எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, June 30, 2007

கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்

கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பை
தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி
பொதி வயிற்றிலங்காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கள் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற்கூட்டும்
கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்


ஓகே இது புரியுது நடந்திருக்கவும் வாய்ப்பிருக்குது அவ்வளவு ஏன்
இப்பவும் இது சாதாரணமானதுதான்.

புலி தொலைத்துண்ட பெருங் களிற்றொழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
ஞெலி கோறிசிறு தீமாட்டி ஒலிதிரைக்
கடல் விளை அமிழ்தின் கணம்சால் உமணர்
சுனை கொள் தீம்நீர் சோற்றுலைக் கூட்டும்....


இதுதாங்க பிடிபடவே மாட்டேங்குது. நம்ம முன்னோர்கள் இப்படியெல்லாம்
இருந்தாங்களா? அவங்க உணவுப்பழக்கம் நிஜமாவே இப்படியா?
இல்ல எதோ ஒரு புலவன் கள்ளு குடிச்சிட்டு கைக்கு வந்தத எழுதிட்டானா?
ஒண்ணுமே புரியல யாருக்காச்சும் தெரிஞ்சா விளக்குங்க ப்ளீஸ்...

43 comments:

குசும்பன் said...

நல்லா இருங்க தம்பி நல்லா இருங்க.

லொடுக்கு said...

முதல்ல அந்த பாட்டே பிரியல. எந்த படத்துல உள்ள பாட்டு அது? பாட்டு பிரிஞ்சாத்தானே மேட்டர் புரியும். அப்பத்தானே சரியா தப்பான்னு நாங்க சொல்ல முடியும்.

அப்பவே சொன்னேன். தம்பி! அய்யனார் கூட சகவாசம் வேணாம்னு கேட்டியா? புரியாத மொழியெல்லாம் எழுதுற இப்போ.

யாரங்கே? உடனே தம்பியை நலம் விசாரிங்கப்பா.

Anonymous said...

அய்த்தான்! என்னாச்சு ஒடம்புக்கு முடியலையா?

Ayyanar Viswanath said...

யோவ் தம்பி விளக்கத்தை போடுய்யா லொடுக்கு அண்ணே நல்லா இருங்க :)

/ஒரு புலவன் கள்ளு குடிச்சிட்டு கைக்கு வந்தத எழுதிட்டானா/

அடப்பாவி இதுக்கெல்லாம் சான்றுகள் இருக்குய்யா..சங்க இலக்கியம் முழு தொகுப்பும் நேத்து கைக்கு கிடைச்சது இந்த வார கிடேசன் பார்க் மீட்டிங்க்ல உன் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்

அபி அப்பா said...

லொடுக்கு! மஞ்சுளா வந்து உடம்புக்கு என்னாச்சுன்னு கேட்டுச்சாம்! தம்பிதான் பத்திவுட்டாராம், போன்ல சொன்னார்!

கதிர் said...

நம்பவும் முடியல,நம்பாம இருக்கவும் முடியல. அய்யனாரே சொல்றாரு ஆதாரம்ம் இருக்குன்னு.

லொடுக்கு said...

அது ஏன் தம்பி பதிவுல மட்டும் இளமங்கைகள் நடமாட்டம் அதிகமிருக்கு?

அபிஅப்பா! மஞ்சுளா யாரு?

லொடுக்கு said...

// தம்பி said...
நம்பவும் முடியல,நம்பாம இருக்கவும் முடியல. அய்யனாரே சொல்றாரு ஆதாரம்ம் இருக்குன்னு.
//

கெளம்பிடாய்ங்கய்ய கெளம்பிடாய்ங்க!
ஒன்னுமே புரியலைங்கறேன். ஆதராமாம்ல :(

லொடுக்கு said...

தமிழ் படத்தை போடுங்கப்பா.

கதிர் said...

லொடுக்கு,

இளமங்கைகள நீங்க பாத்தீங்களா? அவங்க எல்லாம் ஒன்லி கமெண்ட்தான்
நேர்லயும் வரமாட்டேங்கறாங்க. மெயிலும் கிடையாது

அபி அப்பா said...

//அபிஅப்பா! மஞ்சுளா யாரு? //

என்னய கேட்டா?

