எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, February 15, 2007

காதலர் தின கவுஜை

பொல்லாத காதலர் தினமாம் எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல. சேப்பு கலர்
சட்டை போட்டா என்னண்ணே புட்டுகிச்சான்னு கேக்குறான். சரி பச்சை கலர்
சட்டை போடலாம்னு பாத்தா ஏழு கழுதை வ்யசாகுது இன்னும் எதுவும்
செட் ஆகலாயாடா முத்துன கத்திரிக்கான்னு கேக்குறானுங்க. டீ.வி ய
திறந்தா கவுஜையா வாசிக்கறானுங்க சரின்னு எப்.எம் போட்டோம்னா அப்படியே
காதல் கவிதையா உருகறானுங்க. என்னடா இது எங்கிட்டு போனாலும் ரோசாப்பூவ
கைல வெச்சிகினு முரளிகளா சுத்தறானுங்களேன்னு ஒரே பேஜாரா போச்சு.ஆனா
ஒரு நம்ம பசங்க மட்டும் ஏன் இப்படி சுத்தறாங்கன்னே தெரிலப்பா.

எங்க ஏரியா அஞ்சப்பர் தொறந்து நேத்தோட 5 வருசம் ஆகப்போகுதாம். காதலர்
தினத்தன்னிக்கு செட்டிநாட்டு உணவகத்த திறந்து புரட்சி பண்ணியிருக்காங்க.
சரி அங்கிட்டாச்சும் போகலாம்னு பாத்தா ஒரே கூட்டம். முண்டியடிச்சி ஒரு எடத்த
புடிச்சி உக்காந்தா சோறு கொண்டுவர நாப்பந்தச்சி நிமிசம் ஆச்சி. அந்த நேரத்துல
இந்த காதலிக்கறவங்களுக்காக நாமளும் ஒரு கவுஜை எழுதி வெறிய தீத்துக்கலாம்னு
ஒரு ஐடியா வந்துச்சி. அதனால அங்கிட்டே ஒரு டிஷ்யூ பேப்பர உருவி எழுதி
எடுத்துட்டு வந்துட்டேன். கவுஜை எழுதறதுக்கு அந்த பேப்பர்தான் சரியான தேர்வு
எழுதினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.


ஒழுங்காக உருட்டப்படாத போண்டா
தொண்டைக்குழிக்கும் இறங்குவதை
போல உன் நினைவுகள் என்னை
நித்தமும் இம்சிக்கிறது.

உன்னோடு இருந்த கணங்களில்
எண்ணைச்சட்டிக்குள் இட்ட
வடையை போல பூரிப்பாக
இருந்தேன்.

நீ என்னை பிரிந்த கணம் முதல்
எலிப்பொறிக்குள் சிக்கிய வடையை
எலி கூட தீண்டாமல் இருப்பது
போல உணர்கிறேன்.

குழந்தை கையில் சிக்கிய அப்பளம்
போல சுக்கு நூறாக இருக்கிறது என்
இதயம். நீயோ ஆயாசமாக
உட்கார்ந்து கொண்டு பாயாசம்
குடித்துக்கொண்டா இருக்கிறாய்.

இப்போதெல்லாம் கண்ணாடி முன்
நிற்கையில் பாகற்காயை சுவைத்த
குழந்தையின் முகம் போல என்
முகமும் கோணலாகிவிட்டது.

குளிர்காலத்துப் பூனை மூட்டப்படாத
அடுப்பில் சுருண்டிருப்பதை போல
உன் திறக்கப்படாத இதயக் கதவுகள்
திறக்குமா என்று காத்திருக்கிறேன்.

திறக்காத கதவுகளுக்காக காத்திருக்கும் கண்ணீர் காதலர்களுக்கு இந்த கவிதை
சமர்ப்பணம்.

எனக்குட்டும் சீக்கிரமா சோறு போட்டுருந்தாங்கன்னா இந்த கவுஜைய படிக்கவேண்டிய
அவலம் வந்திருக்காது. என்ன செய்யிறது எங்குத்தம் இல்ல. என்னை சுத்தி சுத்தி
அடிச்சதால வந்த வேதனை.

வடிவான கற்களை வீசினால் வீடுகட்ட உதவியாக இருக்கும்.

அனைவருக்கும் தாமதமான காதலர் தின வாழ்த்துக்கள்.

கவுஜையாக வாழ்வோம்.

30 comments:

Anonymous said...

கவுஜயாக வாழ்வோம், கவுஜயாக மடிவோம்...

அப்பப்போ எல்லாரையும் கூண்டோட கைலாசம் அனுப்புவோம்...:))))

உங்க காதலர் தினம் எப்படி போச்சு :)

Anonymous said...

அபி அப்பாவை விசாரித்ததாக சொல்லவும்...

