எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, February 01, 2007

சமீபத்தில் ரசித்த காமெடி!

இப்பல்லாம் வடிவேலு காமெடி கூட வயித்தெரிச்சல கிளப்புற மாதிரி இருக்கு.
விவேக் ஆட்டத்துலயே இல்ல அதுக்கு சமீபத்திய உதாரணம் ஆழ்வார்.
அப்பப்போ கருணாஸ், சந்தானம் போன்றவர்கள் வந்தாலும் தொடர்ந்ததுபோல
யாரும் நிலைக்க மாட்டேங்கறாங்க.

சமீபத்தில் தகப்பன்சாமி படத்தில் ஒரு காமெடி நல்லா ரசிச்சி சிரிக்கற மாதிரி
இருந்தது. கருணாஸ் டீ குடிக்கலாம்ணு கடைப்பக்கம் போவாரு.

காலைல டீ அடிக்கலாம்னு பாத்தா ஒரு கோவிந்தன் கூட கிடைக்க
மாட்டேங்கறானே சரி நம்ம காசுலயே இன்னிக்கு டீ குடிக்கணும்னு
எழுதி இருக்கு போல தலையெழுத்து என்ன பண்றது.

"டீக்கடையில எவனும் இல்ல சுருக்கா டீய குடிச்சிட்டு கெளம்பிடணும்"

"கோவிந்தா ஒரு சூடா ஒரு டீய போடுப்பா"

"ம்ம் சூடா நெருப்பதான் போடணும்" கடைக்காரார்

"ஹேய் நாங்கல்லாம் தீக்கோழிடா எதக்குடுத்தாலும் முழுங்குவோம்"
காசு குடுக்கறோம்டா காசு

இப்படி பேசிட்டு இருக்கும்போதே ஒரு கோவிந்தன் மரத்துக்கு பின்னாடி
தலையில துண்டு போட்ட ஒரு ஆளு ஒளிஞ்சிருந்து பாத்துட்டு கருணாஸ்கிட்ட
டீய மொக்க போடலாம்னு வருவாரு.

"அடடே வா கோவிந்தா டீ சாப்புடறியா"? ஏய் தம்பிக்கு ஒரு டீய போடுப்பா
நமக்கு யோகம்டா இன்னிக்கு இவன் தலையில மொளகா அரைச்சிட
வேண்டியதுதான்னு கருணாஸ் முணுமுணுக்கறாரு.

"ரெண்டு பேருக்கும் டீ வருது"

"ஏன் கோவிந்தா டீ ரொம்ப சூடா இருக்குல்ல" கருணாஸ்

"ஆமா கோவிந்தா"

"என்னப்பா இவ்ளோ சூடா போட்டுருக்க"

எவன் முதலில் டீய குடிச்சி முடிக்கறானோ அவந்தான் காசு குடுக்கணும்னு
ரெண்டு பேரும் டீய ஆத்திகிட்டே இருப்பாங்க.

சாயந்திரம் ஆயிடும்

"கோவிந்தா டீ சூடா இருக்கா? ஆமாப்பா!

""கெட்டபய சூடாவே போட்டு பழகிட்டான்"

ஏண்டா காலையில ஒரு டீய வாங்கிட்டு ராத்திரி வரைக்கும் ஆத்தி ஆத்தி
பாத்துட்டு இன்னும் சூடாவே இருக்குன்னு சொல்றிங்களே இது நியாயமாய்யா
இந்த எடுபட்ட பய மூஞ்ச பாத்துட்டு இந்த ஊர்க்காரன் எவனும் கடைபக்கம்
ஒதுங்கல!

"பாருங்கடா பால பாருங்கடா காய்ஞ்சி கருகிப்போச்சி" காலையிலயே
பட்டைய போட்டு ஆட்டைய போட வந்துட்டீங்களேடான்னுசோடா
பாட்டிலாலயே அடிச்சி விரட்டுவாரு கடைக்காரர்.

இனிமேல் நம்ம கொசுவர்த்தி!

இதுமாதிரி ஆளுங்கள ஊருக்கு ஒரு ஆளு பாக்கலாம் எங்க ஊருலயும் ஒரு
ஆளு இருக்காரு. அவர பாத்தாவே டீக்கடையில இருக்குற ஆளுங்க தெறிச்சி
ஓடுவாங்க. மனுசன் காசுகுடுத்து டீ குடிச்சதே இல்ல.

