எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, March 09, 2008

நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!

தமிழக மக்களுக்கு ஏற்கனவே பரபரப்பான அறிமுகம் தந்தவரும் "கானல் நீர்"
படத்தில் அதிரடியாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவருமாகிய
முகவை குமார் என்கிற JK ரித்திஸ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை
விடுத்துள்ளார். தனது முதல் படம் தந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளும்
முன்பே அடுத்த படத்தையும் அறிவித்துள்ளது கண்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என் பங்களிப்பு
கணிசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிப்பேன்
என அறிவித்துள்ளதால் குழந்தைகள் முதல் பல்போன ஆயாவரை அனைவரும்
குலை நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் குய்யோ முறையோ என்று
தெரிவிக்கிறது.

அவரது அடுத்தபடத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக
அவரே குறிப்பிட்டு சிலாகித்தார்.
"பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" என்ற தலைப்பை
கேட்டவுடன் அவருக்கு பிடித்துவிட்டதாகவும் படத்தில் பத்தாவது படிக்கும் பையன்
வேடத்தில் நடிப்பதால் அதற்கேற்றவாறு முகத்தில் மேக்கப் அப்ப வேண்டும்
அதனால் கொட்டாம்பட்டி அருகிலிருந்து தெருக்கூத்து நடிகர்களுக்கு பவுடர்
போட்டு பளபளப்பாக்கும் மேக்கப் நிபுணர்களை ஸ்பெசலாக வரவழைப்பதாக
சொன்னார். படத்தின் அவரது மேக்கப் தனியாக தெரிய வேண்டும்
என்று இந்த ஏற்பாடாம்.

படம் வெகு ரகசியமாக எடுக்கப்படுவதால், சின்ன ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
கூட வெளிவரவில்லை. அதனால் அங்க இங்க பொறுக்கி பொறுக்கி எடுத்த
போட்டோக்கள்பிகரின் பின்னால் கருஞ்சிறுத்தையென நிற்பவர்தான் ஜேகே ரித்திஸ், நன்றாக
உற்றூப்பாருங்கள். (என்ன கொடும்ம்ம சார் இதுனுலாம் புலம்ப கூடாது)

இங்கே ஜேகே ரித்திஸின் புஜபல
பராக்கிரமத்தை (அக்கிரமம்) காணலாம் மேலும் தனது அடுத்த ப்ராஜெக்ட் மற்றும்
அரசியல், சமூகம் குறித்த தனது பங்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இணைய முகவரி அளித்திருக்கிறார். அவருக்கு
நீங்கள் மடல் செய்யலாம். உங்களுடைய சந்தேகங்களை அவர் தீர்ப்பார்.

பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இரு
கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் தனது எவர்சில்வர் பாத்திரத்துக்கு பங்கம்
வராமல் இருப்பதால் ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும் இணைந்த கைகள், அக்னி
நட்சத்திராம், சின்னதம்பி பெரியதம்பி வரிசையில் இதும் மெகா வெற்றிப்படமாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு இருப்பதால் தன்னுடைய கால்ஷீட், பெட்ஷீட் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வரை எதுவாக இருந்தாலும்
அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.


ரித்திஸ் ரசிகராக என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான் பேரரசு இயக்கத்தில்
விஜய டோ ராஜேந்தரும், ரித்திஸும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே!

(கற்பனை பண்ணும்போதே உடம்பு சிலிர்க்குது)
பார்ப்போம் எம் கனவு பலிக்கிறதா என்று.

இப்படிக்கு உலக நடிப்பு சூறாவலி ரித்திஸ் ரசிகர் மன்றம்
அபுதாபி கிளை
கொல்லம்பாளையம் ரோடு
பொட்டிக்கடை சந்து
போஸ்டாபீஸ் எதிரில்
துபாய் 6003236568941115

33 comments:

சுரேகா.. said...

பரவாயில்ல..full formக்ககு வந்துட்டீங்க போல இருக்கு !

கோபிநாத் said...

இந்த வார பிகர் சூப்பர் ;))

வரவனையான் said...

ada yain thala ! vadapazhani muzhukka iavari stills thaan payamuruthuthu


:)))))))))))

தம்பி said...

