என் நினைவுக்கூடங்களை
ஒவ்வொன்றாக தனிமையின்
வெளிகளுக்கு பிரயத்தனப்பட்டு
அனுப்பியும் எஞ்சிய புலன்களில்
ஒன்று விழித்திருந்தது
என்னையறியாமல்.
யாரோ ஒருத்தியின் வருகைக்காக
அது விழித்திருக்கக் கூடும்.
என்றாவது வருபவள்தான்.
அவளை
முன்
பின்
பார்த்ததில்லை.
குரல் மட்டுமே அறிந்திருந்தேன்
எவளொருத்தியின் முகமாவது
ஒட்ட வைத்து உருவகப்படுத்த
முயன்றும்
இவையாவும் எனக்குப் பொருந்துவன
அல்ல என எக்காளமிட்டுச்
சிரிப்பவள் இந்த அரூபக்காரி.
எனவே அப்படியப்படியே
தொடர்ந்தது எங்கள் உறவு.
வெக்கையில் கண்ணீர் சிந்தும்
மயானச்சுவர்கள் போல
கசிந்துருகி நின்றாள்.
என்னையும் அரூபவெளிக்குள்
அழைத்துச் செல்லும்
முயற்சியாக அவளின் மெல்லிய
விசும்பல்கள்.
எஞ்சிய ஒரு புலனும் அடங்க
உடல் விட்டு எழுந்தேன்.
வழக்கமான சிறு தீண்டலில்
மாயமானாள்.
அவளின் அடுத்த வருகைக்குள்
பொருந்தச் செய்வதாக
ஒரு முகம் தேட வேண்டும்.
எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Tuesday, June 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு!
அய்த்தான் மே ஐ கம் இன்!
அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்க.
//எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!//
துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுங்க, வருவாங்க... : )
//எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!//
பாவனா வர்ராளா இருக்கும். ஆனா அவுட் ஆப் போகஸ் ல இருக்கும் போல் இருக்கு :-)
தம்பி, குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுல பொண்ணு பார்க்கா மாட்டீங்கறாங்களா???
மோகினியிடம் உசாராக இருக்கவும்
யோவ் இந்த அரூபக்காரி என் ஆளு விட்டுடு..வேணாம்..:)
//தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு! //
ஆமாங்க!
கவுஜோஷம் பிடிச்சிருச்சி
ஹ்ஹச்சு...
ஹ்ஹச்சு...
அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்க.
ஏன் உங்களுக்கு புரியாது. கவிஞர்கள் எழுதும் கவிதைகள் வேணா புரியாம போகலாம்
ஆனா கவிஞ்சர்கள் எழுதும் கவுஜைகள் கண்டிப்பாக புரியணும்.
இதையும் நல்லாருக்குன்னு சொன்ன உங்க நல்ல மனசு நல்லாருக்கட்டும்.
//துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுங்க, வருவாங்க... : ) //
கனவுல வரலன்னுதான் கவலை நேர்ல வந்தா பிரச்சினைங்க. அழகெல்லாம் தூரத்துல வச்சி
பாத்தாதான் அழகு கிட்டக்க வந்தா சலிச்சிடும். அதனால அம்மணி அங்கவே இருக்கட்டும்.
//எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!//
//பாவனா வர்ராளா இருக்கும். ஆனா அவுட் ஆப் போகஸ் ல இருக்கும் போல் இருக்கு :-)//
வாங்க உதய்!
அவுட் ஆப் போகஸ்ல வந்திருந்தா நான் ஏன் இந்த கவுஜய எழுதறேன். அம்மணி நிழல்கூட வரமாட்டிகிது.
//தம்பி, குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுல பொண்ணு பார்க்கா மாட்டீங்கறாங்களா??? //
அய்ய்யோ அந்த வம்பே வேணாம்ங்க. கடைசி வரைக்கும் சுயேச்சையாவே நின்னு ஜெயிச்சி காட்டுவோம்னு சொல்ற கேப்டன் கட்சிய சேர்ந்தவன் நான்.
நன்றி.
//மோகினியிடம் உசாராக இருக்கவும் //
இல்லன்னா நிசார அவுத்துடுமா?
//யோவ் இந்த அரூபக்காரி என் ஆளு விட்டுடு..வேணாம்..:) //
ஏய் அது பொது ஆளுப்பா!
yov enagyay poneeru alai parthu romba analchuaaaaaaaa
ஆஹா.. கவுஜ கவுஜ... எப்படி தம்பி இப்படியெல்லாம் பட்டாசு கெளப்புறீரு... கலக்குங்க தம்பி அண்ணாச்சி...
தென்னாட்டு தாகூர் :))
அய்யோ இன்னொரு பாவனா பைத்தியமா?
பேசமே வுட்டுல பொண்ணு பார்க்க சொல்லுங்க.எல்லாம் வயசு கோளாறு :-))
இன்னொரு பாவனா பைத்தியம்னா அந்த இன்னொருத்தர் யாரு?
கார்த்திக்,
கொஞ்சம் சொந்தபிரச்சினை இருந்ததினால ப்லாக் பக்கம் வரமுடியாம போச்சி. இப்ப எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு அதான் ரீ எண்ட்ரி.
ஜியா,
உங்களவிடவா நான் எழுதறேன்?
:)) நான் கவிஜ எழுதினா அதுக்கு 15 கூட தேற மாட்டேங்குது. ஆனா உங்களுக்கு சாலிடா 100 வருதே...
கப்பி,
டிக்கெட் போட்டு தாரேன் வந்து அடிச்சிட்டு போய்யா...
//எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!//
இதுவும் கவுஜ - ல ஒரு பார்ட்டா தம்பி? கவிதையும் கானாவையும் மிக்ஸ் பண்ணி ஒரு கவுஜயா!! கலக்குறீங்க போங்க!
வாங்க கவிதாயினி!
அது ஏன் கடைசி நாலு வரி மட்டும் எல்லாருக்கும் தெரியுது. ஏன்னா அது மட்டும்தான் உண்மை. :)
மத்ததெல்லாம் கற்பனை. என்னதான் அழகான கற்பனைன்னாலும் அஞ்சு பத்து நிமிசத்துக்கு மேல ரசிக்க முடியாது.
ஆனா பாவனா அப்படியில்ல! :)
good keep it up.
நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்க தூக்கிப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். எப்படிப்பா இப்படியெல்லாம்... எங்கேயோ போய்டீங்க (அபுதாபிலதான்னு தெரியும்) ;-)
தேங்க்ஸ் அனானி. உங்களால மறுபடியும் இந்த கவுக பல பேரால் படிக்க படுகிறது. இந்த பாவமெல்லாம் உங்களதான் சேரும்.
//நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்க தூக்கிப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். எப்படிப்பா இப்படியெல்லாம்... எங்கேயோ போய்டீங்க (அபுதாபிலதான்னு தெரியும்) ;-) //
வாங்க ஜெஸிலா
அட நமக்கும் இந்த நாலு பேருக்கு புரியாத மாதிரி எழுத தெரியும்னு காட்ட வேணாமா.. :)
அதான்.
மத்தபடி அய்ஸ் அளவுக்கு கவுஜஞானம் கிடையாது.
Post a Comment