தூரத்துல அந்த ஆள் வர்றான்னு தெரிஞ்சாவே கூட்டத்துல கண்ணிவெடி போட்ட
மாதிரி ஆளுங்க கலைஞ்சி போயிடுவாங்க. கடைக்காரர் முகம் கலவரத்த பாத்த
மாதிரி இருக்கும்.

அண்ணே நான் டீக்கடை ஆரம்பிச்சி இருவது வருசம் ஆகுது உங்கிட்ட இருந்து
ஒத்தப்பைசா கூட என் கல்லாவுல போட்டதில்லண்ணே நான் கண்ண மூடறதுக்குள்ள
அதுமாதிரி நடக்குமான்னு சந்தேகமா இருக்குன்னு கடைக்காரரு விளையாட்டா
சொல்லுவாரு நம்மாளும் வழக்கம்போலவே அதையும் விளையாட்டா
எடுத்துக்குவாரு.

யாரு ஆரம்பிக்கறதுன்னும் போட்டி இருக்கும், யாரு முதல்ல முடிக்கறதுன்னும்
போட்டி இருக்கும். ஹாஸ்டல்ல பக்கத்து ரூம் பையன் மொதமுறையா மொபைல்
வாங்கினான். ராத்திரி முழுக்க பேசிட்டே இருப்பான். (அந்த நேரத்துல இரவு
11 மணிக்கு மேல இலவசம்) என்னடா பையன் பிகர் தேத்திட்டானான்னு
சந்தேகம் வரவே வாட்சிங் பண்ணி பாத்தா பையன் குருட்டாம்போக்குல எதுனா
நம்பர் அழுத்தி தூக்கத்துல இருக்கற ஆளுங்கள எழுப்பி வம்பிழுத்துட்டு
இருப்பான். இதுவும் ஏதாவது போபியாவோ, மேனியாவோ, குனியாவோ இருக்கும்
போலருக்கு.

ஒரு நாள் இவனுக்கு அல்வா குடுத்த பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணினான்
எப்ப போன் பண்ணாலும் அவங்க அப்பந்தாண்டா போன் எடுக்கறான். அவனுக்கு
வெக்கிறேன் ஆப்புன்னு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம் பில்கேட்ஸ்
பத்தியெல்லாம் பேசி கடுப்பேத்துனான். அந்த ஆளு வெறுப்பாகி கண்டமேனிக்கு
பேச பொருமையா கேட்டுட்டு ஒரு வார்த்தை சொன்னான் பாருங்க.

"மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இன்னும் சங்கத்தமிழ்
வார்த்தைகள் பல மானே, தேனே போட்டு சொல்லிட்டான்.

சண்டை நடக்குது நடக்குது நடந்துகிட்டே இருக்கு...

ஒருத்தனும் போன கீழ வைக்க மாட்டேங்குறாங்க. இவன் வைப்பான்னு அவனும்
அவன் வைப்பான்னு இவனும் விடிய விடிய திட்டிங்கறாங்க!

இவனாவது பிகர கரெக்ட் பண்றதாவது ஒரு பாட்டிய கூட இவனால தேத்த
முடியாதுன்னு கிளம்பிட்டோம்.

இப்ப என்னத்துக்குடா இப்படி அளக்குற நீயின்னு கேக்குறிங்களா?

என்னத்த சொல்றது! எனக்கு இது அம்பதாவது பதிவு. :((

என்னத்துக்கு எழுத ஆரம்பிச்சேன்னும் தெரில, என்னத்துக்கு எழுதாறோம்னும்
தெரில அப்படியே ஒரு மாதிரியா போயிட்டு இருக்கு. ஒரு ஓரமா நம்ம ஜல்லி
கொட்டிட்டு உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியதுதான். ஆனா ஒண்ணு
இது எழுதறதுனால பல அற்புதமான நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. குறிப்பா
சொல்லணும்னா வெட்டிபயல், கப்பி பய, ராயல் ராம், கோபிநாத், பெனாத்தல்
சுரேஷ்
, ஆசிப் அண்ணாச்சி, ராசுக்குட்டி, கைப்ஸ், தொல்.குமார், முத்துக்குமரன்,
லியோசுரேஷ், செந்தழல்,சந்தோஷ், பரத், பாஸ்டன் பாலா, சிறில் அலெக்ஸ்
இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அப்படி சொன்னா நீண்டுகிட்டே போகும்.

குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))

65 comments:

வெட்டிப்பயல் said...

50வதா????


வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

கலக்கல் தம்பி!!!

பொறுமையா சிரிச்சி படிச்சிட்டே வந்தா கடைசில 50வதுனு சொல்லி சந்தோஷப்பட வெச்சிட்ட...

இன்னும் 100, 1000, 10000னு போயிட்டே இருக்கனும்...

வாழ்த்துக்கள்!!!

கப்பி | Kappi said...

//சமீபத்தில் ரசித்த காமெடி! //

எது நீங்க 50 அடிச்சதா? :))


வாழ்த்துக்கள் தம்பி! கலக்க்குங்க! :)

வெட்டிப்பயல் said...

நான் தான் முதல் கமெண்டா??? சூப்பர்...

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))//

இந்த லொள்ளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை :-)

கப்பி | Kappi said...

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))
//

அட லொள்ளப்பாரு..எகத்தாளத்த பாரு.. :))

கதிர் said...

//50வதா????//

அதுக்கு ஏன்யா இத்தன கேள்விக்குறி?
மொத்தம் நாலு கேள்விக்குறி, அது நாலு உள்குத்துக்கு சமம், என்னை நாலு கேள்வி கேக்கணும்னு ஆசப்படறல்ல. :)

//வாழ்த்துக்கள்!!! //

நன்றி அய்யா நன்றி!

கதிர் said...

//இன்னும் 100, 1000, 10000னு போயிட்டே இருக்கனும்...//

இப்படிதான் வாழ்த்தணும்! நன்றி குருவே!

கதிர் said...

//நான் தான் முதல் கமெண்டா??? சூப்பர்...//

:)) ஜெயசூர்யா விக்கெட் எடுத்தார்னா அவரே கைதட்டிகிட்டு கிரவுண்ட ஒரு சுத்து சுத்துவாரு அத மாதிரி பண்ணிட்டு இருக்க!

எனக்கு யாருய்யா கமெண்ட் போடுவாங்க உங்கள விட்டா?

நெஞ்ச நக்கிட்டேன்ல!

கதிர் said...

//சமீபத்தில் ரசித்த காமெடி! //

//எது நீங்க 50 அடிச்சதா? :))//

வாங்க கப்பிநிலவன்!

அப்போ இது காமெடி இல்லயா?

அடப்பாவிகளா நான் காமெடின்னு வேற வகைப்படுத்திட்டனே!

Santhosh said...

அம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் தம்பி அப்படியே ஆயிரம் அம்பதாயிரம் கிளம்பி போயிட்டே இருக்கணும்.

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))
//
நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.

ஜி said...

ஓ... அம்பதா... அதான் துபாய் குறுக்குச் சந்துல போஸ்டரெல்லாம் ஒட்டிருந்தாங்களா... நான் என்னமோ காணாம போனவங்கப் பத்துன நோட்டீஸோன்னு நெனச்சேன்....

ஜி said...

அன்று...

காப்பி அடித்தும்
அரையாண்டு தேர்வில்கூட
அரைசதம் கண்டதில்லை...

இன்று...

அரைசதப் பதிவில்
ஒவ்வொன்றும்
நூற்றுக்கு நூறாய்...

[இதுவும் கவிதைதான்.. கப்பி நிலவர் போட்டிக்கு வர்றாரா?]

Boston Bala said...

அம்பதா!

தங்க மகன் (கோல்டன் ஜூபிளி ;-) இன்று சிங்கநடை போட்டு...

வாழ்த்துகள் சார்.

கோபிநாத் said...

தம்பி
வாழ்த்துக்கள்...

நம்ம வெட்டி சொன்னாது போல 100,1000, 10000 போயிட்டே இரு....

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!!

என்னதான் இருந்தாலும் நம்ம எல்லாம் ஓரே ஊரு...அதான் கெஞ்சம் அதிகமான வாழ்த்து...

கோபிநாத் said...

\\குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))\\

அதானே பார்த்தேன்...என்னாடாஇன்னும் இந்த உள்குத்து, வெளிக்குத்து ஒன்னையும் கானோமேன்னு..

கோபிநாத் said...

