எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, June 08, 2007

பி.ந பற்றிய சில சந்தேகங்கள்.

நேற்று ஏதேச்சையாக துபாய் பக்கம் போனபோது கிடேசன் பார்க்கில் சிக்க
நேரிட்டது. இதுவரைக்கும் பார்க் மீட்டிங்னா வாரயிறுதிய சந்தோஷமா
கொண்டாடிட்டு இருந்தோம். இந்த வாரம் ஒரு காரசாரமான விவாதம் நடத்தி
இதுவரைக்கும் இல்லாத ஒரு கெட்ட விஷயத்தை பண்ணிட்டோம்.

எந்த முன்னேற்பாடும் இல்லாத இந்த சந்திப்புக்கு அனானிகள் திரண்டு வந்தார்கள்
என்றெல்லாம் பீலா விடமாட்டேன். பதிவர்கள் அல்லாதவர்களையும் அனானிகளா
சேத்துகிட்டாதான் கணிசமான ஆள்னு சொல்லமுடியும் அப்படின்றதினால அவங்களையும்
சேத்தாச்சி. எல்லாரும் இப்படியே பேசிகிட்டு இருந்தா வேலைக்காகாதுன்னு அந்த
ஏரியா தல ஒண்ணு சவுண்டு விட்டு என்னாதிது ராஸ்கல்ஸ் ஆளுக்கு ரெண்டு மூணு
நிமிசம் ஒதுக்கறேன் அவங்களுக்கு தோன்றத பேசலாம்.

முதல்ல அய்யனார் நீங்க பேசுங்கன்னு சொல்லிட்டார் அந்த ஒன்சைட் நீதிபதி.

இலக்கியங்கள பத்தி நாம பேசலாம்னு ஆரம்பிச்சி சங்ககாலம், குற்றால குறவஞ்சி
சிலப்பதிகாரம்னு பட்டைய கெளப்புனாரு. சங்ககால இலக்கியங்கள் எல்லாம்
என்னை பொருத்த வரைக்கும் இலக்கியங்கள்னு ஒத்துக்கவே மாட்டேன். அதெல்லாம்
உயர்ந்த நிலை மக்களுக்காக உற்பத்தி செய்யப்பட்டவை. ஒரு தலைவன் தலைவிக்கு
காதல் வர்றதும் அதுக்கு ரெண்டு பேர் தூது போறதும் எழுதறாங்களே தவிர அந்த
தூது போன தோழிக்கும் காதல்னு ஒண்ணு இருக்குமே அதை யாருமே ஏன்
எழுதல? சாதாரண மக்களுக்கும் காதல் வரும் இல்லையா? அதை எழுதணும்னு
ஏன் யாருக்குமே தோணல?? ஏன்னா அங்க பொற்காசு கிடைக்காது அதனாலதான்.

இப்ப அந்த தோழியோட காதல் ரொம்ப முக்கியமாய்யா? நாட்டுல எவ்வளவோ
பிரச்சினை இருக்கு அதெல்லாம் பேசாம... பேசறாங்கைய்யா பேச்சின்னு
சொல்லிகிட்டே கிச்சன் பக்கம் ஓடிட்டாரு ஒருத்தர்.

பாய்ண்ட பிடிச்சாருய்யா, நீங்க மேல பேசுங்க அய்ஸ்னு நீதிபதி சொல்லிட்டாரு.

அங்க இருந்த அனானிகள் இன்னுமா??னு சொல்லிகிட்டே அரண்டு ஓடிட்டாங்க
இன்னும் சிலபேர் இந்தாளுக்கு ரெண்டு நிமிசம் ஜாஸ்தியா யோவ்னு சவுண்டு
விட்டாங்க உடனே பேசிகிட்டு இருந்த தளத்தையே மாத்திட்டாரு.
வசனகவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை, நவீன கவிதை இதெல்லாம் யாரு
ஆரம்பிச்சது எப்படியிருக்கும்னு சொல்லிட்டு பின்நவீனத்துவம்னு ஒரு மேட்டருக்கு
வந்தார்.

