேட்டுப் பாக்குறேன்.. ;)))//

வாப்பா ஜி!

ஒரு பாதுகாப்புக்குதேன் அவனும் கூட இருக்கான். நீங்க கொத்திட்டு போயிடுவீங்கல்ல! :))

கதிர் said...

//தம்பி,
நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்பா வச்சிட்டீங்களே! படிக்கிறவங்க தப்பா புரிஞ்சிகிட்டு போகாம இருந்துட போறாங்க.
//

அது பாட்டோட தலைப்புங்க! எப்படி சொன்னாலும் பாக்கத்தான் போறிங்க. வீராசாமியவே ரெண்டு முறை பார்த்த ஆளாச்சே நீங்க இதெல்லாம் சும்மா ஜுஜிபி. :))

கதிர் said...

//ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொரு படம் (சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் ஒரு பாட்டுக் கூட வருமே) போன்ற படங்களை எல்லாம் என் போன ஜென்ம பாவத்தினால் காண நேர்ந்தது. ஆதனால இந்த படத்துக்கு ரிஸ்க் எடுக்க விரும்பல. இன்னும் ஒரு நாலு ஐந்து பேர் சொல்லட்டும் படம் பரவாயில்லை என்று. அப்பால இத பத்தி திங்க் பண்ணலாம். ( அந்த 4, 5 பாவனா இருக்கும் காரணத்தால் தான் இல்லாட்டி....)//

வாய்யா புலி, எலேய் சூடான் புலி இந்தியா போனதுக்கப்புறம் எலியா மாறிடுச்ச்சா?

பழைய பார்முக்கு வா ராசா!

அப்புறம் ஜெயம் படத்துக்கு என்ன கொறச்சல்? சதா னு ஒரு தாவணி பிகர படம் முழுக்க பாத்து ரசிச்சிருக்கலாமே!
மழைல ஸ்ரேயா, தாஸ் ல ஒரு சேச்சி எல்லாமே நல்லாதான இருக்கும்.

நீ ஏன்யா ரவியோட நடிப்ப எல்லாம் பாக்கற?

நமக்கு பிடிச்ச மட்டும் ரசிச்சா போதாதா?

சின்னபிள்ளையாவே இருக்க நீயி.

அபி அப்பா said...

//அது பாட்டோட தலைப்புங்க! எப்படி சொன்னாலும் பாக்கத்தான் போறிங்க. வீராசாமியவே ரெண்டு முறை பார்த்த ஆளாச்சே நீங்க இதெல்லாம் சும்மா ஜுஜிபி. :))//

சிவ பெருமான் முருகனிடம் கூறுகிறர்:

"அதிகமா ஆணி புடுங்க சொல்றவன் நிலை என்னன்னு இந்த உலகத்துக்கு உணர்த்தவே என்னுடைய இந்த திருவிளையாடல். இதோ விட்டத்தயே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு முழிக்கிறானே இந்த அபிஅப்பா...இவன் செய்த கொடுமை என்ன தெறியுமா முருகா. ஒரு நாளைக்கு 10 பை ஆணிதான் ஒருவனுக்கு புடுங்கமுடியும் என்று தெரிந்தும் இவன் அவன் கூட இருக்கும் வடிவேலுவை 100 பை ஆணி புடுங்க சொல்லி பாடாய் படுத்தினான். அதனால்தான் வடிவேலு கையாலேயே வீராசமி சி.டி அனுப்பிவைத்தேன். இப்போது புரிகிறதா முருகா!!!"

"நன்றாக பிரிகிறது தந்தையே" இது முருகன்.

லொடுக்கு said...

//என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.
//

அதானே. ஏன் அப்படி? எனக்கு கூட இந்தக் கேள்வி அடிக்கடி தோணும். பதில் கிடச்சா சொல்லி அனுப்புங்க தம்பி.

படம் இன்னும் பாக்கல. தகடு வீட்டுல இருக்கு. பாக்கனும்.

கோபிநாத் said...

