எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, November 05, 2006

என் நண்பனுடன் ஒரு நாள்.

சென்ற வார விடுமறை நாளில் என் பள்ளித்தோழனின்
அறைக்கு சென்றிருந்தேன். பத்தாம் வகுப்போடு
நின்றுவிட்டதுடன் விவசாயத்தை கவனித்துக்
கொண்டிருந்தவனை இங்கே பார்சல் பண்ணிட்டாங்க.
கொத்தனாராக வேலை பார்க்கிறான். மிக நீண்ட
நாட்களாக அழைத்துக் கொண்டே இருந்தான்.இங்க
வாடா மாப்ள,என் ரூமுக்கு எல்லாம் வரமாட்டியான்னு.
அதனால ஒரு விடுமுறை நாளை அவனுக்காக ஒதுக்கி
அவங்கூடவே இருந்தேன். அது ஒரு கேம்ப் நூத்துக்கனக்கான
நபர்கள் ஒரு வளாகத்திற்கும் தங்கியிருந்தார்கள் ஒரே
கம்பெனியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மாநிலத்தவர்கள்,
நாட்டவர்கள் வித்யாசமான நாளாகவும் அதே சமயம்
அவர்களின் கொடுமையான வாழ்க்கையையும் பார்த்தேன்.

நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் அவர்களின்
விடுதி. பேரமைதியாக இருந்தது ரொம்ப நேரம்
நானும் அவனும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அவன் பேச நான் கேட்க நேரம் போனதே தெரியலை.
எல்லாம் பேசி முடிக்கையில் எனக்குள்ளே ஒரு சோகம்.
அங்க நான் பார்த்தது அவனுடன் பேசியது எல்லாம்
சேர்ந்து கவிதையா எழுதுன்னு ஒருத்தன் உள்ள இருந்து
இம்சை பண்ணதினால உங்களுக்கு இந்த அவஸ்தைய
படிக்கணும்னு எழுதி இருக்கு. எழுதி முடிச்சிட்டு
என்ன தலைப்பு வைக்கலாம்ணு யோசிச்சேன் ஒண்ணும்
புரியல. அதனால வாசிக்கிற நீங்களே இதுக்கு
ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்க.

பாலையும் கடலாகும் (கண்ணீரால்)

கனவுகளுடனே வந்தோம் அதே
கனவுகளுடனே செல்கிறோம்
திரும்ப எங்களை இங்கனுப்ப ஒரு
காரணம் காத்திருப்பதை அறியாமல்.

தங்கையின் திருமணத்தை முடித்து
தனக்கான வழிதேடும்போது அம்மாவின்
மரணம் மறுபடியும் இங்கனுப்பும்.

வீட்டுத் திருமணங்களை வீடியோவில் மட்டுமே
பார்க்கும் பாக்கியமும், முதல் குழந்தையின்
அழுகையை தந்திக்கம்பியில் மட்டுமே கேட்கும்
அவலமும் எங்கள் வரம்.

பின்னிரவு விசும்பல்கள் பெருமூச்சோடு மடியும்
பின்வரும் காலங்கள் சுகம் மேலிட்டதாய் அமையும்
என்ற சுயதேற்றுதலை தினமும் சந்திக்கிறேன்.

என் போன்றவர்களின் கண்களில் எதை தேடுகிறேன்?
எதை காணுகின்றேன்?

முற்பருவ இளைஞன் முகத்தில் பருக்களோடு
காதலியை பிரிந்த வலியும்.

இரண்டு மாத விடுமுறைத்தழுவலின் மிச்சமும்
முறுவலின் சொச்சமுமாக அதிகாலை நித்திரையில்
தலையணையையணைக்கும் பக்கத்து
படுக்கைக்காரர்.

வாரயிறுதியில் நகரத்தில் "சுகங்கண்டு" திரும்பும்
இலவசமாக அறிவுரைகளை தெளித்த
அறைப்பெரியவரின் கண்களில் தெரியும் காமம்.

வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...

இன்றைய வேலையிறுதியின் கோடியில் முதுகறுக்கும்
வெய்யிலில்....

துணி வெளுக்கும்போது உடையில் தெரியும்
உப்புக் கோடுகளில்...

