எல்லையற்ற அன்பு கொள்வோம்
Wednesday, October 04, 2006
லஹே ரஹோ முன்னாபாய் - என்ன சொல்கிறார்?
விமர்சனம் எழுதற அளவுக்கு நமக்கு விஷயஞானம்
கிடையாது ஏன்னா நான் பார்த்த முதல் இந்தி படம்
என்பதால்தான். முன்னாபாய் M.B.B.S படத்தின் பெயரில்
பாதியை மட்டுமே லஹேரஹோ வுக்காக எடுத்து
இருக்கிறார்கள். மற்றபடி இதற்கும் முந்தைய பாகத்திற்கும்
துளியும் சம்பந்தமில்லை. படம் முழுக்க காந்திய
சிந்தனைகளை தெளித்திருக்கிறார்கள்.
காமெடி படங்களில் ஹீரோவுக்கு துணையாக ஒரு
கேரக்டர் இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை
இந்த படம் ஒத்திருந்தாலும் கொஞ்சம் வித்யாசம்
இருப்பதை உணர முடிகிறது. சஞ்சய்தத் ஒரு ரவுடி
ஆள் அசாத்திய உயரத்துடனும் வடநாட்டு லாரி
டிரைவரை நினைவுபடுத்துகிறார். ஆரம்ப காட்சியே
தூள். ரேடியோவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கதாநாயகி ஒரு ரேடியோ ஜாக்கி அந்த குரலை
கேட்டே மயங்கி விடுகிறார் சஞ்சய். அவளை
எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலில்
இருக்கிறார். இந்த படத்தில் குறிப்பிடவேண்டிய
கதாபாத்திரங்கள் காந்தியாக நடித்திருக்கும்
பெரியவரும் சஞ்சயின் தம்பியாக நடித்திருக்கும்
அர்ஷத் வார்ஸியும் மனுசனுக்கு காமெடி
சூப்பரா வருது.
குட்மாஆஆஆர்னிங் மும்பை என்று குயில் கூவி
மும்பையை எழுப்புகிறது அந்த குயில்தான் வித்யா
பாலன். சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது.
காந்தி பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்
சொல்பவர்கள் வித்யா பாலனுடன் ரேடியோவில்
பேசலாம் இதுதான் போட்டி இதற்காக நான்கு
பேராசிரியர்களை கடத்தி வந்து விடுகிறார் சஞ்சய்
பத்து பேர் சஞ்சய்யுடன் இருந்து ரேடியோவுக்கு
போன் போட்ட வண்ணம் இருக்காங்க யாருக்கு
முதலில் லைன் கிடைத்தாலும் சஞ்சயிடம் கொடுத்து
பேராசிரியர்களின் உதவியுடன் கேள்விகளுக்கு
சரியான விடை சொல்கிறார்.
காந்தியை பற்றி லெக்சர் கொடுக்க வேண்டி
மூன்று நாள் கண்விழித்து அவரை பற்றி படிக்கிறார்.
சஞ்சய் கண்ணுக்கு மட்டும் காட்சி தருகிறார் காந்தி.
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நேயர்களின் பிரச்சினை
களுக்கு நேரடியாக காந்தியின் உதவியுடன் தீர்வு
சொல்கிறார் அந்த காட்சிகள் மிக உணர்ச்சிகரமாக
இருக்கீறது. இவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி
ரேட்டிங்கில் உயர வித்யா பாலனுக்கு கல்தா
கொடுத்துவிட்டு சஞ்சயை நிகழ்ச்சி நடந்த வைக்கிறது
ரேடியோ நிர்வாகம்.
இதற்கு நடுவில் கதாநாயகியின் வீடு சஞ்சய்க்கு தெரியாமல்
காலி செய்யப்படுகிறது. வில்லன் தந்திரமாக எல்லாரையும்
வெளியூருக்கு அனுப்பிவிட்டு வீட்டை காலி செய்ய பழி
சஞ்சய் மீது வருகிறது. இவையெல்லாவற்றையும் சரி
செய்து காதலியுடன் இணைகிறாரா என்பதுதான் கதை.
இதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மன்னிப்பு தமிழ்ல வேணா கேப்டனுக்கு பிடிக்காத
வார்த்தையா இருக்கலாம் ஆனால் காந்திக்கு
மிகப்பிடித்த வார்த்தை. தவறு செய்து விட்டால்
தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார்.
ஒரு சீனில் சஞ்சய் அர்ஷத்தை கை நீட்டி அடித்து
விட அதற்காக காந்தி மன்னிப்பு கேட்க சொல்லும்
காட்சியில் தியேட்டரில் இருந்த அத்தனை முகங்களிலும்
கண்ணீர் வழிந்தது. பக்கத்தில இருந்த சேட்டு வீட்டு
மாமி குலுங்கி குலுங்கி அழுவுது. நமக்கு அரை குறையா
புரிஞ்சாலும் சோகத்தை மறைக்க முடியவில்லை.
சஞ்சயின் கண்களுக்கு மட்டுமே தெரியும் காந்தி.
உன் கண்ணுக்கு தெரிகிறாரா என்று அர்ஷத்தை பார்த்து
கேட்கிறார் சஞ்சய். ஓ தெரியராறே, ஹாய் பப்பு என்று
கை கொடுக்க போவது காமெடியின் உச்சம்.
அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசிப்பவர்
தினமும் என் வீட்டு வாசலிஃல் பான் மென்று துப்புகிறார்
என்ன செய்வது என்று ஒரு நேயர் கேட்கிறார். அதற்கு
காந்தி தினமும் அவர் செல்லும்போது சிரிப்புடன் ஒரு
வணக்கத்தை வைத்துவிட்டு அவர் துப்பிவிட்டு போன
கறையை துடையுங்கள். இதே போலவே அவரும்
செய்கிறார் மூன்றாவது நாளில் எச்சில் துப்புபவர்
திருந்தி விடுவார். அகிம்சையின் வலிமையை அந்த
இடத்தில் உணர முடிகிறது.
நாட்டில் அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தை
நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அதுதான் அகிம்சை.
மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு
நடிகர் என்பது மட்டும் நான் கேள்விப்படாதிருந்தால்
படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.
இந்த பதிவு விமர்சன பதிவு என்று நினைத்து வந்தவர்களிடம்
மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
தம்பி,
//அகிம்சையின் வலிமையை அந்த
இடத்தில் உணர முடிகிறது //
உண்மை..உண்மை..உண்மை..
நல்லா எழுதியுள்ளீர்கள்.
நல்ல பதிவு, நன்றி.
தம்பி,
படம் டவுன்லோட் செய்து பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்...
பார்த்துவிட்டு இதை படித்து என் கருத்தை சொல்கிறேன் ;)
I just loved this movie.
நன்றாக உள்ளது.
நீங்கள் சொல்லியதே போன்றே மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரது. என்ன பண்ணுறது......
பார்த்த எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றாங்க...பார்ப்போம்...
//சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது//
சேச்சிகளுக்கு உ.கு. கொடுத்த தம்பியைக் கண்டித்து துபாய் பஸ் ஸ்டாண்ட் நாயர் டீக்கடை முன் நடைபாதை மறியல் மற்றும் டீ குடிக்கும் போராட்டம் நடைபெறும்!!! :))
//சேச்சிகளுக்கு உ.கு. கொடுத்த தம்பியைக் கண்டித்து துபாய் பஸ் ஸ்டாண்ட் நாயர் டீக்கடை முன் நடைபாதை மறியல் மற்றும் டீ குடிக்கும் போராட்டம் நடைபெறும்!!! :)) //
ஒன்னு சொல்ல கூடாது உடனே நடைபாதை மறியல், டீ குடிக்கும் போராட்டம் என்று நம்ம பசங்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
தம்பி இருந்தாலும் நீ சொன்னது தப்பு தான்.