அம்மை போட்டால் டீவீ பார்ப்பது நல்லதல்ல என்று கூறவும்...

அன்புடன்,
செந்தழல் ரவி

ஜொள்ளுப்பாண்டி said...

//இப்போதெல்லாம் கண்ணாடி முன்
நிற்கையில் பாகற்காயை சுவைத்த
குழந்தையின் முகம் போல என்
முகமும் கோணலாகிவிட்டது.//

என்னாங்க தம்பி இருக்குற ஊரு அப்படி என்ன பண்ணுவீங்க பாவம் ! :))) கலக்கல் தல !! :))

கதிர் said...

//அப்பப்போ எல்லாரையும் கூண்டோட கைலாசம் அனுப்புவோம்...:))))//

நாம கலப்பைய புடிச்சி கவிதை எழுதினாவே பயங்கரமா இருக்கும். இதுல கவுஜைய எழுதினா நீங்க சொல்ற மாதிரிதான் :))


//உங்க காதலர் தினம் எப்படி போச்சு :) //

அததானங்க ரவி இப்படி எழுதியிருக்கேன்!
:((

ஆவி அண்ணாச்சி said...

//நீ என்னை பிரிந்த கணம் முதல்
எலிப்பொறிக்குள் சிக்கிய வடையை
எலி கூட தீண்டாமல் இருப்பது
போல உணர்கிறேன்.//

பொறிக்குள்ளே வெச்ச வடைய எப்படிங்க எலி வந்து தீண்டும்.

மசால் வடையப் பார்த்தாலே எலிங்களுக்குத் தெரிஞ்சிடுது!

கதிர் said...

//அபி அப்பாவை விசாரித்ததாக சொல்லவும்...//

நிம்மதி, சொர்க்கம், ஆனந்தம்னு வரிசையா சீரியல்கள பாத்துட்டு நம்மள கொலகட்டி அடிக்குறாரு.

பத்தாதுன்னு வீராசாமிய ரெண்டு முறை பாத்த்துட்டாராம். போன்ல கதை சொல்றேன்னு சொல்லி கலங்கடிக்குறாரு.

சீக்கிரமே சரியாகணும் கடவுளேன்னு வேண்டிக்கொவோம்! :((

சுந்தர் / Sundar said...

// நீயோ ஆயாசமாக
உட்கார்ந்து கொண்டு பாயாசம்
குடித்துக்கொண்டா இருக்கிறாய். //

கவுஜ கவுஜ. !!!

கதிர் said...

//என்னாங்க தம்பி இருக்குற ஊரு அப்படி என்ன பண்ணுவீங்க பாவம் ! :))) கலக்கல் தல !! :))//

வாப்பா ஜொள்ளுப்பாண்டி!

என் சோகம் உனுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

ஆமா நீ ஏன் கவுஜை எழுதக்கூடாது???

கதிர் said...

//பொறிக்குள்ளே வெச்ச வடைய எப்படிங்க எலி வந்து தீண்டும்.//

பழமொழி மட்டுமில்ல கவுஜைய படிச்சாலும் அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுங்க ஆன்லைன் ஆவி!

//மசால் வடையப் பார்த்தாலே எலிங்களுக்குத் தெரிஞ்சிடுது!//

மசால் வடைன்னு யார சொல்றிங்க???

கதிர் said...

//கவுஜ கவுஜ. !!! //

நன்றிங்க சுந்தர்.

இப்படிப்பட்ட தரமான கவுஜைகளை பதிவுலகம் எழுத வேண்டும்.

Anonymous said...

தம்பிஸ், கவிதை எல்லாம் எழுதுவிங்களா??சொல்லவேயில்லை..

(உங்கள பார்த்து நானும் கவிதை எழுதினால் என்ன என்று தோன்றுகின்றது)

கதிர் said...

//தம்பிஸ், கவிதை எல்லாம் எழுதுவிங்களா??சொல்லவேயில்லை..//

அய்யோ தூயா! நீங்க பதிவ படிக்கவேல்லன்னு நினைக்கிறேன் :))

இது கவிதைன்னு சொன்னா கவிதைய என்னான்னு சொல்வீங்க?

தலைப்ப பாருங்க!

Anonymous said...

Oh you mean "கவுஜை"? ;)

Leo Suresh said...

தம்பி,
என்னய மாதிரி கத்துக்குட்டீங்களுக்கு கவிதை கவுஜ ஒரு சிறு குறிப்பு வரையவும்,மொத்ததுல உங்களுக்குள்ள என்னமோ நடக்குது?.
லியோ சுரேஷ்

கதிர் said...

