எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, June 07, 2008

சில குறிப்புகள்.

பொதுவாக பட்டான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானியர்களைப்பற்றி ஒரு விதமான
கருத்து உள்ளது. அதாவது நம்ம ஊர்ல இப்படி சொல்வாங்க. "இவளே இவ்ளோ
அழகா இருக்கான்னா இவ தங்கச்சி எப்படி இருப்பா" என்று. அதையே பட்டான்கள்
மாற்றி "இவளே இவ்ளோ அழகா இருந்தான்னா இவ தம்பி செமையா இருப்பான்"
என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து உண்மைதான். ஓரினச்சேர்க்கை விஷயத்தில்
கராராக இருப்பவர்கள் இவர்கள். வம்ச விருத்திக்கு மட்டுமே பெண்ணை நாடும்
குணம் உள்ளவர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாங்கள் தங்கி இருக்கும்
இடத்தில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பிலிப்பினோ திருநங்கைகள் மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். பிலிப்பைன் நாட்டில் மட்டுமே இவ்வித குறைபாடுகள்
கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியாக
நூற்றுக்கு மூன்றுபேர் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் விடுதியில் பட்டான்
என்ற பாகிஸ்தானிய ட்ரைவர்கள் அதிகம் பேர். கனரக வாகனங்கள் ஓட்ட அவர்களை
விட்டால் சிறந்த இனம் ஒன்று இல்லை. இந்த பிலிப்பினோக்கள் மூவரும் வெளியில்
செல்லும்போதோ, வரும்போதோ இவர்களை விழுங்கும் தாபத்தோடு அனேக
பட்டான்கள் நோக்குவர். முதுகின் கீழ் துளைப்பது போன்ற பார்வை பின் எதாவது
கமெண்ட் அடிப்பது. அதில் எரிக் என்பவர் மட்டும் என் நண்பர். "இந்தியர்களாவது
போகும்போதும் வரும்போதும் கிண்டல் மட்டும்தான் செய்வார்கள். படான்களோ
ஒருபடி மேலேபோய் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தனிமனித
சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஆதியினம் என்பார் அந்த
நண்பர். அவர் சொல்வதும் சரியே.

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியினை காண
நேர்ந்தவுடன் நம் இந்தியச்சமூகம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது.

----

சென்ற வார குமுதம் இணையப் பதிப்பை பார்த்தவர்கள் பலருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்
ஆவேசம் கிலேசம்னு நிறைய வந்திருக்கலாம். ஆனால் எனக்கு குஜாலாக இருந்தது
மேலும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்து மேட்டர் சொன்னேன்.
அவர்களும் குஜாலாக பார்த்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். மேட்டர்
என்னன்னா குமுதம் பெண்கள் சிறப்புப் பகுதியில் சேலை கட்டுவது எப்படி
என்று விவரணப்படம் போட்டிருந்தார்கள். விவரணப்படம் என்றால் விலாவாரியாக
என்று கொள்க. சவுகார்ப்பேட்டை ஆண்டி ஒன்று சேலை கட்டுவதை ஒளிவுமறைவு
இல்லாமல் கவர் செய்திருந்தார்கள். பெண்கள் சிறப்புப் பகுதியில புடவை கட்ட
சொல்லித்தரும் அளவுக்கு வந்தாச்சு போல. ஆனாலும் விவரணப்படம் சகிலாவுக்கே
சவால் விடும் தரத்திற்கு இருந்தது. வாழ்க வளர்க. அடுத்தவாரம் ஜட்டி போடுவது
எப்படி என்று சொல்லித்தருவாங்களா என்று அய்யனார் கேட்டார். அடப்ப்ப்பாவி...
இதுகூடுமா தெரியாது...

