எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 31, 2006

கனவு இல்லம்! - வாலிப வயசு - 3

ஏண்டா உன்னால ஒரு பிரயோஜனம் உண்டா
இந்த வீட்டுக்கு?

எனக்கு தண்டசெலவு வைக்கறதுன்னு கங்கனம்
கட்டிகிட்டு திரியற!

போன மாசம் இப்படிதான் ஏதோ குருவி சுடணும்
காக்கா சுடணுன்னுட்டு துப்பாக்கி ஆர்டர் செஞ்சு
வாங்கினே. ஆனா அந்த துப்பாக்கிய வச்சி ஒரு
ஈ, எறும்ப கூட கொல்ல முடியாது போலருக்கு.
அந்த தண்டமான துப்பாக்கிக்கு 250 ரூவா அழுதேன்.

இப்ப என்னடான்னா உன் பேருக்கு எங்கருந்தோ
புதிய எற்பாடு, பிரசங்க அழைப்பு, கர்த்தர் அழைக்கிறார்னு
லட்டர் வருது. உம்மனசுல என்னதான் நெனச்சிகிட்டு
இருக்க?

இனிமே நீ விஜயகாந்து, ரஜினிகாந்து படம் பாத்துட்டு
அதுல வர்ற துப்பாக்கி வேணும் தோட்டா வேணும்னு
சொன்னே. இன்னும் ரெண்டு மாடு வாங்கி அத
மேய்க்கற வேலை குடுத்துருவேன் ஜாக்கிரதை.

நல்லா சொல்லுங்க அவனுக்கு.

சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் கரும்பு காட்டு
பக்கமா போயி இந்த மாட்டுக்கு புல்லு அறுத்துகிட்டு
வாடான்னு சொன்னா என்ன கேக்கறான் தெரியுமா?

என்ன கேக்கறான்?

வயசுப்பையன போயி புல்லு அறுத்துகிட்டு வா,
வைக்க புடுங்கிட்டு வான்னு சொல்ற, நாலு பேரு
என்னய பாத்தா என்ன நினைப்பான்னு என்னயே
எதிகேள்வி கேக்கறான்ங்க?

சரியான நேரத்தில இந்த மாதிரி கொஞ்சம் திரிய
கொளுத்தி போடலன்னா தூக்கமே வராது இந்த
அம்மாவுக்கு.

ஏண்டா புல்லு கட்டு அறுத்துகிட்டு வர்றதுல என்னடா
ஒங் கவுரவம் போயிட போகுது?

குபேரன் வூட்டு புள்ள கூட சாயந்திரம் ஸ்கூல விட்டு
வந்ததும் வீட்டு வேலை கொஞ்சம் செய்யறான்.

அங்க ஏன் போறிங்க?..

அந்த அயிலு நாய்க்கரு மொவன் இருக்கானே அவன்
சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் நாலு மாட்டுக்கு
தேவையான புல்லை அவனே அறுத்துகிட்டு வரானாம்.

ஏம்மா அவங்க அப்பாவுக்கு எட்டு ஏக்கரா நெலம்
இருக்கு சின்ன வயசில இருந்தே வயலுக்கு போறான்
வரான் அதுனால அவனுக்கு ஈசியா இருக்குது. எனக்கு
கரும்பு காட்டுகுள்ள போனாவே உடம்பெல்லாம்
சொண புடுங்குது, அரிக்குதேன்னு சொறிஞ்சா தடிப்பு
தடிப்பா ஆயிடுது.

இதெல்லாம் நல்லா வெவரமா பேசு!

என்னய என்ன வேணா செய்ய சொல்லு ஆனா இந்த
மாட்ட புடிச்சி கட்டு, புல்லு புடிங்கி போடு, தவிடு
தண்ணி காமி இதெல்லாம் சொல்லாத.

இனிமேல் இந்த வீட்டுல உம்பேருக்கு லட்டரே
வரக்கூடாது.

சரி.