கப்பி எம்புட்டு நாளைக்கு தான் இப்படி போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பது, அதுனால டீ குடிக்கும் போராட்டத்தை விட்டுட்டு காபி குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம். உனக்கும் தான் காப்பி ரொம்ப பிடிக்குமுல
என்ன நான் சொல்லுறது
நன்றி சிவபாலன்!
//தம்பி,
படம் டவுன்லோட் செய்து பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்...
பார்த்துவிட்டு இதை படித்து என் கருத்தை சொல்கிறேன் ;) //
நீ பாத்துட்டு சொன்னாலும் பாக்காம சொன்னாலும் நான் எழுதிக்கிட்டே இருப்பேன்.
சில மாநிலங்களில் முன்னா பாய் திரைப்படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துள்ளார்கள். மிகச்சிறந்த படங்கள், கலைப்படங்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கு. பெருமைதானே. வெட்டி படம் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.
நன்றி வினையூக்கி!
சிவா,
//நீங்கள் சொல்லியதே போன்றே மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரது. என்ன பண்ணுறது......//
உங்களுக்குமா?, சேம் ப்ளட் :-)
//சேச்சிகளுக்கு உ.கு. கொடுத்த தம்பியைக் கண்டித்து துபாய் பஸ் ஸ்டாண்ட் நாயர் டீக்கடை முன் நடைபாதை மறியல் மற்றும் டீ குடிக்கும் போராட்டம் நடைபெறும்!!! :)) //
நாயர் கடைய காலி பண்ணி ரொம்ப நாள் ஆகுதுப்பா கப்பி! இன்னும் எத்தன காலத்துக்கு டீ, காபி, பொறை
போராட்டமெல்லாம்?
வித்யாசமா யோசிங்கப்பா உதாரணத்துக்கு டகீலா குடிக்கும் போராட்டம் இப்படி....
ம்ம்
ஸ்டார்ட் மீஜிக் :)
//தம்பி இருந்தாலும் நீ சொன்னது தப்பு தான்.//
என்ன தப்பு சிவா?
சேச்சின்னா ஓவர் வெட்கம், நீளமான கரு கரு கூந்தல், கொஞ்சம் உருண்டை முகம் கொஞ்சம் கிராமத்துக்கு களை, மேனி பொன்னிறமா இருக்கும், மாடர்ன் ட்ரஸ்ல நல்லாவே இருக்கமாட்டாங்க, இபடி சொல்லிக்கிட்டே போகலாம்
ஆனா வித்யாபாலன் அப்டி இல்லயே!
கொஞ்சம் கேரளா, கொஞ்சம் மும்பைனு கலந்து கட்டி கலங்கடிச்சிட்டாங்களே!
////சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது//
சேச்சிகளுக்கு உ.கு. கொடுத்த தம்பியைக் கண்டித்து துபாய் பஸ் ஸ்டாண்ட் நாயர் டீக்கடை முன் நடைபாதை மறியல் மற்றும் டீ குடிக்கும் போராட்டம் நடைபெறும்!!! :)) //
நானும் இதை ஆமோதிக்கிறேன்!!!
இது எங்களண்ணன் ஜொள்ளுப்பாண்டியை தாக்குவதாக உள்ளது ;-)
// தம்பி said...
//தம்பி இருந்தாலும் நீ சொன்னது தப்பு தான்.//
என்ன தப்பு சிவா?
சேச்சின்னா ஓவர் வெட்கம், நீளமான கரு கரு கூந்தல், கொஞ்சம் உருண்டை முகம் கொஞ்சம் கிராமத்துக்கு களை, மேனி பொன்னிறமா இருக்கும், மாடர்ன் ட்ரஸ்ல நல்லாவே இருக்கமாட்டாங்க, இபடி சொல்லிக்கிட்டே போகலாம்
//
அப்படியென்றால் அஸின், நயந்தாரா, கோபிகா பற்றி தங்கள் கருத்து எண்ணவோ???
