எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 10, 2008

ஸ்ருதி கமல்ஹாசன், சிம்பு, தருண்கோபி மற்றும் வேதிகா





ஒனிடா டீவி என்றாலே விளம்பரம் வித்தியாசமாக இருக்கும். சில வருடங்களுக்கு
முந்திய ஓனிடா டீவி விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வெள்ளைக்கார பெண்மணி
வாயை அகல விரித்து பெருங்குரலெடுத்து "ஓ..." வென்று கத்துவார் (பாடுவார்)
அப்போது அவருக்கு முன்னே "சரக்கடிக்க உபயோகப்படும்" மெல்லிய கண்ணாடி
தம்ளர் காட்டப்படும். வெ.பெண்மணி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது
கேமரா பின்னோக்கி நகரும். சோபாவில் உட்கார்ந்து கண்ணாடி தம்ளரை கையில்
பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பார். தொலைக்காட்சியில் அப்பெண் மேலும் உச்சஸ்தாயில் பாடும்
போது இவர் கையில் பிடித்திருக்கும் கண்ணாடி தம்ளர் படீரென உடையும்.
ஒனிடா தொலைக்காட்சியின் "ஒலித்திறன்" அப்படிப்பட்டது.

சமீபத்தில் ஸ்ருதி கமல்ஹாசனின் பேட்டியை பார்த்தபோது மேற்படி பெண்மணியின்
குரலுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை. பேட்டி கண்டவர் பெயர் ஞாபகம்
இல்லை (சீரியல்களின் பெண்களுக்கு அடுத்தபடியாக இவர்தான் அதிகம் கண்
கசக்கியவர்) "தென்பாண்டி சீமையிலே" பாடலை மேற்படி பெண்மணியின் குரலில்
அம்மணி பாட ஆரம்பிக்க அதிர்ந்து போனேன் நான். எவ்வளவு உணர்ச்சியான
பாடல இப்படி காமெடி பண்ணிட்டாங்களேன்னு ஆனால் அவங்க கீபோர்டு
வாசிச்சது அவ்வளவு அழகா இருந்தது. அவங்களும்தான்.

பாடலை பாடி முடிச்சதும் பேட்டி எடுத்தவர் சொல்றார். "அய்யோ இந்த பாடல
இவ்ளோ அழகா பாடமுடியும்னு எங்களுக்கு தெரியாமலே போச்சு. எனிவே ரொம்ப
தேங்ஸ் ஆவ்சம், எக்சலண்ட்னு ரொம்ப ஜாஸ்தி கூவினார். (டேய் வுட்டா கால்லயே
வுழுந்துடுவ போலருக்கு). ரெண்டு பேருல யாரு வாசிச்சதுன்னு ஒரே குழப்பாச்சு.
சும்மா சொல்லக்கூடாது நல்லா கீபோர்டு வாசிக்கறாங்க. ஆங்கிலப்பாடலுக்கு ஏற்ற
குரல். பேசும்போது அப்படியே பெண்மை கலந்த கமலினை ஞாபகபடுத்துகிறார்.

என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? "நான் பொய் சொல்ல
மாட்டென், திருட மாட்டேன், கோவம் ஆக மாட்டேன்" இதெல்லாம் யார்
சொன்னாலும் பொய்.
(இந்த இடத்துல அப்படியே கமல் ஸ்டைல்)என்னைப் பத்தி
இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கேளுங்க அப்ப சொல்றேன். பேசும்போது தலைய
சாய்ச்சு. குனிஞ்சு, முகத்தை சுழிச்சி இந்த மாதிரி எல்லாத்தையும் குழந்தை
மாதிரி செய்தது ரசிக்க முடிஞ்சது.

லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக் கத்துகிட்டிங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக்
கத்துகிட்டிங்கன்னு ஒரே லாஸ் ஏஞ்சல்ஸ் புராணமா விட்டுகிட்டிருந்தாரு கேள்வி
கேட்டவர் நான் அவர ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். இந்தியாவிலருந்து
ஸ்ருதிதான் மொதமொத அமெரிக்கா போனாங்களா/போய் மியூசிக் கத்துகிட்டாங்ளா?
ஏன்யா இந்த மாதிரி பெரிய இடம்ன உடனே உடம்ப வளைச்சு கேள்வி கேக்கறிங்க?
ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி அஜித் பேட்டி கலைஞர் டீவில வரும்போது
என்னவோ அவர கடவுள் ரேஞ்சுக்கு வச்சு காபந்து பண்ணாங்க. இந்த பொண்ணு
இன்னும் அதிசயிக்கற மாதிரி ஒண்ணூமே பண்ணல. அதுக்குள்ள ஏன்யா இப்படி
மீடியா லைட்ட போடறிங்க?.

இசைத்துறைய பொறுத்தவரை இவர் என்ன சாதிப்பார் என்று தெரியவில்லை.
ஆனால் சினிமாத்துறையில் நிச்சயமாக சாதிப்பார். புலிக்கு பிறந்தது கண்டிப்பாக
பூனையாக இருக்காது. :) மியாவ்வ்

அடுத்ததா அனுஹாசன் மேல பயங்கர கொலவெறில இருக்கேன். காளைனு ஒரு
வெற்றி படமாம் அதுல நடிச்ச சொம்பு, வேதிகா மற்றும் இயக்குனர கூப்பிட்டு
காபி வித் அனுல பேச விட்டுருக்காங்க. ஒரு மொக்க படத்த எடுத்ததுமில்லாம
அத பத்தி பேசறதுக்கு ஒரு நிகழ்ச்சி அத ஊர் உலகம் பாக்கறதுக்கு ஒரு
தொலைகாட்சி மற்றும் இணையம். என்ன எழவுடா சாமி.