//என்னய மாதிரி கத்துக்குட்டீங்களுக்கு கவிதை கவுஜ ஒரு சிறு குறிப்பு வரையவும்,மொத்ததுல உங்களுக்குள்ள என்னமோ நடக்குது?.
லியோ சுரேஷ்//

ஒரு கவிதைய படிச்சவுடனே மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவிதை. ஏண்டா படிச்சோம்னு மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவுஜை!

உதாரத்துக்கு இந்த பதிவு.

கவுஜையாக வாழ்வோம்னு சொன்னா வெளங்காம போங்கடான்னு அர்த்தம்!

இத நான் சொல்லல!

கவுஜைக்காதலனான நம்ம அண்ணாச்சி சொன்னது!

கண்மணி/kanmani said...

அய்யோ அய்யோ தெரியாம வந்து 'கவுஜ'ன்னு படிச்சிட்டேன்.
ஏனுங்க தம்பி பெரியக் குழந்தைங்களே பாவக்கா சாப்பிடாது எந்த சின்னப் புள்ள தின்னும் ?உம்ம கற்பனைக்கு ஒரு அளவேயில்லயா? .இப்பத்தான் புரியிது[புரோபைல் [பார்த்தேன்]வரட்சியான எடத்துல இருக்கப் போயிதான் இப்படி கெடக்கேள்,ஹி...ஹி

ஜி said...

ஓஹோ.... கவுஜைக்கும் கவிதைக்கும் அவ்வளவு வித்தியாசமா?

அப்போ... நானும் க்கவுஜ எழுதியிருக்கேன்.. வெட்டியும்தான் ;)))

நம்ம கவுஜையெல்லாத்தையும் தொகுத்து இணையக் காதலர்களுக்குக் கொடுத்தா எப்படி????

கதிர் said...

//அய்யோ அய்யோ தெரியாம வந்து 'கவுஜ'ன்னு படிச்சிட்டேன்.
ஏனுங்க தம்பி பெரியக் குழந்தைங்களே பாவக்கா சாப்பிடாது எந்த சின்னப் புள்ள தின்னும் ?உம்ம கற்பனைக்கு ஒரு அளவேயில்லயா? .இப்பத்தான் புரியிது[புரோபைல் [பார்த்தேன்]வரட்சியான எடத்துல இருக்கப் போயிதான் இப்படி
கெடக்கேள்,ஹி...ஹி //

என்ன கண்மணியக்கா இப்படி சொல்லிட்டீங்க!

பாவக்கா சாப்பிடலன்னா பின்னந்தலையில டம்னு ஒரு தட்டு தட்டுவாரு எங்கப்பாரு. உங்க வீட்டுல அப்படியெல்லாம் சொல்லித்தரலயா :))
பாவக்கா சாப்பிடும்போது மட்டும் எம் மூஞ்சி கொழந்தை மாதிரி இருக்கும் அப்பாவியா!

இந்த ஊரு காஞ்சிபோன ஊருன்னு யாரு சொன்னது!

கேரளத்து சேச்சிகள், பிலிப்பைன் நாட்டு குமரிகள், அரேபிய குதிரைகள், லெபனான் நாட்டு மந்தாரகைகள், ஈரான் தேசத்து இளந்தாரகைகள்னு ஏகப்பட்ட தேசத்துக்காரவுக இருக்காங்க
என்ன ஒரு குறை முகத்தை மூடிக்குவாங்க! :((

கவுஜய பத்தி ஒண்ணுமே சொல்லலியே!

இராம்/Raam said...

/கேரளத்து சேச்சிகள், பிலிப்பைன் நாட்டு குமரிகள், அரேபிய குதிரைகள், லெபனான் நாட்டு மந்தாரகைகள், ஈரான் தேசத்து இளந்தாரகைகள்னு ஏகப்பட்ட தேசத்துக்காரவுக இருக்காங்க
என்ன ஒரு குறை முகத்தை மூடிக்குவாங்க! :((//

மவனே அங்கே கிடைக்கிற தண்டனை என்னான்னு தெரியுமில்லை.... :)

கதிர் said...

//ஓஹோ.... கவுஜைக்கும் கவிதைக்கும் அவ்வளவு வித்தியாசமா?

அப்போ... நானும் க்கவுஜ எழுதியிருக்கேன்.. வெட்டியும்தான் ;)))

நம்ம கவுஜையெல்லாத்தையும் தொகுத்து இணையக் காதலர்களுக்குக் கொடுத்தா எப்படி????//

ஆஹா இது கவுஜை எழுதும் காலம்!

நீங்க எழுதினதெல்லாம் கவிதையப்பா நம்மளுக்கு அந்த அளவுக்கு ஞானம் பத்தாது.

கதிர் said...

//மவனே அங்கே கிடைக்கிற தண்டனை என்னான்னு தெரியுமில்லை.... :) //

நல்ல பாயிண்ட் சொன்னிங்க ராயலு:))

கவுஜ பத்தி சொல்லவேல்ல!