//இபடி சொல்லிக்கிட்டே போகலாம்//
இன்னும் கொஞ்சம் சொல்லிக்கிட்டே போயி இருக்கலாம்.
எப்பா கப்பி, ஏற்கனவே அவரு கலங்கி போய் இருக்காராம். எப்பா நீ வேற போராட்டம் அது இது சொல்லி இன்னும் கலங்க அடிக்குற
//வித்யாசமா யோசிங்கப்பா உதாரணத்துக்கு டகீலா குடிக்கும் போராட்டம் இப்படி....
ம்ம்
//
எதுக்கு டகீலா குடிக்கும் போராட்டம் வச்சா நீயும் வந்து சேர்ந்துக்கவா?? யோவ் போராட்டமே உனக்கு எதிராகத்தான்யா..
அதுசரி..துபாயில டகிலா ச்சீப்பா?? :)))
//சேச்சின்னா ஓவர் வெட்கம், நீளமான கரு கரு கூந்தல், கொஞ்சம் உருண்டை முகம் கொஞ்சம் கிராமத்துக்கு களை, மேனி பொன்னிறமா இருக்கும், மாடர்ன் ட்ரஸ்ல நல்லாவே இருக்கமாட்டாங்க, இபடி சொல்லிக்கிட்டே போகலாம்
//
இதை வாபஸ் வாங்கும் வரை கண்டித்து அடைப்பிரதமன் குடிக்கும் போராட்டம்!!!
இருபது நிமிடமாக என் பின்னூட்டத்தை வெளியிடாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன் :-)
நீங்களும் இந்தப் படத்தைப் பற்றி பதிவிட்டு இருப்பது மகிழ்ச்சி:)
//அப்படியென்றால் அஸின், நயந்தாரா, கோபிகா பற்றி தங்கள் கருத்து எண்ணவோ???//
அசின் மட்டும் விதி விலக்கு, மத்த எல்லாரும் நான் சொன்ன ரகம்தான்.
//இது எங்களண்ணன் ஜொள்ளுப்பாண்டியை தாக்குவதாக உள்ளது ;-)//
இதுல எங்கய்யா தாக்குதல் இருக்கு, உட்டா நீங்களே வூடு பூந்து சொல்லிட்டு வந்துடுவீங்க போலருக்கு!
//எதுக்கு டகீலா குடிக்கும் போராட்டம் வச்சா நீயும் வந்து சேர்ந்துக்கவா?? யோவ் போராட்டமே உனக்கு எதிராகத்தான்யா..//
அதனாலென்ன நானும் சாயின் பண்ணிக்கிறேன் கப்பி ப்ப்ளீச்!
//இதை வாபஸ் வாங்கும் வரை கண்டித்து அடைப்பிரதமன் குடிக்கும் போராட்டம்!!! //
அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?
//இருபது நிமிடமாக என் பின்னூட்டத்தை வெளியிடாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன் :-) //
இதோ வந்திட்டேன், கொஞ்சம் கேப்பு உட மாட்டேங்கறீங்கலே ஒடனே ஆப்பும் கையுமா கிளம்பிருவீங்களே! :(
சாக்கிரதையாதான் இருக்கணும் போல!
நன்றி தேவ்!
நீங்களுமாவா? இதுக்கு முன்னாடி சந்தோஷ்தான் போட்டு இருந்தாரு வேற யாராவது பதிவிட்டு இருக்காங்களா?
எங்கள் தளபதியிம் தலைவி நயன்தாராவை பற்றியும் தப்பா பேசிட்ட...
தம்பி, ஒன்னும் சரியில்ல... எங்கப்பா அந்த ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணுங்க :-)
//இதுல எங்கய்யா தாக்குதல் இருக்கு, உட்டா நீங்களே வூடு பூந்து சொல்லிட்டு வந்துடுவீங்க போலருக்கு!
