எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, October 17, 2008

ஜனனி


வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள்.
பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த
விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள்.
இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல்
போர் தொடுப்பதாக எண்ணம். போர் என்பது
ஒரே ஒரு அடி மட்டுமே. பொருட்களின் மீது
கம்பு பட்டெழும் வினோதமான ஒலியை
ரசித்தவாறு முன்னேறுகிறாள். ஜடப்பொருட்கள்
யாவும் அவள் முன் மண்டியிட்டன. எதிர்ப்புகள்
இல்லாத இப்போரில் குதூகலம் அடைந்திருந்தாள்.
ராணியைப் போன்ற தோரணையுடன் என்னருகே
வருகிறாள். துயிலிலாழ்ந்து மேலெழும் முதுகில்
அடித்தபோது அவ்வினோதமான ஒலி இல்லை.
ஏமாற்றமடைந்தவள் பலம் கொண்ட மட்டும் கம்பை
வீசுகிறாள். துயிலகன்ற கோபத்தில் என் விழிகள்
அவளைப் பார்க்கிறது. சற்றுமுன்னிருந்த மகிழ்ச்சியின்
வேர்களனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
இரு கீழிமையின் விளிம்புகளிலும் நீர்த்தேக்கம்.
எந்நேரமும் வெடித்துக்கிளம்பலாம்
என்ற அழுகை முகம். ஆதூரமாய் அணைக்கிறேன்
மார்பில் அவளின் இளஞ்சூடான கண்ணீர்த்துளிகள்.

7 comments:

Unknown said...

அந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தை நானும் உணர்கிறேனே. அருமை.

தமிழன்-கறுப்பி... said...

மனதை தொடுகிறது...

KARTHIK said...

அருமை.

சென்ஷி said...

:))

:((

கதிர் said...

நன்றி சுல்தான், தமிழன் கறுப்பி, கார்த்திக், சென்ஷி

கப்பி | Kappi said...

அருமை!!

ஜியா said...

:)) அருமை!!