எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, December 15, 2007

ரகசியத் தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்.


நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
எனக்கென்று எந்த கவலைகளும் இல்லாவிட்டாலும் கூட நீண்ட நாள் இந்த
தவறான புரிதல் சங்கடத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் போல
தோன்றியது. எங்கோ ஓர் இடத்தில் நான் அவனை கவர்ந்திருக்கலாம் ஆனால்
அந்த கணம் அவனால் மறக்க முடியாததாகவும் நான் நினைத்தேயிராத பல
மாற்றங்களை தரும் என்று நினைக்கவில்லை. வாழ்க்கையில் நான் எவற்றுக்கும்
கவலைப்பட்டதே இல்லை. எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சில
மணித்துளிகளில் இயல்புக்கு திரும்பி விடுவதை என்னை அறிந்த நாள் முதல்
எனக்கு தெரியும். சில சமயங்களின் இதை வரமாக சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.
சிலர் ஜடம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் நான்
நானாகவே இருந்து வருவதில் எனக்கு கர்வம் அதிகம். ஆனால் நேற்று நடந்த
சம்பவங்களும் முன் நடந்த சிறு சிறு நிகழ்வுகளும் என்னை மிகுந்த மன
உளைச்சலுக்கு தள்ளின. முன்னெப்போதும் இதுபோன்ற அவஸ்தை இருந்ததில்லை.

அவனை அலுவலகம் சேர்ந்த நாள் அன்றே கவனித்தேன். சிறு சிறு வேலைகளிலும்
நேர்த்தி தெரிந்தது. நட்பான முகம். கீழ் பணிபுரிபவர்களிடம் சாத்வீகமான முறையில்
பேசி வேலை வாங்கும் திறமை எல்லாம் அவனை மிகுந்த திறமையுள்ளவனாக
காட்டின. பாசாங்கில்லாத நேசமுகம் என்று முதல் சந்திப்பிலேயே உறுதி செய்து
கொண்டேன்.

எப்படி எங்களுக்குள் நட்பு ஆரம்பித்தது என்று நினைவில்லை. அதேபோல
எப்போது அவன் என்னை தன் துணை என்று மற்றவர்களிடம் கூற ஆரம்பித்தான்
என்றும் நினைவில்லை. அது எனக்கு தெரிய வந்தபோது சிறிதாக அதிர்ச்சி
தோன்றி மறைந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொல்லக்கேட்டவர்கள்
வந்து என்னிடம் சொன்னவர்களின் அறிவுரையாக "அவனிடம் பழகாதே அவன்
ஒரு மாதிரி" என்று லேசாக எச்சரித்தார்கள். என் அலுவலகத்தோழி கூட
என்னை மாறுகண் கொண்டு கண்ணடிப்பதை எவ்விதத்தில் சேர்ப்பது என்று
குழம்பிப்போனேன்.

அவனே என்னிடம் நேரில் வந்து சொல்லும்போது பதிலாக என்ன தருவது
என்பதை யோசித்தும் இருள் கவிழ்ந்த திரைகளே முன் தோன்றின. அதிக
எதிர்பார்ப்புகள்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம். நட்பைத்தவிர
எவ்விதத்திலும் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதேபோல அவன்
என்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்று புரியவில்லை.

எனக்கு அவனிடத்தில் பிடித்ததாக சில காரணங்கள் இருந்தன. அடர்ந்த மிருதுவான
படிய வாரிய கேசம், கடக்கும்போது வீசும் மெல்லிய நறுமணம். எல்லா செய்கையிலும்
தான் ஒரு நேர்த்தியாளன் ஒரு தேர்ந்த மனையாள் தன் கணவன் தேவையை முன்
கூட்டியே அறியும் வல்லமை பெற்றவள் போல முகபாவங்களை வைத்தே
வார்த்தைகளை அறியும் சக்தி அவனிடம் இருந்தது. அவனிருக்கும் இடத்தில் நிறைய
பேச்சுகள் இருக்காது. வந்த சிலநாட்களில் அவனிடமிருந்து பலரும்
இப்பயிற்சியை பெற்றிருந்தனர்.