மேலே சொன்ன மரபுகளையெல்லாம் ஒடைச்சி தூள் தூளாக்குறதுதான் பின்
நவீனத்துவம். கட்டுடைத்தல். விளிம்புநிலை மக்கள பத்தி பேசறதுதான் இதனோட
நோக்கம். இதை கண்டுபிடிச்சவர்னு ஒரு பேர சொன்னாரு அது யாருக்குமே
புரியல. மேட்டர்தான் முக்கியம். முதலில் வாசிக்கும்போது இதுல பேசப்படற
வார்த்தைகள், சொல்ற விஷயங்கள் எல்லாமே ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்
தாங்கமுடியாது ஆனா அதுதான் உண்மை. எதார்த்ததை அப்படியே சொல்லணும்
வார்த்தைப்பூச்சுகள, வியாபாரதந்திரங்கள்னு இல்லாம இருக்கணும். எல்லாருமே
புனிதபிம்பத்தோட நடிக்கிறாங்க. என்னோட பி.ந கவிதைகள்ல இதை
பத்தி சொல்லியிருக்கேன்.

கவிதைன்னவுடனே அபிஅப்பா அச்சு அச்சுன்னு தும்மிட்டாரு.

சரி சரி உங்க டைம் முடிஞ்சி போச்சி அடுத்து தம்பி நீங்க பேசுங்கப்பா!

பின்நவீனதத்துவம்னு புதுசா ஒரு விஷயம் சொல்லிருக்காரு அதை பத்தி
சந்தேகங்கள் இருந்தா கேளுங்கய்யா.

அய்யா அது பின்நவீனத்துவம். தத்துவமில்ல.

எனக்கு என்னங்க இருக்கு பேச? எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க. இருந்தாலும்
பின்நவீவனத்துவம் பத்தி எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குங்க அதை பத்தி
இவர்கிட்ட கேட்டுக்கறேன். பி.ந என்ற வார்த்தையே தமிழ்மணம் பக்கம் வந்துதான்
தெரிஞ்சிகிட்டேன். என்னை பொருத்தவரைக்கும் நான் எப்படி புரிஞ்சிகிட்டேன்னா
அதாவது பி.ந வாதிகள்னு ரெண்டு மூணு பேர் எழுதற கவிதை கட்டுரைகள்னு
படிச்சி நான் புரிஞ்சிகிட்டது இதான் இதுல மட்டும் புழக்கத்தில் இல்லாத அதாவது
சாதாரணமான உரையாடல்களில் இல்லாத பலரும் சொல்லவே விரும்பாத சொற்களான
ஆண்குறி, யோனி, மாதவிடாய், முலை,புணர்தல்னு இன்னும் பல வார்த்தைகள்
இதெல்லாம் தவறாமல் கவிதையில இடம்பெறுவது எதனால். இதுதான் பி.நவா?
இதெல்லாம் இல்லாமல் எழுதமுடியாதா? இல்ல ஒருவேளை இதுமட்டும்தான் பி.நவா?
இல்ல இதை எழுதற ஆளுங்களுக்கு மட்டும் இந்த உணர்ச்சிகள் இருக்குமா? ஏன்னா
சில கவிதைகள் படிக்கும்போது சரியான சைக்கோத்தனமா எழுதியிருக்கான்யான்னு
எனக்குள்ளவே சொல்லிக்குவேன். சில கவிதைகள் ஒண்ணுமே புரியறதில்ல.

நீதிபதி அவர்களே நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்க ஆசப்படறேன்னு
அபிஅப்பா அடம்பிடிக்க.

அவங்கவுங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துலதான் பேசணும்.

இல்லிங்க முக்கியமான ஒரு விஷயம். அவங்களோட அனுமதிய எதிர்பார்க்காம
அவரா சொல்ல ஆரம்பிச்சிட்டார்.

தமிழ்மணம்ன்றது வயதில் சிறியவர்கள், மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள் இந்த
மாதிரி பலபேர் வந்துபோற இடம் இதுல போய் கன்னாபின்னான்னு வார்த்தைகள
போட்டு கவிதைன்ற பேர்ல எழுதறாங்க.தம்பி சொன்ன கருத்துக்களுடன் முழுமையாக நான் உடன்படுகிறேன். இதுதான் மட்டும் என்னோட வேண்டுகோள் ஆபாசமான வார்த்தைகள்
இல்லாம எழுதணும்ங்க அம்புட்டுதேன். உட்கார்ந்துவிட்டார்.

