எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, February 06, 2007

தாயகத்தை முத்தமிடப் போகும் தமிழன்!!!

எங்கள் அருமை நண்பர் கப்பிநிலவர் வரும் 11ம் தேதி மாண்டிவிடியோ
மண்ணிலிருந்து பொட்டி கட்டுகிறார். அவரை வாழ்த்தி வழியனுப்பவே
இந்த பதிவு. அவரோடு பழகிய நாட்களை நினைத்து பார்த்தால் பரவசமாக
இருக்கிறது. ஆங்கிலபுத்தகம் படித்து விமர்சனம் எழுதுவதிலாகட்டும்,
பின்நவீனத்துவ கனவு காண்பதிலாகட்டும், பயணகட்டுரை எழுதுவதிலாகட்டும்
இவரின் தனிமுத்திரை பதிக்கும் பதிவுகள் ஏராளம். சினிமா உலகம் குறித்த
பதிவுகளில் இவரின் நண்பர்களின் அனுபவங்களை மிக சுவாரசியமாக
எழுதினார். இவரின் சிறுகதைகளை படிக்கும்போது ஆச்சரியமா இருக்கும்
என்னடா இந்தாளு ஒருபக்கம் நம்ம கூட கும்மி அடிச்சிட்டே இன்னொரு
பக்கம் அருமையான சிறுகதைகளை எழுதிட்டு இருக்காறேன்னு. இவரின்
கயல்விழி அருமையான ஒரு சிறுகதை அடுத்ததாக நரகாசுரனை சொல்லலாம்.
எல்லா சிறுகதைகளும் முத்துக்கள்தான்.

ஒருமுறை பதிவு போட மேட்டர் கிடைக்கவில்லையே என புலம்பும்போது
மிக அருமையான யோசனை சொன்னார். யாரும் பார்த்திராத ஏதாவது ஒரு
ஆங்கில படத்தை பார்த்து ஆஹா ஓஹோ என்று விமர்சனம் எழுதினால்
பதிவுக்கு பதிவும் ஆச்சு, பேருக்கு பேரும் ஆச்சு. மேலோட்டமாக பார்த்தால்
இது ஒரு சாதாரணமாக தெரியலாம் ஆனா இதுக்குள்ள எம்புட்டு மேட்டர்
இருக்குன்னு அனுபவிச்சி பாத்தாதான் புரியும்.

இப்படியெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு இப்ப திடீர்னு இந்தியா
போறன்னு சொன்னதும் தாங்க முடியாத துயரம் வந்துடுச்சி. அதுக்காக
ப்ளாக்குவதை விட்டு விட மாட்டார் என்று நம்புவோமாக.

ஹேய் யாருப்பா அது?

என்னது?

காதலர் தினத்தை கொண்டாடத்தான் இந்தியா போறாருன்னு புரளிய கிளப்பறது??

அப்படிலாம் இல்ல.

நம்ம சங்கத்துல ஆயுள்சந்தா உறுப்பினர் அவரு அந்த மாதிரி தப்பெல்லாம்
பண்ண மாட்டாரு.

ஆகக்கூடி சொல்லவருவது என்னவென்றால்!

கடந்த எட்டரை மாதங்களாக மாண்டிவிடியோவில் அயராது பணிசெய்து
கொண்டிருக்கும் எங்கள் அஞ்சா நெஞ்சன் கப்பிபயல் இந்தவாரத்தில் தாயகம்
திரும்புகிறார். அவரது பயணம் இனிதே அமைய நண்பனாக என் மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே நீங்களும் வாருங்கள்!
ஒரு கைதட்டினால் ஓசை வராது!

55 comments:

தம்பி said...

முதல் பின்னூட்ட வாழ்த்தும் நமதே!

வெட்டிப்பயல் said...

எலேய்,
நான் வெள்ளிக்கிழமை போடலாம்னு பார்த்தா முந்திரி கொட்டை மாதிரி இப்பவே போட்டுட்ட!!!

வெட்டிப்பயல் said...

ஏன்யா அவர் என்ன வலையுலகையா விட்டு பொறாரு??? இந்தியா தானே போறாரு... அங்க போனா இன்னும் ஜாலியான பதிவு வரும்... இப்பவெல்லாம் தலைவர் ஒரே ஃபீலிங்ஸ் பதிவு தான் போடறாரு...

ஆறு மாசத்துல இங்க வறேனு சொல்லியிருக்காரு... எனக்கு தான் இங்க ஒரு கம்பெனி போயிடுச்சி :-(

வெட்டிப்பயல் said...

பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம என்ன இது சின்னப்புள்ளத்தனமா????

சீக்கிரம் பண்ணுப்பா!!!

வெட்டிப்பயல் said...

எலேய்,
கப்பியையே மக்களுக்கு அறிமுகம் பண்ணற அளவுக்கு வளர்ந்துட்ட...

அவர் எங்களுக்கெல்லாம் முன்னோடி :-)))

ஜாவா பாவலர் கவிஞர் கப்பி நிலவன் வாழ்க!!!

வெட்டிப்பயல் said...

வெலண்டைஸ் டே அன்னைக்கி சென்னைல தான் இருப்பாரு...

மகளிரணி பார்த்தோக்கோங்க :-)

கோபிநாத் said...

அடுத்ததாக சங்கத்தின் சர்பாக நானும் வாழ்த்துகள் கூறிக்கொள்கிறேன்..

ஜி said...

அட.. இதத்தான் வெட்டி எல்லார் பதிவுலையும் போய் 'காதலர் தினத்துக்கு ஒருத்தர் இந்தியா போறாரு.. இந்தியா போறாரு'ன்னு போஸ்டர் ஒட்டுனாரா....

ஜி said...

சுனாமியே வந்தாலும்
காதலர் தினத்தை
தாய் மண்ணில்தான்
கொண்டாடுவேனென்று
சிகப்புக்கொடி தூக்கிப்
புறப்படும் வேங்கைக்கு
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...

வெட்டிப்பயல் said...

எலேய் ஜி,
நான் சொன்னது இவரை இல்லப்பா...

நான் நியூ ஜெர்ஸில இருக்கற ஒரு முக்கியமான பதிவர சொன்னேன் :-)

பெருசு said...

hasta luego கப்ஸ்

கோபிநாத் said...

\\அவரோடு பழகிய நாட்களை நினைத்து பார்த்தால் பரவசமாக
இருக்கிறது. \\

எனக்கும் தான் :)))
அருமையான நண்பர்..
உதவி என்று வருவோர்க்கு காலநேரம் பார்க்கமால் உதவிகள் செய்வார்...

அதனை நினைத்து பார்க்கும் போது..மேலும் பரவசமாக உள்ளது

கோபிநாத் said...

\\ஆங்கிலபுத்தகம் படித்து விமர்சனம் எழுதுவதிலாகட்டும்,\\

இதுல கப்பிய அடிச்சிக்க ஆலே இல்ல

கோபிநாத் said...

\\இப்படியெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு இப்ப திடீர்னு இந்தியா
போறன்னு சொன்னதும் தாங்க முடியாத துயரம் வந்துடுச்சி.\\

அவ்வ்வ்வவ்...

கோபிநாத் said...

\\எலேய்,
நான் வெள்ளிக்கிழமை போடலாம்னு பார்த்தா முந்திரி கொட்டை மாதிரி இப்பவே போட்டுட்ட!!! \\

எலேய்..
முந்திரி கொட்டையில்லப்பா...
பொது குழு முடிவுபண்ணுது தான்..

வெட்டிப்பயல் said...

மக்கா,
உங்க ஃபிலீங்ஸ் எல்லாத்தையும் கொட்டிடாதீங்க...

நாங்களும் ஒரு பதிவு போடுவோம்... அங்கயும் கொட்டறதுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க...

கோபிநாத் said...

\\ஆறு மாசத்துல இங்க வறேனு சொல்லியிருக்காரு... எனக்கு தான் இங்க ஒரு கம்பெனி போயிடுச்சி :-( \\

ரிப்பீட்டேய்....

வெட்டிப்பயல் said...

//
எலேய்..
முந்திரி கொட்டையில்லப்பா...
பொது குழு முடிவுபண்ணுது தான்..//

என்னாது பொது குழுவா???
கொ.ப.ச என்னை கேக்காம எப்படி முடிவு பண்ணலாம்...

கப்பி,
என்ன இது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு

எலேய் தம்பி,
நீ ஆன்லைன் வருவ இல்லை.. அப்ப உனக்கு இருக்கு...

தம்பி said...

//எலேய்,
நான் வெள்ளிக்கிழமை போடலாம்னு பார்த்தா முந்திரி கொட்டை மாதிரி இப்பவே போட்டுட்ட!!! //

இது முந்திரிக்கொட்ட தனம் இல்லப்பா வெட்டி பாசம், நட்பு இப்படிகூட சொல்லலாம்! :))

தம்பி said...