இராம்/Raam said...

//நல்ல பாயிண்ட் சொன்னிங்க ராயலு:))

கவுஜ பத்தி சொல்லவேல்ல! //

சூப்பர்,பிரமாதம், அற்புதம், அருமை, கலக்கல்'ன்னு எதாவது போடலாமின்னு இருந்தேன்... ஆனா நீயே என்னோட கருத்து கேட்டுட்டே? அதுனாலே சொல்லுறேன்...

பின்னிட்டே கதிரு :)

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி

இவ்வளவு அருமையான கவியைப் படைத்தபின்னும் மடத்தில் சேரத் தாமதம் செய்வது மடத்தனம் அன்றோ?

//ஒரு கவிதைய படிச்சவுடனே மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவிதை. ஏண்டா படிச்சோம்னு மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவுஜை!//

குறள் மாதிரி சுருங்கக்கூறி விளங்க வைத்து வெளங்காமல் போயிருக்கிறாய் தம்பி, வாழ்த்துகள். உன் சேவை கவிமடத்துக்குத் தேவை. இன்னும் ஆள் சேர்த்துக்கொண்டு உடனே படையெடு!

கதிர் said...

//இவ்வளவு அருமையான கவியைப் படைத்தபின்னும் மடத்தில் சேரத் தாமதம் செய்வது மடத்தனம் அன்றோ?//

நல்ல வேல, கலக்கல், சூப்பருன்னு சொல்லாம டைரக்டா அடிச்சிங்க பாருங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இருந்தாலும் உங்க அளவுக்கு திறமை பத்தாதுங்க தல அதுவும் நான் கவுஜை எழுதுற விஷத்துல இன்னமும் தவழும் குழந்தைதான்.

இந்த தவழும் குழந்தைக்கு பெரிய மடத்துல சேக்குறது சந்தோஷமான விசயம்.

//குறள் மாதிரி சுருங்கக்கூறி விளங்க வைத்து வெளங்காமல் போயிருக்கிறாய் தம்பி, வாழ்த்துகள். உன் சேவை கவிமடத்துக்குத் தேவை. இன்னும் ஆள் சேர்த்துக்கொண்டு உடனே படையெடு! //

அடடா இதை நான் எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியல. கவிமடத்துக்கு ஆள் தேவையா அய்யஹோ ஒது கவுஜையுகத்துக்கே இழுக்கல்லவா.

கவுஜை என்பது கணநேர கோபம். அந்த கோபம் சரியான விதத்தில கவுஜையில் தெறித்து, சரியாக புரிந்துகொள்ளப்பட்டால் அதுதான் நிஜமான அக்மார்க் கவுஜை.

இது ரொம்ப ஓவரா இருக்குன்னு பீல் பண்ணிங்கன்னா தனிமடலில் திட்டலாம்.

அபி அப்பா said...

////ஒரு கவிதைய படிச்சவுடனே மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவிதை. ஏண்டா படிச்சோம்னு மனசை பிசையற மாதிரி இருந்ததுன்னா அது கவுஜை!////

ஒரு கவிதைய படிச்சா நல்லா பசி எடுத்தா?????
தம்பி,
சூப்பர்.. ஒரு 4 நாளைக்கு சோறு போடாம பூட்டி வச்சா நிறைய கவிதை கிடைக்கும் போல இருக்கு

கதிர் said...

//சூப்பர்.. ஒரு 4 நாளைக்கு சோறு போடாம பூட்டி வச்சா நிறைய கவிதை கிடைக்கும் போல இருக்கு//

ஒருவேளை சாப்பிடலன்னா உயிர் போயிடும் இதுல நாலு நாளா?
தாங்காது சாமீ!

அப்படி எல்லாம் பண்ணினா கோவம்தான் வரும்.

கதிர் said...

//பின்னிட்டே கதிரு :)//

இத மொதல்லயே சொல்லியிருக்கலாமில்ல!

மணிகண்டன் said...

கலக்கல் கவுஜ தம்பி !

//என்ன ஒரு குறை முகத்தை மூடிக்குவாங்க! :((//
உங்கள பார்த்த வெக்கத்திலயா? :))

இராம்/Raam said...

//
இத மொதல்லயே சொல்லியிருக்கலாமில்ல!//

இப்பிடி வந்து சொல்லுன்னு சொல்லிருக்காலமில்லை ???? :))

கோபிநாத் said...

தம்பி கதிரு

நீயும் கவிதை ச்சீச்சீச்சீ...கவுஜை கும்மியா...

சரி அஞ்சப்பர்ருக்கு தனியாவா போன?
பொய் சொல்லாம சொல்லு...