Anonymous said...

வணக்கம் தம்பி

இந்த செய்யுள் எனக்கு புரியவில்லை

கொஞ்சம் அர்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும்


நன்றி

லொடுக்கு said...

//இளமங்கைகள நீங்க பாத்தீங்களா? அவங்க எல்லாம் ஒன்லி கமெண்ட்தான்
நேர்லயும் வரமாட்டேங்கறாங்க. மெயிலும் கிடையாது//

நேர்ல வந்து பேசினால் நீர்தான் அடுத்த நாளே பதிவா போருறீராமே. அதான் தலை தெறிக்க ஓடுறாங்க. கமெண்டோட சரி.

லொடுக்கு said...

//அபி அப்பா said...
//அபிஅப்பா! மஞ்சுளா யாரு? //

என்னய கேட்டா?
//

நான் என்னமோ நீங்கதான் அந்த மஞ்சுளாவா கேட்ட மாதிரி சொல்லுறீங்க. :)

லொடுக்கு said...

//இராஜராஜன் said...
வணக்கம் தம்பி

இந்த செய்யுள் எனக்கு புரியவில்லை
//
என்னமோ மத்த செய்யுள் எல்லாம் இவருக்கு புரிஞ்ச மாதிரி. சோழர்களே இப்படித்தான். :(

அபி அப்பா said...

கானா பாட்ட போயி செய்யுள்ன்னு சொல்றாரு சோழர்! நம்ம லொடுக்கு அதுக்கும் பதில் சொல்றார், என்ன கொடுமை சரவணா!

Anonymous said...

நம்ம பாட்டெல்லாம் இந்த மவராசன் கண்ணுல படாதா ?

Jazeela said...

இந்த செய்யுளின் விளக்கத்தை சான்றோடு உலாவும் அய்யனார் 'ரொம்ப விளக்கமாக' எடுத்துரைப்பார்.

மங்கை said...

எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
இப்படி யெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்ட கூடாது

லொடுக்கு said...

//ஜெஸிலா said...
இந்த செய்யுளின் விளக்கத்தை சான்றோடு உலாவும் அய்யனார் 'ரொம்ப விளக்கமாக' எடுத்துரைப்பார்.
//

அய்யனாரா????? அம்மா தாயி ஆளை விடுங்க.

ALIF AHAMED said...

சும்மா பின்னுட்டம்

:)

கதிரவன் said...

நல்லாத்தானே இருந்தீங்க தம்பி, என்னாச்சு ?

நம்ம முன்னோர்கள் உணவுப்பழக்கத்தை ஆராய்ச்சி செய்யறீங்களே - ஏதாவது வித்தியாசமா 'சாப்பிட்டீங்களா' ?

கோபிநாத் said...

\\அடப்பாவி இதுக்கெல்லாம் சான்றுகள் இருக்குய்யா..சங்க இலக்கியம் முழு தொகுப்பும் நேத்து கைக்கு கிடைச்சது இந்த வார கிடேசன் பார்க் மீட்டிங்க்ல உன் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் \\

கிடேசன் பார்க்கில் விடை எல்லாம் கிடைக்குமா?

Anonymous said...

மாமா...என்னக்கும் ஒன்னும் பிறியவில்லை

கோபிநாத் said...

\\கதிரவன் said...
நல்லாத்தானே இருந்தீங்க தம்பி, என்னாச்சு ?

நம்ம முன்னோர்கள் உணவுப்பழக்கத்தை ஆராய்ச்சி செய்யறீங்களே - ஏதாவது வித்தியாசமா 'சாப்பிட்டீங்களா' ?\\

ஆமாம்...தானே சமையால் செய்து தானே சாப்பிட்டார் அதன் விளைவு தான் இதெல்லாம் ;)

குசும்பன் said...

கிடேசன் பார்க்கில் வடை சாரி விடை கிடைக்குமா அப்படி என்றான் நான் வருகிறேன், வரும் பொழுது கால யந்திரத்தை மறக்காமல் எடுத்துவரும் படி அய்ஸ்யை கேட்டுக்கொள்கிறேன்

லொடுக்கு said...