//ஏன்யா அவர் என்ன வலையுலகையா விட்டு பொறாரு??? இந்தியா தானே போறாரு... அங்க போனா இன்னும் ஜாலியான பதிவு வரும்... //

அவரு இந்தியா போறது எனக்கு ரொம்ப பீலிங்ஸா இருக்கு! நல்ல உள்ளம் :))

தம்பி said...

//சுனாமியே வந்தாலும்
காதலர் தினத்தை
தாய் மண்ணில்தான்
கொண்டாடுவேனென்று
சிகப்புக்கொடி தூக்கிப்
புறப்படும் வேங்கைக்கு
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்... //

ஆஹா வலையுலக கவிப்பேரரசு! பேரரசு பேரரசு!

தம்பி said...

//நான் நியூ ஜெர்ஸில இருக்கற ஒரு முக்கியமான பதிவர சொன்னேன் :-)//

அப்ப கப்பி முக்கியமான பதிவர் இல்லயா? :((

தம்பி said...

//hasta luego கப்ஸ்//

வாங்க பெருசு!
என்னவோ சொல்றிங்க ஒண்ணுமே புரியல இருந்தாலும் இதை வாழ்த்தாகவே பாவித்து கப்பிக்கு காணிக்கையாக்குகிறேன்.

கோபிநாத் said...

\\நம்ம சங்கத்துல ஆயுள்சந்தா உறுப்பினர் அவரு அந்த மாதிரி தப்பெல்லாம்
பண்ண மாட்டாரு.\\

உனக்கு ஏன்தான் இந்த பொறாமை பாவம் விட்டுடேன்...

தலைவா...என்ஜாய் :))))

கோபிநாத் said...

\\ஜாவா பாவலர் கவிஞர் கப்பி நிலவன் வாழ்க!!! \\

வெட்டி அவரோட ஒரு முகத்த வாழ்த்திட்ட..மீதி..

கோபிநாத் said...

\\பின்நவீனத்துவ கனவு காண்பதிலாகட்டும்,\\

அமா அதுஎன்னது "பின்நவீனத்துவ கனவு" புரியலியே...

மணிகண்டன் said...

சென்று வா கப்பியே சென்று வா!!
வென்று வா இதயத்தை(??) வென்று வா.

கோபிநாத் said...

//நான் நியூ ஜெர்ஸில இருக்கற ஒரு முக்கியமான பதிவர சொன்னேன் :-)//

அப்ப கப்பி முக்கியமான பதிவர் இல்லயா? :(( \\

வெட்டி என்ன இது..
சின்னப்புள்ளத்தனமா :)))

கப்பி மனசு ரொம்ப இலகிய மனசு இதை படிச்சிட்டு அவரு மனசு என்ன பாடுபட போகுதோ :(((

பாலராஜன்கீதா said...

// நண்பர்களே நீங்களும் ***வாருங்கள்*** //
இதில் எந்த உள்குத்தும் இல்லை என எடுத்துக்கொள்ளலாமா ? :-))))

அபி அப்பா said...

//ஒருத்தர் இந்தியா போறாரு.. இந்தியா போறாரு'ன்னு போஸ்டர் ஒட்டுனாரா.... //

போஸ்டர் ஒட்டவும் போட்டி கிளம்பிடுச்சா?

வாழ்த்துக்கள் கப்பி பையா.

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//நான் நியூ ஜெர்ஸில இருக்கற ஒரு முக்கியமான பதிவர சொன்னேன் :-)//

அப்ப கப்பி முக்கியமான பதிவர் இல்லயா? :((//

என்கிட்ட வாங்கி கட்டிக்கலனா உனக்கு தூக்கம் வராது...

நான் சொன்னது நியூ ஜெர்ஸில இருக்கற முக்கியமான பதிவர்... கப்பி இருக்கற இடம் மாண்டீவிடியோ (உருகுவே)!!! ஒகேவா????

கப்பி பய said...

அடப்பாவி மக்கா!!

நெசமாவே போட்டுட்டியா..சும்மா லுலாய்க்கு சொல்றேன்னுல நெனச்சேன் :((

இந்த பாசத்துக்கு நான் எப்படி கைம்மாறு செய்யப்போறேன்..

அனைவருக்கும் நன்றி!நன்றி!நன்றி!!! :)

ஜெயிச்ச'கவுன்''சிலர்' said...

வாங்க வாங்க கப்பி, 104 வது வார்டுல மனு போட்டு ஜெயிச்சா அடுத்த சென்னை மேயர் கப்பிதான்

தம்பி said...

