எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 24, 2007

கிழிச்சதும்... கிழிச்சதும்...

போத்தீஸ்
சென்னை சில்க்ஸ் ஜிவல்லரி மார்ட்
ரீகன் ஹேர் வெர்டிலைசர்
just one bottle will do the magic
க்ரிஸ்டல் ஜட்டிகள்
விஜய் டீவி திறந்திடு சீசெம்
மந்திரத்தை சொல்லு பரிசுகளை அள்ளு
மிலானோ பைப் பிட்டிங்குகள், பாத்திங் லக்சரீஸ்
சாசெல் மல்டிமீடியா பாடமுறை
ராதா இண்டெர்நேஷனல் பைப் பிட்டிங்குகள்
கோட்டா ஜிவல்லர்ஸ்
பில்ராத் மருத்துவமனை
யெரா க்ளாசஸ்
பெண்களை கவர கடி ஜோக்ஸ் உதவாது
அடுத்த வார ஸ்பெசல் பெண்களை கவுக்க பல ஐடியாக்கள்
வாங்க மறந்து விடாதீர்கள்.
அஞ்சால் அலுப்பு மருந்து(இன்னுமாடா இருக்கு!!!)
வைகிங் ஜட்டி, வேட்டிகள், பாலியஸ்டர் சட்டைகள்
ட்யூரோப்ளக்ஸ் மெத்தைகள்.
ஜான்சன்ஸ் சட்டைகள்.
குமரன் ஸ்டோர்ஸ்
தீபாவளி ஸ்பெசலாக ஒரு புடவைக்கு பல முந்தானைகள் ஜிப் மேட்ச்.
க்ரீன் டீ உலக மக்களால் அதிகம் அருந்தப்படும் டீ.
(உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி போலருக்கு)
லோட்டஸ் நவீன லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மையம்
சைக்கிள் ப்யூர் அகர்பத்திகள்.
ஹண்டே ஹாஸ்பிட்டல்
டீர்ம்லைன் கிச்சன்ஸ் & பெட்ரூம்ஸ்.
ஆல்ப்ரான் wheat flakes
ஆண்டுமுழுவதும் பயம் அறிய குருபெயர்ச்சி புத்தகத்தை வாங்குங்கள்
(புனித கங்கை நீர் சாஷே அன்பளிப்பு :)))))
ரிதம் வாட்சஸ்
ஜூனியர் ஹார்லிக்ஸ் 123
நாயுடு ஹால்



தீபாவளி ஸ்பெசல்னு ரெண்டு புத்தகமா கொடுக்கறாங்களேன்னு ஆறு திராம்ஸ்
கொடுத்து இந்த எழவ வாங்கிட்டு வந்தேன். வாங்கி பாத்தா ரெண்டு புத்தகமும்
முத்தாரம் சைஸ்ல இருக்குது. இப்பயே தீபாவளி எப்படிடா வந்துச்சுன்னு இந்த
சின்ன புத்தில உரைக்கல. நல்லவேளை 8 திராம்ஸ் கொடுத்து ஆவிய
வாங்கி பாவியாகாம விட்டேனே.

எல்லாமே முழுப்பக்க அல்லது இரண்டு பக்க விளம்பரங்கள். இவ்ளோ
விளம்பரம் சும்மாவா போடறாங்க. காசுவாங்கிகிட்டுதான போடறாங்க
அதுக்கு 9 ரூபாய் விக்கிறத அஞ்சுரூவாயா வித்தாதான் என்ன?
எல்லா விளம்பரமும் வழுவழுன்னு கண்ணை பறிக்கற மாதிரி இருக்கு
இந்த மாதிரி போட்டா எக்கச்சக்கமா செலவாகும் அந்த செலவை
வாங்கற மடையனுங்க தலையில கட்டிடலாம். விளம்பரத்துக்கு விளம்பரமும்
ஆச்சு, வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.

நூத்து அம்பது பக்க விளம்பரத்துல ச்சி சாரி புத்தகத்த்துல பாதிக்கு பாதி
விளம்பரம் அடைச்சிகிட்டு இருக்கு மீதில சினிமா சின்னத்திரைன்னு இருக்கு
இதுல தமிழ்நாட்டுலயே அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் இதழாம்!!!
சிறப்பம்சம் டூபீஸ்ல நாயுடுஹால், சிங்கிள் பீஸ்ல வைகிங், ஜான்சன் விளம்பரம்
வேற. கொடுமடா சாமி.