சரி..அம்பதாவது பதிவு மேட்டரு இது இல்லயே...அந்த மேட்டர போடலியா தலைவா...

இப்படிக்கு..
அகில உலக தம்பிகள் சங்கம்

இலவசக்கொத்தனார் said...

ஆப் அடிச்சாச்சா? :))

ஆப்பு இல்லைங்க. ஹாப்! சரியாப் படியுங்க.

கார்த்திக் பிரபு said...

enge en perunnu thedinane..last line i padicha udane mansasu sama dhanam agitu

Anonymous said...

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))//

இத்தானே வேணாங்கிறது...

சென்ஷி said...

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :)) //

அப்பாடா நம்ம பேரும் லிஸ்ட்ல மறைவா ஏறிடுச்சு.

:)))

சென்ஷி

கதிர் said...

வாங்க சந்தோஷ்!

//அம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் தம்பி அப்படியே ஆயிரம் அம்பதாயிரம் கிளம்பி போயிட்டே இருக்கணும்//

இது நாசமா போன்னு திட்டி இருக்கலாம்! :))

//நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.//

ஹி ஹி அது ஒண்ணுதானய்யா கொஞ்சமா இருக்கு!

கதிர் said...

//ஓ... அம்பதா... அதான் துபாய் குறுக்குச் சந்துல போஸ்டரெல்லாம் ஒட்டிருந்தாங்களா... நான் என்னமோ காணாம போனவங்கப் பத்துன நோட்டீஸோன்னு நெனச்சேன்//

ஜி,

அது உண்மையிலயே காணாம போனவங்க நோட்டீஸ்தான். ஆனா அந்த லிஸ்ட்ல என்னோட பேர பெருசா போடலன்னு சண்டை போட்டேன் பேரையே தூக்கிட்டானுங்க!

கதிர் said...

அன்று...

//காப்பி அடித்தும்
அரையாண்டு தேர்வில்கூட
அரைசதம் கண்டதில்லை...

இன்று...

அரைசதப் பதிவில்
ஒவ்வொன்றும்
நூற்றுக்கு நூறாய்...//

டேய் டேய் இதெல்லாம் நோட் பண்ணாதிங்கடா நோட் பண்ணாதிங்கடா!

கவுஜ எழுத பேனா தூக்கும்போதே யாராவது தடுத்து நிறுத்தியிருக்கணும். இப்ப என்ன பண்றது எதப்பாத்தாலும் கவுஜயா வடிக்க தோணும்.

கவுஜயாக வாழ்வோம்!

நன்றி ஜி!

கதிர் said...

//தங்க மகன் (கோல்டன் ஜூபிளி ;-) இன்று சிங்கநடை போட்டு...

வாழ்த்துகள் சார். //

நன்றி பாபா!

கதிர் said...

//தம்பி
வாழ்த்துக்கள்...

நம்ம வெட்டி சொன்னாது போல 100,1000, 10000 போயிட்டே இரு....

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!!

என்னதான் இருந்தாலும் நம்ம எல்லாம் ஓரே ஊரு...அதான் கெஞ்சம் அதிகமான வாழ்த்து... //

குடுத்த காசுக்கு மேல கூவக்கூடாது ஆமா சொல்லிப்புட்டேன்!

பாக்கறவங்க நாந்தான் இந்த மதிரி போட சொன்னேன்னு தப்பா நினக்க மாட்டாங்க!

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...

கதிர் said...

//சரி..அம்பதாவது பதிவு மேட்டரு இது இல்லயே...அந்த மேட்டர போடலியா தலைவா...

போடணுமான்னு யோசிக்கிறேன்.

//இப்படிக்கு..
அகில உலக தம்பிகள் சங்கம் //

எலேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமாம்.

கதிர் said...

//சரி..அம்பதாவது பதிவு மேட்டரு இது இல்லயே...அந்த மேட்டர போடலியா தலைவா...

போடணுமான்னு யோசிக்கிறேன்.

//இப்படிக்கு..
அகில உலக தம்பிகள் சங்கம் //

எலேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமாம்.

இராம்/Raam said...

தம்பி,

50 இல்லை 49ன்னு தான் சொல்லுது :)

வெட்டிப்பயல் said...

//என்னதான் இருந்தாலும் நம்ம எல்லாம் ஓரே ஊரு...அதான் கெஞ்சம் அதிகமான வாழ்த்து...//

கோபி,
நீங்க எந்த ஊரு???