----

திரும்பத் திரும்ப புத்தகங்களை சிலாகித்துப்பேசுவது எனக்கே சலிப்பைத் தருகிறது
என்றாலும் வாசிப்பதை நிறுத்துவதில்லை. அதைப்பற்றி பேசுவதையும் நிறுத்துவதில்லை
அய்யனாரிடமிருந்து பறித்து வந்த "ஆதண்டார் கோயில் குதிரை" என்ற சிறுகதைத்
தொகுப்பை வாசித்தேன். முன்பே கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" என்ற
தொகுப்பை வாசித்து பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இந்த நூலிலும் தமிழின்
தரமான சிறுகதைகள் என்று நேர்மையாக சொல்லக்கூடிய கதைகள் இருக்கின்றன.
சிறந்த படைப்பாளன் என்பவன் தான் வாழ்ந்த சூழ்நிலையை, மக்களை, அவர்களின்
மொழியை, வட்டார வழக்கத்தை நியாயமாக பதிவிப்பவனே நேர்மையான படைப்பாளன்.
அந்த வகையில் கண்மணி குணசேகரன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
என் வாசிப்பு தளத்தில் நாஞ்சில் நாடனுக்குப் பிறகு வட்டாரவழக்கிலான படைப்புக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படைப்பாளி.

மருதாணி என்பதை எங்கள் ஊரில் "அழவான" என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட
கொத்தடிமையைப் போல மாடுமேய்த்து, சாணியள்ளி, தொழுவம் பெருக்கி என
எல்லா வேலைகளையும் செய்யும் சிறுவனின் உலகம் என ஆரம்பித்து அவனின்
அழவான வைத்துக்கொள்ளும் ஆசையினையும் அதைவிட அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன். அதற்காக அழவான செடியைத் தேடுகிறான். மிகுந்த தேடலுக்குப்பின்
அழவானையை கண்டு பெரும்பயத்தினூடே பறிக்கிறான். மறுநாள் அதிகாலையிலே
வருமாறும் "மாட்டை பொலிபோட" வேண்டும் என்று பலமுறை எச்சரித்து
சொல்கிறாள் சொந்தக்காரி. மருதாணி வாசம் முகரும் ஆர்வத்துடன் அக்காவிடம்
அரைக்கச்சொல்லி வைத்துக்கொள்கிறான். மறுநாள் சூரியன் சூத்தாமட்டையில்
அடிக்கும்போதுதான் விழிப்பு வருகிறது கூடவே முந்தின தினம் எச்சரிக்கை
செய்ததும் நினைவு வர உதறி விட்டு ஓடுகிறான். அவள் இவனைக் கண்டபடி
ஏசுகிறாள் மிகுந்த அச்சத்துடன் சாணி அள்ளி எருக்குழியில் போடுகிறான். திடீரென
கை உதறிக்கொண்டு அழவான வாசனையை முகரும் தன் ஆசையை அவனே
அறியாமல் மூக்கருகே கோண்டு செல்கிறான். சாணி நாத்தம்தான் அடித்தது.
வாசம் என்ற கதையும் அழகாக இதனை பதிவித்திருந்தார். ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத அத்தனை கதைகளும் ஒருகிராமத்தின் வெவ்வேறு தளங்களில்
இயங்குகிறது.

----



சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் "RAY" என்ற படம். டைட்டில் இசைக்காக
மறுபடியும் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. படம் முழுக்க இசைதான்.
கண்தெரியாத ஒரு இசைமேதையின் வரலாற்றை சொல்லும் படம். வாய்ப்புக்
கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் வருவதுபோன்ற அற்புதமாக ப்ளாஷ்பேக்
காட்சிகள் வேறெந்தப்படத்திலும் கண்டதில்லை. ஒவ்வொரு ப்ரேமும் ஒரு
கவிதை. உண்மைக்கதை என்று போட்டிருக்கிறார்கள். ஒரு இசைக்கலைஞனின்
மிகச்சிறந்த பதிவு.

