எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, June 03, 2007

கவுஜையாக பின்தொடரும் ஒருவன்

சாலையில் நடந்து செல்கிறேன்
சாலை கோணலல்ல
என் நடை கோணலாகியதா?
பின் தொடர்பவர் எவரிடமாவது
கேட்க நினைத்து
வேண்டாம்
உன் நடை நேர் என அவசரமாக
ஒரு பதில் அதுவும் அவனேதான்.
தொடர்கிறான்...

மனித கூட்டத்தின் நடுவே சென்று
என் அவனை தொலைக்க வேண்டும்
சுயத்தையும் இருப்பையும் நித்தம்
கேள்விக்குள்ளாக்குபவன்.

சிலசமயம் காணாமல் போவான்

அவனை மறந்த ஒரு காலைப்பொழுது
எதிர்பட்ட ஒருத்தியின்
ஏளனப்புன்னகையில்தான்
உரைத்தது...

கீழ் குனிந்து இழுத்து மூடினேன்.
நினைவிலிறுத்திக் கொண்டே இருக்கிறான்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை

சிரைக்க முனையும்போது
ப்ளேடு வாங்க மறந்த ஞாபகம்.

தலைவாரும்போது கண்ணாடியில்
தெரியும் காதுமடல் சோப்பு நுரை

காலணிக்குள் கால்நுழைக்கையில்
மனம் செய்தே நுழைக்கிறேன்
கதவு திறந்து வெளிக்கிடுகையில்
கண்சிமிட்டி நுழைகிறான்

ஏண்ணே எனக்கு மட்டும் இந்த மாதிரி???

டேய் இதெல்லாம் வயசுக்கோளாருடா
எல்லாருக்கும் வர்றதுதான் ஏதோ உனக்கும் மட்டும்
வந்துட்டா மாதிரி கவுஜ வடிக்கிறயே.

காக்கா ஒரு எடத்துல உக்காராது
மனசு ஒரு எடத்துல நிக்காது

போக போக சரியாகிடும்டா.

ம்
அப்படின்ற...

21 comments:

கதிரவன் said...

//சாலையில் நடந்து செல்கிறேன்
சாலை கோணலல்ல
என் நடை கோணலாகியதா?//

தண்ணியடிச்சிட்டு நடந்தப்ப கவுஜ எழுதினீங்களோன்னு நினைச்சேன் :-)

//காக்கா ஒரு எடத்துல உக்காராது
மனசு ஒரு எடத்துல நிக்காது //

தத்துவம் நம்பர் 1 ?? ;-)

நல்ல கவுஜ முயற்சி. வாழ்த்துக்கள் !!

சரி தம்பி, பொண்ணு பாத்தாச்சோ? அந்த எஃபெக்ட் தானோ இதெல்லாம் ?

Santhosh said...

//டேய் இதெல்லாம் வயசுக்கோளாருடா
எல்லாருக்கும் வர்றதுதான் ஏதோ உனக்கும் மட்டும்
வந்துட்டா மாதிரி கவுஜ வடிக்கிறயே.//
:))

//காக்கா ஒரு எடத்துல உக்காராது
மனசு ஒரு எடத்துல நிக்காது//

எப்படிப்பா கதிரு எப்படி உன்னால மட்டும் இப்படி பின்னி பெடல் எடுக்க முடியுது முடியலைப்பா முடியலை.

Ayyanar Viswanath said...

தம்பி ஜீப்பர்ர்ர்ர்ர்!!!

நீ அபுதாபி ட்ரீட் வைக்கும்வர எத எழுதுனாலும் சூப்பர்தான்
:))

Anonymous said...

ஜூப்பருலே தம்பி,

நீள்கவுஜை எழுத நெனச்சிருக்கே. அப்ப கவுஜ பொஸ்தவம் போட தயாராயிட்டேன்னு சொல்லு.

சாத்தான்குளத்தான்

அபி அப்பா said...

இதுக்கு காரணம் பக்கார்டியா இல்ல நேத்து உன் பதிவிலே நடந்த சக்களத்தி சண்டையா தம்பி:-)))

கதிர் said...

//தண்ணியடிச்சிட்டு நடந்தப்ப கவுஜ எழுதினீங்களோன்னு நினைச்சேன் :-)//

கிடேசன் பார்க் மெம்பர்ல ஒரே உத்தமன் நாந்தான்.

