நேற்று காலை கென்யாவின் தெற்குப் பகுதியில் இருந்து வெளியாகும் ஸ்வாஹிலி
தின இதழை படித்துக் கொண்டிருந்தேன். உலகின் மிக வேகமாக அழிந்து வரும்
மொழிகளில் ஒன்றாக இதை போக்குவரத்துறை அறிவித்திருக்கிறது. விசேஷம்
என்னவென்றால் அந்த தினசரியின் மூன்றாம் பக்கத்தில் கென்ய நாட்டின் கவிஞர்
"டம்போ டுபாம்பி" ஒரு அருமையான கவிதையை வெளியிட்டிருந்தார்.
பொதுவாகவே எனக்கு தெரிந்து காதல் கவிதைகளை கக்கா போகும்போது
படிப்பதுதான் வழக்கம். அது ஒரு மலமிலக்கியாக கூட சில சமயம் எண்ணி
இருக்கிறேன். ஆகவே அந்த புகழ்பெற்ற கவிஞரின் கவிதையை வலக்கையால்
தள்ளி அடுத்த பக்கத்தை புரட்டினேன். ஆனால் கவிதைக்கு நடுவில் இடம்
பெற்றிருந்த மதுப்புட்டியின் நிறம் இழுத்ததால் மீண்டும் இடக்கையால் தாளினை
திருப்பி அக்கவிதையை படித்தேன். இதை மொழிபெயர்க்க மிகுந்த சிரமம்
எடுத்தேன் என்று அப்பட்டமான பொய்யை நீங்கள் நம்பவேண்டும்.
தவம்போல மதுவருந்துதல்
ஒவ்வொரு விடியலிலும் முதல் காரியமாக தண்ணீர்
அருந்தும் பழக்கம் எனக்கிருந்தது.
ஒவ்வொரு முறை கக்கா போகும்போதும் சுருட்டு
வலிக்கும் பழக்கம் உற்சாகமானது.
மிகவும் உற்சாகமான சமயங்களில் சீழ்க்கை அடிக்கும்
என் மனநிலையை சிலர்தான் புரிந்துகொள்வர்.
நூலினை முனைமடிக்காது படிக்கும் பழக்கமும் மடிக்கும்
வழக்கம் உள்ளவரை வெறுக்கும் பழக்கமும் எனக்கிருந்தது.
பசிக்கும்போது உணவருந்துவது என் முக்கியமான
பழக்கங்களில் ஒன்று.
அழகிய பெண்களை கண்டால் ஒருகணம் அப்படியே
நிலைகுத்தும் என் பார்வையின் பழக்கத்தை
தவிர்க்க முயன்று தோற்றே வந்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுவதை விரும்பவும் அதை வாசிப்பதை
வெறுப்பதும் என் முக்கியமான பழக்கம்.
இப்படி சொல்லிக்கொண்டிருப்பதே என் பழக்கம்.
ஒவ்வொரு மாலையிலும் காப்பியுடன் சுருட்டு பிடிப்பது
அபிமான பழக்கங்களில் ஒன்று.
ஒவ்வொரு இரவிலும் கிடார் வாசிக்கும் பழக்கமும் பின்
மதுவருந்துவது கூட என் பழக்கங்களில் ஒன்றுதான்.
ஆஹா இவனல்லவா கவிஞன்...
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Sunday, March 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அய்ஸ்க்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன் ;))
நானே பண்ணலாம்னு இருந்தேன். நீயே பண்ணிட்ட. :)
:)))
தம்பியண்ணன்..ஒலக இலக்கியத்தை அடுத்த ரவுண்டுக்கு கொண்டு போற உங்க சேவை நாட்டுக்குத் தேவை :)))
கப்பி,
எத்தனை ரவுண்டு போனாலும் எளக்கிய தாகத்த தணிக்க முடியலியேப்பா.
ஜூப்பரூ!
:)))) Amaam.. ungalukku epdi kenya mozi theriyum?? Ethavathu Kenya figureaa...??
Post a Comment