எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 14, 2007

நீயா? நானா?

நம்ம பய ஒருத்தன் தினமும் போன் பண்ணி அரை மணி நேரமாச்சும்
பேசாம இருக்க மாட்டான். திடீர்னு ஒரு மூணு நாள் போன் பண்ணல.
எங்கிட்டாச்சும் எக்குதப்பா பேசி போலீஸ்ல மாட்டிகிட்டானா. இல்ல
ஒரேடியா பார்சல் பண்ணிட்டாங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னு ஒரு
நண்பனா ஆர்வம். அதனால ஆபிஸ்கு போன போட்டேன்.

ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?

விச் கோபிநாத் யூ வாண்ட் சார்!

ம்ம்... ஜஸ்டிஸ் கோபிநாத். எப்ப போன் பண்ணாலும் இவனுங்களே போன்
அட்டெண்ட் பண்றானுங்க. இந்த அரபுநாட்டுல போன் அட்டெண் பண்றதுக்குன்னே
பிறந்தவங்கன்னு பேரெடுத்த பிலிப்பைன்காரிகள போடாம ஏன் இவனுங்கள
போடறாங்கன்னு தெரில. அதுசரி நம்ம நண்பன் வேல செய்ற கம்பெனி
அது எப்படி உருப்படும்.

அவர் மூணு நாளா சிக் லீவ்ல இருக்கார்னு பதில் வந்தது.

படுபாவி உடம்பு சரியில்லன்னு போன் பண்ணி சொன்னா என்னவாம்னு
ஸ்ட்ரெய்ட்டா துரைக்கே போன் பண்ணேன்.

தம்பி: என்னப்பா உடம்பு சரியில்லயாமே? எனக்கு உடம்பு சரியில்லன்னு போன்
சொல்றதுக்கு என்ன?

கோபி: "ஆமாண்டா எனக்கு உடம்பு சரியில்லன்னு நானே உங்களுக்கு
போன் பண்ணி சொல்லணுமா?"

தம்பி: "ஏன் அதுக்கு வேற யாராச்சும் ஆள் வெச்சிருக்கியா?தமிழ்மணத்துல அதிக
நேரம் குடியிருக்காதன்னு சொன்னா கேட்டாதான! இப்ப பாரு உனக்கு
காய்ச்சல் வந்துடுச்சி.

கோ: இப்பல்லாம் நான் தமிழ்மணம் அதிகமா படிக்கறதுல்ல.

த: ஏன் சாமி,? நிறைய இலக்கிய கட்டுரைகள் வர்றதுல்லன்னு உனக்கும்
வருத்தமா?

கோ: அட அதுல்லப்பா மேட்டரு. முதல்ல எல்லாம் தரமான மொக்கைப்பதிவர்கள்
இருந்ததுனாலயும், சுவாரசியமான பதிவுகள் நிறைய வந்துகிட்டு இருந்ததினாலயும்
தமிழ்மணம் நல்லா இருந்துச்சு. இப்ப வர்றவங்களுக்கு மொக்கையே போட
வரல, எல்லாமே சக்கையா இருக்கு. நல்லாவும் எழுத வரல. நம்ம ஐஎஸ்ஓ
மொக்கை செந்தழலார் கூட இல்லாதது பெரும் இழப்பு. அதுவுமில்லாம நல்ல
பதிவுகள தேடி புடிச்சி படிக்கறதுக்குள்ள கண்ணு பூத்து போயிடுது. ஒன்றிரண்டு
பதிவுக்காக நாம நாள் பூரா அலைஞ்சி தேடியும் கிடைக்கலன்னா ஏமாற்றமாகிடுது.
அதனால அந்த பக்கம் போக்குவரத்து கம்மி பண்ணி என்னோட கவனத்தை
குமுதம், விகடன், வண்ணத்திரைன்னு போக ஆரம்பிச்சிட்டேன். அங்க இதவிட
நல்லா மொக்க போடறாங்கப்பா!

த: என்னலே வர வர ஒனக்கு எலக்கிய தாகம் அதிகமாயிடுச்சி. நம்ம தினமணி
புகழ் சரவணர் கூட நல்லா மொக்கை போடறாரே! அதையும் பாக்கறதில்லயா
நீயி?

கோ: அது என்ன தினமணி புகழ்?