இந்த படத்தை கண்டிப்பா பார்க்கனும் ஏன்னா இதுல நம்ம ஏரியா வருது..(ராயபுரம்)

ரவிக்கு ஏரியா பாஷையே சரியா வரலியாம்
நம்ம பசங்க சொன்னாங்க..

விமர்சனம் நல்லாருக்கு

கதிர் said...

//அதிகமா ஆணி புடுங்க சொல்றவன் நிலை என்னன்னு இந்த உலகத்துக்கு உணர்த்தவே என்னுடைய இந்த திருவிளையாடல். இதோ விட்டத்தயே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு முழிக்கிறானே இந்த அபிஅப்பா...இவன் செய்த கொடுமை என்ன தெறியுமா முருகா. ஒரு நாளைக்கு 10 பை ஆணிதான் ஒருவனுக்கு புடுங்கமுடியும் என்று தெரிந்தும் இவன் அவன் கூட இருக்கும் வடிவேலுவை 100 பை ஆணி புடுங்க சொல்லி பாடாய் படுத்தினான். அதனால்தான் வடிவேலு கையாலேயே வீராசமி சி.டி அனுப்பிவைத்தேன். இப்போது புரிகிறதா முருகா!!!"//

வடிவேலு உங்க கூடதான் இருக்காரா குமார்?

அவருதான் ஆணியே புடுங்கவேணாம், "நீ புடுங்கற எல்லா ஆணியும் தேவையில்லாத ஆணிதான்னு சொன்னாரே" :))
அவர போய் ஆணி புடுங்க சொன்னிங்களே அதான் வெச்சாரு ஆப்பு :)

இந்த சின்ன மேட்டருக்கு எதுக்குங்க சிவபெருமான எல்லாம் இழுக்கறிங்க?

கதிர் said...

//அதானே. ஏன் அப்படி? எனக்கு கூட இந்தக் கேள்வி அடிக்கடி தோணும். பதில் கிடச்சா சொல்லி அனுப்புங்க தம்பி. //

எனக்கு வர்ற கேள்வியெல்லாம் இப்படிதான் வருதுன்னு நானே வருத்தத்துல இருக்கென், உங்களுக்கும் இதே மாதிரி வருதா?



//படம் இன்னும் பாக்கல. தகடு வீட்டுல இருக்கு. பாக்கனும். //

பாத்துட்டு சொல்லுங்க!

உலககோப்பை பத்தி பதிவு போடுங்க லொடுக்கு!

ஆமா பவுன்சர்னு பதிவெழுதறது நீங்கதான்னு ஒரு வதந்தி உலவுதே!

கதிர் said...

//ரவிக்கு ஏரியா பாஷையே சரியா வரலியாம்
நம்ம பசங்க சொன்னாங்க..

விமர்சனம் நல்லாருக்கு//

நன்றி மெட்டி ஒலி கோபி அவர்களே!

நான் அவனுக்கு நடிப்பே சுத்தமா வரலண்ணு சொல்றேன்.

எழிலின் எல்லா படத்திலயும் ஹீரோவ ஒரு ஊரோ, அல்லது தெருவோ பிள்ளையாக தத்தெடுத்து அவர் மீது அன்பை டன் கணக்கில் பொழிவார்கள்.
அவரது நண்பர்கள் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமா நண்பர்களுக்கு முன் மாதிரியாக இருப்பார்கள்.

உதாரத்துக்கு.
து.ம.துள்ளும்
பூவெல்லாம் உன் வாசம்
தீபாவளி.

நாகை சிவா said...

//து.ம.துள்ளும்
பூவெல்லாம் உன் வாசம்
தீபாவளி. //

பெண்ணின் மனதை தொட்டு இதை விட்டுட்ட

கதிர் said...

//பெண்ணின் மனதை தொட்டு இதை விட்டுட்ட//

ஏன்லே பெஇய பழியா தூக்கி போடுற?
நான் உனுக்கு என்ன பாவம் பண்ணேன்?

நான் எங்கய்யா பொண்ணு மனச தொட்டேன்?

நான் எந்த பொண்ணு மனசையும் தொடல. விடவும் இல்ல பிரியுதா!