நானும் தெரியாமதான் பாக்கறேன் டீவி புரொக்ராம்ன உடனே இந்த கீரோயின்லாம்
எங்கருந்துதான் இந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ் வாங்கறாங்களோ தெரில. ஃபேன் ஓடாத
இடத்துல, காற்றோட்டம் அதிகமில்லாத இடத்துல கூட அவுங்க முடி அலைபாயும்
உடனே அத எடுத்து காதுல சொருவுவாங்க. இந்த மாதிரி அக்குள் காட்டி பேட்டி
குடுத்தின்னா போட்டிய எடுத்துடுவம்னு மிரட்டினாதான் ஒழுங்கா பெக்கெ பெக்கெனு
சிரிக்காம இருக்கும்.

தருண்கோபி எடுத்த திமிரு கன்னாபின்னானு ஓடுச்சாம். நான் சொல்வேன் பேரரசு
வரிசைல இவரும் ஒரு விஷச்செடி.

டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...

இப்படிக்கு
வெட்டியாக ஆபிஸ் நேரத்தில் youtube வீடியோ பார்த்து பதிவெழுதும் சங்கம்.

10 comments:

கோபிநாத் said...

டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...:(

முடியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

@//ரெண்டு பேருல யாரு வாசிச்சதுன்னு ஒரே குழப்பாச்சு.//

LOL..

ILA (a) இளா said...

நான் ஏற்கனவே கடுப்பாயி எழுதி வெச்சுட்டேன். இந்த சொம்பு கும்பல் அலும்பு தாங்கலைப்பா

சதங்கா (Sathanga) said...

//இந்த பொண்ணு
இன்னும் அதிசயிக்கற மாதிரி ஒண்ணூமே பண்ணல. அதுக்குள்ள ஏன்யா இப்படி
மீடியா லைட்ட போடறிங்க?.//

இன்னும் நீங்க புரிஞ்சிக்கல. இப்படித்தானே எல்லாரையும் built-up பண்ணி ஒரு ஒசரத்தில கொண்டு போய் வச்சிடறாங்க. ஒரு பத்து வருசம் பின்னால போய்ப் பாருங்க. ரசிகன் என்று ஒரு படம். நம்ம சின்னத் தளபதி கலக்கியிருப்பார். இப்ப அவரு ரேஞ்சு என்ன !!!!! அதுனால லூசுல விடுங்க பாஸ் !!!

சென்ஷி said...

:))))

கைப்புள்ள said...

//டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...

இப்படிக்கு
வெட்டியாக ஆபிஸ் நேரத்தில் youtube வீடியோ பார்த்து பதிவெழுதும் சங்கம்//

காலங்காத்தால நல்ல ஒரு காமெடி பதிவு படிச்ச ஒரு திருப்தி. சொம்பு பையனுக்குத் திறமை இருக்குப்பா...ஆனா எப்ப திருந்துறானோ, வாய் பேசறதை குறைச்சிக்கிட்டு நடிக்க ஆரம்பிக்கிறானோ, அப்ப தான் உருப்படுவான்...அவன் படமும் ஓடும்.

கதிர் said...

அழுவாத கோபி. வீரனுக்கு விழுப்புண் சாதாரணம்.

வாங்க வீரசுந்தர் :)

சொம்பு அடிவாங்கினா சரியா பூடும் விவ்ஸ். :)))

கதிர் said...

//இன்னும் நீங்க புரிஞ்சிக்கல. இப்படித்தானே எல்லாரையும் built-up பண்ணி ஒரு ஒசரத்தில கொண்டு போய் வச்சிடறாங்க. ஒரு பத்து வருசம் பின்னால போய்ப் பாருங்க. ரசிகன் என்று ஒரு படம். நம்ம சின்னத் தளபதி கலக்கியிருப்பார். இப்ப அவரு ரேஞ்சு என்ன !!!!! அதுனால லூசுல விடுங்க பாஸ் !!!//

பாஸ்
ரசிகன் படத்துல சங்கவில்ல இருக்காங்க, விஜய் கூட இருக்காறா?

சென்ஷி :)

தல கைப்ஸ்,

என்னதான் பஞ்சாயத்துல சொம்பு ஒரு முக்கியமான ப்ராபர்ட்டியா இருந்தாலும் அதால தீர்ப்பு சொல்ல முடியாது, ஓரமாதான் இருக்கணும் அந்த சொம்பு நடுல வந்து நாட்டாம பண்ணா யாருக்குதான் கோவம் வராது.



நன்றி தல.

Viji Sundararajan said...

thx for the link.. i had a god hearty loud laugh hearing that song by her....[avam andhha petti edduthavar :)

சுரேகா.. said...

அத ஏன் பாக்கணும்.?
அப்புறம் டென்ஷனாகனும்?

:)

சிம்பெல்லாம்........?
ம்ஹூம் என்னத்த சொல்ல!