வழக்கமா வரும் கூட்டம் கூட இன்னிக்கு வரலையே! :( ஞாயிற்றுக்கிழமை ரித்திஸ் பதிவு போடகூடாது.

வரவனையான் said...

//தம்பி said...

வழக்கமா வரும் கூட்டம் கூட இன்னிக்கு வரலையே! ஞாயிற்றுக்கிழமை ரித்திஸ் பதிவு போடகூடாது. //

:))))))))))))))))))


இதுதான் அல்டிமெட் :))))))))))))))))

அபி அப்பா said...

படத்தின் முன்னோட்டமே அருமையா இருக்கே, படம் வந்தா பிச்சிக்கும்ன்னு நான் தம்பி உன் தலையிலே (சுத்தியால்)அடிச்சு சத்தியம் பண்றேன்!

அபி அப்பா said...

ரித்தீஸ் கிட்ட இருக்கும் காசெல்லாம் யாரோடைய காசு தம்பி, ஏதேதோ பேசிக்கிறாய்ங்களே அது பத்தி எதுனா சொல்லக்கூடாதா?

அபி அப்பா said...

தம்பி நான் இங்கே கொஞ்சம் கும்மிக்கவா!

கானா பிரபா said...

எங்கள் நாயகன் ரித்திஸ் குறித்த பதிவை வரவேற்கின்றோம்.

ரித்திஸ் ரசிகர் மன்றம்
கானல் நீர் ஓடைக்கரை
சிட்னி
ஆஸ்திரேலியா

தம்பி said...

தாராளமாக கும்மலாம். ஆனால் ரித்திஸ் தவிர வேறெதுவும் பேசக்கூடாது.

Pulliraja said...

இந்த வார பிகர் சூப்பர். கண்ணைக் கட்டுது. செல் போன் தெரிஞ்சா கொடப்பா! கொஞ்சம் அர்ஜன்ட்.

புள்ளிராஜா

தம்பி said...

டேய் பள்ளிராஜா ச்சி புள்ளிராஜா
வாங்கின வரைக்கும் பத்தாதா?
ஓடிபோயிடு

தமிழ் பிரியன் said...

தமிழ் திரையுலக விடிவெள்ளி சாம் ஆண்டர்சனுக்கு போட்டியா? விட மாட்டோம்!
சாம் ஆண்டர்சன் கொலை வெறிப்படை
துபாய்.

கானகம் said...

நடிப்பு சுனாமியா????

அடைமொழிக்கு வேற ஏதும் தலைப்பு கிடைக்கலையா?? எல்லாத்தையும் கொன்னுபோட்டுட்டு போறதனால இந்த அடைமொழியா?? ரசிக கன்மனிகள் விளக்கவும்.

சென்ஷி said...

:))))

அய்யனார் said...

:)

கப்பி பய said...

நடிப்பு சுனாமி
எமோஷன் எரிமலை
ஆக்டிங்கின் ஆதாம்
புரட்சி புல்டோசர்
வெள்ளிவிழா நாயகன்
வருங்கால ஐநா சபை தலைவர்
ஆஸ்கர் நாயகன் ரித்திஸ் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் தாய்மாரின் பேராதரவோடு உலகெங்கிலும் வெள்ளிவிழா காண வாழ்த்தும் நெஞ்சங்கள்!!


இவண்
கப்பி
டல்லாஸ் வட்ட ரத்தீஸ் நற்பணி மன்றம்
ஐக்கிய அமெரிக்க ரத்தீஸ் கொலைவெறிப்படையுடன் இணைந்தது.

கப்பி பய said...