கழிவரைக்கு காத்திருக்கும்போது அவசரத்தில் பிடறி
மயிர் சிலிர்க்கையில்

எங்கும்....

எங்கும்...

எங்கும்...என்றாலும்.

விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.

நாங்களும் வாழ்கிறோம்.

53 comments:

துளசி கோபால் said...

(-:

மனசுக்குக் கஷ்டம்தான் மிச்சம்.

கடல்கணேசன் said...

/தங்கையின் திருமணத்தை முடித்து
தனக்கான வழிதேடும்போது அம்மாவின்
மரணம் மறுபடியும் இங்கனுப்பும்./

ஓவ்வொரு விடுமுறை வந்து திரும்பும் போதும், உள்ளுக்குள் அழுது கொண்டும், விமானநிலைய வாசலில் கையசைக்கும் உறவுகளுக்கு முகத்தில் புன்னகையுடன் விடை கொடுப்பதும்..

இது தொடரும் கதை தானா..
/கனவுகளுடனே வந்தோம் அதே
கனவுகளுடனே செல்கிறோம்/

வேதனையை கூடவே சுமந்து கொண்டு..

உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் நானும்.

தம்பி said...

//(-:

மனசுக்குக் கஷ்டம்தான் மிச்சம். //

அச்சச்சோ ஏதாவது தப்பா எழுதிட்டேனா?

ஏதோ அவனோட வலியையும் அங்கிருந்தவர்களின் வலியையும் பாத்ததினால ஏதோ எழுதணும்னு தோணுச்சு.

Sivabalan said...

//வீட்டுத் திருமணங்களை வீடியோவில் மட்டுமே
பார்க்கும் பாக்கியமும் //

சோக இலையோடும் விசயங்கள்..ம்ம்ம்ம்ம்

தம்பி said...

//ஓவ்வொரு விடுமுறை வந்து திரும்பும் போதும், உள்ளுக்குள் அழுது கொண்டும், விமானநிலைய வாசலில் கையசைக்கும் உறவுகளுக்கு முகத்தில் புன்னகையுடன் விடை கொடுப்பதும்..//

சரியா சொன்னீங்க கணேசன்.

ஒயிட்காலர் ஜாப்காரங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லங்க அவங்க நினைச்ச நேரத்தில போக முடியும். ஆனா இவங்க அப்படி இல்ல ஆத்திர அவசரத்துக்கு கூட போக முடியாத சூழ்நிலை இருக்கு.

ரொம்ப வருத்தமா இருந்ததுங்க.

//உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் நானும்.//

உங்களுக்கு இது நன்றாகவே புரியும் என்பது என் எண்ணம்.

நன்றி கடல்கணேசன்.

தம்பி said...

//சோக இலையோடும் விசயங்கள்..ம்ம்ம்ம்ம்//

வாங்க சிவபாலன் அய்யா!

உங்கள் உணர்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இலையோடும் - இழையோடும்

என்று நினைக்கிறேன்!

துளசி கோபால் said...

//அச்சச்சோ ஏதாவது தப்பா எழுதிட்டேனா?//

அச்சச்சோ.... தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களா?

'இவ்வளவு கஷ்டமும் அனுபவிக்கிறாங்களே, கடைசியில் எதாவது
சந்தோஷம் கிடைக்குமான்னு பார்த்தாலும்
மனசுக்குக் கஷ்டம்தான் மிச்சம்'னு சொல்லவந்தேன்.

இன்பா said...

உருக்கம்.

மு.கார்த்திகேயன் said...

//விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.

நாங்களும் வாழ்கிறோம்//

அருமையான பதிவு. உள்ளே இழையோடும் சோகம் மனதை தாக்குகிறது தம்பி..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாரயிறுதியில் நகரத்தில் "சுகங்கண்டு" திரும்பும்
இலவசமாக அறிவுரைகளை தெளித்த
அறைப்பெரியவரின் கண்களில் தெரியும் காமம்.

வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...//

தம்பி
அருமையாகப் படம் பிடித்து உள்ளீர்கள்!
இதை வலை மேய்வோர் மட்டும் அன்றி, நண்பரின் சுற்றமும் நட்பும் சேர்த்தே படிக்க வேண்டும்!
இது போன்றவர்க்கெல்லாம் அன்பே அருமருந்து!