த: அதான்யா இந்த ஆவி புகழ், தினமலர் புகழ், குமுதம் புகழ், அந்த மாதிரி.

கோ: ஓஹ் அப்படி சொல்றியா! இத அவரே சொன்னாரா? இல்ல நீயே சொல்றியா?

த: இத பத்திரிக்கை அடிச்சே சொல்லியாச்சு. அந்த மேட்டர விடு, பருவ மழை
பொய்த்தாலும் மாசத்துக்கு ஒரு பதிவு கண்டிப்பா உன்கிட்டருந்து வரும்.
உலகமே எதிர் பாத்துட்டு இருக்கற பதிவ எப்ப போட போற?

கோ: மவனே உனக்கு ஓவர் நக்கலாகிபோச்சுடா! நானும் எதையாச்சும் எழுதி
என்னோட ரசிகர்கள திருதிபடுத்தலாம்னு பாக்கறேன் எதுவுமே தோண
மாட்டேங்குது நீதான் எதாச்சும் ஒரு ஐடியா கொடேன்.

த: இப்படி கேட்டியே இது நியாயம். நீ தமிழ்மணத்த நல்லா மேயணும். அப்படி
மேய்ஞ்சின்னா ஒருநாளைக்கு மூணு பதிவு போடலாம். இப்ப உதாரணத்துக்கு
உன்ன மாதிரி ஆளுலாம் என்ன எழுதலாம்னு மண்டைய போட்டுகிட்டு
குழப்பிக்காம இருக்கறதுக்குதான் பிட்டு போட்டி, நஒக போட்டின்னு
வச்சி கதறடிச்சிகிட்டு இருக்காங்களே! அதுல எதுலயாச்சும் ஒண்ணுத்துல
கலந்துகிட்டு ஒருநாளைக்கு மூணு சிறுகதைகள் வீதம் எழுதினின்னா ஒரே
மாசத்துல சிறுகதை தொகுப்பே போடற அளவுக்கு பதிவுகள் வந்து
குமியும்ல, இந்த சிறுகதை எழுதறதுல எதாச்சும் டவுட்டுன்னு வந்துச்சின்னா
கோவியார்கிட்டயும், வினையூக்கி அய்யாகிட்டயும் விவரம் கேட்டுக்க
எனக்கு தெரிஞ்சு நூத்துக்கணக்கான சிறுகதைகள் எழுதுன ஆளுங்க
அவங்கதான்.

கோ: பிட்டு அடிக்கறதுக்கு போட்டி வேற வைக்கறாங்களா? அது என்ன நஒக?
எதுனாச்சிம் கெட்ட வார்த்தையா?

த: பிட்டு போட்டின்னா போட்டோ எடுத்து பதிவு போடறது. நஒகன்னா...

கோ: இரு... இரு... இரு... இந்த போட்டா புடிக்கற சமாச்சாரமெல்லாம்
நமக்கு வராதுப்பா.

த: லேய் போட்டோ எடுக்கறது பெரிய மேட்டருல்லப்பா உதாரணத்துக்கு நம்ம
குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது.
இதுலாம் வெளில யாருக்கும் தெரியாது...

கோ: சரி அடுத்து நஒக ன்னா என்னன்னு தெளிவா சொல்லு!

த: அதுவும் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல! நச்சின்னு ஒரு கதை எழுதணும்.
அதை உன்னோட பதிவுல போட்டு நச்சின்னு லேபிள் போட்டினா நச்சு தயார்.
முக்கியமா நம்ம செல்லா அண்ணன் எழுதுவாரே அந்த மாதிரி நச்சின்னு
இருக்கணும் புரிஞ்சிதா?

கோ: என்னென்னமோ சொல்ற!

த: அப்படியும் உனக்கு பதிவு போட மேட்டருல்லன்னா பாருக்கு போய்
ரெண்டு பீர ஏத்து அப்படியே சூட்டோட சூட்டா உக்காந்து கவிதை எழுது.
அய்யனார் கவுஜ மாதிரி லெவல் பண்ணிடலாம். அதுவும் வரலன்னு வச்சிக்க
பில்லா படத்தை உல்டா பண்ணி ஒரு பல்லா, குல்லா, கல்லான்னு
தொடர்ச்சியா பதிமூணு பதிவு போடலாம். இப்பலாம் தொடர்கதை எழுதலன்னா
பதிவர்னே ஒத்துக்க மாட்டேங்கறாங்க தெரியுமா? அதுனால நாளைக்கே ஒரு
பதிவு தொடர்கதை எழுதிடு, கதைய பத்தி யோசிக்காத.