மேல சொன்னதெல்லாம் என்னன்னே புரியலயா? அது
ஒரு வியாதிங்க, என்ன வியாதின்னு கேக்கறிங்களா?

பள்ளிக்கூட பொஸ்தகத்தை தவிர எல்லா பொஸ்தகமும்
படிக்கற வியாதிங்க. மர்மநாவல், பாக்கெட்நாவல்,
மாயாவி காமிக்ஸ், அதில வர்ற துப்பாக்கி. இதெல்லாம்
பாத்துட்டு அது மாதிரியே ஆகணும்னு ஒரு வெறி.
ஏதேச்சையா ஒரு காமிகஸ் புக் படிக்கும்போது
உங்களுக்கு வேட்டையாட விருப்பமா?, தாக்க வரும்
விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த மாதிரி
ஒரு விளம்பரம். இந்த விலாசத்துக்கு ஒரு கார்டு
போட்டிங்கன்னா உங்க வீடு தேடி துப்பாக்கியும்
சுடறதுக்கு எலவசமாக ஆறு தோட்டாவும் அனுப்பி
வைப்போம், மேலும் உங்களுக்கு தோட்டாக்கள்
வேணும்னா ஆர்டர் செய்யலாம். உங்களுக்கு
திருப்தியில்லன்னா துப்பாக்கிய திருப்பி அனுப்பலாம்
பணமும் திருப்பி கொடுத்துருவோம்னு ஒரு வரி.

ஆஹா சூப்பரு. துப்பாக்கிய வாங்கிடவேண்டியதுதான்னு
நாலணாவுக்கு போஸ்ட்கார்டு வாங்கி அந்த விலாசத்துக்கு
எனக்கு அர்ஜெண்டா துப்பாக்கி வேணும்னு எழுதி போட்டு
காத்திருந்தேன்.

ஒரு வாரம் கழிச்சி.

வழக்கமா எனக்கு வரும் கடிதங்கள் சும்மா இந்த பேனா
நண்பர்கள் மாதிரி ஒரு போஸ்கார்டோட முடிஞ்சுரும்.
இந்த முறை கொஞ்சம் பெரிய பார்சல் மரப்பெட்டில
சுத்தி வந்திருக்கு. இதெயெல்லாம் சின்னப்பையன்
என்கிட்ட கொடுக்க கூடாதுன்னு போஸ்ட்மேன் அண்ணன்
நேரா எங்கப்பாகிட்டயே கொண்டு போயி கொடுத்து
250 ரூவா பணமும் கொடுங்கன்னு கேட்டுருக்காரு.

போனா போகுதுன்னு இவனுக்கு அப்பப்ப காமிக்ஸுக்கு
அஞ்சு பத்துன்னு அழுவுணா இப்படி ஒரேயடியா வேட்டு
வச்சிட்டானேன்னு பயங்கர கோவத்தோட வீட்டுக்கு
வந்து காட்டு கத்து கத்துறாரு.

அரை நாள் பட்டினி கிடந்து அக்காவும் அண்ணனும்
ஆதரவுக்கரம் நீட்டினதுல ஒருவழியா 250 அம்பது ரூவாய
தேத்தி மறுநாள் போஸ்ட் ஆபிசுக்கு ஓடிப்போயி பார்சல
வாங்கி வந்து பிரிச்சேன். உள்ளுக்கு பாத்தா ஒரு கருப்பு
கலர்ல ரிவால்வரு.

தீவாளி துப்பாக்கியில சுட்டா சத்தமாவது வரும்.
இத பாக்கறதுக்கு நிஜதுப்பாக்கி மாதிரியே இருந்தாலும்
அத வச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு அடுத்த
அரை மணி நேரத்தில தெரிஞ்சி போச்சி.

அடுத்து!

