
வடக்கு வாரிக்கொண்டு போகும்
தெற்கு தேய்த்துக்கொண்டு போகும்
கிழக்கு கிழித்து விட்டுப் போகும்
மேற்கு மிதித்து விட்டாவது போகும்
உறங்குவதற்கு எதாவது ஒரு திசையை
தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும்.
முதலில் வடக்கு கிழக்காகத்தான் படுத்திருந்தேன்
நசுங்கிய "ட" வடிவில் உறங்குவதற்கு ஏற்றதாக இல்லை.
கிழக்கு தெற்காக முயற்சித்தபோது அதுவும் நசுங்கிய
"ட" என்ற வடிவிலே அமைந்துபோனது ஆச்சர்யம்.
ஒன்றிலிருந்து நூறு வரை உதடு குவித்ததில்
எண்களின் குழப்பம்...
மறுபடி மறுபடி முயற்சித்ததில் தோல்வி.
எட்டாவது முயற்சியில் நூறு சாத்தியமானது.
ஸ்ரீராமஜெயம்
அர்ஜுனா
இருட்டில் கண் அகல விரித்து எதையோ தேடுதல்
விருப்பப்பாடலை உரக்கப் பாடுதல்
பாட்டியின் மிதமான முதுகு தட்டல்
போன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது
உன் நினைவு தந்தது
கண் நிறைக்கும் கனவுறக்கம்.
4 comments:
\\
இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது
உன் நினைவு தந்தது
கண் நிறைக்கும் கனவுறக்கம்
\\
அந்த நினைவுகளுக்குதான் அவ்வளவு சக்தி இருக்கு...!
//VSOP 9002 கவுஜ //
Apdiina??
தமிழன்
சில சமயத்துல எங்க கெமிஸ்ட்ரி டீச்சர நெனச்சா கூட நல்லா தூக்கம் வரும். :)
ஜியா
நீ உண்மையாவே பச்ச புள்ளயா... இல்ல பசப்புற புள்ளயா?
//இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது
உன் நினைவு தந்தது
கண் நிறைக்கும் கனவுறக்கம்.//
கதிர்,
ரொம்ப feel செஞ்சு எழுதி இருக்கீங்க......
என்ன விஷயம்..
:))
Kathir.
Post a Comment