
கோடிட்ட இப்பக்கங்களை தினம் தினம்
நிரப்ப யாதொரு அதிசயமும் நிகழ்ந்துவிடவில்லை.
நாட்குறிப்பில் இந்த சுவாரசியமற்ற நாட்களை
என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது.
ஒலிகள் எல்லாம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட
பேரமைதியான இரவு.
இருள்சூழ்ந்த அறையின் முழுவதும்
வண்ணங்கள் மறைந்துவிட்டிருந்தன.
பின்னிரவுப்பொழுதொன்றில் இருள் தேவதை
உள்ளிறங்கி வந்திருந்தாள்.
இருளுக்கு ராகம் இருப்பதை இன்றுதான்
கண்டுகொண்டேன். அவள்
பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி
இருளில் சுழன்றாடினாள்.
சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்
ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட
அவளின் நிறம் இப்போது காரிருள்.
விளக்கின் திடீர்ப்பிரவேசத்தில் கலைந்த அவள்
தன் கடைசி ராகத்தை என் முகத்திலெறிந்தபடி
வெளியேறினாள்.
உடலில் மைதுனத்திற்கு பின்னான அதிர்வுகள்.
அறைக்குள் வண்ணங்கள் ஒவ்வொன்றாக
மீண்டும் வரத்தொடங்கின.
5 comments:
பின்னீட்டீங்க தலைவா..!!
wow!!! Not thambi anymore...annan.
// பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி
இருளில் சுழன்றாடினாள்.
சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்
ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட
அவளின் நிறம் இப்போது காரிருள்.//
அருமை
அழகு டா கண்ணு ;)
டம்பி
சூப்பரு :)
Post a Comment