சுவிஷேஷ கூட்டத்திற்கு அழைப்புன்னு ஒரு விளம்பரம்
அதுக்கு ஒரு கடுதாசி போட்டேன். அவங்க என்னடான்னா
திருச்சி சோமரசம்பேட்டைலருந்து வாரம் ஒரு புஸ்தகம்
அனுப்பிகிட்டே இருந்தாங்க. கிறிஸ்துவ பிரச்சார
புத்தகங்கள் வீட்டுக்கு வர ஆரம்பிச்ச உடனே வீட்டுல
பீதியாயிட்டாங்க. எதுனா பொண்ணு பின்னாடி சுத்திகிட்டு
மதம் மாறிடுவானோன்னு. நமக்கு எங்க அந்த அளவுக்கு
திறமை இருக்கு. தெரியாம எழுதி போட்டுட்டேன்.
இனிமேல அந்த மாதிரி கடுதாசியெல்லாம் எழுதி போட
மாட்டேன்னு சொன்ன அப்புறம்தான் வீட்டுக்குள்ளவே
விட்டாங்க.

இந்த மாதிரி வேலையெல்லாம் வெவரமா செஞ்ச நான்
எங்கப்பா கிட்ட நல்ல பேர் எடுக்க ஒரு நல்ல சான்ஸ்
எடுக்கணும்னு நெனச்சி ஆர்வக்கோளாருல நான்
ஒண்ணு செய்யபோக அது ஒண்ணு ஆகிப்போச்சி.
என்னய நம்பி 5 ரூவா காசு (ஸ்டாம்புக்கு) குடுத்து
குங்குமம் கனவு இல்லம் கூப்பனையும் குடுத்து
போஸ்ட் பண்ணிட்டு வரசொன்னாரு.

நானும் குடுத்த காச வெட்டிசெலவு செய்யாம ஸ்டாம்ப்
வாங்கி அட்ரஸ் எழுதி அனுப்பிட்டேன்.

மறுநாள் ஸ்கூல விட்டு வந்தா பயங்கர திட்டு!
இதுவரைக்கும் அப்படி ஒரு வசைய வாங்கினதே இல்ல.

அத ஏன் கேக்கறிங்க!

From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி. ஏதோ குங்குமம்
ஆபிசுல இருந்ததுதான் லட்டர் வந்திடுச்சோன்னு ஆர்வமா
பாத்துருக்காங்க நான் எழுதினதே திரும்பி வந்திடுச்சுல்ல
அந்த கோவத்தை அன்னிக்கு காட்டு காட்டுன்னு
காட்டிட்டாங்க!

30 comments:

இராம்/Raam said...

//தீவாளி துப்பாக்கியில சுட்டா சத்தமாவது வரும்.
இத பாக்கறதுக்கு நிஜதுப்பாக்கி மாதிரியே இருந்தாலும்
அத வச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு அடுத்த
அரை மணி நேரத்தில தெரிஞ்சி போச்சி.//

ஹி ஹி அப்பவே பல்பு வாங்கியாச்சா!! சரி என்னா பண்ண நாமே ஒன்னு நினைக்க கடவுள் ஒன்னு நினைக்கிறாரு... :-)

இன்பா (Inbaa) said...

க்ளைமாக்ஸ் தான் கலக்கல். சிரிப்பு தாங்க முடியல...

இலவசக்கொத்தனார் said...

:-D

அப்புறம் வந்து நிறையா சிரிக்கறேன்.

கதிர் said...

//ஹி ஹி அப்பவே பல்பு வாங்கியாச்சா!! சரி என்னா பண்ண நாமே ஒன்னு நினைக்க கடவுள் ஒன்னு நினைக்கிறாரு... :-) //

பல்பு வாங்கறது நமக்கு என்ன புதுசா?
அந்த நிகழ்ச்சிக்கப்புறம் காலேஜிலருந்து வர்ற கடுதாசிய மடக்கி புடிக்க மட்டுமே போஸ்ட் ஆபிஸ் பக்கம் போறது.

வேற யாருக்கும் லட்டரே போடறதில்ல!

கதிர் said...