ஒரு விஷயம்கூட நல்லவிஷயமே போடலியா புத்தகம் முழுக்க சினிமாவும்
விளம்பரமும்தான் இருந்துச்சான்னு நீங்க என்னை கேக்கலாம். என்னோட பதில்
கண்டிப்பா இருந்துச்சி. வெற்றி பெற்றவர்களின் கதை, தன்னம்பிக்கை கட்டுரை
இதெல்லாம் இருந்ததுதான் மறுப்பதற்கில்லை ஆனால் தமிழ்நாடு மக்கள்
கொடுக்கற 9 ரூபாயும் இங்க இருக்கற மக்கள் கொடுக்கற 6 திராம்ஸ் பணமும்
அதற்கு ஈடானது அல்ல. விழலுக்கு இறைத்த நீர்மாதிரி ஆகுதேன்னு என்
கவலை இதுல தமிழ்லயே அதிகம் விற்பனையாகும் ஒரே இதழ்னு டேக் வேற.

எதைஎதையோ படிச்சி கிழிக்கிற பாமரன் அய்யாவும் இதே பத்திரிக்கைலதான்
என்னத்தையோ கிழிச்சிகிட்டு இருக்காரு. இவரு கண்ணுக்கு எப்படி இதெல்லாம்
தெரியாம போகுதுன்னு தெரில.

இதை ஏண்டா படிச்சிட்டு எங்க உயிரை வாங்கிட்டு இருக்கன்னு கேக்கறிங்களா?
அதையும் சொல்றேன் கேளுங்க.

நம்ம நண்பர் ஒருத்தருக்கு அம்மை போட்டுருச்சி அதே இலங்கை நண்பர்தான்.
ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன். சரியா எட்டரைக்கு
மருத்துவமனைக்குள்ள போயிட்டோம். ஆனா டாக்டர பாக்கறதுக்கு இரவு ஒன்றரை
மணி ஆச்சு. அவ்ளோ கூட்டமெல்லாம் இல்லிங்க மொத்தமா இருவது பேர் இருப்போம்.
அதுக்கே அம்புட்டு நேரம். ரெஸ்டாரெண்ட்ல இருந்து பார்சல் கொடுக்க வந்தவங்கிட்ட
கூட முகத்த பாக்காம ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்டுக்கு உண்டான பேப்பரை கொடுத்து
லெப்ட்ல போயி ரைட்டுல போ அங்கதான் டெஸ்ட் பண்ற இடம் இருக்குன்னு
சொல்ற அரபி ரிசப்ஷனிஸ்ட்.

உடம்புக்கு முடியாம இங்க வந்தா இவளுங்க பண்ற அட்டகாசம் தாங்க முடில.
பிஸ்கட் திங்கும்போது லிப்ஸ்டிக் அழிஞ்சி போச்சான்னு நிமிசத்துக்கொருமுறை
கண்ணாடிய பாத்துகிட்டு இருக்கறது. வாடிக்கையாளர்கள் எதாச்சும் தகவல்
கேட்டா மூடிகிட்டு உக்காருடா வெண்ணேங்காரா மாதிரி பதில் சொல்றது.

ஹெல்த் கார்டு, இன்சூரன்சு மயிறு மண்ணாங்கட்டின்னு எடுத்தது என்னத்துக்குன்னு
தெரில. ஒரே ஒரு டாக்டர்தான் இருக்காரு நாங்க என்ன பண்றதுன்னு சத்தம்
போட்டவுடனே சொல்றா அந்த ரிசப்ஷனிஸ்ட். எங்க ஊர் கிராமத்துலகூட
எந்தநேரம் போனாலும் டாக்டரபாக்கலாம். அங்கல்லாம் டாக்டர பாக்கணும்னா
அரைமணி நேரத்துல பாக்கலாம். பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு
உலகத்து பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ள நாடுன்னு இங்க வந்தா உசுர மட்டும்
எடுத்துகிட்டு உடம்ப ஊருக்கு அனுப்பிடுவானுங்க போலருக்கு.

ஒரு டாக்டர பாக்கவே அஞ்சு மணிநேரம் ஆகுதுன்றத என்னால பொறுத்துக்கவே
முடில அதனால கீழ போனேன் அங்க சேட்டன் கடையில குமுதம் தீபாவளி
ஸ்பெசல்னு ஒன்னுக்கு ரெண்டா தர்றானுங்களேன்னு வங்கிட்டு வந்து படிக்க
ஆரம்பிச்சேன் எரியற கொள்ளில எண்ணெய ஊத்துற மாதிரி இருந்துச்சு அத
படிக்கும்போது.

பேசாம அங்க தேமேன்னு திரிஞ்சிகிட்டு இருந்த மலையாள சேச்சிகளையாச்சும்
ரிசப்ஷன்ல உக்காத்தி வெச்சிருந்தானுங்கன்னா ஒழுங்கான பதிலும் கொஞ்சம்
பொழுதுபோக்காவும் போயிருக்கும். :(

அதனாலதான் இந்த மர்டர்வெறி.

