இந்த சொன்னது எல்லாமே இந்த வார இதழ்களில் இருந்து எடுத்ததுதான். கடினமா இருக்கற மாதிரி இருந்ததுன்னா பின்னூட்டத்துல கேளுங்க க்ளு கொடுக்கப்படும். ம்ம்ம் பூந்து விளாடுங்க!
1."ஈழத்தமிழர்கள் விஷயத்தில் வைகோ காட்டிய தீவிரத்தை தமிழகத்தில் வேறு எந்தக் கட்சித் தலைவரும் காட்டியிருக்க முடியாது. ஆனால் அது ஒரு புனிதமான உணர்வு இல்லை"
L.கணேசன்
2."நான் இதற்கு முன் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் நான் அறிந்த வரையில் இப்போது வாங்கும் கலைஞர் விருது நான் வாங்கியதிலேயெ மிகச் சிறந்த விருது."
எழுத்தாளர் ஜெயகாந்தன்
3."முதலில் ஆந்திரா மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி தெலுங்கானா கோரிக்கை. மாநிலத்தை பிரிப்பதென்பது மகா பாவம்"
புட்டபர்த்தி சாய்பாபா
4."கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சினை"
கலைஞர் கருணாநிதி
5."எனக்கு சச்சினைப்போல உலக அளவில் சாதிப்பதுதான் குறிக்கோள். அதற்காக கடுமையாக பயிற்சி செய்கிறேன்" (சொன்னது சென்னைப்பெண்)
திருஷ்.காமினி
6."மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது என்ற விஷயத்தை தவிர, மற்றவைகளில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கிறோம்"
திரு.மாதவன் நாயர்
7."எல்லாருக்கும் எப்படியாவது ஜெயிக்கணும்னு வெறி இருக்கும், எனக்கு மட்டும் ஏன் ஜெயிச்சோம்னு இருக்கு" இன்னும் நான் தொலைக்காம இருக்கறது என் நம்பிக்கையை
மட்டும்தான்.
வெள்ளித்தாரகை சாந்தி
8."ஐம்பது வயதைக் கடந்த பின் நாமெல்லாம் வானத்தில் எறிந்த கல் திரும்பி வரும் பாதையில் இருக்கிறோம், விழும்போது நல்ல நெஞ்சங்களில் விழ வேண்டும்"
கவிப்பேரரசு வைரமுத்து
9. "உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட மெகா க்ரைம் நாவல் மகாபாரதம்தான் அதில் இல்லாத சூழ்ச்சிகள் கிடையாது, கொலைகள் கிடையாது, சதிகள் கிடையாது, முதன் முதலாக ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டதும் அதில்தான்"
க்ரைம் நாவல் ஸ்பெஷல் ராஜேஷ்குமார்
10."கமர்ஷியல் சினிமாவின் வெற்றி அந்தந்த காலகட்டத்துக்குலதான் இருக்கும்,ஆழமான கதைகளின் வெற்றி காலங்காலமா நிற்கும்". "என்னுடைய படங்கள் எப்பவும் பேசப் படணும்னு விருப்பறேன். என் பயணம் நான் தீர்மானிச்சது"
இயக்குனர் சேரன்
31 comments:
கயமை!
ஒன்னே ஒன்னுதான் தெரியுது கதிர்,
4 கலைஞர்
5 ஜோஸ்த்தனா(Guess)
லியோ சுரேஷ்
4. கலைஞர்
5. பெண் கிரிக்கடர் ( தெளிவான பதிலுக்கு ஆனந்த விகிடன் )
7. சாந்தி
வாங்க ராம் அண்ணே!
மொத போணி! :))
ஆர்வக்கோளாறுல பதிலயும் போட்டுட்டேன் :))
சரியான பதில்தான் நீங்க சொன்னது அதை டெலிட் பாணிடறேன்!
5.திருஷ் காமிணி.
வருக லியோ சுரேஷ்!
நீங்க சொன்ன ரெண்டு பதில்ல ஒண்ணு தப்பு , ஒண்ணு ரைட்டு,
ஜோஸ்த்னா யாருங்க?