//க்ளைமாக்ஸ் தான் கலக்கல். சிரிப்பு தாங்க முடியல... //

வாங்க இன்பா முதல் வருகைன்னு நினக்கிறேன். அல்லக்கைனு ஒரு கதை எழுதினத படிச்சிருக்கேன். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு நிறைய இருக்கு!
அதுக்கப்புறம் எழுதவே இல்ல போலிருக்கே? எழுதுங்க நிறைய!

வருகைக்கு நன்றி இன்பா!

//:-D

அப்புறம் வந்து நிறையா சிரிக்கறேன். //

அப்பாலிகா சிரிச்சா என்ன, இப்பவே சிரிச்சா என்ன? எல்லாமே ஒண்ணுதாம்பா!

எனக்கு ஒரு பயங்கரமான டவுட்டு இருக்கு. விக்கி பசங்ககிட்டு வீசலாமான்னு பாக்கறேன்.

வேந்தன் said...

எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இவன் ரொம்ப நல்லவன்டா....ன்னு உங்கள சொல்லலாம் போலிருக்கே!
:))))))))

இன்பா (Inbaa) said...

முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா முகப்பு பக்கமே உங்க பக்கம் தான் (நம்ப மாட்டீங்களே ...) வருகைப்பதிவேட்டில் இதுதான் முதல் கையொப்பம்.

கப்பி | Kappi said...

:)))

சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங்க ;)

நாகை சிவா said...

நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக்கும் அட்டை எல்லாத்துக்கும் எழுதி போடனும் என்று தா இருப்பேன் தம்பிண்ணன். ஆனா நம்ம வியாதி இருக்கு பாருங்க அதை செய்ய விடாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். இல்லாட்டி உங்கள மாதிரி சூப் வாங்கி இருப்பேனே

கதிர் said...

//எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இவன் ரொம்ப நல்லவன்டா....ன்னு உங்கள சொல்லலாம் போலிருக்கே!
:))))))))//


அதான் சொல்லியாச்சே அப்புறம் என்ன?
வேந்தன் அரசு, வேந்தன் ரெண்டு பேரும் வேறு வேறா, ஒரே கொழப்பமா கீதுபா!

கதிர் said...

//முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா முகப்பு பக்கமே உங்க பக்கம் தான் (நம்ப மாட்டீங்களே ...) வருகைப்பதிவேட்டில் இதுதான் முதல் கையொப்பம்.//

அடடே அப்படியா? உலவியோட மொத பக்கம்னு வேற சொல்லி கலாயக்கறிங்களே இன்பா! ம்ம் இன்பமாதான் இருக்கு!

தொடர்ந்து வருகை தாருங்கள் இன்பா.

கதிர் said...

//)))

சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங்க ;)//

ஈகோவாதான் இருக்ககூடாது கப்பி, ஆகாவோ இருந்தா தப்பில்லையே!

இதில எந்த உள்குத்தும் இல்ல கப்பி! :)))

கதிர் said...

//நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக்கும் அட்டை எல்லாத்துக்கும் எழுதி போடனும் என்று தா இருப்பேன் தம்பிண்ணன். ஆனா நம்ம வியாதி இருக்கு பாருங்க அதை செய்ய விடாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். இல்லாட்டி உங்கள மாதிரி சூப் வாங்கி இருப்பேனே//

வாங்க நட்சத்திரமே!

இந்த மாதிரி சூப்பு குடிக்கறதுகூட ஒரு வியாதியாம். நம்ம ஊரு வாரைதழ்லாம் பாத்தீங்கன்னா ஒரு குரூப்பு இத ஒரு வேலையாவே செய்வாங்க. உதாரணத்துக்கு கேள்வி, பதில் பக்கத்தில

எம்.அசோக்ராஜா அரவக்குறிச்சிபட்டி

இந்த மாதிரி நிறைய பேர் தொடர்ந்தாப்புல கணைகள தொடுத்துகிட்டே இருப்பாங்க.