----

தமிழ்மணக்கவுஞ்சர்கள் கவிதை எழுதி வன்முறை செய்வதை தடுக்கும் விதமாக
அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளதா
என அடர்கானகப்புலி என்னிடம் கேட்டது, மேலும் இல்லையென்றால் எப்பாடுபட்டாவது
ஒரு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்று துயரத்துடன் விம்மியபடி
கிட்டத்தட்ட அழுதபடி சொன்னார். மிகச்சிறிய அளவில் வன்முறை செய்தவன்
என்ற வகையில் கடக்கவேண்டிய தூரம் அதிகமிருப்பதால் இதில் கருத்துச்சொல்ல
ஈரிழைத் துவர்த்து அளவுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை.

ஆகவே தமிழ்மணக்கவுஞ்சர்கள் வன்முறையின் உச்சம் தொட்டு அடர்கானகப்புலியின்
படைப்புச்சுதந்திரத்திற்க்கு எதிரான அதிகார மய்யத்தினை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டு
சிறந்த வன்முறைக்கவுஞ்சராக வைகை ராம் அவர்களையும் அவரின் கவுஜையை
பதிவிக்கிறேன்.

பெருவெளியின் காட்சியடைய
சாளரம் வழியும் எரிதழலின்
நிறமடைகிறது எனது அறை...
உந்தன் முதன்முறை வருகையை போலே...

26 comments:

Ayyanar Viswanath said...

டம்பி
அந்த நிகழ்ச்சிய பாத்த பின்னுமா தேவலாம்னு தோணுது..கர்ர்ர்ர்..வலைல எந்த கில்மா மேட்டர்னாலும் உனக்கு எப்படிய்யா ஒடனே தெரியுது?..எலக்கிய அறிவோட ஒனக்கு மத்த அறிவும் அபாயகரமா வளருதுய்யா..எதுக்கும் அண்ணாச்சிய ஒரு முற பாரு..

கதிர் said...

அவ்ருதான்யா எனக்கே சொன்னாரு. அதுக்குபொறவுதான் நான் உனக்கு சொன்னேன்.

மங்களூர் சிவா said...

testtu

மங்களூர் சிவா said...

குமுதம் மேட்டரும் ஐயனாரின் டவுட்டும் சூப்பர்.

:)

கதிர் said...

மங்ளூரு

டெஸ்டு மட்டுமில்ல,
பிப்டி பிப்டி
டொண்டி டொண்டி
அஞ்சஞ்சு
எல்லாமே ஆடலாம்.

ஆயில்யன் said...

//அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன்///

என்னைப்போல் ஒருவன் :))

கோபிநாத் said...

;)))

கதிர் said...

ஆயில்யன்
உங்களைப்போல மட்டுமல்ல. எல்லாரையும்போல ஒருவன். சின்ன வயசுல இந்த மாதிரி ஆசை இல்லாதவங்களே இருக்கமுடியாது. யாருக்கு நல்லா செவப்பு புடிச்சிருக்குன்னு கைய வெளிச்சத்துல வச்சி பாத்ததெல்லாம் ஞாபகம் வருதா. :)

கோபி, துயா :))) நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரசித்துப் படித்தேன் !

இராம்/Raam said...

ஐயா எலக்கியவியாதி,

தினசரி செய்திகளை பதிவுகளில் சிலாகிப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் எதற்கு பதிவின் கடைசியில் உரைநடை'யை கவுஜ'யாக உடைத்து போட்டு இலக்கிய கட்டுடைக்கிறிர்கள்???????? :D

Anonymous said...

//பொதுவாக பட்டான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானியர்களைப்பற்றி //

தகவலுக்காக மட்டும் - அங்க எப்படின்னு தெரியாது, ஆனா பொதுவா பட்டான் என்பது ஒரு தனிப்பட்ட இனம். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பெரிதளவு இருக்கும் இவர்கள் இந்தியாவிலும் உண்டு. நமது ஷாருக்கான் ஒரு பட்டான்.