//கிடேசன் பார்க்கில் விடை எல்லாம் கிடைக்குமா? //

வடையத்தான் விடைன்னு தப்பா டைப் பண்ணிட்டாரு. விட்ருங்க. பொழச்சு போகட்டும்.

G.Ragavan said...

தம்பி, வாங்க...சங்கப்பாட்ட எடுத்துட்டு வந்திருக்கீங்க. நல்லது. இந்தப் பாட்டுல என்ன சொல்லீருக்காங்கன்னு நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு எனக்குப் புரியலையே! நீங்க இந்தப் பாட்ட எப்படிப் பொருள் கொண்டீங்கன்னு சொல்லுங்க. அதுல நான் எவ்வளவு ஒத்துப் போகுறேன்னு சொல்றேன்.

கதிர் said...

அய்யனார், குசும்பன், லொடுக்கு, அபிஅப்பா எல்லாருடைய வருகைக்கு நன்றிகள் பல.

ஆனாலும் என்னாலே நம்பவே முடியலப்பா!

சரி என்ன பண்றது நம்பித்தான் ஆகணும்.

கோபிநாத் said...

\\லொடுக்கு said...
//கிடேசன் பார்க்கில் விடை எல்லாம் கிடைக்குமா? //

வடையத்தான் விடைன்னு தப்பா டைப் பண்ணிட்டாரு. விட்ருங்க. பொழச்சு போகட்டும். \\

அப்படின்னா அய்யனாருக்கு வடை எல்லாம் தெரியுமா?

கதிர் said...

//நம்ம முன்னோர்கள் உணவுப்பழக்கத்தை ஆராய்ச்சி செய்யறீங்களே - ஏதாவது வித்தியாசமா 'சாப்பிட்டீங்களா' ? //

அதேதாங்க. கரெக்டா கண்டுபிடிச்சிங்க.

நான் சமைக்கறத நானே சாப்பிடறேன் அதுவே வித்தியாசம்தான.

ஆனா பிரச்சினை அதுவல்ல.

லொடுக்கு said...

//ஆனா பிரச்சினை அதுவல்ல.//
அப்போ என்ன பிரச்சனை. பேட்டி காண ஆள் கிடைக்கவில்லையா?

இலவசக்கொத்தனார் said...

கொஞ்சம் விளக்கத்தோட போட்டா நாங்களும் புரிஞ்சு பதில் சொல்லலாமுல்ல....:))

கதிர் said...

வாங்க ஜிரா

முதல் பாடலில் என்ன சொல்லவராங்கன்னா பசுமாட்டின் இறைச்சிய நம்ம முன்னோர்கள் சாப்பிட்டுருக்காங்க. அது இப்பவும் நடக்குது.

ஆனா இரண்டாவது பாடலில் யானைக்கறி உணவாக இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதத்தான் நம்ப முடியவில்லை.ஏன்னா யானையை தெய்வமா வழிபட்டவர்கள் அல்லவா?

அதனாலதான் டவுட்டு.

இப்ப நீங்க புரிஞ்சிகிட்டது சொல்லுங்க
ஜிரா

அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம்.

கதிர் said...

//எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
இப்படி யெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்ட கூடாது //

உங்கள போய் திட்ட முடியுமா? இந்த வார நட்சத்திரமாச்சே நீங்க.

நட்சத்திரத்தலாம் திட்ட முடியாது.

கதிர் said...

நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து கமண்ட் போடறேன் யாரும் தப்பா நினைச்சிக்காதிங்க சாமிகளா!

G.Ragavan said...

ஓ ஆனையைத் தின்னதுதான் ஒங்களுக்கு வியப்பா? இதுல வியக்க ஒன்றுமேயில்லை தம்பி. ஆனைய மட்டுமா கடவுளாப் பாக்குறோம்? கோழிக்கொடியனடின்னு சொல்லிக்கிட்டே சிக்கம்65 உள்ள தள்றோமே. மச்சாவதரம்னு கும்பிட்டாலும் மீன் விக்காமலா இருக்கு.

உணவு என்பது இல்லாத பொழுது கிடைப்பதைத் தின்பது. நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் பாலைத்திணைப் பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை முன்பு படித்ததில்லை. அதிலும் புலி அடித்த ஆனை. தப்பில்லை.