வெட்டிப்பயல் said...

//அதுக்கு ஏன்யா இத்தன கேள்விக்குறி?
மொத்தம் நாலு கேள்விக்குறி, அது நாலு உள்குத்துக்கு சமம், என்னை நாலு கேள்வி கேக்கணும்னு ஆசப்படறல்ல. :)//

ஏன்யா,
கேள்விக்குறி போட்டா உள்குத்து ஆச்சரிய குறி போட்டா வெளிக்குத்தா???

என்ன லாஜிக் மேன் இது???

உனக்கெதுக்குயா உள்குத்து வெச்சி பேசனும்.. நம்ம என்ன அப்படியா பழகறோம்... எதுவா இருந்தாலும் வெளிக்குத்து தான் :-)

இராம்/Raam said...

தம்பி,

வாழ்த்துக்கள் சொல்ல மறந்துட்டேன். :)

கதிர் said...

//ஆப் அடிச்சாச்சா? :))//

ஹி ஹி ஹி அடிச்சதுல்ல

//ஆப்பு இல்லைங்க. ஹாப்! சரியாப் படியுங்க. //

ஆப், ஆப்பு, ஹாப், ஒரு வார்த்தையிலதான் எத்தன குத்து!

சாமீ

நல்லவேள நான் மூணாவதா சொன்னதத்தான் புரிஞ்சிகிட்டேன்

கதிர் said...

//enge en perunnu thedinane..last line i padicha udane mansasu sama dhanam agitu//

வாங்க காதல் மன்னரே!

கரெக்டா புரிஞ்சிகிட்டிங்க!

நன்றி!

கதிர் said...

//இத்தானே வேணாங்கிறது...//

வாங்க தூயா!

நீங்கல்லாம் இல்லாம எப்படி? இந்த நல்ல நல்ல மனச சென்ஷி புரிஞ்சிகிட்டாங்க நீங்க புரிஞ்சிக்கலயே! :))

கதிர் said...

//அப்பாடா நம்ம பேரும் லிஸ்ட்ல மறைவா ஏறிடுச்சு.

:)))

சென்ஷி //

நன்றி சென்ஷி சரியா புரிஞ்சிகிட்டிங்க! :))

கதிர் said...

//தம்பி,

50 இல்லை 49ன்னு தான் சொல்லுது :) //

வாங்க ராயல்!

நாங்க கொஞ்சம் அட்வான்சா இருப்போம்! அதெல்லஅம் கண்டுக்க கூடாது!

கதிர் said...

//கோபி,
நீங்க எந்த ஊரு??? //

சென்னை!

கோபிநாத் said...

//இப்படிக்கு..
அகில உலக தம்பிகள் சங்கம் //

எலேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமாம்.\\

எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :)))

கோபிநாத் said...

\\வாங்க ராயல்!

நாங்க கொஞ்சம் அட்வான்சா இருப்போம்! அதெல்லஅம் கண்டுக்க கூடாது!\\

மன்னா...
யாரும் பார்க்கல
கலக்குங்க...

கோபிநாத் said...

\\கோபி,
நீங்க எந்த ஊரு???\\

வெட்டி
மன்னர் சொன்னதத்தான் என் ஊர்...

சினேகிதி said...

\\மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இன்னும் சங்கத்தமிழ்
வார்த்தைகள் பல மானே, தேனே போட்டு சொல்லிட்டான்\\

nallathan sirika vaikreengal.neenga sona antha karunas da nagaichuvai kaadsi adikadi KTV laum SUN TV laum podu kaadikide irunthanga.

half century a? vaalthukal!

உங்கள் நண்பன்(சரா) said...

50-க்கு வாழ்த்துக்கள் நண்பரே!

உங்களுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதை கடைசி வரிகளில் காட்டியமைக்கு நன்றி!:)))


அன்புடன்...
சரவணன்.

லொடுக்கு said...

//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))
//
என்னையும் ரொம்ப புடிக்குமா? பரவா இல்லையே!

அபி அப்பா said...

ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவது ஆணி புடிங்கிட்டு எட்டி பாப்போம்னு வந்து பாத்தா...தம்பி 50 அடிச்சுட்டார். பொல பொலன்னு 40 பூக்கள் வந்து குமிஞ்சிடிச்சி. நாதான் லேட்டா? சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....)

