
நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறது
சிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்
பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்
நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.
தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.
அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்
தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்
சேமித்திருந்தேன்.
சுகந்தியுடனான சொற்கள் காலாவதியாகிவிட்டன
என்று முன்பொரு யுகத்தில் கனலில் இட்டேன்.
தேவி விடாப்பிடியாக அடம்பிடித்து சொற்களை
திரும்பப் பெற்றுக்கொண்டாள்.
முத்துலட்சுமி இறந்தபோது அவளுடனான சொற்களும்
எப்படியோ மாயமாகி விட்டிருந்தன.
சாந்தியுடன் சொற்பரிமாற்றமில்லை எனினும்
பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்
யுகமாயிரமாயிர சில்லறைச்சொற்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்.
இன்று நீ விட்டுச்சென்ற சொற்களை மயிலிறகு
பெட்டி ஒன்றில் அடைக்கையில் நிலம் அதிர
கீழே விழுந்தது ஒரு சொல்.
வெடித்துச் சிதறிய அறையின் நாற்புறமும்
தனிமையின் நர்த்தனம்.
13 comments:
அட்டகாசம்!
இதை பின்நவீனத்துவ கவிதையில சேர்த்துக்கலாமா அண்ணே :))
கவிதையில கூட நீ கவிதாவை மறந்தது என் மனசுக்கு கஷ்டமாயிருக்குதுண்ணே.. :))
நல்லாயிருக்கு ;)
புரமா? புறமா? :((
கதிர்,
ஒரு மாதிரியா கஷ்டப்பட்டு புரிஞ்சது.
Free ஆ இருக்கும் போது எனக்கு கொஞ்சம் டியூசன் எடுங்க.
//கவிதையில கூட நீ கவிதாவை மறந்தது என் மனசுக்கு கஷ்டமாயிருக்குதுண்ணே.. //
யாருங்க அது........
Kathir.
********** Not to Publish***********
இந்த பி.ந கவிஜ மசுரு எழுதுறதுக்கு முன்னாடி உருப்படியா தமிழ் படிய்யா....
நல்லாருக்குய்யா..ஆனா நான் இந்த மாதிரி நெறய எழுதிட்டனே :D
நல்லாருக்கு அண்ணன்...
நன்றி கப்பி, சென்ஷி, கோபி
சென்ஷி லேய் டில்லி
யாருப்பா அந்த கவிதா...
இராம்
அது புறம்தான்னு மாத்திட்டேன். நன்றி
கதிர்,
அதெல்லாம் சும்மா...
மறுபடியும் இராம்,
மன்னிச்சுடுங்க புலவர் பெருமான்...
தெரியாத்தனமா பப்ளிஷ் பண்ணிட்டேன்.
அய்ஸ்
உன் அளவுக்கு வரமுடியுமா...
எதோ எங்களுக்கு தெரிஞ்சது.
நன்றி கிங்
//பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்//
//நிலம் அதிர கீழே விழுந்தது ஒரு சொல்.//
நல்ல கவிதை படிக்க தந்ததுக்கு நன்றி கதிர்.
அண்ணா என்னை மாதிரி ச்சின்ன பசங்களுக்கு புரியற மாதிரில்லாம் கவிதை எழுத மாட்டீங்களா?? :(
minjiyathu thanimai mattum thaan
athuthane nirantharam...
manithanukku yeno purivathillai
Post a Comment