Leo Suresh said...

//ஒயிட்காலர் ஜாப்காரங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லங்க அவங்க நினைச்ச நேரத்தில போக முடியும்//அப்படி இல்லைங்க தம்பி.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வலி..நான் என் தம்பி,தாய்,தந்தை முகத்தைகூட பார்க்கமுடியாமல் மூன்று நாள் கழித்துப் போய் சோகத்தை மீண்டும் கிளறினேன்.
லியோ சுரேஷ்
துபாய்

G.Ragavan said...

ம்ம்ம்....ஒரு சாண் வயிறு...அது படுத்தும் பாடுகள்தான் எத்தனையெத்தனை!

தம்பி said...

என்ன யாருமே கவிதைக்கு தலைப்பு குடுக்கல?

தம்பி said...

//அச்சச்சோ.... தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களா?

'இவ்வளவு கஷ்டமும் அனுபவிக்கிறாங்களே, கடைசியில் எதாவது
சந்தோஷம் கிடைக்குமான்னு பார்த்தாலும்
மனசுக்குக் கஷ்டம்தான் மிச்சம்'னு சொல்லவந்தேன். //

அச்சச்சோ நாந்தான் தப்பா நினைச்சிட்டேன் போல இருக்கு! :))

தம்பி said...

வருகைக்கு நன்றி இன்பா!!

//அருமையான பதிவு. உள்ளே இழையோடும் சோகம் மனதை தாக்குகிறது தம்பி..//

வாங்க கார்த்திக் எனக்கும் கொஞ்சம் சோகமாதான் இருந்தது அதனால இந்த கவிதய எழுதிட்டேன். :(

நாகை சிவா said...

தம்பி!
பல சமயத்தில் அவர்களை பார்க்கும் போது வருத்தமும், சில சமயம் அவர்களை காணும் போது கோபமும் வருகிறது. ஒரு மனிதனை சூழ்நிலைகள் எப்படி எல்லாம் பழி வாங்குகிறது என்பதை பார்க்கும் போது ரொம்பவே வருத்தமாக தான் உள்ளது.

தம்பி said...

//தம்பி
அருமையாகப் படம் பிடித்து உள்ளீர்கள்!
இதை வலை மேய்வோர் மட்டும் அன்றி, நண்பரின் சுற்றமும் நட்பும் சேர்த்தே படிக்க வேண்டும்!
இது போன்றவர்க்கெல்லாம் அன்பே அருமருந்து! //

சரியா சொன்னீங்க. ஆனால் இந்த வசதியின்மை அவங்களுக்கு பழகிப்போச்சி.

இராம் said...

//வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...

இன்றைய வேலையிறுதியின் கோடியில் முதுகறுக்கும்
வெய்யிலில்....//


கதிர்,

எதார்த்தமான நடையில் அழகாக சொல்லவந்ததே சொல்லி இருக்கே!

கவிதை அருமையா வந்திருக்குப்பா!

கப்பி பய said...

நல்ல பதிவு தம்பி!

உங்க உணர்வை அருமையாக பகிர்ந்திருக்கீங்க!

C.M.HANIFF said...

Nalla eshuti irukeenga , really touching ;)

Anonymous said...

இலட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் அல்லல் படுகின்றனர். அவர்களின் வருமானம் இந்தியாவிற்கு முதுகெலும்பு என்பது மறுக்கமுடியாத உண்மை. இவர்களின் துயரங்களுக்கு மருந்து கூட கிடையாது.

தம்பி said...

//அப்படி இல்லைங்க தம்பி.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வலி..நான் என் தம்பி,தாய்,தந்தை முகத்தைகூட பார்க்கமுடியாமல் மூன்று நாள் கழித்துப் போய் சோகத்தை மீண்டும் கிளறினேன்.
லியோ சுரேஷ்
துபாய்//

வாங்க லியோ!

அப்படியாச்சும் போகமுடிந்ததே! ஒரு வருஷம் கழிச்சு போன ஆள நான் பார்த்தேங்க!

ரொம்ப வருத்தமா போச்சு!

தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிசடங்க கூட செய்ய முடியாத நிலை அவருக்கு!

தம்பி said...

