இப்பல்லாம் வடிவேலு காமெடி கூட வயித்தெரிச்சல கிளப்புற மாதிரி இருக்கு.
விவேக் ஆட்டத்துலயே இல்ல அதுக்கு சமீபத்திய உதாரணம் ஆழ்வார்.
அப்பப்போ கருணாஸ், சந்தானம் போன்றவர்கள் வந்தாலும் தொடர்ந்ததுபோல
யாரும் நிலைக்க மாட்டேங்கறாங்க.
சமீபத்தில் தகப்பன்சாமி படத்தில் ஒரு காமெடி நல்லா ரசிச்சி சிரிக்கற மாதிரி
இருந்தது. கருணாஸ் டீ குடிக்கலாம்ணு கடைப்பக்கம் போவாரு.
காலைல டீ அடிக்கலாம்னு பாத்தா ஒரு கோவிந்தன் கூட கிடைக்க
மாட்டேங்கறானே சரி நம்ம காசுலயே இன்னிக்கு டீ குடிக்கணும்னு
எழுதி இருக்கு போல தலையெழுத்து என்ன பண்றது.
"டீக்கடையில எவனும் இல்ல சுருக்கா டீய குடிச்சிட்டு கெளம்பிடணும்"
"கோவிந்தா ஒரு சூடா ஒரு டீய போடுப்பா"
"ம்ம் சூடா நெருப்பதான் போடணும்" கடைக்காரார்
"ஹேய் நாங்கல்லாம் தீக்கோழிடா எதக்குடுத்தாலும் முழுங்குவோம்"
காசு குடுக்கறோம்டா காசு
இப்படி பேசிட்டு இருக்கும்போதே ஒரு கோவிந்தன் மரத்துக்கு பின்னாடி
தலையில துண்டு போட்ட ஒரு ஆளு ஒளிஞ்சிருந்து பாத்துட்டு கருணாஸ்கிட்ட
டீய மொக்க போடலாம்னு வருவாரு.
"அடடே வா கோவிந்தா டீ சாப்புடறியா"? ஏய் தம்பிக்கு ஒரு டீய போடுப்பா
நமக்கு யோகம்டா இன்னிக்கு இவன் தலையில மொளகா அரைச்சிட
வேண்டியதுதான்னு கருணாஸ் முணுமுணுக்கறாரு.
"ரெண்டு பேருக்கும் டீ வருது"
"ஏன் கோவிந்தா டீ ரொம்ப சூடா இருக்குல்ல" கருணாஸ்
"ஆமா கோவிந்தா"
"என்னப்பா இவ்ளோ சூடா போட்டுருக்க"
எவன் முதலில் டீய குடிச்சி முடிக்கறானோ அவந்தான் காசு குடுக்கணும்னு
ரெண்டு பேரும் டீய ஆத்திகிட்டே இருப்பாங்க.
சாயந்திரம் ஆயிடும்
"கோவிந்தா டீ சூடா இருக்கா? ஆமாப்பா!
""கெட்டபய சூடாவே போட்டு பழகிட்டான்"
ஏண்டா காலையில ஒரு டீய வாங்கிட்டு ராத்திரி வரைக்கும் ஆத்தி ஆத்தி
பாத்துட்டு இன்னும் சூடாவே இருக்குன்னு சொல்றிங்களே இது நியாயமாய்யா
இந்த எடுபட்ட பய மூஞ்ச பாத்துட்டு இந்த ஊர்க்காரன் எவனும் கடைபக்கம்
ஒதுங்கல!
"பாருங்கடா பால பாருங்கடா காய்ஞ்சி கருகிப்போச்சி" காலையிலயே
பட்டைய போட்டு ஆட்டைய போட வந்துட்டீங்களேடான்னுசோடா
பாட்டிலாலயே அடிச்சி விரட்டுவாரு கடைக்காரர்.
இனிமேல் நம்ம கொசுவர்த்தி!
இதுமாதிரி ஆளுங்கள ஊருக்கு ஒரு ஆளு பாக்கலாம் எங்க ஊருலயும் ஒரு
ஆளு இருக்காரு. அவர பாத்தாவே டீக்கடையில இருக்குற ஆளுங்க தெறிச்சி
ஓடுவாங்க. மனுசன் காசுகுடுத்து டீ குடிச்சதே இல்ல.
