எல்லையற்ற அன்பு கொள்வோம்
Friday, October 13, 2006
சனநாயகம் பொய், பணநாயகமே மெய்
1300 கிராம்ல ஒரு கிராம் அளவுக்காச்சும் மனிதம்
என்ற உணர்வு இருந்தால் இதுபோல நடந்துகொள்ள
தோணுமா?
"ஓட்டுபொட்டில ஓட்டு போடுங்கன்னா தெருவில போடறாங்க"
"74 சதவீதம் ஓட்டுபதிவு எல்லாம் அதிகம்தான்"
கொசுறு
"நடக்கும் என்பார் நடக்காது "
நடக்காதென்பார் நடந்துவிடும்"
இந்த தேர்தலும் நிரூபித்துவிட்டது. பணநாயகமே
சனநாயகமென்பதை. யார் ஆட்சிக்கு வந்தாலும்
அரசியல்வாதிகள் எங்களின் குணம் இதுவே.
இதுக்காக நீங்க ஓட்டு போடாம இருந்து விட
வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தம்பி,
இது நம்ம தமிழ்நாடா இல்ல பிகாரா?
//இது நம்ம தமிழ்நாடா இல்ல பிகாரா?//
தமிழ்நாடுன்னுதான் சொல்றாங்க. யார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தலின்போது மட்டும் பீகாரா மாறிடுது!
என்ன செய்ய!
என்னய்யா கொடுமை இது... வார்டு கவுன்சிலர் எலக்சந்தானே இது.. அதுக்கே இப்படியே அப்போ அடுத்த பொதுத் தேர்தல்லாம் சுடுகாட்டுலதான் நடக்கும் போல இருக்கே!
இவ்ளோ பேசறியே நீங்க ஏன் ஓட்டு போடல? அங்க உக்காந்து கால ஆட்டிகிட்டு சம்பளம் வாங்கிகிட்டு இருப்ப இங்க இருக்கற வேதனை உனக்கு எப்படியா தெரியும்?. கடைசி வரைக்கும் வருத்தப்பட மட்டுமே முடியும் உங்கள மாதிரி ஆளுங்களால.
அண்ணே வழிப்போக்கன் அண்ணே,
எல்லாருக்கும் சமுதாயக்கோபம்னு ஒண்ணு இருக்கும்ல அதுதான் இந்த மாதிரி சமயத்தில வெளியாகறது. இந்த மாதிரி தேர்தல் நடந்தா அது மேல் இருக்கும் நம்பிக்கையே போயிடும். அப்புறம் ஓட்டு போட கட்சிக்காரனுங்க இருந்தாலே போதும், பொதுமக்கள் தேவை இல்லன்னு ஆயிடும். எனக்கும் ஓட்டு போடணும்னு ஆசைதான்னே இங்க வந்திட்டனே என்ன செய்ய?
சரி அங்கயே இருந்துகிட்டு ஓட்டு போடாம இருக்காங்களே அவங்கள என்ன சொல்வீங்க?.
அப்படியே நான் அங்க வந்து என் சனநாயக கடமைய நிறைவேத்தணும்னா யாருக்கு ஓட்டு போடறது?. இருக்கறதில குட்டிதிருடனா இருக்கற ஒரு வேட்பாளருக்கு ஓட்டு போட்டு அவன பெரிய திருடனா மாத்தறதில என்னோட பங்கு இருக்க வேணாம்.
என்ன செய்ய?
இன்னா பேஸ்றீங்கோ, வாக்கு எண்ணும் போது இருக்கு வேடிக்கை.
//என்னய்யா கொடுமை இது... வார்டு கவுன்சிலர் எலக்சந்தானே இது.. அதுக்கே இப்படியே அப்போ அடுத்த பொதுத் தேர்தல்லாம் சுடுகாட்டுலதான் நடக்கும் போல இருக்கே!//
இப்ப மட்டும் என்னவாம்?
//இன்னா பேஸ்றீங்கோ, வாக்கு எண்ணும் போது இருக்கு வேடிக்கை.//
இந்த காமெடி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை அவசியமானதா என்று கூட ஒரு பதிவு போடலாம்.
அரசியலை எல்லாம் கண்டு கவலை படாதீங்க தம்பி.. தேர்தல் சமயத்துல வீட்டுல உக்கார்ந்து, காமெடி ஷோவா பாக்கவேண்டியது தான்
தமிழ்நாடு பிகாராக மாறிவிட்டது என்பதை பதிவு இறுதியில் படம் இட்டு காட்டிய 'தன் மான' தலைவன் தம்பிக்கே எங்கள் ஓட்டு. தம்பி - 'தன்மானமும், தட்டிக்கேட்கும் குணமும் உள்ளவன்'
//அரசியலை எல்லாம் கண்டு கவலை படாதீங்க தம்பி.. தேர்தல் சமயத்துல வீட்டுல உக்கார்ந்து, காமெடி ஷோவா பாக்கவேண்டியது தான்//
வாங்க கார்த்திக்,
அப்படியும் செய்யலாம் என்ன செய்யிரது இந்த கூத்தெல்லாம் பாக்கும்போது கோபம் வருது. கவலைப்டாம இருக்க முடியல. ஏதோ நம்மளால முடிஞ்சது கவலை மட்டுமே. அதையாவது செய்வோமே!
//தமிழ்நாடு பிகாராக மாறிவிட்டது என்பதை பதிவு இறுதியில் படம் இட்டு காட்டிய 'தன் மான' தலைவன் தம்பிக்கே எங்கள் ஓட்டு. தம்பி - 'தன்மானமும், தட்டிக்கேட்கும் குணமும் உள்ளவன்' //
லோடுக்கு,
ஏம்பா உனக்கு இந்த வேலை? தேன்கூடு போட்டில ஓட்டு போட சொன்னா போட மாட்டிங்க. இங்க நான் ஓட்டே கேக்கல ஆனால் போடறேன்னு சொல்றீங்க :)
//தம்பி - 'தன்மானமும், தட்டிக்கேட்கும் குணமும் உள்ளவன்' //
இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
Post a Comment