//ம்ம்ம்....ஒரு சாண் வயிறு...அது படுத்தும் பாடுகள்தான் எத்தனையெத்தனை! //

அதுக்காகத்தானே இவ்ளோ போராட்டம் நடத்த வேண்டியிருக்கு! கூடவே கொஞ்சம் மோகமும் சேர்ந்துட்டா அவ்ளோதான். அதுக்காக நாம் விலைகொடுக்கறது நிறைய!

தம்பி said...

//தம்பி!
பல சமயத்தில் அவர்களை பார்க்கும் போது வருத்தமும், சில சமயம் அவர்களை காணும் போது கோபமும் வருகிறது. ஒரு மனிதனை சூழ்நிலைகள் எப்படி எல்லாம் பழி வாங்குகிறது என்பதை பார்க்கும் போது ரொம்பவே வருத்தமாக தான் உள்ளது.//

நட்சத்திர நாயகரே!

இதில நிறைய கம்பெனி முதலாளிகள் இந்தியர்களாம். அதுதான் வேதனையா இருக்கு!

வருகைக்கு நன்றி சிவா!

தம்பி said...

//கதிர்,

எதார்த்தமான நடையில் அழகாக சொல்லவந்ததே சொல்லி இருக்கே!

கவிதை அருமையா வந்திருக்குப்பா!//

வாங்க ராம்,

நன்றி ராம்! இப்பவாச்சும் ஒத்துக்கோங்க நான் ஒரு கவிஞ்சர்னு!

தம்பி said...

//நல்ல பதிவு தம்பி!

உங்க உணர்வை அருமையாக பகிர்ந்திருக்கீங்க//

உங்க கருத்துக்கு மிக்க நன்றி கப்பி!

//C.M.HANIFF said...
Nalla eshuti irukeenga , really touching ;)//

நன்றி C.M.HANIFF.

அனானி அண்ணா,

கடை மட்ட தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை நன்றாக அமைத்து கொடுத்தாலே சந்தோஷப்படுவார்கள்.

என்ன செய்ய....

எல்லா இடத்திலும் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது!

உங்கள் கருத்து 100 சதம் உண்மை.

உங்கள் கருத்துக்கு நன்றி அனானி அண்ணெ!

லொடுக்கு said...

நான் தருகிறேன் ஒரு தலைப்பு. 'பாலையும் கடலாகும்' (கண்ணீரால்). எப்படி இருக்கு தம்பி? நல்லா இல்லையோ விட்டுருங்க. அதான் என்னோட மனநிலை இந்த பதிவை படிச்சுட்டு.

கைப்புள்ள said...

போன பதிவுல கலகலன்னு சிரிக்க வச்சே...இந்த பதிவுல இப்படி கண்கலங்க வச்சிட்டியேப்பா...

//பின்னிரவு விசும்பல்கள் பெருமூச்சோடு மடியும்
பின்வரும் காலங்கள் சுகம் மேலிட்டதாய் அமையும்
என்ற சுயதேற்றுதலை தினமும் சந்திக்கிறேன்.

என் போன்றவர்களின் கண்களில் எதை தேடுகிறேன்?
எதை காணுகின்றேன்?//

அருமையா எழுதிருக்கீங்க. நான் சின்னப்பையனா இருந்த போது பாத்த ஒரு சம்பவம் நெனப்புக்கு வந்துடுச்சு. லீவுல எங்க ஆயா வீட்டுக்குப் போவோம். அந்த கிராமத்து ஆம்பளைங்க பல பேரு சவுதி, துபாய், பஹ்ரைன், குவைத் இப்படின்னு அரபு நாடுகள்ல வேலைக்கு போவாங்க. அப்பல்லாம் ஃபோன் எல்லாம் கெடையாது. ஆயா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்த ஒரு அம்மா அவங்க வீட்டுக்காரரு துபாய்லேருந்து பேசி ஒரு கேசெட் அனுப்பிருந்தாரு...அவங்க வீட்டுல டூ இன் ஒன் இல்லாததுனால எங்க வீட்டுல வந்து கேசட்டைப் போட்டு அந்த அம்மா கேக்க வந்தாங்க. எப்படி இருக்கீங்க, பசங்க நல்லா படிக்கிறாங்களான்னு பேசிட்டு இருந்தவரு...உங்க நியாபகமாகவே இருக்கு புள்ளைன்னு திடீர்னு கேசெட்லயே அழ ஆரம்பிச்சிட்டாரு. அத கேட்டுட்டு அந்த அம்மாவும் ரொம்ப அழுதாங்க. கிட்டத்தட்ட 10-15 வருஷம் முன்னாடி பாத்த சம்பவம்னாலும் இன்னும் நெனப்பு இருக்கு. எந்த மாதிரி எல்லாம் கஷ்டப் பட்டு ஒவ்வொருத்தரும் குடும்பத்தைக் காப்பாத்தறாங்கன்னு நெனக்கும் போது கஷ்டமாத் தான் இருக்கு.