எம்.ஜி.ஆர்-சிவாஜி
ரஜினி-கமல்
விஜய்-அஜீத்
சிம்பு-தனுஷ்
வரிசையில் ரித்தீஸ்-சாம் ஆண்டர்சன் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது

முனியம்மா(80-டூமில்குப்பம்): நான் பாகவதர் காலத்துலருந்து படம் பார்த்துட்டு வரேன். ஆனா இந்தா மாதிரி ஒரே டைம்ல ரெண்டு கெரகம் வந்ததேயில்லபா

'லைட்ஸ் ஆஃப்' டமீல் (40-தேனாம்பேட்டை): எங்க தலைவர் ப்ரவீன்காந்தை மறந்துட்டாங்க. என்னிக்கு இருந்தாலும் அவர் தான் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி. மீடியா அவரை மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம்

கத்திரிராசா(உதவி இயக்குனர்): வருங்காலத்துல ரித்தீஸும் சாம் ஆண்டர்சனும் அசைக்கமுடியாத சக்தியா இருப்பாங்கன்றதுல எந்த சந்தேகமுமில்ல. நானும் ரெண்டு பேருக்கும் கதை சொல்லியிருக்கேன். அடுத்த வருசம் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவோம்.

இவ்வாறு பொதுமக்கள் கருத்து கூறினர். ரித்தீஸ்-சாம் ஆண்டர்சனிடையே வரும் ஆண்டுகளில் கடும்போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'தமிழ் சினிமாவுக்கு இது போறாத காலம்' என்று பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர் கருத்து தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டியிருப்பதற்காக பொதுமக்களுக்கு எங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்னையிலிருந்து கோலிவுட் கோவாலு.

தம்பி said...

வரவனை,
நான் சென்னைல அதுவும் வடபழனில இல்லன்னு வருத்தப்படறேன், வேதனைப்படறேன், துக்கப்படறேங்க வரவனை,

எங்க தலைவர் போட்டோ வடபழனி மாத்திரமல்ல சென்னையின் எல்லா மூலைமுடுக்களிலும் ஒட்டி புகழ்பெறவேண்டும் என்பது என் அவா!

இதுக்கே பயந்தா எப்படி?

தம்பி said...

அபிஅப்பா,
பத்தியம் இருக்க வேண்டிய வயசுல சத்தியம் கேக்குதா உங்களுக்கு.
உங்க கட்சிக்காரருக்கு பினாமியா இருந்தவர்தான் இந்த ரித்திஸ், அங்க இங்க தாவி இப்ப நம்ம கட்சிக்கு வந்திருக்கார்.

கானா பிரபா!

தலைவர் புகழை அவுஸ்திரேலியா வரை கொண்டு சென்ற செய்தி எனக்கு உவகை அளிக்கிறது. அப்படியே நகரின் பிரதான சாலைகளில் கட் அவுட் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்தீர்களானால் மன்றம் உங்களை போற்றும்.

தமிழ்பிரியன்,

உங்கள் பேரை ரித்திஸ் பிரியன் என்று மாற்றிக்கொள்ளுங்கள், துபாய் வட்ட பொறுப்பு உங்களுக்கு தரப்படும்.

தம்பி said...

கானகம்,
சரியா புரிஞ்சிகிட்டிங்க. அதேபோல சுனாமி எப்பவாச்சும்தான் வரும் அதேமாதிரி தமிழ்சினிமாவுக்கு கிடைச்ச அரிய அரிய பொக்கிசம்தான் JK ரித்திஸ்.

சென்ஷி, அய்ஸ்
மன்றத்துல சீக்கிரம் சேந்திங்கன்னா சுனாமியின் அடுத்த படத்துக்கு ப்ரீ டிக்கெட்.

தம்பி said...

//நடிப்பு சுனாமி
எமோஷன் எரிமலை
ஆக்டிங்கின் ஆதாம்
புரட்சி புல்டோசர்
வெள்ளிவிழா நாயகன்
வருங்கால ஐநா சபை தலைவர்
ஆஸ்கர் நாயகன் ரித்திஸ் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் தாய்மாரின் பேராதரவோடு உலகெங்கிலும் வெள்ளிவிழா காண வாழ்த்தும் நெஞ்சங்கள்!!//

குடுத்த காசுக்கு மேல கூவுரானே!
கப்பி,
ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தின் அனைத்து ரித்திஸ் ரசிகர் மன்றத்துக்கும் நீதான் தலைவர்.
என்னேஏ விசுவாசம்.

தம்பி said...