முதல் வகுப்பு படிக்கிற மாணவன்கிட்ட இதுதான் "அ" இதுதான் "ஆ" அப்படின்னு
சொல்லிகுடுத்தா கடைசிவரைக்கும் மறக்கவே மாட்டான். அதுமாதிரிதான் பின்நவீனத்துவம்
அப்படின்னு முதலில் அறிமுகமாகிறவர்களுக்கு இதுபோன்ற ஆபாசமான வார்த்தைகள்
மட்டுமே நிறைந்திருந்து காணப்பட்டால் கடைசிவரை அவர்களிடம் இது "ஒரு
மாதிரியான மேட்டர்" என்ற அணுகுமுறைதான் இருக்கும். எனக்கு தெரிஞ்சி எங்கயோ
படிச்சேன் எங்கேன்னு ஞாபகமில்ல, அவளை அப்படியே பின்புறமாக இருந்து புணர
வேண்டும்னு எழுதினாராம். அவர்கூட பின்நவீவத்துவாதிதானாம். பி.ந என்பது
மிகப்பெரிய விஷயம் நம்மவர்கள் இதை ஒரு கட்டுக்குள் வைத்து இதுதான் பி.ந என்று
கற்பிக்க முயல்கிறார்கள்னு தோணுது.

யோவ் இணையத்துல இப்படி ஒரு கில்மா மேட்டர் இருக்குதுன்னு சொல்லவே
இல்லியே. இதுமாதிரிலாம் எழுதறாங்களா அப்படின்னு அந்த நிகழ்ச்சிக்கு தலைமை
தாங்கின நீதிபதி ஆச்சர்யப்பட்டுபோனார்.

கார்த்திக் நீங்க உங்க கருத்தை சொல்லலாம். நம்ம நடுவர் அழைக்கிறார்

யோவ் அவர எழுப்புங்கப்பா!

தூக்கத்தை கெடுக்கறிங்களே என்றபடி எழுந்த அனானி அன்பர். எதுவா இருந்தாலும்
அய்யனாரின் கருத்து உடன்படுகிறேன்னு சொல்லிட்டு மறுபடி தூங்கிட்டார்.

அபிஅப்பா நீங்க சொல்லுங்க. இது உங்கள் ரவுண்டு.

எங்க என்னோட ரவுண்டு என அவரது கண்கள் வேறு எதையோ தேட.
நடுவர் கலவரமாகி,இப்ப உங்களோட முறைன்னு சொன்னேங்க அபிஅப்பா

அதான் என்னோட கருத்தை நான் சொல்லிட்டேனே. தமிழ்மணத்துல ஒரு
குடும்பமா இருக்கற மாதிரி பீல் பண்றேன் இதுல ஆபாச வார்த்தைகள்
வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலங்க. இதான் என்னோட கருத்து.
நறுக்குன்னு முடிச்சிட்டார்.

அடுத்த ஒரு அனானி சொல்றார். எந்த விஷயத்துலயும் எல்லாருக்கும் ஒரு
தனித்தன்மை, தனிக்கருத்து இருக்கும் அது யாரோடயும் ஒத்துப்போகணும்னு
அவசியமில்ல. அதுமாதிரி அய்யனாருக்கு தோணினது அவர் எழுதறார் அது
அவரோட கருத்து. இவருக்கு (என்னைக்காட்டி) தோண்றதை எழுதறார்.
இதுவரைக்கும் நான் வலைப்பூ படிச்சதே இல்ல. படிக்கவும் எனக்கு நேரமில்ல.
படிக்கறதா ஐடியாவும் இல்லன்னு சொல்லி படார்னு வச்சிட்டார்.

அய்யனார் உங்க கருத்தை சொல்லுங்க உங்கமேல இப்படி ஒரு குற்றச்சாட்டு
சொல்றாங்களே என்ன சொல்றிங்க?