இன்னிக்கு என்னமோ ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் துபாய் தம்பி...

http://deekshanya.blogspot.com/2006/11/blog-post.html

இதை பாரு...உனக்கே புரியும்.

நாமக்கல் சிபி said...

:-(

தம்பி,
நானே ஊருக்கு போகனும்னு ஃபீலிங்ஸ்ல இருக்கேன் இப்ப இந்த மாதிரி ஒரு கவைதைய எழுதி மறுபடியும் ஃபீல் பண்ண வெக்கறீயே...

நான் நேத்து போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சு?

தம்பி said...

//நான் தருகிறேன் ஒரு தலைப்பு. 'பாலையும் கடலாகும்' (கண்ணீரால்). எப்படி இருக்கு தம்பி? நல்லா இல்லையோ விட்டுருங்க. அதான் என்னோட மனநிலை இந்த பதிவை படிச்சுட்டு. //

என்னவிட உங்களுக்கு நல்லாவெ தெரியும் அவங்க நிலைமய பத்தி. என்ன விட சீனியர் நீங்க :)

தலைப்பு நல்லாவே இருக்கு. இதையே வச்சிடலாம் டச்சிங்கான தலைப்பு.

நன்றி லொடுக்கு.

தம்பி said...

//இன்னிக்கு என்னமோ ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் துபாய் தம்பி...//

என் சித்தப்பாவே இந்த மாதிரி கேசட் அனுப்பியிருக்காருங்க. எனக்கு விவரம் தெரிஞ்சி அவரோட முகத்தை அதிகமா பார்த்ததே இல்ல வாழ்வின் பெரும்பகுதி சவுதியிலேயே கழிந்துவிட்டது.

இந்த கேசட் கேட்கும்போது குடும்பமே சுத்திரும் உக்காந்து இருப்பாங்க அவரோட அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்க, பக்கத்துவீட்டுக்காரங்க எல்லாரும் கேட்க கேட்க அப்படியே அவங்க கண்ல கண்ணீர் வரும் நானும் அனுபவிச்சிருக்கேன் இந்த மாதிரி. இன்னமும் வச்சிருக்காங்க அந்த கேசட்டெல்லாம் இன்னமும் அவர் சவுதியிலதான் இருக்கார்.

"நடாப்பது எதுவும் நன்மைக்கே"

உங்காளோட கருத்தை பகிர்ந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி தல.

அடுத்த பதிவு காமெடிதான்! ரெடியாயிட்டே இருக்கு.

தம்பி said...

//தம்பி,
நானே ஊருக்கு போகனும்னு ஃபீலிங்ஸ்ல இருக்கேன் இப்ப இந்த மாதிரி ஒரு கவைதைய எழுதி மறுபடியும் ஃபீல் பண்ண வெக்கறீயே...//

உண்மையாலுமே பீலிங்ஸ் ஆச்சுன்னா சந்தோஷம்பா. இப்ப்படி அடிக்கடி பீலிங்ஸ் வரணும் வெட்டி. அப்போதான் நல்லா இருக்கும்.

வருகைக்கு நன்றி வெட்டி!

//நான் நேத்து போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சு? //

இல்லயே ஒண்ணுமே வரலயே வெட்டி!

நாமக்கல் சிபி said...

//
வருகைக்கு நன்றி வெட்டி!//

என்னதிது???