அபி அப்பா said...

//எனக்கு யாருய்யா கமெண்ட் போடுவாங்க உங்கள விட்டா?//

நல்ல நாளும் அதுவுமா அழுவாச்சியெல்லாம் கூடாது. நா போடுறன் தம்பி 10

அபி அப்பா said...

10(பத்து)

அபி அப்பா said...

//நெஞ்ச நக்கிட்டேன்ல!//

கொஞ்சம் ஓவராவே...

லொடுக்கு said...

இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே வருது தம்பி. 50 அடிக்க அவசரப் பட்டுட்டீங்களோ?

எப்படியோ... வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

யாராவது 48ஐ தட்டிவுடுங்கப்பா.

அபி அப்பா said...

தம்பியோட 50ல் நாந்தேன் 50 அடிக்கனும். தெர்தா?

அபி அப்பா said...

அடிச்சுட்டன். அடிச்சுட்டன். வாழ்த்துக்கள்.

கதிர் said...

//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :))) //

ஓவரு... ஓவரு...

//மன்னா...
யாரும் பார்க்கல
கலக்குங்க...//

மன்னர் நான் இல்ல அதுக்கு கைப்ஸ் இருக்கார். நானும் லகுடபாண்டி கூட்டத்தை சேர்ந்தவந்தான் சக லகுடபாண்டியாரே! :))

//வெட்டி
மன்னர் சொன்னதத்தான் என் ஊர்...//

இது தொடர்ந்தால் ஷார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்பப்படும்...

கதிர் said...

//nallathan sirika vaikreengal.neenga sona antha karunas da nagaichuvai kaadsi adikadi KTV laum SUN TV laum podu kaadikide irunthanga.

half century a? vaalthukal! //

வாங்க சினேகிதி!

முதல் முறையா வந்துருக்கிங்க!

நீங்க ரசிச்சிங்களா அந்த காமெடிய??

வாழ்த்துகளுக்கு நன்றி! :)

தொடர்ந்து வருகை தாருங்கள்.

கதிர் said...

//இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே வருது தம்பி. 50 அடிக்க அவசரப் பட்டுட்டீங்களோ?

எப்படியோ... வாழ்த்துக்கள்! //

ஒரு பதிவை காக்கா தூக்கினு போச்சி!
அதையும் ஆட்டத்துல சேத்துகிட்டேன். :))

கயமைனு தப்பா புரிஞ்சிக்கப்படாது!

கதிர் said...

//ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவது ஆணி புடிங்கிட்டு எட்டி பாப்போம்னு வந்து பாத்தா...தம்பி 50 அடிச்சுட்டார். பொல பொலன்னு 40 பூக்கள் வந்து குமிஞ்சிடிச்சி. நாதான் லேட்டா? சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....) //

வாங்க குமார்!

சொந்த வூட்டுல பால் காய்ச்சுங்க சீக்கிரம் இல்லாட்டி மொய் வைக்க யாரும் வரமாட்டாங்க! :))

கதிர் said...

அம்பது போட்ட குமாருக்கு நன்றிகள் பல கோடி!

கோபிநாத் said...

\\சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....)\\\

அபி அப்பா...
காலையில இங்கதான் கும்மியா....
கலக்குங்க...அப்படியே நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..

கோபிநாத் said...

\\//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :))) //

ஓவரு... ஓவரு...\\

புரியுது...புரியுது...

அபி அப்பா said...

//அபி அப்பா...
காலையில இங்கதான் கும்மியா....
கலக்குங்க...அப்படியே நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..//

கோபி தம்பி,
வந்து மொய் வச்சு வாழ்த்திட்டு திரும்பவும் இங்க வந்தாச்சே...

Anonymous said...

வாழ்த்துக்கள் தம்பி!

Anonymous said...

50 ஆ! வெரி குட்! சீக்கிரமே 100 அடிக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்!

அடடே! 50 ஆ! வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

//எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்!//

இது என்ன சத்திரமா? சாவடியா? எப்படியோ தம்பிக்கு கல்லா நொம்புனா சரிதான்.

நாகை சிவா said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

50 kku vazhthukal - read more whorthwhile articles and share it

kuripittu sonnavankalai vida sollathavankalai romba pidikkum

appa pappa - punch dialogue

pilaithu kolveerkal--b