என்னை என்னையன்றி யார் பார்த்துக்கொள்ள முடியும் என்ற வார்த்தையினை
தத்துவார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு பலரிடம் பெருமையடித்துள்ளேன்.
அவ்வெண்ணத்தை தகர்த்தெறிவது போல நான் காய்ச்சலில் வீழ்ந்த நான்கு நாட்களில்
வீட்டுக்கே வந்து அத்தனை உதவிகள் செய்தபோதுதான் நட்பையும் மீறிய
ஏதோவொன்று வந்தது. நன்றி கூறவில்லை.

அதன்பிறகு எங்கள் நட்பு பலம்பெற்றது. எங்கு செல்கினும் துணை அவனே என்றாகிப்
போனது. பெரும்பாலும் சாப்பிடவோ, சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்லவோ, ஆடை
வாங்கவோ என சென்றது. இதற்கிடையில் அலுவலகத்திலும், நண்பர்களுமே கூட
அவனே சொன்னதாக சொன்ன தகவல்கள்தான் என் அத்தனை ஏமாற்றங்களுக்கும்
காரணம். இது நிகழக்கூடிய ஒன்றாக நான் கற்பனை செய்யவில்லை. ஆனால் பிறர்
எச்சரித்ததனை கவனமெடுத்திருக்கலாம்.

பார்களுக்கு சென்று மதுவருந்துவதில் எனக்கு உடன்பாடில்லை தவிர ராப் இசை
ஒலிக்க பாலின பேதமின்றி ஆடும் ஆட்டம் மிகுந்த தலைவலியை கொடுப்பதாகவும்
மூன்றாவது முறை சென்ற போது உணர்ந்தேன். ஆகவே அவனை வீட்டிற்கு
அழைத்தேன். மிக நிறைய பேசினோம் என்பதை விட அதிகமாக குடித்தோம்
என்பதுதான் சரி. மிதமிஞ்சிய போதையில் உன் நட்பு எனக்கு சமீப கால
சந்தோஷங்களில் ஒன்று என்றான். பிரியும்போது என் உதடுகளில்
அழுந்த முத்தமிட்டான்.



அன்றே எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது. இவ்வித உறவில் தவறோ, சரியோ என்ற
விவாதத்தில் போகாமல் இதை நான் விரும்பவில்லை என்பதை அவனிடம் நான்
மிகுந்த கவனத்தோடு சொல்லவேண்டும். இதில் பரிகாசங்களுடனான வார்த்தைகள்
வந்து விழுந்து விடக்கூடாது என்று எனக்குள்ளே பல குறிப்புகள் எடுக்க துவங்கினேன்.
பிறர் நிராகரிப்பின் வலியைப்போல என்னுடைய விளக்கமும் அவனுக்கு அமைந்து
விடக்கூடாது என்பதை அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொண்டேன். பழையபடியிலான
நட்பை தொடரமுடியும் என்ற குழந்தைத்தனமான நம்பிக்கை மீது இப்போது எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருநாள் அவனுடன் காபி சாப்பிடும்போது முத்தத்தை பற்றியும் அவன் தவறான
புரிதலைப் பற்றியும் மனக்குறிப்புகளின்படி வார்த்தைகளாக்கிக் கொண்டிருந்தேன்.
திடீரென எழுந்தவன் காபியை முகத்தில் எறிந்து விட்டு கெட்ட வார்த்தையொன்றை
உதிர்த்து விட்டுச்சென்றான். அவனின் ஏமாற்ற முகத்தை அன்று காண நேர்ந்தது.

அரசு உத்தியோகத்திற்காக மனுக்கள் எழுதிப்போட்டு வீட்டிலிருந்த காலம் அது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான சாலைவசதியை சிரமேற்படுத்தி
செய்துகொண்டிருந்தார் கனத்த முதலீடு செய்த எம்.எல்.ஏ. சாக்குப்பைகளும், டயர்
கால்களுமாக பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ரோடு ரோலரில் தார் ஒட்டிவிடாமல்
இருக்க அதன் மீது தண்ணீரை ஊற்றியபடி வந்துகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.
அவள் உடலுக்கு சற்றும் பொருந்தவில்லை அந்த புடவை. வேலையின் காரணமாக
உடல் கட்டித்துப் போயிருக்கலாம். கவனமின்றி பள்ளி நண்பனுடன் கடக்கையில்...