சின்ன புள்ள தனமா இருக்கு :-)

//இல்லயே ஒண்ணுமே வரலயே வெட்டி!//
ஓ!!! வழக்கம் போல ப்ளாகர் பிரச்சனைனு நினைக்கிறேன் :-(

மின்னுது மின்னல் said...

உண்மையை சொல்லனுனா..!!

வர கூடாது வந்துட்டோம்...!!

இனி ஊருக்கு விசிட்டிங் மட்டுமே..கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி

(உப்பு பூத்த வியர்வை கோடுகளை பெற்றவன் என்பதால் :( )

சின்னபுள்ள said...

//
என்னதிது???

சின்ன புள்ள தனமா இருக்கு :-)
//

எது..???

வந்தவங்கள வாங்கனு ( திரும்பவும் வாங்கனு ) சொல்லுறதா..:::)

சின்னபுள்ள said...

//
என்னதிது???

சின்ன புள்ள தனமா இருக்கு :-)
//

எது..???

வந்தவங்கள வாங்கனு ( திரும்பவும் வாங்கனு ) சொல்லுறதா..:::)

வானமே எல்லை said...

/திரும்ப எங்களை இங்கனுப்ப ஒரு
காரணம் காத்திருப்பதை அறியாமல்./

மிக மிக உண்மை தம்பி! இனி இந்த பக்கமே வரகூடாதுன்னு போற எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக் திரும்பி வர மாதிரி ஆயிடுது.

எப்பொழுதொ ஒரு முறை துபாய் அரட்டை அரங்கத்தில் கேட்டது ஞாபகத்துக்கு வருது.யாராவது வெளிநாட்டில இருந்து ஊருக்கு வந்தா சொந்தக்காரங்க கேக்குற முதல் கேள்வி 'என்ன தோசையா? ஆப்பமா? '

Anonymous said...

:(
நல்லா எழுதியிருக்கீங்க தம்பி, வயித்துக்காக நம்மக்கள் கண்ட நாட்டுல வாடுற இந்த கொடுமைய படிக்கக் கூட கஷ்டமா இருக்குதுங்க!
என் வாழ்க்கைலையும் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்ததால, இத படிச்சப்போ இன்னும் ரொம்ப கவலை ஆகிடுச்சு :-(

கண்ணீரைப் பற்றி எழுதிய கவிதை நல்லாயிருந்தாலும், கண்கலங்க வைக்குது!!
உங்க பதிவுலகம் எனக்கு புதுசில்லைனாலும், இது தாங்க என்னோட முதல் பின்னூட்டம்!
-விநய்*

லொடுக்கு said...

பதிவைவிட டச்சிங் நான் கொடுத்த தலைப்பு வச்சது. நன்றி தம்பி. நீங்கள் சொல்வது போல் எனக்கும் அவர்களின் வாழ்க்கை நிலை தெரியும். என்ன செய்ய முடியும் நம்மால் அவர்களுக்கு ஆருதலாய் இருப்பதை தவிர.

லக்கிலுக் said...

//என் நண்பனுடன் ஒரு நாள். //

தலைப்பு தான் ஒரு மாதிரியா இருக்கு :-)

தம்பி said...

//(உப்பு பூத்த வியர்வை கோடுகளை பெற்றவன் என்பதால் :( )//


நம்மவர்களின் உழைப்பை பார்க்கும்போது பெருமையாவும் அதே சமயம் வருத்தமாவும் இருக்கு!

மின்னல் கவலைப்படாதீங்க காலம் ஒரு நாள் மாறும்...

தம்பி said...

//மிக மிக உண்மை தம்பி! இனி இந்த பக்கமே வரகூடாதுன்னு போற எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக் திரும்பி வர மாதிரி ஆயிடுது.

எப்பொழுதொ ஒரு முறை துபாய் அரட்டை அரங்கத்தில் கேட்டது ஞாபகத்துக்கு வருது.யாராவது வெளிநாட்டில இருந்து ஊருக்கு வந்தா சொந்தக்காரங்க கேக்குற முதல் கேள்வி 'என்ன தோசையா? ஆப்பமா? ' //

சரியா சொன்னீங்க வானமே எல்லை!
பலரும் அப்படி சொல்லி திரும்ப வந்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சின்னபுள்ள தனமாதான் இருக்குங்க சின்னபுள்ள :)

//கண்ணீரைப் பற்றி எழுதிய கவிதை நல்லாயிருந்தாலும், கண்கலங்க வைக்குது!!
உங்க பதிவுலகம் எனக்கு புதுசில்லைனாலும், இது தாங்க என்னோட முதல் பின்னூட்டம்!
-விநய்* //

விநய்..