//
இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))
//அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?
//
இது அவங்க ஊரு பாயசம் ;)
//தம்பி, ஒன்னும் சரியில்ல... எங்கப்பா அந்த ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணுங்க :-)//
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆட்டோவா?
சின்னபுள்ளத்தனமா இருக்கே
//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))//
அந்த பல்லாயிரக்கணக்கானோர்ல சேச்சிகளும் உண்டா?
//அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?
//
//இது அவங்க ஊரு பாயசம் ;)//
பாயசத்துக்கே இந்த பில்டப்பா?
hi thambi nan vikadanil vimarsanam padichane..vaipu kidaicha parkanum..adhu sari enna thedeernu hindhi pdam lam parka arambichuteenga??
vimarsanathin idaiyidaiye thoovirirukira ungal comments m sooperb..neengalum vettipaiyalum solli vachu vimarsanam eludhneengala..appadiye namma pakam varradhu..ean namma pakkm ippolam varradhey illa?
yepppaa evalo periya post!
Naanum indha padatha paarthen! Indha kaalahula indha maadhiri ahimsai pathi, Gandhiji-ya pathi yaaruku dhairyam varum? Directora paaratanum adhukku!
Heroine Vidya Balan soooooooooperu!
நன்றி கார்த்திக், கண்டிப்பா வரேன் உங்க பக்கத்துக்கு!
//yepppaa evalo periya post!//
நிஜமாவா, இதுவே பெரிய போஸ்ட்ன்னு சொல்றீங்களே, சரி சரி அடுத்த முறை கம்மி பண்ணிடலாம்.
வருகைக்கு நன்றி கார்த்திக்.
கதிரு,
அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா....
//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))//
சாமிகளா என்னா கொடுமை இது...???
//அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா.... //
மிக்க நன்றி ராமண்ணே!
//சாமிகளா என்னா கொடுமை இது...??? //
எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,
இதில அடைப்பிரதமன் வேறயாம்! :))
//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,
இதில அடைப்பிரதமன் வேறயாம்! :)) //
கப்பி போட்ட தூண்டிலா அது.... ஏய் ஏதாவது மலையாள பிகரு மாட்டுதான்னு பாருங்கப்பா....
//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,
//
விமர்சனம் மட்டும் எழுதாம சேச்சிகளைப் பத்தி தப்பா சொன்னா சும்மா விட்ருவோமா?? ;))
///கப்பி போட்ட தூண்டிலா அது.... ஏய் ஏதாவது மலையாள பிகரு மாட்டுதான்னு பாருங்கப்பா....//
நீங்களுமா ராம்! என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு! கல்யாணக்களை இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா! :))
//விமர்சனம் மட்டும் எழுதாம சேச்சிகளைப் பத்தி தப்பா சொன்னா சும்மா விட்ருவோமா?? ;))//
நான் எங்கய்யா தப்பா சொன்னேன்?, பேசிக்கா நான் ஒரு அசின் வெறியன் தெரியுமா?, பாவனா பாதுகாவலனா வேற மாறலாம்னு ஐடியா இருக்கு!
தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!
//தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!//
அப்படியா?
அப்படியே நடிச்சா இந்தியில வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றி பெறுமா என்பது சந்தேகமே!
கலக்கலான விமர்சனம் தம்பி...இல்ல இல்ல.. படம் பற்றிய ஒரு தொகுப்பு.. படம் பார்த்த திருப்தியை தந்தது..
ம்ம்ம்ம்ம், ஃபோட்டோ பார்த்தால் "தம்பி" மாதிரித் தெரியலியே? அண்ணன் மாதிரி இல்ல இருக்கீங்க! :D
அது சரி, பாவனா போய் நமீதா வந்துட்டாளா? எப்போ?
Post a Comment