மொக்கை கேள்வியகூட போஸ்ட்கார்டுல எழுதி மதன்கிட்ட விளக்கம் கேக்குறத நினக்கும்போது நான் கொஞ்சமாதான் சூப்பு குடிச்சிருக்கேன்னு தோணுது.

நாகை சிவா said...

//நமக்கு எங்க அந்த அளவுக்கு
திறமை இருக்கு. //

இதுக்கு இந்த விளம்பரம் இப்ப இங்கன. நாங்க யாரும் கேட்டோமா?

நாமக்கல் சிபி said...

தம்பி,
இந்த விஷயத்துல நான் உனக்கு அண்ணன்...

எங்க வீட்டுக்கு போஸ்ட் மேனே வந்து கண்டபடி திட்டிட்டு போனாராம்...

உலகத்துல இருக்குற எல்லா பைபிள் கோர்சும் ஒரு காலத்துல பண்ணி இருக்கேன்... சர்டிபிகேட் எல்லாம் வரும்... ஒரு காலத்துல மலை சொற்பொழிவெல்லாம் மனப்பாடமா தெரியும்... இப்ப மறந்துடுச்சி... ஆனா கான்ஸெப்ட் மட்டும் ஞாபகம் இருக்கு

கிரிஸ்டியன் ஸ்கூல்ல இருந்ததால வீட்ல கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தாங்க... இருந்தாலும் என் டெஸ்க் முழுக்க விவேகானந்தர் புக் இருந்ததால கொஞ்சம் நிம்மதியாயிட்டாங்க...

அப்பறம் ஒரு நாள் ஹாஸ்டல்ல என் டெஸ்க்ல இருந்த புக் எல்லாத்தையும் வலுக்கட்டாயமா எடுத்துட்டு போயிட்டாங்க... இப்பவும் அந்த புக் எல்லாம் எங்க வீட்டு பரண் மேல இருக்கு... (100 புக்குக்கு மேல இருக்கும்... மாசம் மாசம் கேண்டினுக்கு கொடுத்த காச எல்லாம் சேத்து வெச்சி புக் வாங்கி வெச்சிருந்தேன்)

இது மட்டுமில்லாம ஆவிகளுடன் பேசும் முறை, வர்மக்கலை, ஹிப்நாட்டிசம் கற்று கொள்ளுங்கள் இந்த மாதிரி தண்ட புக்ஸிம் ஆர்வமா வாங்கி வெச்சேன்... ஆனா எல்லாம் ஃபிராடு :-)

இந்த மாதிரி புக் மட்டும் இல்லாம Memory powerனு ஒரு புக் 1000 ரூபாய்க்கு (12 Audio Cassete, 4 Video Cassetteடோட) வாங்கினேன் பனிரெண்டாவதுல...

இந்த மாதிரி நான் வாங்கின புக்ஸும் அதை விட வாங்கின திட்டும் அதிகம்...

ஆனா நீ கடைசியா பண்ண மாதிரி நான் எதுவும் பண்ணதில்லை :-)

Sivabalan said...

//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி.//

Ha Ha Ha...

சுவையான அனுபவம்தான்..

கதிர் said...

வெட்டி,

நிஜமாவே நீ எனக்கு அண்ணந்தான்
ஒத்துக்கறேன்.

கன்னா பின்னான்னு புத்தகம் வாங்கி படிச்சிருக்க போலருக்கு.


//இது மட்டுமில்லாம ஆவிகளுடன் பேசும் முறை, வர்மக்கலை, ஹிப்நாட்டிசம் கற்று கொள்ளுங்கள் இந்த மாதிரி தண்ட புக்ஸிம் ஆர்வமா வாங்கி வெச்சேன்...//

அதெல்லாம் படிச்சதாலதான் இப்டி ஆயிட்டியா?

நம்ம ஆர்வமெல்லாம் குறுக்கெழுத்துபோட்டி, ஆறு வித்யாசம், சிறுவர்மலரில் புதிர் 'அ'க்கான விடை இதிலதான் இருக்கும். இப்போல்லாம் அந்த மாதிரி படிக்கற ஆர்வமே கொறஞ்சி போச்சி.

