எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, October 01, 2006

ஒரு மூன்றெழுத்து வார்த்தை.

நண்பர்களே ஒரு மூன்றெழுத்து வார்த்தை
உலகம் முழுவது சுற்றி வருகிறது. அந்த
வார்த்தைகளை பற்றி நான் அறிந்ததை
சொல்லுகிறேன். நிச்சயமாக இது ஒரு
கவிதையாக இருக்காது அப்படி ஜல்லியடிக்கவும்
விரும்பவில்லை . உணர்வுகள் என்று சொல்லலாம்.
என் பார்வையை இங்கு பதிகிறேன். எப்படி
இருக்கிறது என்று சொல்லுங்கள்.

காதல் வயப்பட்டவனின் தனிமை நீளும் என்று
சொல்வார்கள் என் தனிமையை சோதிக்கவே காடு
நோக்கி சென்றேன். அவள் ஒற்றைப்பார்வையின் நீளம்
தெரிந்தது. அது என்னை கூட்டிச்சென்ற தூரமும்
தெரிந்தது, கூடவே அவள் என்னுடன் பயணிப்பாளா?
என்ற சந்தேகமும்.

Image Hosted by ImageShack.us

என்னுள்ளே தோன்றும் எண்ணங்களை அசை போடவும்
அதனை இனிமையானதாக மாற்றவும் இந்த தனிமை
பேருதவி செய்யும் என்ற எண்ணம்.

ஏன் இந்த தற்காலிக சந்தோஷத்திற்காக மனம்
எங்குகிறதென்பது இன்றுவரை விளங்கவில்லை.
படைப்பின் ரகசியமா?
அவள் பார்வையின் சூட்சுமமா?

தூறல் விட்டிருந்த இளமாலை நேரம். ஒரு
பார்வையற்றவனும் ரசிக்க உகந்த தருணம்.
இதற்கு முன் இந்த பரவச நிலையை நான்
எய்ததில்லை. எல்லாம் அந்த மூன்றெழுத்து
செய்யும் மாயம்.

அதோ அந்த இலையில் இருந்து விழும் கடைசி
சொட்டு மழை நீரை இதற்கு முன் பலமுறை
கண்டிருந்தாலும் இன்று ரசிப்பதுபோல முன்பு
ரசித்ததில்லை.

அரவமில்லாத காட்டில் உதட்டோரமாக இளநகையுடன்
சுற்றும் என்னை விநோதமாக நோக்கும் ஆடு மேய்க்கும்
இடைச்சிறுவர்கள்.

என் மேல் சேற்றை வாரியிறைத்துச் செல்லும் பேருந்தை
புன்னகயுடன் பார்க்கிறேன்.

மோன நிலையில் நான் இல்லாதிருந்தால் பேருந்தின்
கண்ணாடியை பதம் பார்த்திருக்கும் எனது கைகள்.

வியப்பாகவே உள்ளது இந்த மாற்றங்கள்.

எனக்கு அருகிலே சில மேகங்கள் கடக்கிறது
பல ஊர்கள் பல நாடுகள் பார்த்திருப்பாய்
இப்போது எங்கு உன் பயணம்?
என்னையும் கூட்டிப்போயேன் உன்னுடன்!

அம்மையிடமும், அப்பையிடமும், உடன் பிறந்தவர்களுடனும்,
நண்பர்களுடனும் உணர முடியா ஒரு நேசம் உன்னுடன்.

அதற்கு பெயர் என்ன?

உலகப் பொதுமொழியான காதல் என்று சொல்ல
விருப்பமில்லை. பூர்வஜென்ம தொடர்பு என்று
மழுப்பவில்லை.

காதல் என்று எதனை சொல்வது?

காவியங்களில் வருவதையா? படங்களில் சொல்வதையா?
எதன் மீதும் நம்பிக்கையில்லை எனக்கு. அது சொல்லும்
காதல்களிலும் பற்றில்லையெனக்கு.

நான் அடைந்த மாற்றங்களை நீயும் உணர்ந்தாலொழிய
இதற்கு விடையில்லை.

அதை நீ உணரும்முன் உன்னிடம் சொல்லப்
போவதுமில்லை. உணர்ந்த பின்னே சொல்ல
அவசியமிருக்காது.

ஒரே புள்ளியில் நாம்.

காதல் என்று எதனை சொல்லுவது?

திரும்ப இந்த கேள்வி என்னை துளைக்காது.

உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.

காதல் என்பது எதுவுமில்லை.

உணர்வுகளே வாழ்க்கை.

27 comments:

நன்மனம் said...

//அதை நீ உணரும்முன் உன்னிடம் சொல்லப்
போவதுமில்லை. உணர்ந்த பின்னே சொல்ல
அவசியமிருக்காது.

ஒரே புள்ளியில் நாம்.//

தக்க சமயத்தில் சொல்லாத வார்த்தைகள் பல இழப்புகளை தரும், அதை தாங்கும் உணர்வுகளும் இருக்க வேண்டும்.

