எதிர்பாராம வந்த நேற்றைய விருந்தினன் மெக்டொவலுக்கு தொட்டுக்கொள்ள
ஓலைப்பகோடா வேண்டும் அமுத்தலாக அடம்பிடித்தான். இந்த அரபு நாட்டிலே
அபூர்வமாக கிடைக்கும் ஓ.பகோடாவுக்கு எங்கு போவேன். கொஞ்சம் கூட
கருணையில்லாமல் கேட்கிறான் பட்டியிண்ட மொவன். இருந்தாலும் என்ன
பண்றது விருந்தாளியா வந்துவிட்டவனை இவ்விதம் வைவது நாயமில்லை.
போடா மயிறுன்னு சொல்லலாம்தான். மெக்டொவலுடன் எப்போதும் பிரதாப்
போத்தனுடன் கூட்டணி. "பொன்மாலை மேகங்களே என் இன்ப ராகங்களே"
தனியறையுடன் இப்பாட்டிருந்தால் சைட் டிஷ், ஊறுகாய்கூட இரண்டாம்
பட்சமே. இவனுக்கென்றால் ஓலைப்பகோடா வேண்டுமாம். எந்த நாதாறி
இவனுக்கு ஓ.ப வை அறிமுகப்படுத்தியிருக்க கூடும். "ஷோபாவைக் காட்டி
நல்ல பிகர் என்றான்". மதுவின் கூடலுடன் இசையை ரசிக்கத் தெரியாதவன்
என்ன மனிதனாக இருக்க முடியும். முன்கூட்டிய தீர்மானங்களுடன் ஒருவனை
எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனின் சுவாசித்தல் கூட
தவறாகப் படும். முன்பொரு முறை "வான் நிலா நிலா அல்ல" என்ற பாடலை
கேட்டுக்கொண்டிருக்கையில் பங்களாதேஷி பன்னாடையும் கேட்டுத்தொலைத்து
அவனுக்கு அந்த இசையும், குரலும் என்ன நினைவுகளைத் தூண்டியதோ
தெரியவில்லை. பிறகு தினமும் ஆறுமுறை அப்பாடலைக் கேட்டபடி இருந்தான்.
இதனால் எனக்கொன்றும் பாதகமில்லை என்றாலும் அப்பாடலுக்கான வரிகளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு சொன்னபோதுதான் எரிச்சலாக வந்தது.
மனதுக்குள்ளே வான்நிலா நிலா அல்ல வை எப்படி மொழிபெயர்க்கலாம் என்று
தோற்றேன். அத்தனை சாமர்த்தியம் எனக்கு கைவரவில்லை மாறாக எரிச்சலே
வந்தது. இசை வடிவத்தை எந்த மொழியாயினும் ஏற்றுக்கொண்டால் என்ன
குறைந்துவிடப்போகிறது. மையமாக சிரித்தபோதுகூட புரிந்துகொள்ளாமல்
எதிர்பார்ப்பவனை தொல்விலங்கின் மூர்க்கத்துடம் தெரியாது என்றபோது அலறி
விட்டான். பிறகு அவனும் அதே மூர்க்கத்துடன் தினமும் பாடலைக்கேட்டு
அட்சர சுத்தமாக பாடிக்காட்டினான். அதில் என்ன சந்தோஷம் அவனுக்கு இருக்க
முடியும் என்று தேட ஆசைதான்.