சேகர் அது நம்ம கூட படிச்ச வேலாயுதம் மாதிரி இல்ல? என்றேன். சேகர் எதையும்
கவனிக்காதது போல நடந்து கொண்டிருந்தான். அவனிடம் கேட்கவில்லை என்பது
போல முகத்தை எங்கோ செலுத்தி இருப்பதை கவனித்து விட்டு மீண்டும் அந்த
சேலைப்பெண்ணை பார்த்தேன்.

"கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அது வேலாயுதம்தான். என்னைப் பார்த்த
அவள் கண்களில் என்னால் உணர முடிந்தது. அவனின் கண்கள் மிக விசேஷமானவை
எதையோ எதிர்பார்க்கும் அவை. ஒரே வித்தியாசம் அவன் கண்கள் அவள் கண்களாகி
எனக்கு அந்நியப்படுத்தியது. நான், வாத்தியார் உட்பட ஏகப்பட்ட கிண்டல்கள்,
கேலிகளால் ஒன்பதாவதோடு நின்று போனான். பிறகு இப்போதுதான்
சேலை கட்டி பார்க்கிறேன்.

"தண்ணிய ஊத்துடா அங்க என்ன அவன மொறச்சி பாத்துகிட்டு இருக்க? அவன்
என்ன ஒம்மாமனா? என்றபடி அவளை ஏசினான் எம்.எல்.ஏ.

ரோலர் சத்ததையும் மீறி தட தடவென சிரித்தனர்.

திடுக்கிட்டவள் வெடுக்கென்று கழுத்தை வெட்டி இழுத்து "ம்ஹீம்" என்ற முனகலோடு
தண்ணீரை ரோலரில் ஊற்ற ஆரம்பித்தாள்.

எதற்கு இப்போது வேலாயுதம் முகம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
காபித்தண்ணீர் முகத்தில் பிசுபிசுத்து என் முகம் மிகவும் விகாரமாகி விட்டதைப்
போல உணர்ந்தேன் துடைக்க மனமின்றி.

சர்வேசர் போட்டிக்காக

26 comments:

CVR said...

நச் போட்டிக்கா???
Nicely narrated! :-)

கோபிநாத் said...

பெரிய எழுத்தாளராக ஆயிக்கிட்டு இருக்க ராசா...நன்றாக இருக்கு

வாழ்த்துக்கள் ;)

கதிர் said...

cvr
நச்சுன்னா இருக்கு? :(
தாங்க்ஸ் பா!

எலேய் கோபி!

//பெரிய எழுத்தாளராக ஆயிக்கிட்டு இருக்க ராசா...நன்றாக இருக்கு//

இதுக்கு எம்புட்டு செலவாச்சின்னு யாராச்சும் வந்து கேப்பாங்கன்னுதான் இது மாதிரி கமெண்ட் போடற நீ.

கதிர் said...

சர்வேசர் சார்!
பெரிய மனசு பண்ணி நச்சுன்னு இதையும் உங்க போட்டில சேத்துக்கங்க சார்!

நிஜமா இத போட்டிக்காக எழுதல, ஆனா போட்டின்னு சொல்லிட்டதுனால இதையும் போட்டிக்கும் அனுப்பறேன்.

எத்தனை போட்டி...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல படைப்பு.. மிக மென்மையான அதேசமயம் ஒரு அழுத்தமான கதைக்களம்.. வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//கோபிநாத் said...

பெரிய எழுத்தாளராக ஆயிக்கிட்டு இருக்க ராசா...நன்றாக இருக்கு

வாழ்த்துக்கள் ;)//

ஏலேய் கோபி! என்ன இது

என்ன இதுனு கேட்டேன்..

அவன் ஏற்கனவே ஆகிட்டான். அதுவும் சாதாரண எழுத்தாளர் இல்லடே... இலக்கியவாதி...

நாகை சிவா said...

தம்பி!

நேத்து கதை எழுதலையா கேட்டது ஒரு குற்றமா?

ஒரு புதிய கோணத்தில் இருந்து சொல்லி இருக்க. பலருடைய மனசுக்கு இருக்கின்றவைகள் தான் இவை. ஆனால் அதை வெளியில் சொல்வது இல்லை. நீ சொல்லிட்ட.