//என்னாது பொது குழுவா???
கொ.ப.ச என்னை கேக்காம எப்படி முடிவு பண்ணலாம்...//

வைகோ வெட்டி அண்ணே!

நாங்க போட்டி பொதுக்குழு
தெரில
எல்.ஜி குரூப்பு! :))

தம்பி said...

//அமா அதுஎன்னது "பின்நவீனத்துவ கனவு" புரியலியே... //

அதுவா
பின்நவீனத்துவ கவிதை ரெண்டு வாசிச்சு பாரு தெரியும்.

சம்பந்தமே இல்லாம கனவு வந்தாகூட அதை பி.ந கனவுன்னு சொல்லிக்கலாம். :))

இராம் said...

கதிரு,

தமிழ்நாட்டுக்கு ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுதுன்னு சொன்னப்ப நான் நம்பவே இல்லே.....

இப்போ ஒன்னோட பதிவை படிச்சதுக்கப்புறம் அதை நம்பாமே இருக்கவும் முடியலை :)

இராம் said...

இந்த விளம்பரபதிவுக்கு கப்பி அனுப்பிய பணம் ஒன்னோட அக்கவுண்ட்'லே வந்திருச்சான்னு செக் பண்ணிக்க ராசா:)))

தம்பி said...

//இப்போ ஒன்னோட பதிவை படிச்சதுக்கப்புறம் அதை நம்பாமே இருக்கவும் முடியலை :)//

அவரு ஒரு அமைதி புறா அவரப்போயி இந்தமாதிரி சொல்றிங்களே ராயலு!

அந்த புறா இப்ப ஓய்வுக்காக இந்தியா போகுது. அங்க போயி முட்டவெச்சி குஞ்சு பொறிச்சி திரும்பவும் அமெரிக்காவுக்கோ அண்டார்டிகாவுக்கோ போகும்.

தம்பி said...

//இந்த விளம்பரபதிவுக்கு கப்பி அனுப்பிய பணம் ஒன்னோட அக்கவுண்ட்'லே வந்திருச்சான்னு செக் பண்ணிக்க ராசா:)))//

ராயலு!

இது விளம்பரமில்ல, பிரிவு உபசாரம்
லேபிள் பாக்கலயா?

இராம் said...

//அவரு ஒரு அமைதி புறா அவரப்போயி இந்தமாதிரி சொல்றிங்களே ராயலு!//


புறாக் கறி டேஸ்ட் எப்பிடியிருக்கும்... இதுவரைக்கும் டேஸ்ட் பண்ணி பார்த்ததே இல்லை :)

//அந்த புறா இப்ப ஓய்வுக்காக இந்தியா போகுது. அங்க போயி முட்டவெச்சி குஞ்சு பொறிச்சி திரும்பவும் அமெரிக்காவுக்கோ அண்டார்டிகாவுக்கோ போகும். //

ஏய் இதிலே என்னோமோ நீ சொல்ல வந்திருக்கே..... என்னான்னு தெளிவா சொல்லிரு :)

இராம் said...

//ராயலு!

இது விளம்பரமில்ல, பிரிவு உபசாரம்
லேபிள் பாக்கலயா?//


ஒன்னுமட்டும் தெரிஞ்சுக்கோ, நான் சொன்னதில்லையும் தப்பில்லை... இப்போ நீ சொன்னதில்லையும் தப்பில்லை..... ஆனா பணம் வந்துச்சா இல்லையான்னு எங்களுக்கு சரியா தெரியணும் அவ்வளவுதான் :)

Santhosh Kumar said...

கப்பி,
நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாப்பா..நல்ல நாளும் அதுவுமா ஊருக்கு போறே.. அப்புறம் என் கிட்ட சொல்லிட்டே இருப்பியே அந்த பொண்ணு அது தானா இல்ல வேற எதாவதா? அன்னிக்கே சொல்லிட போறீயா இல்ல வேற நல்ல நாள் ஏதாவது பாத்து இருக்கியா? :))

////நான் நியூ ஜெர்ஸில இருக்கற ஒரு முக்கியமான பதிவர சொன்னேன் :-)//

அப்ப கப்பி முக்கியமான பதிவர் இல்லயா? :((//

அடப்பாவிங்களா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதை வச்சி இப்படி பண்ணிப்புட்டியே.. ஒரு முடிவோடத்தான் இருக்காங்கய்யா...

இராம் said...