நமது சென்னையில் கூட இவர்கள் உண்டு. நாம் 'பட்டாணி' என்று கூப்பிடுவோம்.

கதிர் said...

நன்றி சுந்தர்,

ஐயா ராம்

நன்றி வைகை ராம்.
ஓஹோ அப்டி எழுதறதுதான் உரைநடையா... அவ்வ்வ்வ்
உரைநடையையே உடைத்துப் புரியாத பாசையும் வார்த்தைகளையும் புகுத்தி எங்களை அச்சமடையச்செய்யும் நீர்தானய்யா உண்மையான எலக்கியவாதி. :))

கதிர் said...

அனானி
நீங்க சொல்றது புதுசா இருக்கு. மேல சொல்லுங்க.

மோகன் கந்தசாமி said...

Ray பாத்திட்டு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சி,
படம் "நச்", Ah, you can talk about the pit, barbecue, Ah, mess around, கலாசல்
படம் பார்க்காதவர்கள் இங்கு சென்று டைட்டில் சாங் -ஐ பார்த்து விடுங்கள்.

கதிர் said...

நன்றி மோகன்
ரொம்ப சிரமமெடுத்து போட்டுருக்கிங்கன்னு தெரியுது.

Athisha said...

குமுதம் மேட்டரை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ,

உங்க கிட்டருந்து இது போல இன்னும் நெறய எதிர் பார்க்கும்

அதிஷா

Uma said...

திருநங்கைகள் விசயத்தில் நம் நாடு பரவாயில்லை.

நீங்கள் கொடுத்த தகவல் அதிலும் ஆண் வர்க்க ஆதிக்க மனப்பாண்மையையே காட்டுகிறது.

Anonymous said...

அய்யோ.. அய்யோ.. சிர்ப்பு சிர்ப்பா வருது.

எலக்கிய பாவனை நல்லாவே தெரியுது. ஒவ்வொரு வரி எழுதறத்துக்கு முன்னாடியும் ஏராள சிறுபத்திரிகைகளை பொரட்டி பொரட்டி எழுதற அவஸ்தை புரியுது தம்பி.

அதே அனானி தீர்க்கதரிசி

கதிர் said...

//திருநங்கைகள் விசயத்தில் நம் நாடு பரவாயில்லை.

நீங்கள் கொடுத்த தகவல் அதிலும் ஆண் வர்க்க ஆதிக்க மனப்பாண்மையையே காட்டுகிறது.//

என்னைய சொல்றிங்களா இல்ல வேற யாரையாவது சொல்றிங்களான்னு ஒண்ணும் புரியல. இருந்தாலும் நன்றி.

கதிர் said...

வாங்க தீர்க்கதரிசி

சொம்மா ஒரு வாத்தைக்கு தீ.த னு சொன்னா அதே மாதிரி பில்டப் கொடுக்கணுமா என்ன.

இப்ப என்ன அவஸ்த புர்ஞ்சு போச்சு ஒங்ளுக்கு???

என்னய்யா கொடும இது.
வேற எப்டி எழுதணும்னு டூசன் எடுங்க அப்டியே எழுதலாம்.

எலக்கிய பாவனை தடுப்புக்கழகத்துலருந்து வர்றிங்களா அனானி. தீ.த

Anonymous said...

//இப்ப என்ன அவஸ்த புர்ஞ்சு போச்சு ஒங்ளுக்கு???//

அதான் ஒங்க அண்ணாச்சி எழுதியிருக்காரே மலச்சிக்கல்னு. அதுதானே உம்ம அவஸ்தை!


//வேற எப்டி எழுதணும்னு டூசன் எடுங்க அப்டியே எழுதலாம்.//

எப்படி வேணாலும் எழுதிக்கோ. ஆனா ஒவ்வொரு லைனுக்கு நீ அறிவாளின்னு மத்தவன் நினைக்கனும்னு சொல்லி ரொம்ப மெனக்கெட்டு எழுதாதே. நெஜமாவே அருவருப்பா இருக்குது.