ஓ.ப வை இவன் மறந்திருப்பான் என்ற நினைக்கும்போது ஒரு சிரிப்பினூடே
மறுபடி நினைவூட்டினான். அவன் கோப்பையின் விளிம்பில் அளவில் சிறிய
கரப்பான் ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் திரவத்திலோ அல்லது
மேசையிலோ விழக்கூடும். எதோ ஒரு சுவாரசியம் தொற்றிக்கொள்ள கூர்ந்து
கவனிக்க ஆரம்பித்தேன். நினைத்ததுபோலவே திரவத்தினும் விழுந்தது. சிறிது
நேரம் தத்தளித்துப் பின் இறந்தது. பிடி சாபத்தைக் கொடுத்து அதை தூக்கி
வெளியெறிந்து பின் குழலினில் சரித்தான். என்னைவிட அவன் கரப்பானுடன்
சமாதானத்தை பெற்றிருக்கவேண்டும். அவனின் மனநிலை எனக்குக் கைவர
நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, வரவேண்டும். மாறாக அதனுடன் என்
வன்முறை அளவுக்கு மீறிப்போகிறது. ஆயுதங்களாக வாசித்துக்கொண்டிருக்கும்
புத்தகம், லைட்டர், செருப்பு, செய்தித்தாள் போன்றவற்றைக் கொண்டு மூர்க்கமாக
தாக்கத் துவங்கினேன். இப்படி செய்யும்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து
தொல்லையும் குறையும் என்று நினைத்தேன். ஆனால் எந்த மாற்றத்தையும்
இந்த வன்முறை தரவில்லை. அதன் இனப்பெருக்கும் எந்த விதத்திலும் தடை
படவில்லை.
கரப்பான் பூச்சியை பார்த்தாலே நம் சினிமா இயக்குனர்களின் கற்பனா சக்தியும்
ஞாபகம் வரும். நாயகியை அச்சுறுத்தும் ஆயுதமாக அது இருந்தது. பயத்துடன்
நாயகனை கட்டி அணைப்பாள். நாயகனுக்கு கரப்புகளிடம் துளியளவும் பயம்
இருக்காது. இதேபோலதான் மின்னல், ரவுடி, மற்ற விலங்குகளிடத்தும்.
இவைகள் தோன்றும்போதெல்லாம் நாயகனின் பின்பக்கமாகவோ அல்லது
முன்பக்கமாக இறுக்கமாக கண்களை மூடி கட்டியணைத்திருப்பாள்.
உங்கள் கால்விரல்களின் கடைசி விரலின் அளவில் பெரிய இரண்டு உணர்வுக்
கொம்புகளுடன் ஒளி பட்டு மினுங்கள் றெக்கையுடன் ஒரு அழகிய கரப்பான்
உங்கள் அழகிய உணவின் மீது கொம்புகளை ஆட்டி நர்த்தனம் ஆடும்போது
கோபம் வரவில்லையென்றால் நீங்கள் இலவம்பஞ்சு போன்றவர். எனக்கு
கொலைவெறியுடன் அதை வீழ்த்தவேண்டும் என்று தோன்றும். துரத்துவேன்
செருபாலே குறிபார்த்து அடிப்பேன் அது தவறும், கையில் கிடைப்பவையே
ஆயுதம் பெரும்பாலும் என்குறி தவறிவிடும். அதுவும் சாமர்த்தியமாக எதாவது
இடுக்களில் நுழைந்துகொண்டு என் கொலைவெறியை அதிகரிக்கச் செய்யும்.
இப்படித்தான் ஒருநாள் நெருக்கத்தில் இருந்த கரப்பானை அடிக்கும்போது
வெள்ளை நிற திரவம் ஒன்று தெறித்து வந்து உதட்டில் விழுந்தது. கரப்பானுக்கு
ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும் என்று சிறுவயதிலே படித்தது நினைவு
வந்தது. நாற்றமா, மணமா என்பதை உணர முடியவில்லை. அருவெறுப்பாக
வந்தது. அழுத்தமாக துடைத்துவிட்டும் மனம் ஆறவில்லை. நன்றாக கழுவி
பிரஷ் செய்தபின்பு புத்துணர்வு கிடைத்த மாதிரி தெரிந்தது. இப்படிதான்
படிப்படியாக என் வன்முறை அதிகரித்து இப்படி வந்து நிற்கிறது.