ஆமா தண்ணி எப்படி இருக்கும்?
இனிப்பா, கசப்பா?

//தத்துவம் நம்பர் 1 ?? ;-)//

இதெல்லாம் தத்துவம்னா பேசுற பல வார்த்தைகள் தத்துவமா போயிடும்.

//நல்ல கவுஜ முயற்சி. வாழ்த்துக்கள் !!//

நமக்கு கவிதை எழுதற ஆர்வம், மூளை இல்லாட்டியும் எது நல்ல கவிதைன்னு
தெரியற அளவுக்கு கொஞ்சூண்டு ஞானம் இருக்குங்க கதிரவன்.

சரி தம்பி, பொண்ணு பாத்தாச்சோ? அந்த எஃபெக்ட் தானோ இதெல்லாம் ?

கய்யோ கய்யொ நம்ம கொள்கை தெரியாதா?

சுயேச்சை எம்.எல்.ஏ
தோப்பா இருந்தாவே கல்லடி பட வாய்ப்புண்டு
தனிமரம் பெட்டர்.

நன்றி மீண்டும் வருக

கதிர் said...

//எப்படிப்பா கதிரு எப்படி உன்னால மட்டும் இப்படி பின்னி பெடல் எடுக்க முடியுது முடியலைப்பா முடியலை. //

தல, இதெல்லாம் தானா வர்றது, இனிமேல் தொடர் கவுஜை எழுதறதா உத்தேசம்.

களவாணி said...

ஏங்க போன பதிவுல சொன்ன மாதிரி, பதிவு போட மேட்டர் கெடைக்கலியா? மெய்யாலுமே சொல்றேன், எனக்கு ஒன்னிமே இந்த கவுஜைல பிரில.

கவுஜைக்கு அர்த்தம் என்னன்னு "ஜி"ட்ட கேட்டேன். அவர் "புடியாததை எழுதினா அதுதான் கவிதைன்னார்".

ஓ!!!!! அதானா இது? :)

Anonymous said...

அய்த்தான்! என்னமா கவுஜ எல்லாம் எழுதுது. நாங்க உள்ள வரலாமா? கதவ திறங்க அய்த்தான்!!

கதிர் said...

மன்னிக்கனும் மஞ்சுளா தங்கள் பின்னூட்டம் தற்போது அனுமதிக்கபடாது.
(யாருமே பின்னூட்டம் போடாம பதிவு தேங்கி நின்னுச்சின்னா ஒருவேளை வாய்ப்பிருக்கு)

கதிர் said...

//தம்பி ஜீப்பர்ர்ர்ர்ர்!!!

நீ அபுதாபி ட்ரீட் வைக்கும்வர எத எழுதுனாலும் சூப்பர்தான்
:)) //

அப்போ எப்பவுமே சூப்பர்னு சொல்லிட்டு இருக்கணும்.
எவ்ளோ பெரிய நல்ல மனசுய்யா உமக்கு.

கதிர் said...

//ஜூப்பருலே தம்பி,

நீள்கவுஜை எழுத நெனச்சிருக்கே. அப்ப கவுஜ பொஸ்தவம் போட தயாராயிட்டேன்னு சொல்லு.

சாத்தான்குளத்தான் //

ஜூப்பருலே தம்பி,

நீள்கவுஜை எழுத நெனச்சிருக்கே. அப்ப கவுஜ பொஸ்தவம் போட தயாராயிட்டேன்னு சொல்லு.

சாத்தான்குளத்தான்

கவுஜைகளின் ஆஸ்தான அரசன் அண்ணாச்சியே ஜூப்பருன்னு சொல்லிட்டதால
அக்மார்க் கவுஜையாக இது தேர்ந்தெடுக்கபடுகிறது.

பொஸ்தவம் போடறதுன்னா போட்டுற வேண்டியதுதான். காமெடி கவுஜைகள் தலைப்பு.

கவுஜைன்னா சீரியஸ்னு போய் காமெடியாவும் இருக்கலாம்னு மாத்தணும்.

கதிர் said...

