எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, May 31, 2009

குயில்


பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்
கண்டதேயில்லை என் கண்கள்
தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்
சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்
குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது
மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு
அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு
தினசரி நாங்களிருவரும் குயிலிடம்
கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்
உன் அக்கா பெயரென்ன என்று
கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்
வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்
அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக
கூவிக்கொண்டிருந்தது.

5 comments:

சென்ஷி said...

ஹா ஹா ஹா....



அசத்திப்புட்டடா மாப்ள...

//உன் அக்கா பெயரென்ன என்று//

அச்சு அசல் விஎஸ் ஓபி கவுஜ :))

எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!

நாகை சிவா said...

:))

யோவ் ஆள் வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரலையே... இப்படியா பட்னு அக்கா பெயரை கேட்பது. பாப்பா... உங்க வீட்டில் யாரு எல்லாம் இருக்காங்க... அப்படினு பேச ஆரம்பிச்சு ஒரு 2 நாள் கழிச்சு கேட்டு இருக்கனும்.. நிற்க...

நீ அப்படி தான் கேட்டு இருப்ப.. இங்க மாத்தி சொல்லுற...

கோபிநாத் said...

அடப்பாவி...;))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு கதிர்.

/கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்/

இதுல ஒருநாள் என்பது அடுத்த வரியில் வரணுமோ.

அகநாழிகை said...

அருமையான கவிதை நண்பரே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்