நன்றாக இருந்தது படைப்பு.

Sivabalan said...

நல்ல பதிவு

நன்றி

கதிர் said...

//தக்க சமயத்தில் சொல்லாத வார்த்தைகள் பல இழப்புகளை தரும், அதை தாங்கும் உணர்வுகளும் இருக்க வேண்டும்.//

வார்த்தைகளில் சொல்வதைவிட உணர்வுகள் உணர்த்துவது வலிமையானதாக இருக்கும் என்பது என் கருத்து.

கருத்துக்கும் வருகைக்கு நன்றி நன்மனம்!

//நல்ல பதிவு//

நன்றி சிவபாலன்.

ராசுக்குட்டி said...

கவிதை நடையில் கதை... தம்பி இதற்குத்தான் தலைப்பு தேடிக்கொண்டிருந்தாயா... இந்த தலைப்பு பொருத்தமே

//கூடவே அவள் என்னுடன் பயணிப்பாளா?
என்ற சந்தேகமும்//

Why doubt? - சேம் பிளட் டோனில் படிக்கவும்

Anonymous said...

//வார்த்தைகளில் சொல்வதைவிட உணர்வுகள் உணர்த்துவது வலிமையானதாக இருக்கும் என்பது என் கருத்து. //

சிறப்பாகச் சொன்னீர்கள் !

சரி, மகிழ்வு, தனிமை, சோகம், பயம், இனிமை என ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பேர் சொல்லுகையில்,
//ஒரே புள்ளியில் நாம்.//
எனும்போதாவது அதைக் காதல் என்று ஒருமுறை சொல்லக்கூடாதா?

நாமக்கல் சிபி said...

தம்பி,
உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்குனு தெரியாம போச்சே!!!

சொல்லாத காதல் செல்லாதுப்பா!!! சீக்கிரம் சொல்லிடு!!! புரியுதா???

கதிர் said...

//ராசுக்குட்டி said...
கவிதை நடையில் கதை... தம்பி இதற்குத்தான் தலைப்பு தேடிக்கொண்டிருந்தாயா... இந்த தலைப்பு பொருத்தமே

//கூடவே அவள் என்னுடன் பயணிப்பாளா?
என்ற சந்தேகமும்//

Why doubt? - சேம் பிளட் டோனில் படிக்கவும்//

தலைப்புக்கா பஞ்சம், இன்னிக்கு கைப்புள்ள வச்சிருக்காரு பாருங்க ஒரு தலைப்பு, அது மாதிரி நம்மளுக்கு தோணவே மாட்டேங்குது!

சேம் ப்ளட்!!

அவ்வ்வ்வ்வ்வ் :((

கதிர் said...

// முரட்டுக்காளை said...
//வார்த்தைகளில் சொல்வதைவிட உணர்வுகள் உணர்த்துவது வலிமையானதாக இருக்கும் என்பது என் கருத்து. //

சிறப்பாகச் சொன்னீர்கள் !

சரி, மகிழ்வு, தனிமை, சோகம், பயம், இனிமை என ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பேர் சொல்லுகையில்,
//ஒரே புள்ளியில் நாம்.//

//எனும்போதாவது அதைக் காதல் என்று ஒருமுறை சொல்லக்கூடாதா? //

ஒரு புள்ளியிம் நாமிருக்கும்போது காதல் மட்டும்தான் நம்மை சேர்த்ததென்று சொல்ல முடியவில்லை, ஒருமித்த உணர்வுகள்தாம். காதல் என்று சொன்னாலும் தவறில்லை!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்!

கதிர் said...

//வெட்டிப்பயல் said...
தம்பி,
உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்குனு தெரியாம போச்சே!!!//

அப்போ இவ்வளவு நாளா என்னனு நினச்ச வெட்டி?


//சொல்லாத காதல் செல்லாதுப்பா!!! சீக்கிரம் சொல்லிடு!!! புரியுதா???//

யாருகிட்ட?

சும்மாருப்பா வெட்டி!

நான் சொன்னதெல்லாம் வெறும் கற்பனை!

நமக்கான தேவதை இன்னும் பிறக்கலை!

:)))

கப்பி | Kappi said...

kalakkal thambi..

கதிர் said...

வாங்க கப்பி அவர்களே!

வாரக்கடைசி நாள நல்லா என்சாய் பண்றிங்களா?

ரொம்ப நாளா ஆளையே காணுமே!!

Chandravathanaa said...

அழகாக உணர்வுகளை வெளிப் படுத்தயிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கதிர் said...

//அழகாக உணர்வுகளை வெளிப் படுத்தயிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.//

நன்றி சந்திரவதனா அவர்களே!

உங்களை போன்ற பெரியவர்கள் ஊக்கப்படுத்துவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

Anonymous said...

காதல் என்பது உணர்வென்றால் உணர்வை என்னவென்று சொல்வாய்?

கருப்பு said...

நல்ல படைப்பு.

கதிர் said...

நன்றி கருப்பு!

கைப்புள்ள said...

//ஒரே புள்ளியில் நாம்.