"கதை அருமை" "சூப்பர் டர்னிங் பாயிண்ட்" "முடிவை ஏற்கனவே யூகிக்க
முடிந்ததுன்னு" "சிறப்பான நடை" "வாழ்த்துக்கள்"னு எதுனாச்சும் கமெண்ட்
வந்துகிட்டே இருக்கும் நீயும் அதுக்கு பதில் பின்னூட்டம் போட்டுகிட்டே
இருக்கலாம்.

ஸ்டேட்டர் பார் கவுஜ எல்லாத்தையும் ஒரு பதிவா போடலாம். நம்ம
வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும். அப்படியும் போர்
அடிச்சிதுன்னா ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.

கோ: நீ இப்படியே எல்லாத்தையும் நக்கலடிச்சிட்டு இரு ஒருநாள் உனக்கு எவனாச்சும்
ஆப்பு வைப்பான். எப்ப பாத்தாலும் தமிழ்மணம் பத்தியே பேசிட்டு இருக்க வேற
எதுனாச்சும் பேசு.

த: ஓம் ஷாந்தி ஓம் ட்ரெய்லர் பாத்தியா மச்சி? தீபிகா படுகோனேவ பாத்து நான்
படுகோணலாயிட்டேன்னா பாத்துக்க!

கோ: ஏண்டா அதுல ஷாருக்கான்னு ஒரு ஸ்டார் இருக்கறத நீ பாக்கவேல்லியா?

த: நாங்கள்லாம் அன்னப்பறவை வம்சம்டா தேவையானத மட்டும்தான் எடுத்துப்போம்.
லேட்டஸ்டா நம்ம காபி வித் அனு பாத்தேன்.
செம க்யூட்ரா அவங்க. அதுவும் அவங்க தலைய சாய்ச்சி உற்சாகத்தோட கேள்வி
கேக்கற அழகு இருக்கே சான்சே இல்ல மச்சி, கேள்வி மொக்கையா இருந்தாலும்
கேக்கற அழகுன்னு ஒண்ணு இருக்குல்ல அதான், அதத்தான் ஐ ரியலி லைக்.

கோ: பாவனா போய் அனுபுராணம் ஆரம்பிச்சிட்டியா? வேற எதுனா பேசு
இல்லன்னா போன வைய்யி இப்பதான் எனக்கு காய்ச்சல் விட்டுருக்கு.

த: சரி வேற மேட்டருக்கு வரேன். உம்பேர வச்சிகிட்டு பயங்கர புத்திசாலியா,
அழகா திறமையானவரா ஒருத்தர் இருக்காரே தெரியுமா ஒனக்கு?

கோ: இந்த பேர்ல இருக்கற எல்லாருமே ஆளப்பிறந்தவர்கள்தான், ஆமா நீ யார
சொல்ற?

த: நீயா? நானா? கோபிநாத்த சொல்றேன். நம்ம புலி பீதில போட்ட பதிவுனால
முழுசா அந்த நிகழ்ச்சிய இறக்கி பாத்தேன். உண்மைலயே இந்த மாதிரி
டாக் ஷோ நம்ம ஊருக்கு புதுசு. அதுலகூட ஒரு பொண்ணு லூசுத்தனமா
இந்த இனத்துல பொறந்ததுல ரொம்ப பெருமைப்படறேன்னு ஆரம்பிச்சி
இத்தன இன்ச்ச்ல இஞ்சினியர் மாப்ள வேணும்னு கேட்டதுலருந்து பெற்றோர்கள்
வரிசைல அமைதியா பதில் சொன்னது வரைக்கும் எல்லாமே சூப்பர்.
அதுல கூட பாத்தின்னா பெண்களுக்குதான் தனக்கு வரப்போற கணவன்
எப்படி இருக்கணும்னு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள்னு இருக்கு ஆனா
நம்ம பசங்கதான் பூமிகா, மழை ஸ்ரேயான்னு வழக்கமா பதில் சொன்னாங்க.
மைக் முன் பிளிறிய அந்த பெண்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ற மாதிரி
ஆண்கள வேணும்னா அவங்களே மொத்தமா ஜப்பானின் யாமசாக்கி ரோபோ
தொழிற்சாலையில் ஆர்டர் கொடுத்துதான் செய்யணும். அந்த மாதிரி
சைஸ் வாரியா கேக்கறாங்கப்பா!