அதாவது பி.ந புரியாதவங்க இதுமாதிரிதாங்க பேசுவாங்க. அதனோட வெளி, பிரமிப்பு இதெல்லாம் முதல் முறை ஒரு சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்தும் அது தவிர்க்க முடியாத
ஒன்று. எதார்த்தத்தை எழுதும்போது அந்த மாதிரியான வார்த்தைகள் சகஜம்தான். இதோட
ஒரே கொள்கையே எதையும் மூடிமறைச்சி பூச்சு இல்லாம இருக்கணும் என்பதுதான். இதெல்லாம் சகஜம். இதைப்போய் ஆபாசம்னு கூச்சல் போடக்கூடாது. ஒருவன்
தனியாக இருக்கும்போது அவனுக்கு இருக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாத்தையும்
எழுதலாம்னு உட்கார்ந்தால் பலது அச்சிலே ஏற்ற முடியாத விஷயங்களாக இருக்கும்.
அதே சமயம் அதுதான் உண்மை. இது எல்லாருக்கும் பொருந்தும் எதையும் வெளிக்
காட்டிக்கொள்ளாமல் போலியான வாழ்க்கைதான் நாம் வாழ்கிறோம் இதையெல்லாம்
எப்போது ஒரு மனிதன் உணர்கிறானோ அப்போது அவன் பி.ந வை கண்டு அச்சப்
படவோ, அசிங்கப்படவோ மாட்டான். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லன்னு
பேச்சை முடிச்சிகிட்டார்.(நிறைய பேசினார் எனக்கு ஞாபகமில்லை).

எல்லோரும் ஆவலோடு நடுவரை பார்க்க அவர் இவனுங்களுக்கு நடுவரா இருந்த
நேரத்துல இன்னும் ரெண்டு பெக் உள்ள விட்டுருக்கலாம்.

நடுவரே தீர்ப்ப சொல்லுங்க.

இது ஒரு மாதிரி சிக்கலான விஷயம் இன்னும் பல கருத்துக்கள், தகவல்கள்
தேவைப்படுது. அதுவுமில்லாம இப்படி ஒரு கில்மா மேட்டர் தெரியாம நான்
இருந்துட்டேன் அதனால இதன் தொடர்ச்சி அடுத்தவாரம்னு சொல்லிட்டு எஸ்
ஆகிவிட்டார்.

கர்ர்ர்ர் நீயெல்லாம் ஒரு நடுவர். வந்துட்டாருய்யா கெளம்பி
போய்யோ போ இன்னிக்கே உங்க இம்சை தாங்க முடியல இதுல அடுத்தவாரமா
யோவ் இனிமே இந்த தமிழ் புலவர்கள கான்ப்ரெண்ஸ் ஹாலுக்குள்ள விடாதிங்கப்பா
விடிய விடிய வெட்டித்தனமா பேசி நம்ம டயத்தை வேஸ்ட் பண்றாங்க.

கிளம்பும்போது ஒரு அனானி அன்பர் கெஞ்சி கேட்டுக் கொண்டதிற்கிணங்க.
இது மட்டும் என்னோட வேண்டுகோள். அபிஅப்பாவைக்காட்டி. இந்தாளு
ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் இன்னிக்கு 30 பின்னூட்டம், சூப்பர் கும்மி
பாசகாரகுடும்பம் எனக்கு பயங்கர மரியாதை இருக்கு பதிவுலகத்துலன்னு
பீட்டர் விடறார். பாருங்க இவர தினமும் ரூமுக்கு தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு
பேர் வேணும்ங்க. மட்டையாகிடறார். இதையும் நெட்டுல போடுங்க இவர்
எப்படின்னு எல்லாருக்கும் தெரியட்டும்.

இதைக்கேட்ட உடனே திடீர்னு ஒரு உருவம் எழும்பி தம்பி அப்படிலாம்
போடக்கூடாதுன்னு சுறுசுறுப்பா எழுந்து போய் அறையில் படுத்து
தூங்கிவிட்டார்.

நண்பர்களே எதாவது தவறாக எழுதியிருந்தால், சின்னப்பையன் தெரியாம
எழுதிட்டான்னு விட்டுடுங்க.

நன்றீ.

28 comments:

Ayyanar Viswanath said...

அடப்பாவி தம்பி !! உனக்குள்ள இருக்க பதிவன் எப்பவும் விழிப்பா இருக்கானே :(

அபிஅப்பா அட்டகாசங்களை பத்தியும் விரிவா எழுதி இருக்கலாம் :)

அபி அப்பா said...

ஆஹா தம்பி! பத்த வச்சுட்டியே! உனக்கு ஏதும் ஞாபகம் இருக்காதுன்னு தப்பு கணக்கு போட்டுட்டேனே தம்பி! சரி போகட்டும் விழாழன் இரவு நடந்தது போகட்டும். வெள்ளி கிழமை கொடுமை எல்லாம் எழுதலையா? அது எப்போ?