தூரத்துல அந்த ஆள் வர்றான்னு தெரிஞ்சாவே கூட்டத்துல கண்ணிவெடி போட்ட
மாதிரி ஆளுங்க கலைஞ்சி போயிடுவாங்க. கடைக்காரர் முகம் கலவரத்த பாத்த
மாதிரி இருக்கும்.
அண்ணே நான் டீக்கடை ஆரம்பிச்சி இருவது வருசம் ஆகுது உங்கிட்ட இருந்து
ஒத்தப்பைசா கூட என் கல்லாவுல போட்டதில்லண்ணே நான் கண்ண மூடறதுக்குள்ள
அதுமாதிரி நடக்குமான்னு சந்தேகமா இருக்குன்னு கடைக்காரரு விளையாட்டா
சொல்லுவாரு நம்மாளும் வழக்கம்போலவே அதையும் விளையாட்டா
எடுத்துக்குவாரு.
யாரு ஆரம்பிக்கறதுன்னும் போட்டி இருக்கும், யாரு முதல்ல முடிக்கறதுன்னும்
போட்டி இருக்கும். ஹாஸ்டல்ல பக்கத்து ரூம் பையன் மொதமுறையா மொபைல்
வாங்கினான். ராத்திரி முழுக்க பேசிட்டே இருப்பான். (அந்த நேரத்துல இரவு
11 மணிக்கு மேல இலவசம்) என்னடா பையன் பிகர் தேத்திட்டானான்னு
சந்தேகம் வரவே வாட்சிங் பண்ணி பாத்தா பையன் குருட்டாம்போக்குல எதுனா
நம்பர் அழுத்தி தூக்கத்துல இருக்கற ஆளுங்கள எழுப்பி வம்பிழுத்துட்டு
இருப்பான். இதுவும் ஏதாவது போபியாவோ, மேனியாவோ, குனியாவோ இருக்கும்
போலருக்கு.
ஒரு நாள் இவனுக்கு அல்வா குடுத்த பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணினான்
எப்ப போன் பண்ணாலும் அவங்க அப்பந்தாண்டா போன் எடுக்கறான். அவனுக்கு
வெக்கிறேன் ஆப்புன்னு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம் பில்கேட்ஸ்
பத்தியெல்லாம் பேசி கடுப்பேத்துனான். அந்த ஆளு வெறுப்பாகி கண்டமேனிக்கு
பேச பொருமையா கேட்டுட்டு ஒரு வார்த்தை சொன்னான் பாருங்க.
"மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இன்னும் சங்கத்தமிழ்
வார்த்தைகள் பல மானே, தேனே போட்டு சொல்லிட்டான்.
சண்டை நடக்குது நடக்குது நடந்துகிட்டே இருக்கு...
ஒருத்தனும் போன கீழ வைக்க மாட்டேங்குறாங்க. இவன் வைப்பான்னு அவனும்
அவன் வைப்பான்னு இவனும் விடிய விடிய திட்டிங்கறாங்க!
இவனாவது பிகர கரெக்ட் பண்றதாவது ஒரு பாட்டிய கூட இவனால தேத்த
முடியாதுன்னு கிளம்பிட்டோம்.
இப்ப என்னத்துக்குடா இப்படி அளக்குற நீயின்னு கேக்குறிங்களா?
என்னத்த சொல்றது! எனக்கு இது அம்பதாவது பதிவு. :((
என்னத்துக்கு எழுத ஆரம்பிச்சேன்னும் தெரில, என்னத்துக்கு எழுதாறோம்னும்
தெரில அப்படியே ஒரு மாதிரியா போயிட்டு இருக்கு. ஒரு ஓரமா நம்ம ஜல்லி
கொட்டிட்டு உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியதுதான். ஆனா ஒண்ணு
இது எழுதறதுனால பல அற்புதமான நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. குறிப்பா
சொல்லணும்னா
வெட்டிபயல்,
கப்பி பய,
ராயல் ராம்,
கோபிநாத்,
பெனாத்தல்
சுரேஷ்,
ஆசிப் அண்ணாச்சி,
ராசுக்குட்டி,
கைப்ஸ்,
தொல்.குமார்,
முத்துக்குமரன்,
லியோசுரேஷ்,
செந்தழல்,
சந்தோஷ்,
பரத்,
பாஸ்டன் பாலா,
சிறில் அலெக்ஸ்இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அப்படி சொன்னா நீண்டுகிட்டே போகும்.
குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))