கிட்டத்தட்ட கோவம்னா என்னன்னு மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறிய
கொண்டு வந்து சேத்துட்டானுங்க.

24 comments:

Anonymous said...

ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன்

good service.. padithathin payan?

கோபிநாத் said...

\\"கிழிச்சதும்... கிழிச்சதும்..."\\

ராசா..கிழிக்க போறேன்னு சொன்னியே அது இது தானா? !! ;)

Anonymous said...

//பேசாம அங்க தேமேன்னு திரிஞ்சிகிட்டு இருந்த மலையாள சேச்சிகளையாச்சும்
ரிசப்ஷன்ல உக்காத்தி வெச்சிருந்தானுங்கன்னா ஒழுங்கான பதிலும் கொஞ்சம்
பொழுதுபோக்காவும் போயிருக்கும்//

ஏங்க உங்க கன்ணுக்கு அங்க திரிஞ்சிட்டிருக்கற தமிழச்சிகள் தெரியலயா? அவங்களயிம் மேய வேண்டியதுதானே.தமிழ்ப் பண்பாடு?????இது மாதிரி ஒரு சாராரை கிண்டல் பண்றதை நிறுத்துங்க.

Anonymous said...

cool down!!!!cool down!!!!

கதிர் said...

//ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன்

good service.. padithathin payan?//

அனானி இப்பவும் சொல்றேன் ரெண்டுமே எனக்கு முழுசா தெரியாது. அரைகுறைதான்.

//ராசா..கிழிக்க போறேன்னு சொன்னியே அது இது தானா? !! ;)//

ஏன்ன் கோபி சரியா கிழியலயா?

//ஏங்க உங்க கன்ணுக்கு அங்க திரிஞ்சிட்டிருக்கற தமிழச்சிகள் தெரியலயா? அவங்களயிம் மேய வேண்டியதுதானே.தமிழ்ப் பண்பாடு?????இது மாதிரி ஒரு சாராரை கிண்டல் பண்றதை நிறுத்துங்க.//

ஆமா உலக மகா கருத்து இத சொல்றதுக்கு அனானி முகத்தோட வந்துட்டாரு. பிகர்கள பொறுத்தவரைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர்தான். பாரபட்சமே இல்லாம பாக்கணும். :)
ஒருதலைப்பட்சம்ன்ற வார்த்தைக்கே இடமில்ல.

மங்களூர் சிவா said...

//
தம்பி said...
பிகர்கள பொறுத்தவரைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர்தான். பாரபட்சமே இல்லாம பாக்கணும்.
ஒருதலைப்பட்சம்ன்ற வார்த்தைக்கே இடமில்ல.
//
பதிவா போட வேண்டிய விசயத்தையெல்லாம் இப்படி கமெண்ட்டா போடறியே கதிரு

நாகை சிவா said...

கழுத்துல சுழுக்கு என்று இப்ப தான் மருத்துவரை பாத்துட்டு வரேன்... என் குல கோத்திரத்தில் இருந்து ஜாதக புக்கு வரைக்கும் கேட்டு வாங்கிட்டு புருப்ன் மாத்திரை கொடுத்தானுங்க... சரி அவங்க கடமை செய்யுறாங்க என்று பேசாம வந்தேன்..

இருந்தாலும் ஐந்து மணி நேரம் எல்லாம் டூ மச் தான்...

நாகை சிவா said...

நல்லவேளை நீ குங்குமம் வாங்கி படிக்கல...

Anonymous said...

Real comedy! But it's bad that for emergency no one is there to attend. I had the same experience with my kid when he was 10 months old. When he was playing with my elder son some how they'd hit their faces with one another and my younger son's nose started to bleed. I kept ice pack on top of his nose and took him to Emergency (around 6:30 PM). Same as you mentioned happened. Filled all paper works and we were waiting in the Lobby. I was holding my son's face upwards and was cleaning his blood now and then, with tears. Only 3 to 4 other people are waiting. Among tham one old man said that I can take my son before him, even though he came before us. The time was passing but no one was there to help us. The bleeding stopped by itself and my son started to play with his brother again in the lobby. It was around 8:00 then. Myself and my hubby decided to go back to home without seeing the doctor as it was kid's bed time and even if the emergency doctor see him he will say to see his pediatrician the next day. Now my younger son is 2 and 1/2 years old and I've handled almost 3-4 emergency situations by myself without going to emergency hospital. Raising kids in abroad that too without elder's support and guidance is really tough. It's really important for the young parents to take first-aid classes and be prepared for the emergency situations.