அபி அப்பா said...

அய்யனார்! நான் போட்டோ ஆதாரம் வச்சிருக்கேன்யா உம்ம அட்டகாசம் பத்தி, என்ன போடவா?:-))

அபி அப்பா said...

பி.நன்னா என்னான்னே தெரியாத நம்ம ஒன்சைடு நீதிபதி சாம்சன் அவர்கள் இப்போது தீப்பை எழுதிகிட்டு இருப்பதாக போனில் சொன்னார்.(இப்போ கூட போனில் பின்னால தத்துவம்ன்னு தப்பாதான் சொன்னார் மக்கா)

காயத்ரி சித்தார்த் said...

//இதுதான் பி.நவா?
இதெல்லாம் இல்லாமல் எழுதமுடியாதா? இல்ல ஒருவேளை இதுமட்டும்தான் பி.நவா?//

நச்சுன்னு கேட்டிங்க! எனக்கும் இதே டவுட்டு தான் தம்பி..

காயத்ரி சித்தார்த் said...

//தூக்கத்தை கெடுக்கறிங்களே என்றபடி எழுந்த அனானி அன்பர். எதுவா இருந்தாலும்
அய்யனாரின் கருத்து உடன்படுகிறேன்னு சொல்லிட்டு மறுபடி தூங்கிட்டார்//

செம காமெடி இது!!!
:))))

காயத்ரி சித்தார்த் said...

//இப்போ கூட போனில் பின்னால தத்துவம்ன்னு தப்பாதான் சொன்னார் மக்கா//

என்ன கூத்து இது!!! இப்டி சிரிக்க வெக்கறீங்க எல்லாம்? பதிவை நகைச்சுவை/நையாண்டி ல போட்ருக்கலாம் இல்ல?

கதிர் said...

//அடப்பாவி தம்பி !! உனக்குள்ள இருக்க பதிவன் எப்பவும் விழிப்பா இருக்கானே :(//

நீங்கல்லாம் மயக்கத்துல தூங்குவிங்க நான் என்ன பண்ணுவேன் அதான் போட்டு தாக்கியாச்சு.

//அபிஅப்பா அட்டகாசங்களை பத்தியும் விரிவா எழுதி இருக்கலாம் :) //

இப்படியே ஒருத்தர மாத்தி ஒருத்தர் சொல்லி நீங்களே நாறிக்காதிங்க சாமிகளா

கதிர் said...

//ஆஹா தம்பி! பத்த வச்சுட்டியே! உனக்கு ஏதும் ஞாபகம் இருக்காதுன்னு தப்பு கணக்கு போட்டுட்டேனே தம்பி! சரி போகட்டும் விழாழன் இரவு நடந்தது போகட்டும். வெள்ளி கிழமை கொடுமை எல்லாம் எழுதலையா? அது எப்போ? //

அது வேற எழுதணுமா... நம்ம மக்களுக்கு கோடு போட்டா ரோடு என்ன அதுக்கு மேல பாலமே கட்டுவாங்க. லைட்டா சொன்னாவே போதும் மீதிய அவங்க புரிஞ்சிக்குவாங்க. நீங்க ஒண்ணும் கவலபடாதிங்க.

கதிர் said...

//அய்யனார்! நான் போட்டோ ஆதாரம் வச்சிருக்கேன்யா உம்ம அட்டகாசம் பத்தி, என்ன போடவா?:-)) //


ஒண்ணும் சொல்றதுக்கில்ல நீங்க ரெண்டு பேரும் சண்டை போடவா இந்த பதிவு? கேட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுங்க பி.ந அறிஞர்களே...

கதிர் said...

//பி.நன்னா என்னான்னே தெரியாத நம்ம ஒன்சைடு நீதிபதி சாம்சன் அவர்கள் இப்போது தீப்பை எழுதிகிட்டு இருப்பதாக போனில் சொன்னார்.(இப்போ கூட போனில் பின்னால தத்துவம்ன்னு தப்பாதான் சொன்னார் மக்கா) //

தீர்ப்ப மாத்தி மாத்தி போரடிச்சி போச்சு, நாம் நடுவரையே மாத்திருவோம்.

கதிர் said...