காதல் என்று எதனை சொல்லுவது?

திரும்ப இந்த கேள்வி என்னை துளைக்காது.

உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.

காதல் என்பது எதுவுமில்லை.

உணர்வுகளே வாழ்க்கை//

அருமையா எழுதிருக்கீங்க தம்பி. பாராட்டுகள்.

கதிர் said...

நன்றி கைப்ஸ்!!

நவீன் ப்ரகாஷ் said...

//உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.
காதல் என்பது எதுவுமில்லை.
உணர்வுகளே வாழ்க்கை.//

மிக அழகாக உள்ளது தம்பி ! தொடருங்கள்...

கதிர் said...

// Naveen Prakash said...
//உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.
காதல் என்பது எதுவுமில்லை.
உணர்வுகளே வாழ்க்கை.//

மிக அழகாக உள்ளது தம்பி ! தொடருங்கள்... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நவீன் பிரகாஷ்.

லொடுக்கு said...

தம்பி எங்கேயே போயிட்டீங்க. நல்ல இருக்குங்க.

//நமக்கான தேவதை இன்னும் பிறக்கலை!
//

மவனே! இன்னும் இருபது வருசத்துக்கு கல்யாணம் பண்ணக்கூடாது ஆமா!! அப்படி எதாச்சும் நடந்துச்சு, போலிஸ்ல புகார் தான்...

கதிர் said...

//தம்பி எங்கேயே போயிட்டீங்க. நல்ல இருக்குங்க. //

நன்றி லொடுக்கு!

//நமக்கான தேவதை இன்னும் பிறக்கலை!
//

இப்படிசொல்லியே காலத்தை ஓட்டிடணும். கல்யாணம் பண்ணோம் அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.

//மவனே! இன்னும் இருபது வருசத்துக்கு கல்யாணம் பண்ணக்கூடாது ஆமா!! அப்படி எதாச்சும் நடந்துச்சு, போலிஸ்ல புகார் தான்...//

ஏன் இந்த கொலவெறி?

அப்படியே இன்னும் இருவது வருசத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி என்னத்த பண்ண போறேன்?

Unknown said...

//எனக்கு அருகிலே சில மேகங்கள் கடக்கிறது
பல ஊர்கள் பல நாடுகள் பார்த்திருப்பாய்
இப்போது எங்கு உன் பயணம்?
என்னையும் கூட்டிப்போயேன் உன்னுடன்!//
தம்பி இந்த வரியினை நான் மிகவும் ரசித்தேன்

காதலித்தால் எல்லாமே அழகு
காதலிப்பதால் நீயும் அழகு

ம்ம்ம் எதோ காதல் பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்குக் காத்திருப்பது போல் தெரிகிறது. அட்மிஷன் கிடைக்க என் வாழ்த்துக்கள்

கதிர் said...

Dev said...
//எனக்கு அருகிலே சில மேகங்கள் கடக்கிறது
பல ஊர்கள் பல நாடுகள் பார்த்திருப்பாய்
இப்போது எங்கு உன் பயணம்?
என்னையும் கூட்டிப்போயேன் உன்னுடன்!//

//தம்பி இந்த வரியினை நான் மிகவும் ரசித்தேன்//

நன்றி தேவ், எப்பவாச்சும் ஒருமுறைதான் இந்த மாதிரி சிந்தனைகள் வரும் வந்த உடனே எழுதினேன்.

//ம்ம்ம் எதோ காதல் பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்குக் காத்திருப்பது போல் தெரிகிறது. அட்மிஷன் கிடைக்க என் வாழ்த்துக்கள்//

அப்டிலாம் இல்லீங்ணா!

கதிர் said...

அட்டகாசம்..

// என் மேல் சேற்றை வாரியிறைத்துச் செல்லும் பேருந்தை புன்னகயுடன் பார்க்கிறேன் //

சிறப்பான நடையில் உணர்வுகளை வெளிப் படுத்தயிருக்கிறீர்கள் ..

நன்றி சந்திர சேகரன்.

//ஆனாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்று எனக்கு ஒரு ஐயம்..//

மலையில பாத்தீங்கன்னா மேகம் ஒரு புகை மாதிரி தெரியும் அங்க யாராவது நெருப்பு வச்சிட்டாங்களா என்ன?

ஐயம் தீர்ந்ததா?

நாகை சிவா said...

மூன்றெழுத்து வார்த்தை என்றவுடன் நட்பு என்று நினைத்தேன். சரி விடுங்க. அதுக்கு இதுக்கும் ஒன்னும் பெரிசா வித்தியாசம் இல்ல

கதிர் said...

//மூன்றெழுத்து வார்த்தை என்றவுடன் நட்பு என்று நினைத்தேன். சரி விடுங்க. அதுக்கு இதுக்கும் ஒன்னும் பெரிசா வித்தியாசம் இல்ல.//

வாங்க சிவா,

நட்பை பத்தியும் எழுத நிறைய இருக்கு, பின்னால எழுதணும்.