வாங்க விநய் கண்கலங்க வச்சிருச்சின்னா இது நல்ல கவிதைதான். இது அவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுபோல அமைந்திருந்ததால் அருமையா வந்திருக்கு.

தொடர்ந்து வருகை தாருங்கள் விநய்!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

தம்பி said...

//பதிவைவிட டச்சிங் நான் கொடுத்த தலைப்பு வச்சது. நன்றி தம்பி. நீங்கள் சொல்வது போல் எனக்கும் அவர்களின் வாழ்க்கை நிலை தெரியும். என்ன செய்ய முடியும் நம்மால் அவர்களுக்கு ஆருதலாய் இருப்பதை தவிர. //

தலைப்பு கவிதைக்கேத்த மாதிரி ரொம்ப பொருத்தமா இருந்தது நானே வச்சிருந்தாலும் இப்படி வந்திருக்காது.

மிக்க நன்றி லொடுக்கு!

//தலைப்பு தான் ஒரு மாதிரியா இருக்கு :-) //

ரெண்டு மாதிரியாதாங்க இருக்ககூடாது !
வரும்போதேவா... :)

இதுதான் நீங்கள் இடும் முதல் பின்னூட்டம்னு நினக்கிறேன்.

பெரியவங்க நீங்க கருத்து சொல்லாம போறீங்களே!

நன்றி லக்கிலுக்!

மின்னுது மின்னல் said...

/./
மின்னல் கவலைப்படாதீங்க காலம் ஒரு நாள் மாறும்...
/./


அதெல்லாம் முன்பு

இப்ப மாறி விட்டது.

பழச மறக்க கூடாதில்லையா அதான் ஃபிலிங்க்ஸ்ஸ்ஸ்

தம்பி said...

//அதெல்லாம் முன்பு

இப்ப மாறி விட்டது.

பழச மறக்க கூடாதில்லையா அதான் ஃபிலிங்க்ஸ்ஸ்ஸ்//

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க கேட்க!

பழச மறக்காம இருக்கறது நல்லதுதான். வந்த பாதைய திரும்பி பார்ப்பது போல!

enRenRum-anbudan.BALA said...

தம்பி,
தங்கள் பதிவு மனதை நெகிழ்த்தி விட்டது, நண்பரே ! பாராட்டுக்கள்.

தம்பி said...

//தம்பி,
தங்கள் பதிவு மனதை நெகிழ்த்தி விட்டது, நண்பரே ! பாராட்டுக்கள்//

உங்களின் பாராட்டு மிக்க மகிழ்ச்சியை தருகிறது பாலா அவர்களே!

உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

Divya said...

மனதை கணமாதியது உங்கள் பதிவு

தம்பி said...

//மனதை கணமாதியது உங்கள் பதிவு//

வருகைக்கு நன்றி திவ்யா!

ப்ளாக்கரா ஆகிட்டிங்க போலருக்கு!

வாழ்த்துக்கள் திவ்யா!

நாமக்கல் சிபி said...

இந்தா தம்பி, 50 :-)

Anonymous said...

ம்ம்ம் படிக்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கே!! அதை அனுபவிப்பவர்களுக்கு!!

உங்கள் நண்பரை பார்க்க போய், பேசி...அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும்..நல்ல மனது உங்களுக்கு

தம்பி said...

நன்றி தூயா!

Anonymous said...

Ungalukku pididaivaikalilirunthu, enakku pidithavai.
1. Nagulan - enakku yaarumilai - naankooda
2. ennai parka vanthavar thannai par ena solli sentar
3. Unnai anti unakku yaarum illai

Title: "Kanavukalin Akkaraiyil"
pidithathu
No.1 - No.5 - then last one
Oru Ulaipazhiyin pulambal kalilirunthu - purinthukondavai
Panathukkaga suga thukkangalai vilai pesa vendi irukkirathu
-baskar