//நச்சுன்னு கேட்டிங்க! எனக்கும் இதே டவுட்டு தான் தம்பி.. //

//நச்சுன்னு கேட்டிங்க! எனக்கும் இதே டவுட்டு தான் தம்பி.. //

வாங்க காயத்ரி,
எங்க நாலு பேருக்கு இந்த டவுட்டு இருக்கு. இங்க யாரும் பதில் சொல்லாட்டி இதுக்கு விளக்கம் உங்க பதிவில சொல்லிட்டிங்கன்னா கூட நாங்க வந்து படிச்சிக்குவோம்.

செய்வீங்களா?

கதிர் said...

//என்ன கூத்து இது!!! இப்டி சிரிக்க வெக்கறீங்க எல்லாம்? பதிவை நகைச்சுவை/நையாண்டி ல போட்ருக்கலாம் இல்ல? //

என்னங்க பண்றது எழுதணும்னு உக்காரும்போது சீரியசா எழுதணும்னுதான் உக்கார்ந்தேன் எழுதி முடிச்ச பிறகு அது காமெடியா போச்சு. அது என்னமோ தெரில எந்த விஷயமும் நான் சொன்னா அது காமெடியாவே தெரியுது. கவிதை எழுதினா கூட கவுஜையா மாறிடுது.

லொடுக்கு said...

மே ஐ கம் இன்?

லொடுக்கு said...

//ஒருவேளை இதுமட்டும்தான் பி.நவா?
//
சூப்பர்

//பி.ந என்பது
மிகப்பெரிய விஷயம் நம்மவர்கள் இதை ஒரு கட்டுக்குள் வைத்து இதுதான் பி.ந என்று
கற்பிக்க முயல்கிறார்கள்னு தோணுது.
//
சூப்பர்ர்

//இதுல ஆபாச வார்த்தைகள்
வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலங்க. இதான் என்னோட கருத்து.
//

சூப்பர்ர்ர்

லொடுக்கு said...

தம்பி,
இதைப் பத்தி நாம பேசுனா, ரசனையில்லாதவன், வெளிப்படையில்லாதவன், அழகியல் தெரியாதவன் என்னும் அவப்பெயர்கள் மட்டும்தான் மிஞ்சும். :( ஏற்கனவே நானும் இதைப் பத்தி ஒரு இடுகை போட்டு வாங்கி கட்டிக்கொண்டேன்.

கதிர் said...

//மே ஐ கம் இன்//

தனியா வராதிங்க ரெண்டு மூணு பேர கூட்டிகிட்டு வாங்க. பதிவு போட்டு ரெண்டு நாள் ஆச்சு யாருமே மூச்சு விடல.

கதிர் said...

//தம்பி,
இதைப் பத்தி நாம பேசுனா, ரசனையில்லாதவன், வெளிப்படையில்லாதவன், அழகியல் தெரியாதவன் என்னும் அவப்பெயர்கள் மட்டும்தான் மிஞ்சும். :( ஏற்கனவே நானும் இதைப் பத்தி ஒரு இடுகை போட்டு வாங்கி கட்டிக்கொண்டேன். //

லொடுக்கு எனக்கு இருக்கற சந்தேகம் என்னன்னா அந்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை எழுதுங்க, கட்டுரை எழுதுங்க ஆனால் அதற்கு பின்நவீனத்துவ போர்வை போர்த்தி உலவ விட்டால் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் பின்நவீனத்துவத்தை தவறாக புரிந்துகொள்வார்கள்.

எனக்கு நிஜமாவே புரியவில்லை அந்த வார்த்தைகளை கொண்டுதான் கட்டுடைக்க முடியுமா, இலக்கியங்களை மறுக்க முடியுமா? எதற்கு ஒருபுறம் சார்ந்து எழுதுகிறார்கள்.

இதுதான் நான் கேட்க நினைத்தது.

லொடுக்கு said...

//லொடுக்கு எனக்கு இருக்கற சந்தேகம் என்னன்னா அந்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை எழுதுங்க, கட்டுரை எழுதுங்க ஆனால் அதற்கு பின்நவீனத்துவ போர்வை போர்த்தி உலவ விட்டால் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் பின்நவீனத்துவத்தை தவறாக புரிந்துகொள்வார்கள்.//

ஓகோ! அப்ப உங்க கவலையெல்லாம் இந்த மாதிரி எழுதி பி.ந வை கலங்கப்படுத்துறாங்க என்பது தானா? நான் கூட சமூகத்தை கலங்கப்படுத்துவதை எதிர்த்துதான் எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சேன். அப்படி (அந்த சில சொற்களை பயன்படுத்தி) எழுதுவதே தவறு என கூற வருவதாக நினைச்சேன். :)

களவாணி said...

