எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, May 28, 2009

நினைவுகளின் நீள்கரங்கள்


உனது நினைவுகளின் நீள்கரங்கள்
என்னை சதா துரத்தியபடி வருகின்றன
உனது நேசத்தின் எல்லைகள் தாண்டிய
இடங்களைத் தேடி ஒளிகிறேன்
கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த
மறுநொடி துரோகத்தின் கதவுகள்
அடைபடுகின்றன வழக்கம்போல்
பொங்கும் காமத்திற்கப்பால்
காதலென்பது பொய்யென
உனக்கு எப்போது புரியும்...
உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி

8 comments:

கோபிநாத் said...

\\VSOP 9002 கவுஜ \\

ஆகா மச்சி கொடுத்துவச்சவன் டா நீ ;))

இங்க அந்த சரக்கு இல்லை மச்சி ;(

கோபிநாத் said...

\\உன்னதமான ஒன்று இல்லவே இல்லை\\

;)))))

Anonymous said...

இப்ப இன்னா சொல்ல வர்ற மாமே ... ஒன்னியுமே பிரியல ....

நட்புடன் ஜமால் said...

\\முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி\\


ஆமாம்!

வனம் said...

வணக்கம் உமா கதிர்

கவுஜ புரியல ஆனா

கவிதைகளுக்கென்று ஒரு வரைமுறை இருக்கின்றது, அது ஒற்றை வரியை உயிருக்குள் செலுத்துவது என உணருகின்றேன்.

உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்

சரி

அதென்ன \\உன்னதமான ஒன்று இல்லவே இல்லை\\

இதை உங்களுடைய அடுத்த வரியிலேயே பொய்யாக்கிவிட்டீர்கள்

\\முடிவில்லாத உன் அன்புகளை\\
என

இராஜராஜன்

"அகநாழிகை" said...

நண்பா, கதிர்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
இப்படியிருந்திருந்தால் இன்னும் அழகுடனிருக்கும்..

//////////////////////
நினைவுகளின் நீள்கரங்கள்
சதா துரத்தியபடி வருகின்றன என்னை நேசத்தின் எல்லைகள் தாண்டிய
உனது இடங்களைத் தேடி ஒளிகிறேன்
கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த
மறுநொடி துரோகத்தின் கதவுகள்
அடைபடுகின்றன வழக்கம்போல்
பொங்கும் காமத்திற்கப்பால்
காதலென்பது பொய்யென
எப்போது புரியும் உனக்கு
உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி
//////////////

சென்ஷி said...

//உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி //

நோகடிக்கறாங்க இல்லை!

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
//உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி //

நோகடிக்கறாங்க இல்லை!
\\

ஆமால்ல...