எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, August 14, 2008

கவ்வாலி இசை, உருவ ஒற்றுமை, காமிக்ஸ் உலகம்

சென்ற வாரத்தின் ஒருநாள் பணிநிமித்தமாக தொலைதூரம் செல்லவேண்டி இருந்தது.
அலுவலகத்தில் பாகிஸ்தானி ட்ரைவர்கள்தான் அதிகம். அப்படி ஒருநாள் செல்லும்போது
காரில் ஒரு பாடலை ஒலிபரப்பினார் பாக் நண்பர். பொதுவாக ஒரேமாதிரி இசைக்கும்
பாகிஸ்தானிய நாட்டுப்புற இசையை நான் விரும்புவதே இல்லை. என்ன செய்வது
வேறு வழியின்றி போடுப்பா கேக்கலாம் என்றேன். எதோ ஒரு பாட்டை போட்டார்
பயணம் முடிகிற வரை அந்த ஒரு பாட்டை மட்டுமே திருப்பி திருப்பி கேட்கும்படியான
குரல். ஹரிகரனைப் போல, எஸ்.பி.பி போல அத்தனை அருமையான குரல்
இல்லையென்றாலும் எதோ ஒன்று அந்த குரலில் இருந்து என்னை ஈர்த்தது.
பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் நுஸ்ரத் ஃபதே
அலிஃகான் என்று சொன்னார். குறித்துக்கொண்டேன்.

இந்த ஒருவாரத்தில் நூற்றுக்கும் அதிகமான முறை கேட்டிருப்பேன். ஒருவார்த்தையும்
புரியவில்லை, முற்றிலும் புதியதான இசை என்றாலும் என்ன பிடித்திருக்கிறது என்றே
தெரியவில்லை. மிக ஆழ்ந்து யோசித்ததில் அதில் எனக்குத் தெரிந்து சில நினைவுகளை
மீட்டெடுக்கிறது என்று கண்டுகொண்டேன். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில்
போடப்படும் கீர்த்தனை, சாமிப்பாடலின் ஏதோ ஒரு குரல் இந்தக்குரலுடன் ஒத்துப்
போவதாக உள்ளிருக்கும் நினைவு சொல்கிறது. இரண்டாவதாக பாடலில் கடைசியாக
உச்சக்கட்ட ஸ்தாயில் நுஸ்ரத்தின் குரல் எனக்கு மிக நெருக்கமான அதே மாதிரி
உச்சஸ்தாயியில் குரல் பிசிரடிக்குமாறு அமைந்திருந்தது. அது எம்.எஸ் விஸ்வநாதனின்
குரல். வசீகரம், ஆவேசம், உணர்வுகள், தொழுதல், தாளத்திலிருந்து வெளிச்செல்லும்
குரல் போன்ற பல வடிவங்களின் தொகுப்பாக இந்தப்பாடல் உள்ளது.



இவரைப்பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது வெங்கட் அருமையான
பதிவொன்றை எழுதியிருந்தார். பாடலை நிதானமாக கண்ணை மூடி ரசித்துப்பாருங்கள்.

விடியோ தெரியாதவர்கள் Tumhein dillagi bhool என்று youtube ல் தேடினால்
கிடைக்கும்.

***

தூக்கமிழந்து போகும் இரவுகளில் எல்லாம் சண்டைப் படங்களைப் பார்ப்பது வழக்கம்
(அதற்காக "சண்ட" படத்தைப் பார்க்கும் துணிவு இல்லை) கடந்தவாரத்தில் ஒருநாள்
அப்படி தூக்கமிழந்து போனது ஒரு இரவு. மெல் கிப்சனின் பேட்ரியாட் படத்தினைப்
பார்த்தேன். மெல் கிப்சனின் இப்போதையை முகத்தினைக் காணும்போதெல்லாம்
இதே முகத்தை வேறெங்கோ கண்டிருக்கிறேன் என்று தோன்றும். அப்படியே தீவிரமான
யோசனைக்குப் பிறகு இதேபோன்ற ஒரு முகம் அல்லது அதே போன்ற உடல்மொழியுடன்
கூடிய ஒரு நடிகர் எனக்கு ஞாபகம் வந்தார். பொதுவாகவே எனக்கு புதிதாக ஒரு முகத்தை
கண்டால் இதற்கு முன்பு இதே மாதிரி உள்ள ஒருவரோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வேன்.
ஆயிரத்தில் ஒன்றிரண்டு முகம் அதேபோல உண்டு. உதாரணத்திற்கு இந்த பதிவு
பார்த்தால் தெரியும்.