/அப்புறம் என் கிட்ட சொல்லிட்டே இருப்பியே அந்த பொண்ணு அது தானா இல்ல வேற எதாவதா? அன்னிக்கே சொல்லிட போறீயா இல்ல வேற நல்ல நாள் ஏதாவது பாத்து இருக்கியா? :))//

போறதே கல்யாணம் பண்ணதானே... மனுசன் எத்தனை தடவைய்யா புரோப்போஸ் பண்ணுவான், அது முன்னாடியே முடிச்சு போச்சு..

இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற இருக்கிறது....

kappi guy said...

இராயல்..ஏனிந்த கொலைவெறி?? :((

எல்லாத்தையும் என் பேர்லயே எழுதனுமா?? நாம சங்கத்துக்கு போய் வெட்டியை கவனிக்கலாம் வாங்க

kappi guy said...

//அப்புறம் என் கிட்ட சொல்லிட்டே இருப்பியே அந்த பொண்ணு அது தானா இல்ல வேற எதாவதா? அன்னிக்கே சொல்லிட போறீயா இல்ல வேற நல்ல நாள் ஏதாவது பாத்து இருக்கியா? :))
//

பத்த வெச்சிட்டியே தலைவா :((

தம்பி said...

//ஏய் இதிலே என்னோமோ நீ சொல்ல வந்திருக்கே..... என்னான்னு தெளிவா சொல்லிரு :)//

அதான் தெளிவா சொல்லிட்டெனே
இன்னுமா புரில?

இராம் said...

//இராயல்..ஏனிந்த கொலைவெறி?? :((//

ஏய்யா... ஒனக்கு கல்யாணம் காட்சி வைச்சு பார்க்கிணுமின்னு சொன்னா அது கொலைவெறியா....

அப்பிடின்னா எனக்கு இன்னும் அது நிறைய இருக்கு :)

//எல்லாத்தையும் என் பேர்லயே எழுதனுமா?? நாம சங்கத்துக்கு போய் வெட்டியை கவனிக்கலாம் வாங்க//

நாங்க மல்டிபிளாட்பார்ம் இயங்குதளத்திலே உருளுறவங்க..... :)

தம்பி said...

//ஒன்னுமட்டும் தெரிஞ்சுக்கோ, நான் சொன்னதில்லையும் தப்பில்லை... இப்போ நீ சொன்னதில்லையும் தப்பில்லை..... ஆனா பணம் வந்துச்சா இல்லையான்னு எங்களுக்கு சரியா தெரியணும் அவ்வளவுதான் :)//

இந்த தம்பியோட மனசு பாசத்துக்கு மட்டும்தான் வளையும் பணத்துக்கு வளையாது!

தம்பி said...

//பத்த வெச்சிட்டியே தலைவா :(( //

ஏம்பா கப்பி!

ஒண்ணுமண்ணா பழகிட்டு நமக்கு சொல்லலியேப்பா!

இராம் said...

//
அதான் தெளிவா சொல்லிட்டெனே
இன்னுமா புரில?//

எனக்கு புரியலை... ஆமா சொல்லிட்டேன் :)

கப்பி பய said...

50 :)

கைப்புள்ள said...

//சுனாமியே வந்தாலும்
காதலர் தினத்தை
தாய் மண்ணில்தான்
கொண்டாடுவேனென்று
சிகப்புக்கொடி தூக்கிப்
புறப்படும் வேங்கைக்கு
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...//

ரிப்பீட்டேய். வாழ்க கவிஞர் கப்பிநிலவர். தரணி எங்கும் செழித்தோங்கட்டும் அவர் தம் ஜாவா ஆப்லெட்கள்.
:)

இராம் said...

//இந்த தம்பியோட மனசு பாசத்துக்கு மட்டும்தான் வளையும் பணத்துக்கு வளையாது!//

அம்புட்டு நல்லவனா நீயி????

இப்பிடியிருந்தேன்னு வை... அப்புறம் உன்னை ...'ன்னு சொல்லிறுவாங்க :)

தம்பி said...

//நாங்க மல்டிபிளாட்பார்ம் இயங்குதளத்திலே உருளுறவங்க..... :) //

கலக்கல் :))

ஆமா எந்த ப்ளாட்பாம்ம சொல்றீங்க?

இராம் said...

//நாங்க மல்டிபிளாட்பார்ம் இயங்குதளத்திலே உருளுறவங்க..... :) //

கலக்கல் :))

ஆமா எந்த ப்ளாட்பாம்ம சொல்றீங்க?//

தம்புடு நான் சொன்னது லினக்ஸ்'யா... :)