எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, December 01, 2007

பூம்பாவாய் ஆம்பல்...ஆம்பல்..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்

அதிக சிரமமின்றி அறையில் நுழைந்திருந்த சூரிய வெளிச்சம் சிகரெட் புகை வளையங்களை தனித்து அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது. விரலை சுடப்போகும் நெருப்புச்சாத்தானை பற்றிய பிரக்ஞை இல்லாமல் சுரேஷ் தன் சிந்தனைகளில் மாட்டிக்கொண்டிருந்தான்.

'சர்வசாதாரணமா ஆளாள்கிட்ட பொய் சொல்றவளுக்கு, தேடுபொறியில அவ பேர போட்டு தேடுனா இருக்குற ஆர்குட் லிஸ்ட் எல்லாத்தையும் காட்டிடும்ன்னு தெரியாமலா இருக்கும். சரி, இந்த விஷயத்த அவ ஏதோ ஜாலிக்காகவோ, இல்லை ஏமாத்தனும்ன்னோ செய்யறதா இருக்கட்டும். ஆனா அவளோட ப்ரொஃபைல்ல தன் மனைவி பெயர் எப்படி வந்தது. இப்போது ஏமாந்து கொண்டிருப்பது அவளா, நானா, இல்லை என் மனைவியா!
ஏன் ஆம்பல், சுரேஷ்ங்கற பெயர்ல இருக்கறவங்கள மட்டும் குறி வச்சிருக்கா? சுரேஷ்ங்கறவன் அவளை காதலிச்சு ஏமாத்திட்டானா.... இல்ல... இல்ல...'

ஆம்பல் யாரென்ற எண்ணத்தை விட தன் மனைவி எப்படி இதில் வந்தாள் என்ற விஷயம்தான் அவனுக்கு பிடிபடாமலே இருந்தது. மற்ற சுரேஷ்களிடம் இதைப்பற்றி மெயில் அனுப்பி விசாரிக்கவும் பயமாக இருந்தது. ஏனெனில் 5 நாட்களுக்கு முன்பு வரை ஆம்பலை பற்றி யாரென்ன சொன்னாலும் தானே நம்பியிருக்க மாட்டான்.. அல்லது தான் விசாரிப்பது ஆம்பலுக்கு தெரிந்து அதனால் வேறு ஏதேனும் பிரசினைகள் வரக்கூடும் என எண்ணினான்.

நினைக்கும்போதே தலையை வலிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. சுரீரென சூடு விரலை தொட சிகரெட் நழுவி தரையில் விழுந்தது. சற்று நேரம் அந்த சிகரெட்டையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் இந்தியா கிளம்ப தயாராக வைத்திருந்த பெரிய ஏர் பேக்கை உருட்டிக்கொண்டு வெளியில் வந்து கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

அவனது பயணத்தில் விபரீதங்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறான் என்பது அப்பொழுது வரைக்கும் அவனுக்கு தெரியவில்லை.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^


பிரபுவின் வீட்டுக்குள் தூக்கம் கலைந்த கண்களுடன் நுழைந்தான் ராகவன். காமிக்ஸ் கதைப்புத்தகத்தில் ஒன்றிப்போயிருந்த பிரபு, ராகவனின் வருகையால் நிமிர்ந்தார்.

"என்ன சார், அர்ஜன்ட்டா வர சொல்லியிருந்தீங்க?"

"ஒரு சின்ன விஷயம் இப்பத்தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லேந்து எனக்கு வந்தது. அதைப்பத்தி விஷயத்தை வெளியில விசாரிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு. அட ஏன் நிக்குறீங்க. உக்காருங்க"

"தேங்க் யூ சார்" என்றபடி சோபாவில் தளர்ந்தபடி அமர்ந்தான் ராகவன்.

"டீயா.. காபியான்னு கேட்டு போட்டு கொடுக்கற அளவுக்கு வீட்ல யாரும் இல்ல. அதனாலதான்" என்றபடி எழுந்தவர் அருகில் இருந்த ப்ரிட்ஜில் இருந்த பெப்சி டின்னை எடுத்து ராகவனின் அனுமதிக்கு காத்திராமல் நீட்டினார்.

பெப்சியின் மேல் விரலால் கோலம் போட்டபடி அமர்ந்திருந்த ராகவன், பிரபுவும் அமர்ந்ததும், "என்ன விஷயம் சார் அது!" ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டான்.