கதிர் said...

//சுவையான அனுபவம்தான்..//

எனக்கு வேதனையான அனுபவம் உங்களுக்கு சுவையானதா இருக்குதாங்க சிவபாலன்.

ஒருவகைல இப்போ நினச்சாலும் சிரிப்பாதான் இருக்கு.

வருகைக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

//அதெல்லாம் படிச்சதாலதான் இப்டி ஆயிட்டியா?
//
எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)

//
நம்ம ஆர்வமெல்லாம் குறுக்கெழுத்துபோட்டி, ஆறு வித்யாசம், சிறுவர்மலரில் புதிர் 'அ'க்கான விடை இதிலதான் இருக்கும். இப்போல்லாம் அந்த மாதிரி படிக்கற ஆர்வமே கொறஞ்சி போச்சி. //
நானும் இதெல்லாம் விரும்பி படிப்பேன்... இப்பவும் பீர்பால் கதை, தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதையெல்லாம் விரும்பி படிப்பேன்...

ராணி காமிக்ஸ் (இரும்பு கை மாயாவி), கோகுலம் இதுவும் படிப்பேன்... எல்லாம் சின்ன பசங்க புக் தான்...

இலக்கிய ரசனையுள்ள புக்கெல்லாம் நம்ம ரேஞ்ச் இல்லை...

கதிர் said...

//எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா...

//இலக்கிய ரசனையுள்ள புக்கெல்லாம் நம்ம ரேஞ்ச் இல்லை... //

சாண்டில்யன் கதை மட்டுமே நம்ம இலக்கிய ரசனை வட்டத்தில சேரும் உரிமை இருக்கு :))

செம மஜாவா எழுதுவாருப்பா அவரு.

நாமக்கல் சிபி said...

//சாண்டில்யன் கதை மட்டுமே நம்ம இலக்கிய ரசனை வட்டத்தில சேரும் உரிமை இருக்கு :))

செம மஜாவா எழுதுவாருப்பா அவரு. //
படிச்சிருக்கேன்பா... எனக்கு என்னுமோ நம்ம கல்கி அளவுக்கு விறுவிறுப்பா எழுதின மாதிரி இல்லை...

வடுவூர் குமார் said...

கிராமத்துல பக்கத்து வீட்டில் நடக்கிறத கேட்கிறாப்போல இருக்கு.
"அனுப்புனர்/பெறுநரில்" தூள் கிளப்பிடீங்க தம்பி.

கதிர் said...

வாங்க வடுவூர் குமார்!

//கிராமத்துல பக்கத்து வீட்டில் நடக்கிறத கேட்கிறாப்போல இருக்கு.
"அனுப்புனர்/பெறுநரில்" தூள் கிளப்பிடீங்க தம்பி. //

எல்லாருக்குள்ளவும் ஒரு கிராமத்தான் ஒளிஞ்சிருப்பான் அப்பப்ப எட்டி பாக்கறதுதான் இந்த மாதிரி பதிவு.

போட்டாவ ஏங்க மாத்திட்டிங்க, நல்லா போலீஸ் ஆபிசர் மாதிரி இருந்ததே! :))

வருகைக்கு நன்றி.

கைப்புள்ள said...

//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி. ஏதோ குங்குமம்
ஆபிசுல இருந்ததுதான் லட்டர் வந்திடுச்சோன்னு ஆர்வமா
பாத்துருக்காங்க நான் எழுதினதே திரும்பி வந்திடுச்சுல்ல
அந்த கோவத்தை அன்னிக்கு காட்டு காட்டுன்னு
காட்டிட்டாங்க!//

:)) நல்ல சிரிப்பு தம்பி. அப்பவே நல்ல பேரு வாங்க பல முயற்சிகள் எடுத்திருக்கீங்க போல?

கடல்கணேசன் said...

தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னிக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு..