ஓ.ப கூட வேணாம். எதாச்சும் இருந்தா பரவால்ல. நேந்திரம் சிப்ஸ் கிடைக்கும்ல
என்று ஷோபாவின் மேல் கண்வைத்தபடி கேட்டான். ம்... வாங்கிட்டு வரேன்.
போதையில் எனக்கு நினைவுகள் என்றால் அவனுக்கு பெண்ணின் தேகங்கள்
கிளர்ச்சியினை தருகின்றன. ஒவ்வொருவரும் பலவிதம். தொழுகை நேர
கடையடைப்புக்கு முன்பாக நாஸர் கடைக்கு சென்றால் எதாவது கிட்டலாம்.
எதிரே சூடானிய சகோதரர்கள் சலாம் அலைக்கும் என்றார்கள். இவ்விரு சூடானிய
சகோதரர்களைக் கண்டால் பலவேடப் புகழ் இயக்குனர் ரவிக்குமாரின் மீது அலுப்பே
வராது. கனரக இயந்திரங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளிகள் இருவரும். மிகுந்த
உடல் உழைப்பு. பெரியவரின் முகம் துன்பியல் நாடகத்தின் முடிவு போலவும்
இளைய சகோதரனின் முகம் அதற்கு நேர்மாறாக இருக்கும்.
நாஸர் கடையில் ஓலைப்பகோடாவின் வடிவத்தை விவரிக்கும்போது அவர்
சிரித்துவிட்டார். வாங்கிக்கொண்டு திரும்பியபோது, வந்த விருந்தினன் மல்லாக
கவிழ்ந்திருந்தான்.
"பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே..
ஓடிக்கொண்டிருந்தது. என் கோப்பையில் அளவில் பெரிய கரப்பான் ஒன்று மடிந்துபோயிருந்தது. உண்மையில் நாய்களை விட கரப்பானுக்குத்தான் அதிக
மோப்பசக்தி இருக்க முடியும். காவல்துறையிடம் நாய்களை பறித்து விட்ட்டு
ஹைபிரிட் கரப்பான்களை உற்பத்தி செய்து பழக்கிக் கொடுக்கலாம்.
மணியடித்தது... போனில் டில்லி.
"இன்று என்ன நாள்னு கண்டுபுடி மச்சான்"
"தெர்லடா"
"முக்கியமான நாள்ரா, இதுகூட தெரியாம என்ன மயித்துக்கு நீ லவ்வு
பண்ற"
"என்ன எழவு நாள்ரா இன்னிக்கு சொல்லித்தொலயேண்டா"
"இன்னிக்கு பாவனா பொறந்தநாள்ரா மச்சான்"
"சரி வைய்யி.
இந்த பதிவு அனானி தீர்க்கதரிசிக்கு கொலைவெறியுடன் எழுதப்பட்டது.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Wednesday, June 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//இன்னிக்கு பாவனா பொறந்தநாள்ரா மச்சான்"
"சரி வைய்யி.//
ஓ அந்த நேரத்துலதான் டில்லி போன் பண்ணுனாரா?
எல்லார்க்கிட்டயும்,
ஹய்யோ!
ஹய்யோ! இன்னிக்கு பாவணா பொறந்த நாளுன்னு கூட தெரியல தம்பிக்குன்னு ஃபீல் ப்ண்ணுனாரு:)))
/////நாஸர் கடையில் ஓலைப்பகோடாவின் வடிவத்தை விவரிக்கும்போது அவர்
சிரித்துவிட்டார். வாங்கிக்கொண்டு திரும்பியபோது, வந்த விருந்தினன் மல்லாக
கவிழ்ந்திருந்தான். ////
அப்படியே எனக்கும் ஓலைப்பகோடாவ விவரிச்சிடுங்க, ஆனியன் பக்கோடா, கீர பக்கோடா தெரியும், பட் ஓலைப்பகோடா?