த: ஆமா உனக்கு இந்த மாதிரி எதுனா எதிர்பார்ப்பு இருக்குதா கோபி? ஏன்
கேக்கறன்னா என்னவிட ரெண்டு வயசு பெரியவன் என்னைவிட உலக
அனுபவம் உனக்கு ஜாஸ்தி அதனாலதான் கேக்கறேன்.

கோ: டேய் என்கிட்டவே லந்தா? நானே சதுரங்க குதிரை நாராயணன் வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கை ஆகிடுமோன்னு கவலபட்டுகிட்டு இருக்கேன்
நீ வேற வேதனைய கெளப்புற.

த: ஆனா எனக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு. என்னன்னு கேளேன்!

கோ:........

த: நீ கேளேன்....

கோ:........

த: சும்மா கேளேன் கோபி

கோ: நான் கேக்கலன்னா நீ சொல்லாமலா போயிட போற? சொல்லித்தொல!

த: அது... எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது. எதாவது ஒரு குக்கிராமத்துல,
பஸ் கூட போகாத ஊர்ல, ஈவன் பால்வண்டில போற வசதி கூட இல்லாத
ஊர்லதான் பொண்ணு எடுப்பேன். மேக்சிமம் அஞ்சாவதுதான் படிச்சிருக்கணும்.
கையெழுத்து போட தெரிஞ்சிருக்கணும் ஆனா தமிழ் படிக்க தெரிய கூடாது.
ஊர்லருந்து கடிதாசி வந்தா கூட நாந்தான் அவளுக்கு படிச்சி காமிக்கணும்.
மொதல்ல அந்த பொண்ண தாவணிலதான் பாக்கணும். உதாரணத்துக்கு ரெட்டை
வால் குருவி படத்துல மைக்மோகனுக்கு பிடிக்காத மனைவியா கம்பி ஜடை
பின்னி ஒரு நடிகை இருப்பாங்கல்ல அதே மாதிரி, இல்லன்னா தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ஆனா பொண்ணு
கருப்பா இருக்கணும். பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்.....

கோ: எலேய்.. எலேய் நிறுத்து போதும். விவேக் சொன்னது சரிதான். நீ சொல்ற
மாதிரி பொண்ணு லெமூரியா கண்டத்தோட போயே போச்சு. இனிமே உன்கிட்டருந்து
போன் வந்துச்சின்னா ஆள் இல்லன்னு சொல்லி வச்சிடறேன்.
என்னால முடியாதுடா சாமி.

48 comments:

குசும்பன் said...

"நம்ம பய ஒருத்தன் தினமும் போன் பண்ணி அரை மணி நேரமாச்சும்
பேசாம இருக்க மாட்டான். "

தம்பி இது எல்லாம் ஓவரு ஆமா! போன் செஞ்சு மொக்கை போடுவது என்பதற்கு காப்பி ரைட்ஸ் உன் கிட்டதான் வாங்கனும் என்று அன்னைக்கு அய்யனார் கூட சொன்னார்! நீ என்னடான்னா தங்க தம்பி கோபிய சொல்றீயா?

குசும்பன் said...

எப்பொழுதும் போல (யார் கிட்டயாவது பேசினா போடும் பதிவு) சூப்பர் பதிவி, ஆனால் வித்தியாசமாக இந்த முறை போனில் பேசினதை போட்டு அசத்திட்ட தம்பி!!!

இன்னும் உன் கிட்ட எவனாவது மெயில் அனுப்பின விசயத்தை மட்டும்தான் போஸ்ட் போடல அதையும் செஞ்சுடு!!!

குசும்பன் said...

த: ஏன் சாமி,? நிறைய இலக்கிய கட்டுரைகள் வர்றதுல்லன்னு உனக்கும்
வருத்தமா?///

தம்பி உனக்கு ஓவர் லொள்ளா போச்சு அன்னைக்கு என்னாடா என்றால் ஏன் முன்பு மாதிரி அபி அப்பா இலக்கிய கட்டுரை எழுதுவது இல்லை என்று என் கிட்ட போன் போட்டு லந்த கொடுக்கிற, மகனே இருடி அய்யனார் லீவில் ஆசிப் அண்ணாச்சி கூட ரெண்டு படம் பார்க போகிறார் வந்து இலக்கிய கட்டுரை எழுதுவார்

குசும்பன் said...