//யோவ் அவர எழுப்புங்கப்பா!

தூக்கத்தை கெடுக்கறிங்களே என்றபடி எழுந்த அனானி அன்பர். எதுவா இருந்தாலும்
அய்யனாரின் கருத்து உடன்படுகிறேன்னு சொல்லிட்டு மறுபடி தூங்கிட்டார்.//

ஹா... ஹா...

"பின்னவீனத்துவம்"ன்ற வார்த்தையே எனக்கு இப்பாத்தான் தெரியும். (நாமெல்லாம் தமிழ்மணம் பக்கம் போனாத்தானே, என் ப்லாகுக்கே நான் போக மாட்டேன்றேன்). எதுவா இருந்தாலும் புதுசா ஒரு செய்தியைத் தந்த தம்பிக்கு நன்றி. அதே மாதிரி இதையெல்லாம் எந்த ப்லாகுல எழுதறாங்கன்னு எனக்கு மட்டும் சொன்னீங்கன்னா, போய் பார்த்துட்டு வந்து நான் உங்களுக்கு தீர்ப்பு சொல்றேன்.

//அதுமாதிரிதான் பின்நவீனத்துவம்
அப்படின்னு முதலில் அறிமுகமாகிறவர்களுக்கு இதுபோன்ற ஆபாசமான வார்த்தைகள்
மட்டுமே நிறைந்திருந்து காணப்பட்டால் கடைசிவரை அவர்களிடம் இது "ஒரு
மாதிரியான மேட்டர்" என்ற அணுகுமுறைதான் இருக்கும்.//

எனக்கும் அப்படித்தான் தோணிச்சு.

Jazeela said...

உங்க கேள்விக்கெல்லாம் பதில் அய்யனார் வலைப்பூவில் பதிவா இருக்கும்னு தேடிப் பார்த்தேன் ஒண்ணும் புதுசா வந்தா மாதிரி தெரியலை. என்னப்பா அய்யனார் மற்றும் பி.ந.துவான்களே பதில் சொல்லுங்க.

குட்டிபிசாசு said...

தம்பி,

உங்களோட கருத்தோட நான் உடன்படுகிறேன்! என்னோட நண்பர்கள் "ஜீரோ டிகிரி" என்ற பி.ந. கதையை மேட்டர் புக் போல மறைத்து வைத்து படித்தது ஞாபகம் வருகிறது. யதார்த்ததை எழுத நிறைய விஷயம் இருக்கிறது.அதை விடுத்து ஏன் இப்படி குண்டு சட்டிக்குள் குட்டிகரணம் அடிக்கனும்.என்னோட நண்பனிடம் பி.ந என்றால் என்ன என்று கேட்டதற்கு,
"தலைவன், தலைவி, நிகழ்வு என ஒரு இலக்கண்த்துக்குள் வரையறுக்கப்படாமல் எழுதுவது" என்றான். என்ன கருமமோ!!

கதிர் said...

//உங்க கேள்விக்கெல்லாம் பதில் அய்யனார் வலைப்பூவில் பதிவா இருக்கும்னு தேடிப் பார்த்தேன் ஒண்ணும் புதுசா வந்தா மாதிரி தெரியலை. என்னப்பா அய்யனார் மற்றும் பி.ந.துவான்களே பதில் சொல்லுங்க.//

அவரும் பதில் சொல்வாருன்னு பாத்துகிட்டேதான் இருக்கேங்க. ஆனா மனுசன் வாயே தொறக்கல. அப்படின்னா அவரோட தோல்விய ஒத்துகிட்டதான் அர்த்தம்.

உங்க கருத்தை சொல்லவேல்லியே?

கதிர் said...