தாமதத்திற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் தம்பி.. ஒரே பதிவு தான் படித்தேன்.. (ஒரு சோறு தான்)..ஒரு நாள் தாருங்கள். முழுதும் படித்து விட்டு வருகிறேன்..

என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.

உங்களுக்கு துப்பாக்கி அனுப்பினார்களா?.. இதுமாதிரி ஒரு விளம்பரத்துக்கு பார்சலில் செங்கல் வந்தது எனக்கு.. நீங்க அதிர்ஷ்டசாலி.

கதிர் said...

//:)) நல்ல சிரிப்பு தம்பி. அப்பவே நல்ல பேரு வாங்க பல முயற்சிகள் எடுத்திருக்கீங்க போல? //

ஆமா தல!
அப்புறம்தான் தெரிஞ்சது நல்லவனுக்கு மறுபடியும் எதுக்கு நல்ல பேரு வேணும்னு.

கதிர் said...

//தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னிக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு..//

நீங்க வந்ததே பெரிய விஷயம்! தமிழ்மணத்தில சிறப்பான தொடர் எழுதும் ஒருவர் நீங்கள்.

//தாமதத்திற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் தம்பி.. ஒரே பதிவு தான் படித்தேன்.. (ஒரு சோறு தான்)..ஒரு நாள் தாருங்கள். முழுதும் படித்து விட்டு வருகிறேன்..//

நான் ஏங்க கோவிச்சிக்க போறேன்? உங்கள மாதிரி பெரியவங்க படிச்சிட்டு எப்படி இருக்கு சொன்னால்தானே நாங்களும் கொஞ்சமாவது அழகா எழுத முடியும்!

//என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
உங்களுக்கு துப்பாக்கி அனுப்பினார்களா?.. இதுமாதிரி ஒரு விளம்பரத்துக்கு பார்சலில் செங்கல் வந்தது எனக்கு.. நீங்க அதிர்ஷ்டசாலி.//

:)) சேம் ப்ளட்
நீங்க என்ன வாங்குனிங்க செங்கல்லு குடுத்தாங்க? என்ன மாதிரியே துப்பாக்கிதானா?

வருகைக்கு மிக்க நன்றி கடல்கணேசன்!

கைப்புள்ள said...

////எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா...//

எப்படிப்பா இப்படியெல்லாம்? :)))
கமெண்டை எல்லாம் இன்னிக்குத் தான் படிச்சேன். கலக்குறீங்க. சூப்பர்.

கதிர் said...

// எப்படிப்பா இப்படியெல்லாம்? :)))
கமெண்டை எல்லாம் இன்னிக்குத் தான் படிச்சேன். கலக்குறீங்க. சூப்பர். //

கைப்ஸ் அதுல எந்த டபுள் மீனிங்கும் இல்ல! உண்மைய சொல்லணும்னா அந்த நேரத்தில கமெண்ட் என்ன போடுறதுன்னு தெரியல ஸ்பீக்கர்ல அந்த பாட்டு ஓடவே அதையே கமெண்டா போட்டுட்டேன். அதுவே கொஞ்சம் செட் ஆன மாதிரி தெரியுதா!

யோசிக்காம போடக்குள்ளவே இப்படி!
இன்னும் யோசிச்சி போட்டா!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்யா.....

நன்றி கைப்ஸ்

Sanjai Gandhi said...

அந்த கனவு இல்ல மேட்டர் தவிர மத்தது எல்லாம் சேம் சேமா இருக்குபா.. என்ன.. நீங்க டுபாய்க்கி வாங்கிட்டிங்க .. நான் வாங்கல.. இலவசமா 15 தோட்டா இல்லையா? :( மத்த படி அதே புல்லுகட்டு.. அதே மாடு.. அதே தவிடு.. தினமும் சாணி கூட அள்ளனும்பா :( அதே கரும்பு தோட்டம்.. அதே சொணபுடுங்கறது... அதே மாயாவி.. அதே மர்ம நாவல்... அதே திட்டு:))

ஹூம்.. அந்த நாள்... ஞாபகம் ... நெஞ்சிலே...