பை த வே, என் பதிவ பாத்திட்டு, Applet தெரியுதான்னு சொல்லுங்க!
ரெண்டாவது பாரா வரைக்கும் கூட படிக்க முடியலை... :( எழவு நீயெல்லாம் என்னத்த எலக்கியவியாதி ஆகி கிழிக்க ??? அடர்கானாகத்து புலியை பார்த்து சூடு போட்டுக்கிட்டே பூனைதானே நீயி?? :(
ஒழுங்கா "எதிர் பாலின ஈர்ப்புகள்" மாதிரியும் "மாணிக்கம் பொண்டாட்டி" மாதிரியான கதைகளை எழுதுய்யா....
இன்னும் படிக்கலை. ஒரு ரவுண்டு படிச்சிட்டு வர்றேன்.
அதே அநாநி
//கரப்பான் பூச்சியை பார்த்தாலே நம் சினிமா இயக்குனர்களின் கற்பனா சக்தியும்
ஞாபகம் வரும். நாயகியை அச்சுறுத்தும் ஆயுதமாக அது இருந்தது. பயத்துடன்
நாயகனை கட்டி அணைப்பாள். நாயகனுக்கு கரப்புகளிடம் துளியளவும் பயம்
இருக்காது. இதேபோலதான் மின்னல், ரவுடி, மற்ற விலங்குகளிடத்தும்.
இவைகள் தோன்றும்போதெல்லாம் நாயகனின் பின்பக்கமாகவோ அல்லது
முன்பக்கமாக இறுக்கமாக கண்களை மூடி கட்டியணைத்திருப்பாள்.//
ஹீ ஹீ இப்படி எல்லாம் செய்தால் தான் கிளுகிளுப்பாக இருக்கும் :-)))))
//இந்த பதிவு அனானி தீர்க்கதரிசிக்கு கொலைவெறியுடன் எழுதப்பட்டது. //
:-)))
ஆயில்யன்.
ச்சும்மா ஒரு பேச்சுக்கு பாவனா பிடிக்கும்னு சொன்னேன்.அதுக்காக பொறந்தநாளைக்கு நாம அன்னதானமா பண்ணமுடியும்.
மோகன்
ஓலைப்பகோடா என்பது விவரிக்க முடியாத வடிவம் கொண்டது நண்பரே! :))
//ராம்
ரெண்டாவது பாரா வரைக்கும் கூட படிக்க முடியலை... :( //
ஏன் அதுக்கு மேல தெலுங்குல எழுதியிருக்குதா?
//எழவு நீயெல்லாம் என்னத்த எலக்கியவியாதி ஆகி கிழிக்க ???//
எதையாச்சும் கிழிக்கணும்ல.
//அடர்கானாகத்து புலியை பார்த்து சூடு போட்டுக்கிட்டே பூனைதானே நீயி?? :(//
நேர்ல வந்தே ரெண்டு அடி அடிச்சிருக்கலாம். முந்தாநேத்து அவரோட கதையை படிச்சு என் கதை ஞாபகம் வந்துதுன்னு சொன்னிங்க.
ஒப்பிட்டு பாக்குற புத்தி இருக்கறவரைக்கும் இப்படிதான் தோணும்.
புலியுமில்ல, பூனையுமில்ல ஒருவன் எழுத்தை அவனின் சூழ்நிலைகளே தீர்மானிப்பதாக இருக்கும். அதேமாதிரி படிக்கிற புத்தகங்கள்,பார்க்கிற மனிதர்கள், சூழ்நிலைன்னு எல்லாமே மாறும்போது எழுத்தும் மாறும். வேணும்னே அவர்மாதிரி எழுதணும்னு ஆசையில்ல. எனக்கும் அவருக்கும் இருக்கற நட்புதான் இந்த மாதிரி எண்ண வைக்கிது. அதுக்கென்னய்யா பண்ண முடியும்.