ஆமையைப் புழுங்கி உண்டாங்களாம். தெரியுமா? அதாவது மண்டைய வெட்டீட்டு...உள்ள குச்சியச் சொருகி...நெருப்புல வாட்டி..வெந்த பிறகு ஓட்டத் தொறந்தா ரெடிமேட் சட்டிக்குள்ள வெந்த கறி...மெளகு உப்புப் போச்சு...அப்படியே திங்கலாம்ல. இதுக்கும் பாட்டிருக்கு. இப்ப ஆமையத் திங்குறமா என்ன?

களவாணி said...

இப்படி வெவகாரமான கேள்வியெல்லாம் கேட்க, தம்பியை விட்டா வேற யாரு இருக்கா?

ஆனா, கேள்வியே ஒருத்தனுக்கு பிரியலைன்னா பதில் எப்படிங்க சொல்றது. : (

என்னண்ணே இதெல்லாம் உங்களுக்கே நியாயமா, அடுக்குமா?

இப்பமாச்சும் புரியற மாதிரி கேள்வி கேளுங்க...

(புரியற மாதிரி கேட்டா மட்டும் நீ சொல்லிடுவியாடா?ன்னெல்லாம் கேட்கப் பிடாது. நான் பதில் சொல்லாட்டியும் நம்ம வலையுலக நண்பர்கள் சொல்லுவாங்க... என்ன நான் சொல்றது சரிதானே நண்பர்களே?!!!)

நந்தா said...

உண்மையை சொல்லுங்க. நீங்க நிஜமாலுமே இதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சிக்கணும், உண்மையைத் தெரிஞ்சிக்கணும்னுதான் இந்த பதிவை போட்டீங்க????

சரி இந்த பாட்டை எங்க பிடிச்சீங்க. திடீர்னு உங்க 7 வது தமிழ் புத்தகத்தை பிரிச்சு பார்த்தீங்களா?

வெற்றி said...

தம்பி,

/* கொஞ்சம் விளக்கத்தோட போட்டா நாங்களும் புரிஞ்சு பதில் சொல்லலாமுல்ல....:)) */

அதுதானே !!! -:))
இ.கொத்தரை வழிமொழிகிறேன்.

கதிர் said...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே! ஒரு செய்யுள போட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சிக்கலாம்னு நான் இருந்தேன். உண்மைய சொல்லப்போனா எனக்கு முழு அர்த்தமும் தெரியாது.

தமிழர் பண்பாட்டுல இதுவரைக்கும் நான் கேள்விப்படாத வரையில் (என்னத்தடா இதுவரைக்கும் படிச்சி கிழிச்சிருக்க?) யானைக்கறி தின்றதாக பதிவில் உள்ள இரண்டாவது பாடலில் இருக்கு. அதுதான் ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருந்துச்சி. யானையை கடவுளாக கும்பிட்ட நம் தேசத்து முன்னோர்கள் எப்படி யானையை உணவாக உண்டிருப்பார்கள் அதனால் இது தவறான குறிப்பாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனால் இதை பதிவாக போட்டால் இன்னும் பலருக்கு சென்று சேரும். விளக்கம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு என்று தோன்றியதால் வந்த பதிவு.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

பதிலுக்கு நன்றி ஜீரா!
ஆனாலும் அரைமனதோடுதான் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கு.

ஒருவேளை யானைக்கறி ரொம்ப டேஸ்டா இருக்குமோ?? :)

களவாணி said...

//யானைக்கறி தின்றதாக பதிவில் உள்ள இரண்டாவது பாடலில் இருக்கு.//

ennanga, nammellaam yaariththaan kumbitala? ethaithaan adichu thingala?

//ஒருவேளை யானைக்கறி ரொம்ப டேஸ்டா இருக்குமோ?? :) //

hmmm...? irukkum... irukkum...

களவாணி said...

thala sonnaarennu nethu yaanai kari biriyani saappida friends kooda ponen.

chicken 65 ninaippula elephant 65 nnu sonnen,

perusaa thoon maadhiri ethaiyoo kontu vanthu pottaanuva. kettaa athuthaan leg piece-aam.

namma munnorkal ithaiyellaam eppadi thinnuruppanga. ninaikkum bothe BAYAMMAA irunthuchu.