//எலக்கிய பாவனை தடுப்புக்கழகத்துலருந்து வர்றிங்களா அனானி. தீ.த//

அந்த ஆளு எங்கே இருந்து வர்றான்னு தெரியலை. ஆனா நான் அங்கேருந்து தான் வர்றேன்.

தமிழர்கள் நினைவு கூறத்தக்க சில இலக்கியங்களை படைத்தவன் என்ற முறையில் உங்களைப் போன்றவர்கள் ஒருவருக்கொருவர் சொறிந்துகொள்ளும் சுய சொறிதல் வெறுப்பாக இருக்கிறது.

வேறொரு தீர்க்கதரிசி

கதிர் said...

வே.தீ.த அனானி சமூகத்திற்கு.

//அதான் ஒங்க அண்ணாச்சி //

இதானல என் மனசு புண்ணாச்சு. அவ்ரு என்னபா பண்ணாரு உன்ன?

எம்மேல கொலவெறில இருக்கிங்கன்னு தெரியுது. ஆனா என்ன காரணம்னுதான் தெரியல. சும்மா லூசுத்தனமான எதிர்ப்பு மாதிரி இருக்கு.

அதனால லூசுல விட்டுடலாம்.

நான் எதுக்குய்யா அறிவாளி மாதிரி நடிக்கணும். :))

//தமிழர்கள் நினைவு கூறத்தக்க சில இலக்கியங்களை படைத்தவன்//

அவ்வ்வ்வ்வ்
வணக்கம் சார்.
தெரியாம நடந்துபோச்சு. மன்னிக்கனும். உங்களுக்குன்னு ஒரு பேரு கண்டிப்பா இருக்கணும்.அடுத்த தபா வரும்போது... முடிஞ்சா அத சொல்லுங்க.

Ayyanar Viswanath said...

யார்யா அந்த கொலவெறி அனானி :)

அனானி சமூகத்திற்கு அமீரகத்தின் வளர்ந்த / வளரும் ஒரிஜினல் இலக்கியவாதியை வம்புக்கிழுப்பதை உடனடியாக நிறுத்தவும்..இல்லையெனில் குசும்பன் அண்ட் கோ வினர் சாகும் வரை உண்ணும்விரதம் இருப்பார்கள் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்

Anonymous said...

//அய்யோ.. அய்யோ.. சிர்ப்பு சிர்ப்பா வருது.//

முன்னாடியா? பின்னாடியா?

Anonymous said...

//அனானி
நீங்க சொல்றது புதுசா இருக்கு. மேல சொல்லுங்க.//

மேல சொல்றதுக்கு என்ன இருக்கு, கூகுள் சொல்லுவாரு பாருங்க.

'ஹே!ராம்' படத்தில் வரும் 'அம்ஜத் கான்' பாத்திரம் பட்டான் இனம்தான். பாட்டில் கூட வருமே 'நம்ம பட்டாணிடா! நன்கு சொன்னானடா'. இன்னொரு இடத்தில் சாகேத் ராம் அம்ஜத்கானை பார்த்து 'கைபர் போலன் வழியாத்தானே வந்தீங்க' என்று கேட்பார். இது சூப்பர் மேட்டருல்ல.

முத்து படத்தில் ரஜினி ஆடும் 'தில்லானா, தில்லானா' பாட்டில் பட்டான் டிரஸ்தான் போட்டு ஆடுவார்.

உங்க ஊர்ல பொதுவா பாகிஸ்தானியர் எல்லாரையும் பட்ட்டானாக சொல்றாங்க போல.

Sridhar V said...

Ray Charles பற்றி இங்கு படியுங்கள்.

இவரை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். பளீரென்று சிரிக்கும் அந்த சிரிப்பு....

படம் இன்னமும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்க வேண்டும்.