//தம்பி,

உங்களோட கருத்தோட நான் உடன்படுகிறேன்! என்னோட நண்பர்கள் "ஜீரோ டிகிரி" என்ற பி.ந. கதையை மேட்டர் புக் போல மறைத்து வைத்து படித்தது ஞாபகம் வருகிறது. யதார்த்ததை எழுத நிறைய விஷயம் இருக்கிறது.அதை விடுத்து ஏன் இப்படி குண்டு சட்டிக்குள் குட்டிகரணம் அடிக்கனும்.என்னோட நண்பனிடம் பி.ந என்றால் என்ன என்று கேட்டதற்கு,
"தலைவன், தலைவி, நிகழ்வு என ஒரு இலக்கண்த்துக்குள் வரையறுக்கப்படாமல் எழுதுவது" என்றான். என்ன கருமமோ!!//

வாங்க குட்டிப்பிசாசு,

அந்த ஜீரோ டிகிரிய ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன். அத படிச்சாச்சும் புரிஞ்சிக்கலாம்னு, நீங்க சொல்றத பாத்தா அதுவும் ஒரு 'டைப்பான' புத்தகம்தான் போலருக்கு. நான் நினைக்கறேன் இந்த மாதிரி கவிதைகள், கட்டுரைகள் எழுதும்போது மட்டும் எழுதுபவரின் மனநிலை பிறழ்ந்து விடும் என்று.

பி.கு

பேர மாத்துங்க சாமி. குட்டிப்பிசாசுன்னு பேர் வச்சிகிட்டு "பண்றது" எல்லாம் பெரிய பேய விட பெருசா இருக்கே!!

நந்தா said...

எல்லாருக்குள்ளேயும் இருக்கும் கேள்விதான் தம்பி. எனது நண்பர் ஒருவர் ஒரு பின் நவீனத்துவ கதையைப் படிக்கும் போது வாமிட்டே எடுக்க இருந்தேன் என்று கூறினார்.

அப்புறம் இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் பதில் வசைபாடாமல், எங்களிற்குத் தெளிவு படுத்துங்கள்.

எனக்கு ஒரு டவுட். தம்பி சீரியசாதான் நீங்க இந்த கேள்வி கேக்கறீங்களா? இல்லை இது கவுஜ மாதிரியா?

கதிர் said...

//எல்லாருக்குள்ளேயும் இருக்கும் கேள்விதான் தம்பி. எனது நண்பர் ஒருவர் ஒரு பின் நவீனத்துவ கதையைப் படிக்கும் போது வாமிட்டே எடுக்க இருந்தேன் என்று கூறினார்.//

வாங்க நந்தா!

உங்க நண்பர் ரொம்ப சாத்வீகம் போலருக்கு.

//அப்புறம் இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் பதில் வசைபாடாமல், எங்களிற்குத் தெளிவு படுத்துங்கள்.//

ஏன் வசைபாடறாங்க. இஷ்டமிருந்தா பதில் சொல்லட்டும் இல்லன்னா அவங்களுக்கு தெரியல போலன்னு நினைச்சுக்குவோம்.

//எனக்கு ஒரு டவுட். தம்பி சீரியசாதான் நீங்க இந்த கேள்வி கேக்கறீங்களா? இல்லை இது கவுஜ மாதிரியா? //

நிஜமாவே சீரியசாதாங்க கேக்கறேன். நான் கவிதை எழுதினா கூட அது காமெடி ஆகிடுது. நம்ம "திறமை"
அப்படி.
என்ன செய்ய!

ALIF AHAMED said...

தம்பி said...

//மே ஐ கம் இன்//

தனியா வராதிங்க ரெண்டு மூணு பேர கூட்டிகிட்டு வாங்க. பதிவு போட்டு ரெண்டு நாள் ஆச்சு யாருமே மூச்சு விடல.
///


முச்சி விடுரமாதிரியா கேட்டுரிக்கீங்க
எல்லாரும் ஆடி போயில இருக்காங்க...:)

Anonymous said...

பி ந சிறு குறிப்பு:

பின்னாடி பாத்தாலும் ஜன்னல் கதவு எல்லாம் இருக்கனும் அத நவினத்துவம்னு சொல்லுவாங்க...:)

அது மாதிரி உள்ள இருக்குற எல்லாத்தையும் வெளியில இழுத்து எழுதனும் அவ்வளவுதான்

இடைஇடையே கானகம், குழப்பவெளி,புலி,சுயம் எல்லாம் இருந்தா அது சத்தியமா பின்நவினத்துவம்தான்