வாங்க சுந்தர்!
நீங்க சொன்ன ரெண்டு பதிலும் சரியானதுதான்!
வாங்க லட்சுமி!
ஒரே கேள்விக்கு ஓரே பதிலா சொல்லியிருக்கிங்க!
நான் படிச்ச புத்தகத்துல ரெண்டு சுழி "னி" தான் போட்டுருக்காங்க! :)
உடன்பிறப்பே,
கொஞ்சம் என் முயற்சிகள்
1. திருச்சியில் பிள்ளையாருக்கு போட்டியாக குடி கொண்டவர்
2. சில நேரங்களில் சில மனிதர்கள் ;)
4. உடன்பிறப்புக்களின் அண்ணன்
6. பால்தாக்கரேயின் சமீபத்திய friend
7. சாதித்ததால் அமைதி போனவர்
10. ___ , சோழன், பாண்டியன்
வழக்கம்போல மத்தது மத்தவங்களுக்கு ;)
(Suggestion: கொஞ்சம் பழசும் புதுசுமான மிக்ஸிங், தேவைப்பட்ட இடத்தில் interestingஆன ஒரு hint)
வருக விக்கி!
வழக்கம்போல சுவாரசியமான பதிலாக சொல்லியிருக்கிங்க!
ஆறாவது பதில் மட்டும் தவறுன்னு நினைக்கிறேன்!
அதுக்கான க்ளு! மலையாளத்துக்காரர் கனவு காணச்சொன்னவரின் நண்பர்!
உங்களின் யோசனையும் நல்லா இருக்கு! ஆனா Hint தேவைப்படற மாதிரி இல்லயே இந்த "சொன்னதுகள்" அதுனால போடல! அடுத்த முறை நிச்சயம் போடுகிறேன்!
வருகைக்கு நன்றி விக்கி!
1. எல்.ஜி
4. திரு.மு.க
7.சாந்தி
மீதி துன்னுட்டு வந்து.
வாங்க அபி அப்பா!
துன்னுட்டு வந்து மீதிய சொல்லிடுங்க!
ரொம்ப கஷ்டமா இருக்கறதுனால சில க்ளுகளை சொல்றேன்!
3.லிங்கப்பர், தங்கச்சுரங்கம்
6. ஏற்கனவே விக்கிக்கான பதிலில் க்ளு இருக்கு
7. கண்ணகி சிலைய எடுத்ததுனாலதான் சுனாமி தாக்குச்சி ஒரு மேடையில இவரு சொன்னது படா தமாசு!
9. விவேக், ரூபலா
என்ன கண்மணிகளா! பெங்களூர்ல கலவரம்னு எஸ்கேப் ஆகிட்டிங்களா?
முயற்சி திருவினையாக்கும்,
கடைவிரித்தேன் கொள்வாரில்லை! :((
அனானி சொன்னது மூணு தப்பு!
7 சரியான பதில்கள்
அனானி முயற்சி பண்ணுங்க.
பேர சொல்லுங்க அனானி!
3. பாபா
6. ஒய். எஸ். ராஜன்
9. ப.கோ.பிரபாகர்
மற்றது எதுவும் நான் சொன்னது(ம்) அல்ல :P
தம்பி
//கடைவிரித்தேன் கொள்வாரில்லை! :((
//
கவலை வேண்டாம், இன்று தமிழ்மணத்தில் காலையில் கடித்த கொசுவால் :)))மக்கள் கூட்டம் இங்கு வரவில்லை! மற்றபடி நல்ல பதிவு தங்களுடையது!
இது ஒரு வருகைப்பதிவு பின்னூட்டம் ஒன்று இரண்டு தெரிந்த பதில்களுடன் அடுத்த பின்னூட்டத்தில்....
அன்புடன்...
சரவணன்.
1, நெடுமாறன்
2,வைரமுத்து
4, கருணாநிதி
6.........நாயர்(நீங்க தானே மலையாளினு சொன்னீங்க :)))
9.சுஜாதா
10,மணிரத்னம்
அன்புடன்...