மெல்கிப்சனைப்போலவே உள்ள ஒரு முகமாக நான் நினைப்பது மறைந்த நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு. ஓரளவுக்கு முக ஒற்றுமை இரண்டு பேருக்கும் இருப்பதாக நான்
நம்புகிறேன். சினிமாவில் வருவதுபோல அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரி எல்லாம்
இருக்க மாட்டார்கள் எனினும் சில பாவனைகளின்போது, சிரிப்பின்போது ஒருநொடியில்
தோன்றுமே அதுதான் ஒற்றுமை. நிஜத்தில் பேட்ரியார் பார்க்கும்போது சந்திரபாபுதான்
நினைவுக்கு வந்தார். இதேபோல முக ஒற்றுமை மேலும் இரண்டு பேருக்கு இருக்கிறது
அவற்றை கீழே கொடுக்கிறேன். பெயரை நீங்களே கண்டுபிடியுங்கள்.



ஒண்ணுமே தெரில எங்கடா ஒத்துமை தெரியுதுன்னு கேட்டிங்கன்னா, படங்கள் ரெண்டு ரெண்டா தெரியுற நிலைக்கு வரவும். அப்பவும் தெரிலன்னா வுட்டுடுங்க.

***

மூன்றாவது ரவுண்டு முடிந்திருந்த நேரம். மல்லு நண்பன் குழறலாக ஆரம்பித்தான்.

"இதுவரைக்கும் அந்த ஒரே ஒரு விஷயத்தைத் தவிர அழுததே இல்ல தெரியுமா?"

"எந்தா விஷயம் சொல்லு மச்சி" (ரெண்டு பெக்கு உள்ள போச்சுன்னா உடனே ப்ளாஷ்பேக் போய் பெயிலியர் லவ்வ நெனச்சு ஒப்பாரி வெப்பானுங்களே)

எனக்கு காமிக்ஸ் புக்குன்னா ரொம்ப புடிக்கும் போபனும் மோளியும், பாலராமா,
பாலபூமி, பாலமங்களம், பூம்பாட்டு, முத்தஷி (பாட்டி கதைகள்) இந்தமாதிரி
ஒருநூறுக்கும் மேல சேத்து வெச்சிருந்தேன். "சின்ன வயசுல ஸ்கூலுக்கு அலுமினிய சூட்கேஸ்ல புக்கு எடுத்துட்டுபோவோம்ல" அதுலதான் காமிக்ஸ் அடுக்கி வெச்சு
என் ரூம்ல வச்சிருந்தேன்.

காமிக்ஸ்னா ரொம்ப இஷ்டமா மச்சி?...

ஆமாண்டா வளெர இஷ்டம்.

படிப்ப முடிச்சிட்டு நான் மும்பைக்கு போனேனா அங்க போனபிறகு ஆறுமாசத்துக்கு
ஒருமுறைதான் ஊருக்கு போவேன். எப்பப்ப போறேனா அப்பலாம் அந்த காமிக்ஸ்
பொட்டிய திறந்து படிப்பேன். அப்படியே பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வரும். நான்
ஊருக்குப் போக ஆர்வமா இருக்கறதும் இது ஒரு காரணம்.

"கேக்கறதுக்கே நல்லாருக்கே மேல சொல்லு மச்சி"

அப்படி ஒருமுறை ஊருக்கு போகும்போது என்னோட அறைல அந்த காமிக்ஸ் பொட்டிய
காணும். வீடெல்லாம் தேடினபோது கிடைக்கவேல்ல. நேசிக்கற பொருள் தொலஞ்சு
போனா எப்படி இருக்கும்? என்னோட பர்ஸ், மூணு மொபைல் காணாம போகும்போது
கூட எனக்கு பெருசா எந்த கவலையும் இல்ல. ஆனா இப்ப பொட்டிய காணும்னவுடனே
என்னால அழுகைய கட்டுப்படுத்தவே முடில.

அம்மாகிட்ட போய் கேட்டேன். ஒருமாதிரி தயக்கமான குரல்ல சொன்னா. இந்தமாதிரி
என்கிட்ட பேசினதேயில்ல. பாத்திரம் வாங்கறவங்கிட்ட போட்டு பாத்திரம் வாங்கிட்டதா
சொன்னா. அப்படியே தோட்டத்துக்கு ஓடிப்போயிட்டேன்.

பிறகு எந்தங்கச்சி வந்தா. "நான் காலேஜ் போயிருந்த சமயம் அம்மா இப்படி செஞ்சுட்டாங்க.
நான் கேள்விப்பட்டவுடனே அம்மாகிட்ட சொன்னேன். "இந்த புக்குலாம் கிட்டத்தட்ட அஞ்சு
வயசுலருந்து அண்ணன் சேகரிச்சுட்டு வரான்மா". இங்க வந்தா இதபடிக்காம இருக்க
மாட்டான். அடுத்தமுறை வரும்போது இத கண்டிப்பா தேடுவான் ஏன் இப்படி செஞ்சேனு
கேட்டேன்.

அம்மா பதறிட்டாங்க. உடனே இருஞ்சாலக்குடில இருக்க அத்தனை வேஸ்ட் பேப்பர்
கடைலயும் தேடினோம். கிட்டத்தட்ட ஒருவாரம் தேடியும் கிடைக்கல. அம்மா
இந்த காரியத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.