கமெண்ட் போட்ட அடுத்த நிமிசமே கமெண்ட் ரிலீஸ் செய்யுரீயே மருந்துக்கு கூட வேலை இல்லையா? :))) சரி சரி டென்சன் ஆயி ரிலீஸ் செய்யாம விட்டு விடாத இன்னைக்கு கும்மி இங்கனதான்!!!

குசும்பன் said...

"எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது."

தம்பி ஒரு A ஜோக் சொல்லுவானுங்க அது உனக்கும் தெரியும் என்று நினைக்கிறேன், எங்க ஊரில் நெல்லு தருவாங்க இங்க பணமா என்று கேட்ட ஜோக் உனக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

குசும்பன் said...

//அது என்ன நஒக?
எதுனாச்சிம் கெட்ட வார்த்தையா?///

எலேய் புத்தி போகுது பாரு, ச்சீ ச்சீ கருமம் புடிச்ச கலீஜ் பையன் இனி உன் கூட சவாகாசம் வெச்சுக்க கூடாது போல!!!

தம்பி said...

லேய் சரவணரு!
மருந்து குப்பி அளவுக்கு கூட உனக்கு வேலை இல்லயா? இப்படி காலைலயே கும்மி அடிக்கற?

குசும்பன் said...

"குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது.
இதுலாம் வெளில யாருக்கும் தெரியாது..."


இன்னைக்கு நான் உனக்கு ஊறுகாயா? மனுசனுக்கு பொறாமை இருக்கலாம், ஆனா மனுசனே பொறாமையா இருக்க கூடாது தம்பி!!

ஓவர் பொறாமை உடம்புக்கு ஆகாது!!!

குசும்பன் said...

த: அதான்யா இந்த ஆவி புகழ், தினமலர் புகழ், குமுதம் புகழ், அந்த மாதிரி.///

அண்ணாசி பேரும் அய்யனார் பேரும் ஆவியில் வந்துட்டு என் பேரு எப்ப வரும் என்று தெரியவில்லை என்று அன்னைக்கு போனில் கதறிட்டு இப்ப என்னாடான்னா நக்கலு!!!

அப்புறம் நீ அன்னைக்கு சொன்னது எல்லாத்தையும் பதிவு போடுவேன்!!!

குசும்பன் said...

///த: நாங்கள்லாம் அன்னப்பறவை வம்சம்டா தேவையானத மட்டும்தான் எடுத்துப்போம்.//

அன்ன பறவை பாலில் தண்ணி கலந்து இருந்தா பிரிச்சு குடிக்கும் என்று கேள்வி பட்டு இருக்கேன், ஆனா நீ பிரிச்சு குடிக்கிறீயா, இல்ல கலந்து குடிக்கிறீயா என்று முடிவை உனக்கே விட்டு விடுகிறேன்!!!

குசும்பன் said...

தம்பி said...
லேய் சரவணரு!
மருந்து குப்பி அளவுக்கு கூட உனக்கு வேலை இல்லயா? இப்படி காலைலயே கும்மி அடிக்கற?///

நீதானே அன்னைக்கு பதிவில் மூனே மூனு கமெண்டுதான் போட்டு இருக்கானுங்க (அதில் ஒன்னு நான் போட்டது அதுக்கு நீ பதில் சொல்கிறேன் என்று இரண்டு முறை சொன்னது) அப்படின்னு அய்யனார் உன்னை நக்கல் அடிச்சார் என்று சொன்ன, எதுக்கு அந்த குறை, அப்புறம் என்னாத்த பதிவு போட்டாலும் ஹிட் மட்டும் 1000 தை தொடுது எல்லாரும் மெளனமாக வந்து படிச்சிட்டு மெளனமாக போறாங்க என்று சொன்னீயே அதை ஏன் பதிவு போடவில்லை?

குசும்பன் said...

//பில்லா படத்தை உல்டா பண்ணி ஒரு பல்லா, குல்லா, கல்லான்னு
தொடர்ச்சியா பதிமூணு பதிவு போடலாம்.//

தேவ் சங்கத்துல இருந்துக்கிட்டே சங்கத்து சிங்கம் உங்களை நக்கல் அடிக்கிறார் தம்பி!!!

தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை! ஆமா தேவ் என்னான்னு கொஞ்சம் கவனியுங்க!

குசும்பன் said...

///வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன். ////

/// ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க///

அய்யய்யோ ராம் உங்களை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கி இருக்கார் இதை எப்படி நீங்க தாங்கிக்க போறீங்க?
அவ்வ்வ் எனக்கு துக்கம் தொண்டைய அடைக்குது!

கோபிநாத் said...

ராசா உன் போதைக்கு நான் ஊறுகாயா! ;))

குசும்பன் said...

"கோ:........

த: நீ கேளேன்....

கோ:........"

இவ்வளவு டைப் செஞ்ச நீ அப்ப கோபி திட்டினதையும் டைப் செய்யாம புள்ளி வைச்சுட்ட கோலம் போட யாரு வருவா?

குசும்பன் said...

கோ: எலேய்.. எலேய் நிறுத்து போதும். விவேக் சொன்னது சரிதான். நீ சொல்ற மாதிரி பொண்ணு லெமூரியா கண்டத்தோட போயே போச்சு. இனிமே உன்கிட்டருந்து
போன் வந்துச்சின்னா ஆள் இல்லன்னு சொல்லி வச்சிடறேன்.///

டூ லேட் நான் எல்லாம் அதைதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்!!!

குசும்பன் said...

///ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.///

எங்கடா கோபி, குசும்பன், ராம், சிபி, சென்ஷி, மின்னல் என்று ஆம்பிள்ளை பேர் கண்ணில் பட்டா எங்க டா பிங் பண்ணுறீங்க தப்பு தவறி நாங்களா ஹாய் என்று டைப் செஞ்சா கூடா பிளாக் செஞ்சிடுறீங்களே டா படுபாவிங்களா!!!

ஒரு வேளை இதுவும் அண்ண பட்சி மாதிரியா? நல்லா இருங்க டே!!!

குசும்பன் said...

///ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.///

பேரை பார்த்தாலே பிங் பண்ண மாட்டேங்குறீங்க போட்டோவ பார்த்தாடா பிங் பண்ண போறீங்க?

நல்லா இருங்கடே!!!

குசும்பன் said...

///தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ///

ஆனா நம்ம மட்டும் கிங் காங் பட ஹீரோ மாதிரி இருப்போம்!

என்ன கொடுமை இது?

குசும்பன் said...

///த: பிட்டு போட்டின்னா///

தேன் கின்னத்துல பாட்டு போடுவது போல நீ பார்த்து ரசித்த பிட்டை பதிவா போடனும்!

குசும்பன் said...

///எக்குதப்பா பேசி போலீஸ்ல மாட்டிகிட்டானா.///

நீயே வெளியில் இருக்கும் பொழுது, கோபிக்கு என்னா? வியாழ கிழமை இரவுகளில் ரோட்டில் போகிறவனை கூப்பிட்டு வெச்சு லந்து கொடுக்கிறது நீ! தம்பியை சொல்றீயா?

கோவை சரளா said...

///ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?///

துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது!!!

குசும்பன் said...

///கோ: பாவனா போய் அனுபுராணம் ஆரம்பிச்சிட்டியா? வேற எதுனா பேசு
இல்லன்னா போன வைய்யி இப்பதான் எனக்கு காய்ச்சல் விட்டுருக்கு.///

மேட்டரே இல்லாம எப்படி உன்னால மட்டும் அரை மணி நேரம் மொக்கை போட முடியுது?

Vicky said...

பதிவு சூப்பர். சிறப்பான நடை. வாழ்த்துக்கள் :)

-- Vicky

ஆயில்யன் said...

/////ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?///

துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது!!!//


அய்யோடாஆஆஆஆஆ

தம்பி said...

//ராசா உன் போதைக்கு நான் ஊறுகாயா! ;))//

அடுத்த முறை நம்ம தேசாந்திரிய போட்டுடலாம். :)

ஆயில்யன் said...

//குசும்பன் said...
"எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது."

தம்பி ஒரு A ஜோக் சொல்லுவானுங்க அது உனக்கும் தெரியும் என்று //

எனக்கு தெரியாது
எனக்கு தெரியாது நண்பா :))

தம்பி said...