//இவ்வாறு பொதுமக்கள் கருத்து கூறினர். ரித்தீஸ்-சாம் ஆண்டர்சனிடையே வரும் ஆண்டுகளில் கடும்போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. //

ஆமாமாம் இல்லயா பின்ன?

இதுலருந்து என்ன தெரியுது? கப்பி அடுத்த படமான "பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன், பண்புடன், அன்புடன், பாசத்துடன், கடமையுடன், வெறியுடன், அழுகையுடன் காத்திருப்பதாக தெரிகிறது.

அடுத்த முறை சென்னை வரும்போது நீங்கள் கண்டிப்பாக ரித்திஸ் உடன் கட்டியணைத்து நிற்குமாறு போட்டோ எடுத்து வடபழனி முருகன் கோவின் எதிரில் இதுவரை வரலாறு கண்டிராத வினைல் போர்டு வைக்கவேண்டும்.

தலைவர் ரித்திசின் முழுமுதல் ரசிகருக்கு நாங்கள் செய்யும் மருவாதை இதுதான்.

ஒன் பர்சனல் கொஸ்டிங் கப்பி சார்

ரித்திஸ் கட்சிக்கு நீங்கதான் அரசியல் ஆலோசனைகள் வழங்கறதா வெளில பேசிக்கறாளே அவா சொல்றதெல்லாம் உண்மையா?

We The People said...

நடீப்பூ சுனாமி கடந்த ஒருவருடமா கஷ்ட்டப்பட்டு நடித்துவரும் படமான "நாயகன்" பற்றி சொல்லாததை வண்ண்மையா கண்டிக்கிறோம்!!

நடீப்பூ சுனாமி பாசரை
சென்னை

:)))))))))))))))))))))))

இராம்/Raam said...

கதிரு உன்னோட பதிவை விட கப்பியோட கமெண்ட்தான் பிச்சிட்டு போகுது..... :)

இராம்/Raam said...

அவரோட அடுத்த படத்தோட பேரு நாயகன்'ஆம்... :( அந்த பேரை கெடுக்கனுமின்னே திரியுறாய்ங்கே.... :(((((

Rangs said...

Correct! poster paathu baathikkap pattavangalla naanum oruthan!

Vadapalani mattum illa..valasaravaakkam, KK nagar ellam indha koothu dhaan...Arcot road Megamart munnadi poi paarunga!Close-up la periya colling glass pottuttu sirikkaraarunga...idhula kazhthula 2 viral dhadimannukku chain vaera...

kashtamnga...Indha oorla ellaarum ipdithaanaaa? Namma oor arumai ippadhaan puriyudhu..

Vaasu said...

where can i get his first movie? please help me friends

தம்பி said...

we the people

நாயகன் பற்றிய செய்திகள் ரகசியமாக உள்ளதால் வெளியிட முடியவில்லை.
:))

ராம்,
கப்பி எப்பவுமே கலக்குவாரு.
நாங்க எப்பவாச்சும் கலங்குவோம்.

ரங்ஸ்,

சிங்காரசென்னைனா சும்மாவா பல கஷ்டங்கள் இருக்கத்தாங்க செய்யும்.

மங்களூர் சிவா said...

//
முனியம்மா(80-டூமில்குப்பம்): நான் பாகவதர் காலத்துலருந்து படம் பார்த்துட்டு வரேன். ஆனா இந்தா மாதிரி ஒரே டைம்ல ரெண்டு கெரகம் வந்ததேயில்லபா
//

:)))))))))))))))))

பொன்வண்டு said...

எங்க ஊரு டக்ளஸை சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் .. சொல்லிட்டேன்.. :)

தலைவரைப் பற்றிய மேலதிக தகவல்களுக்குப் பார்க்கவும்

http://ponvandu.blogspot.com/2007/06/blog-post.html

காட்டாறு said...

:)

எம்.ரிஷான் ஷெரீப் said...

தம்பி,இந்த வார பிகர்னு போட்டிருக்கீகளே...அந்த அக்காவோட ரித்தீஷ் நடிக்கமாட்டாராமா? மீரா அக்கா ஜோடின்னா இப்பவே ரெண்டு டிக்கட் புக் பண்ணி வச்சுக்குறேன்... :P