"இறந்த அந்த பொண்ணுக்கு இடது கையில் ஆறு விரல்ங்கறது ரிப்போர்ட்ல இருந்தது. ஆனா.."

"ஆனா..!" தவிப்பின் உச்சியில் இருந்தான் ராகவன்.

அவன் பதட்டத்தை பொருட்படுத்தாது பிரபு பொறுமையாக அமைதியான குரலில் கூறினார்.

"அந்த ஆறாவது விரல், அவளுக்கு ஆபரேஷன் செஞ்சு வச்ச போலி விரல்"

ராகவன் அதிர்ச்சியில் இருக்க, பிரபு தொடர்ந்தார்.

"பொதுவா ஆறாவது விரல் இருக்கறது அதிர்ஷ்டம்ன்னு நம்பறவங்க இன்னும் நம்ம நாட்டுல இருக்காங்க. ஆனா வாஸ்து கணக்கா விரலையே மாட்டி வச்சிருக்கற மொதோ பொண்ணு இவதான்னு நினைக்கிறேன்"

ராகவனின் தவிப்புகள் அதிகமானது.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^

அந்த பெரிய வீடு வெளிச்சத்தை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் இருளை விழுங்கி அமர்ந்திருந்தது. ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு ஒளிர்ந்த ஒரு நைட் லேம்ப் தன் சக்திக்கு ஏற்ற வகையில் இருளுடன் போர் புரிந்து தன் சக்தியை செலவிட்டது. அந்த வெளிச்சத்தின் கண்களில் பட்டுத்தெறித்தது அந்த சிறுமியின் புகைப்படம்.

ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006

அகில உலக ஆங்கில சினிமா விமர்சக சுப்புடு,
ஜாவா பாவலர்,
காலேஜ் குமரிகளின் கனவுக்கண்ணன்,
தற்போது அமெரிக்க கன்னிகளின் (?) இதயத்தில் மையம் கொண்டிருக்கும் புயல்,
தேன்கிண்ணத்தில் பால் வார்த்துக்கொண்டிருக்கும் அசல் இளைஞன்,
திரு கப்பி அவர்கள் அடுத்த பாகத்தை தொடர்வார்கள்...

7 comments:

G.Ragavan said...

ஆகா....கதை போட்டாச்சா...சூப்பர். ஆறு வெரலையும் புகுத்தியாச்சு. சுரேஷ் ராகவன்னு ஜி தெளிவாச் சொல்லியும்...ராகவன்..ராகவன்னு அழுத்திச் சொல்லியாச்சு. வாழ்க வளமுடன்.

அடுத்தாரு கப்பியா...சூப்பர்.

அப்புறம் பழைய ஆம்பல்களுக்குத் தொடுப்பு குடுத்துருங்க.

Divya said...

\\அந்த வெளிச்சத்தின் கண்களில் பட்டுத்தெறித்தது அந்த சிறுமியின் புகைப்படம்.

ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006\\

தம்பி ரொம்ப விறுவிறுப்புடன் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

இன்னுமொரு ஆம்பலா.......அதுவும் குட்டி பாப்பா ஆம்பலா?? , நல்ல திருப்பம்!

கப்பி கதையை எப்படி கொண்டுபோகப்போகிறார் என்று காண ஆவலுடன் காத்திருக்கிறேன்!!

நாகை சிவா said...

கதைய விட கடைசியில் கப்பிய நீ அழைத்த விதம் எனக்கு ரொம்பப்ப்ப் பிடிச்சு இருக்கு :)

இராம்/Raam said...

//கப்பிய நீ அழைத்த விதம் எனக்கு ரொம்பப்ப்ப் பிடிச்சு இருக்கு :)//

ம்ம்ம் எனக்கும்... :)

காஞ்சி தலை மகன் வாழ்க! வாழ்க!!

ஜி said...

:))) kalakkitteenga Thambi... puthusaa aaru veral mattera ulla puguththitteenga :))) aduththu kalakka povathu Kappi....

கோபிநாத் said...

விறுவிறுப்பாக போகுது..


அடுத்து யாரு செல்லமா..வரட்டும் ;)

cheena (சீனா) said...

ஆறாவது விரல் - செயற்கை விரல் - குட்டி ஆம்பல் - கதாசிரியர்களின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. அனவருமே தொடரின் ஓட்டத்தை அருமையாக தொடர்ச்சியாக கொண்டு செல்கின்ரணர். வாழ்த்துகள்