//எனக்கு தெரியாது
எனக்கு தெரியாது நண்பா :))//

சரவணர் சித்தப்பு!

வந்து சொல்லிட்டு போங்க சித்தப்பு! பாவம் ஆயில்யன் கெஞ்சறாரு பாருங்க.
அப்படியே எனக்கு ஏ ஜோக்னா என்னன்னு சொல்லிட்டு போங்க.

தம்பி said...

//ஆனா நம்ம மட்டும் கிங் காங் பட ஹீரோ மாதிரி இருப்போம்!//

என்னையும் ஏன் சேக்கற?

கப்பி பய said...

360 டிகிரியும் சுத்தி சுத்தி அடிச்சிருக்கீங்களே பாஸு :))

நாகை சிவா said...

நீ பதிவு போடனும் என்பதுக்காக கோபிக்கு உடம்பு சரியில்லைனு ஒரு பிட் ஒட்டுறீயே இது உனக்கே நியாயமா?

சரி நீ ஏதும் கதை எழுதலையா.. அதையும் ஏன் விட்டு வைக்குற எழுது எழுது...

நாகை சிவா said...

தம்பி!

இந்த பதிவுல நீ குசும்பரை கலாய்த்ததை நான் ரொம்பவே ரசித்தேன். அதிலும் அந்த வாடகை கோட்.. சூப்பர்...

நாகை சிவா said...

////ஆனா நம்ம மட்டும் கிங் காங் பட ஹீரோ மாதிரி இருப்போம்!//

என்னையும் ஏன் சேக்கற?//

கிங் காங் ஹீரோ கைய கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துத்தா அப்படியே இருக்கும் போல...

தம்பி said...

//360 டிகிரியும் சுத்தி சுத்தி அடிச்சிருக்கீங்களே பாஸு :))//

கப்பி உனுக்கு கூட ஒரு பஞ்ச் டயலாக் வச்சிருந்தேன். கடைசி நேரத்துல மறந்துட்டேன். ஓகே அடுத்த பதிவுல மைண்ட்ல வச்சிக்கறேன்.

தம்பி said...

//நீ பதிவு போடனும் என்பதுக்காக கோபிக்கு உடம்பு சரியில்லைனு ஒரு பிட் ஒட்டுறீயே இது உனக்கே நியாயமா?//

நிஜமாவே அவனுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா உடம்பு சரியில்லாம போகும். நீ வேணா கேட்டு பாரு.

//சரி நீ ஏதும் கதை எழுதலையா.. அதையும் ஏன் விட்டு வைக்குற எழுது எழுது...//

நீ சொல்லி எழுதாம இருப்பனா?

தம்பி said...

//இந்த பதிவுல நீ குசும்பரை கலாய்த்ததை நான் ரொம்பவே ரசித்தேன். அதிலும் அந்த வாடகை கோட்.. சூப்பர்...//

எல்லாரையும் அவுரு கலாய்ப்பாராம் நாம மட்டும் அவுர கலாய்ச்சா கும்மில போஸ்ட் போட்டு குமுறூவாராம். என்னாங்கடா நாயம் இது. :)

குசும்பன் said...

தம்பி said...

//இந்த பதிவுல நீ குசும்பரை கலாய்த்ததை நான் ரொம்பவே ரசித்தேன். அதிலும் அந்த வாடகை கோட்.. சூப்பர்...//

எல்லாரையும் அவுரு கலாய்ப்பாராம் நாம மட்டும் அவுர கலாய்ச்சா கும்மில போஸ்ட் போட்டு குமுறூவாராம். என்னாங்கடா நாயம் இது.///

அட பாவி எங்க அந்த பதிவில் என்னை கலாய்ச்சு இருக்க?? அது மட்டும் இல்லாம உன்னிடம் சொல்லிட்டுதானே உன்னை கும்ம போகிறேன் என்று சொன்னேன் நீயும் முடிஞ்சா செய் என்று சொன்ன. இப்ப என்னா பல்டி அடிக்கிற.

குசும்பன் said...

தம்பி said...