உடனே வீட்டுக்கு ஓடிப்போய் பாத்தேன். அம்மா அழுதுட்டு இருந்தாங்க. "தெரியாம
செஞ்சுட்டேன் என்ன மன்னிச்சிருடான்னு சொன்னா" புத்தகம் தொலைஞ்சு
போன வருத்தத்தோட அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டதும் என்னால அழுகைய
கட்டுப்படுத்த முடியவேல்ல. அந்த சம்பவத்துலருந்து அம்மா என் விஷயங்கள்ல
ரொம்ப கவனமா இருக்கபோதெல்லாம் காமிக்ஸ் பெட்டி தொலைஞ்சு போனதுதான்
ஞாபகம் வரும்.

"வுட்றா.. வுட்றா... இப்பலாம் ஆன்லைன்ல செமி போர்னோ காமிக்ஸ்லாம் வருது.
நாளைக்கு உன்னோட மெயிலுக்கு லிங்க்ஸ் அனுப்பி வைக்கிறேன். பாத்து எஞ்சாய்
பண்றா ஆனா "மிஸ்டு கால் குடுத்துடாத" (மிஸ்டு கால் ன் பதம் தெரியாதவர்கள்
தனியாக கேட்கவும்)

டேய் என்ன இருந்தாலும் அந்த பழைய காமிக்ஸ்ல வர்ற மாதிரி இருக்காதுடா

"ரப்சர் பண்ணாம கெளம்புடா" அவனவனுக்கு லவ் பெயிலியர் ஆச்சுன்னாதான் ஒப்பாரி
வெப்பானுங்க. இவன் என்னடான்ன கொத்து புஸ்தகம் (கொச்சுப் புஸ்தகம் இல்லிங்க)
காணாம போனதுக்கெல்லாம் சின்னபுள்ளயாட்டம் அழுதுகிட்டு.

11 comments:

koothanalluran said...

//சொந்தக்காரர் நுஸ்ரத் படே
அலி ஃகான்//

அல்ல நுஸ்ரத் ஃபதே அலிஃகான்
இவரை A R ரஹ்மான் பாடா வைத்திருக்கிறாரே கேட்டதில்லையா ?

கதிர் said...

வாங்க கூத்தாநல்லூரான்.

கேட்டிருக்கலாம். பாடகர் பேரெல்லாம் அதிகம் கவனிக்கறதில்ல. ஒருவேளை கேட்காமல் கூட இருந்திருக்கலாம்.

எந்த படம், பாட்டுன்னு சொன்னிங்கன்னா தெரிஞ்சிக்கலாம்.

koothanalluran said...

படப்பாடல் அல்ல தனிப்பாடல் திரட்டு (album)

Unknown said...

உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கான் இந்தியில் தனித்தும் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்தும் பல படங்களிள் பணியாற்றியுள்ளனர்.
கூகிளில் Ustad Nusrat Fateh Ali Khan எனத் தேடிப் பாருங்கள்.

KARTHIK said...

// இவரை A R ரஹ்மான் பாடா வைத்திருக்கிறாரே கேட்டதில்லையா ? //

ஆல்பம் பேரு நினைவிருந்த சொல்லுங்களேன்.

கதிர் said...

ஆல்பம் எங்க கிடைக்கும்னு/கேட்க முடிகிற தளங்களை குறிப்பிட்டால் நாங்களும் கேட்டுக்கொள்வோம். யூட்யுப் தளத்தில் தொகுப்பாக இல்லாமல் இருக்கிறது.

தகவலுக்கு நன்றி கூத்தாநல்லூரான்.

கதிர் said...

சுல்தான் இந்த பதிவில் உள்ள பாடல் கூட யூட்யூபில் இருந்து எடுத்ததுதான்.
நன்றி.

கார்த்திக்
அப்பாடல்கள் எனக்கு கிடைக்கும்போது இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி

CVR said...

நுஸ்ரத் ஃபதே அலி கான் கவ்வாலி இசை உலகில் மிக பிரபலமான பெயர்.
ரஹமானின் வந்தே மாதரம் ஆல்பத்திலும் "சந்தா சூரஜ் லாகோன் தாரே" எனும் படலில் பணியாற்றியிருக்கிறார்.

அந்த பாடல் நம் கருத்தம்மா படத்தின் "போராலே பொன்னுத்தாயி" பாடலின் இசையை ஒற்றி அமைந்தது.உலக அமைதி மற்றும் அன்பு ஆகிய கருத்துக்களை மையமாக வைத்து புனையப்பட்டப்பாடல்.கேட்க நல்லா இருக்கும்

இந்த பாடலும் மிக அருமை!!
பகிர்ந்ததற்கு நன்றி! :-)

CVR said...

அந்த பாடலின் வீடியோ இதோ..
http://www.youtube.com/watch?v=2WxJcDI9hDw

இந்த பாடலுக்கு Gurus of peace என்றும் பெயர் உண்டு..

CVR said...

எவனோ அந்த பாட்டுக்கு தன்னோட Vஈடியோவை போட்டிருக்கான்..அதை பாத்து டென்சன் ஆகிடாதீங்க.. :)

கதிர் said...

மிக்க நன்றி CVR.