//இதுக்கு காரணம் பக்கார்டியா இல்ல நேத்து உன் பதிவிலே நடந்த சக்களத்தி சண்டையா தம்பி:-)))//

பக்கார்டியா எதோ தேர்தல் கமிஷனர், திட்டக்குழு தலைவர் பேர் மாதிரி இருக்கு
வடநாட்டு பேருங்களா அபி அப்பா?
ஒண்ணுமே புரிலங்க.

அந்த சக்களத்தி சண்டைய ஆரம்பிச்சது யாரு, நேத்து விளையாண்டது யாருன்னு தெரிஞ்சி போச்சி.

Anonymous said...

எலே தம்பி,

கவுஜைன்னாலே காமெடி மட்டும்தான். அதுல் என்ன சீரியஸ் கவுஜை?

சாத்தான்குளத்தான்

கப்பி | Kappi said...

தென்னாட்டு ஷேக்ஸ்பியர் தம்பி வாழ்க :))

ஜி said...

கவுஜயா கன்னா பின்னான்னு அள்ளித் தெளிச்சிருக்கியே தம்பி...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிய??

கதிர் said...

//ஏங்க போன பதிவுல சொன்ன மாதிரி, பதிவு போட மேட்டர் கெடைக்கலியா? மெய்யாலுமே சொல்றேன், எனக்கு ஒன்னிமே இந்த கவுஜைல பிரில. //

இந்த கவிதை புரியலன்னா நான் கவுஜை எழுதறது தப்பில்லன்னு அர்த்தம்.
அப்பாடா நானும் புரியாத மாதிரி ஒரு கவிதை எழுதிட்டேன்னு காலர தூக்கி
விட்டுக்கலாம் இப்படின்னு சொல்வேன்னு பாத்திங்களா? இல்ல

எல்லாருக்குள்ளயும் ஒரு சோம்பேறி, ஞாபகமறதிக்காரன் ஒளிஞ்சிருப்பான்
அவனை அவனுக்கே பிடிக்கலன்னு வச்சிக்குங்க எப்படி வார்த்தையால
சொல்றான்னு சொல்றதுதான் இந்த கவுஜை.

வாழ்க்கைலயே கஷ்டமான காரியம்னா தான் எழுதுன கவுஜைய
அடுத்தவனுக்கு புரியவைக்கறதுதான்.

//கவுஜைக்கு அர்த்தம் என்னன்னு "ஜி"ட்ட கேட்டேன். அவர் "புடியாததை எழுதினா அதுதான் கவிதைன்னார்". //

யோவ் அவர் பெரும்புலியாச்சே. கவுஜைக்காதலன்னு பேரே குடுத்தாச்சி அவருக்கு.

//ஓ!!!!! அதானா இது? :) //

அது இல்லங்க இது

கதிர் said...

//அய்த்தான்! என்னமா கவுஜ எல்லாம் எழுதுது. நாங்க உள்ள வரலாமா? கதவ திறங்க அய்த்தான்!! //

வாம்மா மஞ்ஞ்ஞ்ஞ்சு

நானே இந்த கமெண்ட் எல்லாம் போட்டுக்கறேன்னு சொல்றாங்க தாயி.
புண்ணியமா போவும் போட்டோவோட ஒரு ப்லாக்க தொறந்து வச்சிக்க
அப்படியாச்சும் நம்பட்டும்.

கதிர் said...

//எலே தம்பி,

கவுஜைன்னாலே காமெடி மட்டும்தான். அதுல் என்ன சீரியஸ் கவுஜை?

சாத்தான்குளத்தான் //

அது தெரியுது அண்ணாச்சி.
ஆனா சிலபேரு எழுதற சீரியஸ் கவிதையே காமெடி கவுஜைய மிஞ்சிடுது :(
அதுலருந்து வித்தியாசபடுத்தியே காமிக்கணும். :)

கதிர் said...

//தென்னாட்டு ஷேக்ஸ்பியர் தம்பி வாழ்க :)) //

வலிக்குது. எனக்கு இல்ல அவர ரசிக்கறவங்களுக்கு.

வந்து திட்டிட்டு போறதே வேலைய்யா உமக்கு.

களவாணி said...

ம்ம்ம்... இப்பொழுது யாம் அடியில் நின்று விட்டோம். (அதாங்க அன்டர்ஸ்டேன்ட்). வாழ்க்கையிலேயே கஷ்டமான காரியத்தைப் பண்ணினதுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன் தம்பி.