போட்டிக்குனு வேற சொல்லிட்ட...

வாழ்த்துக்கள்

Anonymous said...

எலே நீயெல்லாம் ஒரு ஆளா

தலைப்பு உபயம் அய்யனார் னு போடுலே..உனக்காக மெனக்கெட்டு ஒரு தலைப்ப யோசிச்சி தந்தேன் இப்படி பண்ணிட்டிய்யே ...

குசும்பன் said...

எல்லாம் ஒரு மார்கமாதான் டே அலையுறீங்க! நான் கூட அய்யனார் பதிவுக்கு தான் தப்பு தவறி வந்துட்டோமோ என்று நினைச்சுட்டேன் ஒரு நிமிசம். அம்புட்டு "அருமையா" எழுதி இருக்க ராசா!!!

அந்த பெங்காலி காரனை கூப்பிட்டு உப்பு மிளகாய் சுத்தி போட சொல்லு. கண்ணு பட்டுவிட போகுது!!!

குசும்பன் said...

//நாகை சிவா said...
தம்பி!

நேத்து கதை எழுதலையா கேட்டது ஒரு குற்றமா?//

இதுக்கு நீங்கதான் காரணமா புலி ஏதோ ஒரு ஊராக போய்விட்டோம் அதனால் உங்களை ஒன்னும் சொல்லாமல் $#$#$@@@#%$^^^$%$% மட்டும் சொல்லிட்டு கிளம்புறேன்.

கதிர் said...

//எலே நீயெல்லாம் ஒரு ஆளா//

ஏன்யா மானத்த வாங்கற?

//தலைப்பு உபயம் அய்யனார் னு போடுலே..உனக்காக மெனக்கெட்டு ஒரு தலைப்ப யோசிச்சி தந்தேன் இப்படி பண்ணிட்டிய்யே ...//

பெரிய வெங்காய தலைப்பு கொடுத்துட்டாரு. இதுல நன்றி வேற போடணுமாம்.

சரி இந்த அழகான தலைப்ப கொடுத்த பீனாவானா பிதாமகன் அய்யனாருக்கு நன்றிகள் பல.

பாச மலர் / Paasa Malar said...

தலைப்பு மட்டுமல்ல..கதையும் களமும் கருவும் வித்தியாசமாய்...பாராட்டுகள்.

manjoorraja said...

அன்பு தம்பி,

சில நாட்களுக்கு முன்பு நாம் பேசிக்கொண்டிருந்தப்பொழுது உன் எழுத்தில் மாற்றம் தெரிகிறது என்பதை உனக்கு சொன்னப்போது, ஏதோ சொல்லி மழுப்பிவிட்டாய். ஆனால் இன்று இந்த சிறுகதையின் மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. வளர்ச்சி நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.

அய்யனார் ஆசிப் போன்றவர்களின் நட்பும் உனது இந்த மாற்றத்திற்கு தூண்டுக்கோலாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.

கதிர் said...

//நல்ல படைப்பு.. மிக மென்மையான அதேசமயம் ஒரு அழுத்தமான கதைக்களம்.. வாழ்த்துக்கள்//

கருத்துக்கு நன்றி கிருத்திகா.

//அவன் ஏற்கனவே ஆகிட்டான். அதுவும் சாதாரண எழுத்தாளர் இல்லடே... இலக்கியவாதி...//

அப்படிலாம் திட்டக்கூடாது புலி.

//ஒரு புதிய கோணத்தில் இருந்து சொல்லி இருக்க. பலருடைய மனசுக்கு இருக்கின்றவைகள் தான் இவை. ஆனால் அதை வெளியில் சொல்வது இல்லை. நீ சொல்லிட்ட.

போட்டிக்குனு வேற சொல்லிட்ட...//

நன்றி புலி.

//வாழ்த்துக்கள்//

மீண்டும் நன்றி.

கதிர் said...

//எல்லாம் ஒரு மார்கமாதான் டே அலையுறீங்க! நான் கூட அய்யனார் பதிவுக்கு தான் தப்பு தவறி வந்துட்டோமோ என்று நினைச்சுட்டேன் ஒரு நிமிசம். அம்புட்டு "அருமையா" எழுதி இருக்க ராசா!!!//

திருப்பக்கதைச்செம்மல் சொன்னா சரியாதான் இருக்கும்.