//இந்த பதிவுல நீ குசும்பரை கலாய்த்ததை நான் ரொம்பவே ரசித்தேன். அதிலும் அந்த வாடகை கோட்.. சூப்பர்...//

எல்லாரையும் அவுரு கலாய்ப்பாராம் நாம மட்டும் அவுர கலாய்ச்சா கும்மில போஸ்ட் போட்டு குமுறூவாராம். என்னாங்கடா நாயம் இது.///

அட பாவி எங்க அந்த பதிவில் என்னை கலாய்ச்சு இருக்க?? அது மட்டும் இல்லாம உன்னிடம் சொல்லிட்டுதானே உன்னை கும்ம போகிறேன் என்று சொன்னேன் நீயும் முடிஞ்சா செய் என்று சொன்ன. இப்ப என்னா பல்டி அடிக்கிற.

குசும்பன் said...

தம்பி said...
//சரவணர் சித்தப்பு!

வந்து சொல்லிட்டு போங்க சித்தப்பு! பாவம் ஆயில்யன் கெஞ்சறாரு பாருங்க.
அப்படியே எனக்கு ஏ ஜோக்னா என்னன்னு சொல்லிட்டு போங்க//

நல்ல பையனாக இருக்கிறார் ஆயில்யன் அவரை ஏன் கெடுக்கனும்:)
ஆமா நீதான் சின்ன புள்ள சின்ன புள்ள என்று சொல்லிப்ப அப்புறம் உனக்கு என்னா இதுக்கு ஏ ஜோக் தெரியனும். முதலில் நீ ...........வந்த பெரிய பையன் என்று சொல்லு அப்புறம் உனக்கு சொல்லுறேன்.

இம்சை அரசி said...

உடம்பு சரியில்லாத சின்னண்ணண இப்டி ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்களே தம்பிண்ணே ;)

இம்சை அரசி said...

// குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது
//

இதை பாத்துட்டு எந்த தப்பான முடிவுக்கும் பொயிடாதீங்க குசும்பன் ;)

இம்சை அரசி said...

// வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும்
//

ராமண்ணா...

ஹுஹாஹாஹாஹா... :))))

ROTFL :)))

இம்சை அரசி said...

// லேட்டஸ்டா நம்ம காபி வித் அனு பாத்தேன்.
செம க்யூட்ரா அவங்க
//

கடைசில அனுவ கூட விட்டு வைக்கலையா... அட கடவுளே :O

இம்சை அரசி said...

// எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது. எதாவது ஒரு குக்கிராமத்துல,
பஸ் கூட போகாத ஊர்ல, ஈவன் பால்வண்டில போற வசதி கூட இல்லாத
ஊர்லதான் பொண்ணு எடுப்பேன். மேக்சிமம் அஞ்சாவதுதான் படிச்சிருக்கணும்.
கையெழுத்து போட தெரிஞ்சிருக்கணும் ஆனா தமிழ் படிக்க தெரிய கூடாது.
ஊர்லருந்து கடிதாசி வந்தா கூட நாந்தான் அவளுக்கு படிச்சி காமிக்கணும்.
மொதல்ல அந்த பொண்ண தாவணிலதான் பாக்கணும். உதாரணத்துக்கு ரெட்டை
வால் குருவி படத்துல மைக்மோகனுக்கு பிடிக்காத மனைவியா கம்பி ஜடை
பின்னி ஒரு நடிகை இருப்பாங்கல்ல அதே மாதிரி, இல்லன்னா தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ஆனா பொண்ணு
கருப்பா இருக்கணும். பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்
//

அப்போ பாவனா (அ) பாவனா மாதிரி வேணாமா??? ;)

(அப்பாடி பாவனா தப்பிச்சிட்டாங்க)

இம்சை அரசி said...

// பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்
//

இப்படியே எதிர்பார்த்துட்டு இருந்தா இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல... எந்த ஜென்மத்துலயும் உங்களுக்கு கல்யாணம் ஆகாது தம்பிண்ணே ;)))

இராம்/Raam said...

//ஸ்டேட்டர் பார் கவுஜ எல்லாத்தையும் ஒரு பதிவா போடலாம். நம்ம
வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும். //

ஏலேய் வேற மேட்டரை கிடைக்கலையா? நீங்க இப்பிடி லந்து பண்ணிக்கிட்டு இருக்கிறதுனாலே இப்போல்லாம் கவுஜ எழுத ஒன்னுமே தோணமாட்டங்கிது... :(

வெட்டிப்பயல் said...

இது ஒரு நல்ல பதிவு ;) (டாக்டர் விஜய் ஸ்டைலில் படிக்கவும்)

வினையூக்கி said...

:) :)