//ஒழுங்கா "எதிர் பாலின ஈர்ப்புகள்" மாதிரியும் "மாணிக்கம் பொண்டாட்டி" மாதிரியான கதைகளை எழுதுய்யா....//
:) ம்...
நன்றி ராம்.
//இன்னும் படிக்கலை. ஒரு ரவுண்டு படிச்சிட்டு வர்றேன்.
அதே அநாநி//
கொண்டைய மறைச்சுகிட்டு வாய்யா மொதல்ல.
//ஹீ ஹீ இப்படி எல்லாம் செய்தால் தான் கிளுகிளுப்பாக இருக்கும் :-)))))//
உங்க ப்ரொபைல் போட்டோவ பாத்தாலே தெரியுதே! ::))
//கொண்டைய மறைச்சுகிட்டு வாய்யா மொதல்ல.//
ங்கொய்யால. எப்படியோ கண்டு புடிச்சிடுறானுங்கய்யா.
அந்த அனானி கிடையாது வேற அனானி
//நேர்ல வந்தே ரெண்டு அடி அடிச்சிருக்கலாம். முந்தாநேத்து அவரோட கதையை படிச்சு என் கதை ஞாபகம் வந்துதுன்னு சொன்னிங்க.
ஒப்பிட்டு பாக்குற புத்தி இருக்கறவரைக்கும் இப்படிதான் தோணும்.//
ம்ம்ம்.... அதை நாந்தான் சொன்னேன்... அதுக்கும் நீ வந்து ரீப்பிட்டே போட்டு திரிஞ்சே... அய்ஸ் கதையை படிச்சதும் ஒன்னோட கதையோட நினைப்பு வந்துச்சு சொன்னேன்...
//புலியுமில்ல, பூனையுமில்ல ஒருவன் எழுத்தை அவனின் சூழ்நிலைகளே தீர்மானிப்பதாக இருக்கும். அதேமாதிரி படிக்கிற புத்தகங்கள்,பார்க்கிற மனிதர்கள், சூழ்நிலைன்னு எல்லாமே மாறும்போது எழுத்தும் மாறும். வேணும்னே அவர்மாதிரி எழுதணும்னு ஆசையில்ல. எனக்கும் அவருக்கும் இருக்கற நட்புதான் இந்த மாதிரி எண்ண வைக்கிது. அதுக்கென்னய்யா பண்ண முடியும்.//
எல்லாம் மாறட்டும்ய்யா.... ஆனா நமக்குன்னு இருக்கு தனித்துவம் போகக்கூடாது'லே!! நீயே உன்னோட பழைய பதிவுகளை படிச்சு பாரு.. இப்போ எழுதின பதிவுகளை படிச்சி அதோட ஒப்பீட்டு பாரு... வித்தியாசம் தெரியும்...
ஒடனே நாங்க எழுத்து பாணியிலே முன்னேறிட்டோமின்னு பீலா விட்டேன்னு வைச்சுக்கோ... அப்புறமா இருக்கு இன்னும்.. :)
:))
அனானி தீர்க்கதரிசியால ரெண்டு ரவுண்டு எக்ச்சாவா :)))
எக்சா இல்ல கப்பி
போனவாரம் எழுதி ட்ராப்ட்டுல
இருந்தது. அங்க தட்டி இங்க வெட்டி
கொலவெறில அனானிக்காக தரப்பட்ட அருமருந்து.
//எல்லாம் மாறட்டும்ய்யா.... ஆனா நமக்குன்னு இருக்கு தனித்துவம் போகக்கூடாது'லே!! நீயே உன்னோட பழைய பதிவுகளை படிச்சு பாரு.. இப்போ எழுதின பதிவுகளை படிச்சி அதோட ஒப்பீட்டு பாரு... வித்தியாசம் தெரியும்... //
எனக்குன்னு என்ன வெங்காய தனித்துவம் இருந்துச்சு? என்னய்யா பிரச்சின உனுக்கு? ஒரே மாதிரியா எழுதணுமா!