சரவணன்.
2. ஜெயகாந்தன்?
4. கலைஞர்
6. மாதவன் நாயர்?
7. சாந்தி
9. ராஜேஷ் குமார்
மத்ததுக்கெல்லாம் க்ளு கொடுங்க சாரே
மிச்ச try. But all are complete guess work :)
3. கலைஞருக்கே இதயத்தில் இடம் கொடுத்தவர்
5. ஜோஷ்னா சின்னப்பா
6. கஸ்தூரி ரங்கன்
8. ஜெயேந்திரர்
9. ராஜேஷ்குமார் ??
வாங்க எங்கள் நண்பன் சரா!
அந்த கொசு கடிச்சதுதான் இன்னிக்கு த.ம வில பெரிய விஷயம் :))
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!
நீங்க சொன்னது 4 மட்டும் சரி, 6 வது ஊகத்திற்கு இடமில்லை :))
பதில சொல்லுங்க!
க்ளு: நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பய்மாருக்கு :))
நன்றி சரா!
வாங்க பாபா1!
3. உங்க பேருதான் :))
அது மட்டும் சரி!
மீதி பிழையான பதில்கள் என்று கூட சொல்லலாம்!
எலேய் கப்பி!
நீங்க சொன்ன நாலுமே சரியான பதில்தான்! க்ளு பின்னூட்டத்தில சொல்லியிருக்கேன். தேவைப்படும் பட்சத்தில் சொல்ல தயாரா இருக்கேன்!
நன்றி கப்பி!
மீள் வருகைக்கு நன்றி விக்கி!
கலைஞருக்கு இதயத்தில் இடம் கொடுத்தவர் அவர் இல்லை. :))
அவரு லிங்கம் வாய்லருந்து எடுப்பாராம் ஆனா நான் பார்த்ததில்லை.
க்ரைம் எழுத்தாளரரும், பின்ன நாயரும் மட்டும் சரி!
நன்றி விக்கி!
நான் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொன்னேனே?
1. ஞாநி?
3. சாய்பாபா?
5. திருஷ் காமினி. பேட்டி படிச்ச ஞாபகம் இருக்கு. அம்மணி பேர் மறந்துபோச்சு.. தேடி கண்டுபுடிச்சுட்டோம்ல ;))
1. எல்.கணேசன்
2. ஜெயகாந்தன்
3. ராஜசேகர் ரெட்டி
4.கலைஞர் கருநாநிதி
5.
6.வாசுதேவன் நாயர்
7.சாந்தி
8.
9.ராஜேஷ் குமார்?
10.சேரன்
தம்பி..
1. விஜயகாந்த் (அப்படி இல்லனா...க்ளு கொடு)
2. ஜெயகாந்தன்
3. சாய்பாபா
4. முதல்வர் கருணாநிதி
5. க்ளு...
6. மாதவன் நம்பியார்
7. சாந்தி
8. க்ளு...
9. பட்டுகோட்டை பிரபாகரன்
10. விஜய்
தம்பி..
9. ராஜேஷ்குமார்
10. சேரன்
போன பின்னூட்டத்தில் இந்த ரெண்டையும் மாத்திடு...ஒகே..
கோபிநாத்,
கலக்கிட்ட போ.
அது என்ன மாதவன் நம்பியார்?
மாதவன் நாயர் தான் சரி.
விடைகளை போட்டாச்சு!
கப்பி உன் ஆர்வத்த பாக்கும்போது உடம்பே புல்லரிக்குதுபா!
பங்கேற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
அடுத்த முறை சில தகவல்களுடன் "சொன்னதை" சொல்கிறேன். இந்த முறை கொஞ்சம் கடினமா இருந்ததுன்னு நினைக்கிறேன்.
:((
இதுதான் ஒரிஜினல் கயமை பின்னூட்டம்.
எல்.ஜி,ஜெயகாந்தன்,சாய்பாபா,மு.க,காமினி,மாதவன்,சாந்தி,வைரமுத்து,ராஜேஷ்குமார்,சேரன்
எப்புடி?????
Post a Comment