//அந்த பெங்காலி காரனை கூப்பிட்டு உப்பு மிளகாய் சுத்தி போட சொல்லு. கண்ணு பட்டுவிட போகுது!!!//
உனுக்குதான் எம்மேல எம்புட்டு பாசம்...

//தலைப்பு மட்டுமல்ல..கதையும் களமும் கருவும் வித்தியாசமாய்...பாராட்டுகள்//

பாராட்டுகளுக்கு நன்றி பாசமலர்!

கதிர் said...

//அன்பு தம்பி,

சில நாட்களுக்கு முன்பு நாம் பேசிக்கொண்டிருந்தப்பொழுது உன் எழுத்தில் மாற்றம் தெரிகிறது என்பதை உனக்கு சொன்னப்போது, ஏதோ சொல்லி மழுப்பிவிட்டாய். ஆனால் இன்று இந்த சிறுகதையின் மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. வளர்ச்சி நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.//

வாங்க மஞ்சூர் அண்ணா!

ஏதேதோ சொல்றிங்க சந்தோஷமா இருக்கு. நன்றி...

//அய்யனார் ஆசிப் போன்றவர்களின் நட்பும் உனது இந்த மாற்றத்திற்கு தூண்டுக்கோலாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.//

இதுவும் உண்மையே!

மிக்க நன்றி.

ஆடுமாடு said...

நல்லா இருக்கு. தொடர்ந்து படியுங்கள். இன்னும் எழுத்து செம்மை பெறும்.

கப்பி | Kappi said...

அருமை தம்பி!! கலக்கல் கதை!!

சுரேகா.. said...

படித்துக்கொண்டிருக்கும்போதே...

நரேந்திரன்
அமலநாதன்
ஜெயராமன்...

என்று முகங்கள் வந்துபோனதுதான் இதன் வெற்றி...

தம்பி...பேரன்பும் பெருங்கற்பனையும் கொண்டவன் னு போடுங்கப்பு..! அதுதான் பொருத்தம்..

இராம்/Raam said...

கதிரு,

அட்டகாசம் மக்கா.... ரொம்ப நல்லாயிருந்துச்சு... :)

Anonymous said...

நான் கூட அய்யனார் பதிவுக்கு தான் தப்பு தவறி வந்துட்டோமோ என்று நினைச்சுட்டேன் ஒரு நிமிசம். அம்புட்டு "அருமையா" எழுதி இருக்க ராசா!!!

I thought too...till I get to Comments section....(I am not a fan of Aiyannar, but yours :))

Great work.

SurveySan said...

added to the potti.

will read story and comment later. have to rush now :)

நாடோடி இலக்கியன் said...

இலக்கியத் தரமிக்க எழுத்து நடை!
//எங்கோ ஓர் இடத்தில் நான் அவனை கவர்ந்திருக்கலாம் ஆனால்
அந்த கணம் அவனால் மறக்க முடியாததாகவும் நான் நினைத்தேயிராத பல
மாற்றங்களை தரும் என்று நினைக்கவில்லை//

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்.
வாழ்த்துகள் நண்பரே!!!!

SurveySan said...

நல்லா இருந்தது.

சில இடங்கள், ஹெவியா இருந்தது. அதாவது, எனக்கு ரெண்டு தடவ படிச்சாதான் அந்த இடங்கள் புரிஞ்சுது.


//என்னை என்னையன்றி யார் பார்த்துக்கொள்ள முடியும் என்ற வார்த்தையினை
தத்துவார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு பலரிடம் பெருமையடித்துள்ளேன்.//

Nithi said...

கதயை ஒரு புதிய கோணத்தில் இருந்து சொல்லரீங்க,வாழ்த்துக்கள்

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கதை தம்பி....

கொஞ்சம் பிசகினாலும் வேறு மாதிரி ஆகிவிடக்கூடியக் கதைக்களத்தில் அருமையா கதைய நகர்த்திக் கொண்டு போய்ருக்கீங்க....

வாழ்த்துக்கள்!!!