அன்னிக்கு எழுதுனியே அதே மாதிரி எழுது, முன்னாடி எழுதுனியே அதே மாதிரி எழுதுன்னு...
உண்மைய சொல்லப்போனா எனக்கு எதுமாதிரியும் எழுத தெரியாது. தோன்றதைத்தான் எழுத முடியும்.
//தோன்றதைத்தான் எழுத முடியும்.//
:-))
\\அன்னிக்கு எழுதுனியே அதே மாதிரி எழுது, முன்னாடி எழுதுனியே அதே மாதிரி எழுதுன்னு...
உண்மைய சொல்லப்போனா எனக்கு எதுமாதிரியும் எழுத தெரியாது. தோன்றதைத்தான் எழுத முடியும்.\\
சூப்பரு ;))
நன்றி வெட்டி :)
லேய் கோபி
ஒடனே கெளம்பிருவிங்களே!
/
தம்பி said...
ஆயில்யன்.
ச்சும்மா ஒரு பேச்சுக்கு பாவனா பிடிக்கும்னு சொன்னேன்.அதுக்காக பொறந்தநாளைக்கு நாம அன்னதானமா பண்ணமுடியும்.
/
டுபாய்ல சம்பாறிக்கிறியில்ல பாவனா பர்த்டேக்கு அன்னதானம் பன்னாதான் என்ன???
ச்ச கருமம் இந்த பதிவ படிச்சி எனக்கும் கொலவெறி வருதுய்யா
:))
//ஓலைப்பகோடா என்பது விவரிக்க முடியாத வடிவம் கொண்டது நண்பரே! //
முடியாது
இங்கே ஒரு தரம் விவரிச்சே ஆகணும்
வால்பையன்
டேய்... பாவனா பொறந்தநாள மறந்த நீயெல்லாம் பதிவுல இனிமே அந்த பேர யூஸ் பண்ணக்கூடாது. இனிமே பாவனா பேர இணையத்துல யூஸ் பண்ண வேற ஆளத்தான் தேடணும் :(
//புலியுமில்ல, பூனையுமில்ல ஒருவன் எழுத்தை அவனின் சூழ்நிலைகளே தீர்மானிப்பதாக இருக்கும். அதேமாதிரி படிக்கிற புத்தகங்கள்,பார்க்கிற மனிதர்கள், சூழ்நிலைன்னு எல்லாமே மாறும்போது எழுத்தும் மாறும். வேணும்னே அவர்மாதிரி எழுதணும்னு ஆசையில்ல. எனக்கும் அவருக்கும் இருக்கற நட்புதான் இந்த மாதிரி எண்ண வைக்கிது. அதுக்கென்னய்யா பண்ண முடியும்.
//
நீ அய்யனாருக்கு பிரண்டாயிருந்து சொல்ற வார்த்தையா இது. ச்சே.... முதல்ல அய்ஸ்கிட்ட "டுக்கா" வுடணும்ப்பா :)
//அப்படியே எனக்கும் ஓலைப்பகோடாவ விவரிச்சிடுங்க, ஆனியன் பக்கோடா, கீர பக்கோடா தெரியும், பட் ஓலைப்பகோடா?//
ஓல பக்கோடாவ பத்தியே உங்களுக்கு தெரியல. எதுக்கு இந்த எளக்கியவாதிக்கெல்லாம் பின்னூட்டம் போடறீங்க. என்ன பழி வாங்குறதா நினைப்பா :))
//அப்படியே எனக்கும் ஓலைப்பகோடாவ விவரிச்சிடுங்க, ஆனியன் பக்கோடா, கீர பக்கோடா தெரியும், பட் ஓலைப்பகோடா?//
அதானே பார்த்தேன்.. எஸ்கேப்பாகிட்டாண்டா மச்சான் :))
Post a Comment