Ayyanar Viswanath said...

டம்பி!
போன பதிவில நீ கிண்டலடிச்ச ஒருத்தரோட குருவ இதில கிண்டலடிச்சிருக்க..உனக்கு நேரம் சரியில்லடி ..கிகிகிகி

Anonymous said...

இந்த மாதிரி எண்ணம் இருக்கற நீங்க முதல்ல உங்க தலைப்பில இருக்கற "பேரன்பும் மிகப் பேரன்பும் கொண்டவன்" மாத்துங்க. சும்மா ஊரை ஏமத்தாதீங்க. உங்க எழுத்து மேலயும் உங்க மேலயும் கொஞ்சம் நல்ல அபிப்ராயம் இருந்தது, ஆனா சாரி சுத்த வேஸ்ட். அதுக்காக நீங்க சைட் அடிக்கிறது தப்புன்னு சொல்லற அளவு நாங்க கேன இல்ல. தரம் தாழ்ந்த்து கமெண்ட் போடறதுதான் அருவெருப்பா இருக்கு. மத்தவங்க நம்மள விமர்சனம் செய்யறதை ஏத்துகாத மனப்பான்மையுடய நீங்க எப்படி "பேரன்பும் மிகப் பேரன்பும் கொண்டவனா" இருக்க முடியும்? சான்சே இல்ல. உங்களோட இந்த மாதிரி பதிவுகளுக்கு அனானி மூஞ்சியே அதிகம்.

Anonymous said...

பிகர்கள பொறுத்தவரைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர்தான். பாரபட்சமே இல்லாம பாக்கணும்

i too agree...sight adikirathula enna malaiyalam/kannada/thelungu /uk entu..engu alagu kudikondirukiratho, angae azhagai – azhagai muttum rasikirom.. appadithanae...
enjoy makkaa...

(piraku..thamilanukku...abroad la thamilachi...sakotharithanae)

கதிர் said...

//பதிவா போட வேண்டிய விசயத்தையெல்லாம் இப்படி கமெண்ட்டா போடறியே கதிரு//

அது என்னமோ தெரில என்ன மாயமோ தெரில நான் பேசறது எல்லாமே பதிவா வந்துடுது. :)

மங்களூர் சிவா உங்களவிட ஓவரா என்னை பத்தி நானே பீல் பண்ணிட்டேன். போதுமா...

கதிர் said...

//கழுத்துல சுழுக்கு என்று இப்ப தான் மருத்துவரை பாத்துட்டு வரேன்... என் குல கோத்திரத்தில் இருந்து ஜாதக புக்கு வரைக்கும் கேட்டு வாங்கிட்டு புருப்ன் மாத்திரை கொடுத்தானுங்க... சரி அவங்க கடமை செய்யுறாங்க என்று பேசாம வந்தேன்.. //

:))))))))))

//இருந்தாலும் ஐந்து மணி நேரம் எல்லாம் டூ மச் தான்...//

தட்ஸ் வொய் திஸ் மர்டர்வெறி!

கதிர் said...

//நல்லவேளை நீ குங்குமம் வாங்கி படிக்கல...//

அத வாங்கலாம்னுதான் நினைச்சேன் கடைகாரன் கேவலமா பாப்பானேன்னு விட்டுட்டேன்

கதிர் said...

//Real comedy! But it's bad that for emergency no one is there to attend. I had the same experience with my kid when he was 10 months old. When he was playing with my elder son some how they'd hit their faces with one another and my younger son's nose started to bleed. I kept ice pack on top of his nose and took him to Emergency (around 6:30 PM). Same as you mentioned happened. Filled all paper works and we were waiting in the Lobby. I was holding my son's face upwards and was cleaning his blood now and then, with tears. Only 3 to 4 other people are waiting. Among tham one old man said that I can take my son before him, even though he came before us. The time was passing but no one was there to help us. The bleeding stopped by itself and my son started to play with his brother again in the lobby. It was around 8:00 then. Myself and my hubby decided to go back to home without seeing the doctor as it was kid's bed time and even if the emergency doctor see him he will say to see his pediatrician the next day. Now my younger son is 2 and 1/2 years old and I've handled almost 3-4 emergency situations by myself without going to emergency hospital. Raising kids in abroad that too without elder's support and guidance is really tough. It's really important for the young parents to take first-aid classes and be prepared for the emergency situations.//

அவ்வ்வ்வ்வ்
இவ்ளோ பெரிய கமெண்ட் அதுவும் இங்கிலிஸ்ல... நீங்க ரொம்ப நல்லாருப்பிங்க.. சொன்னமாதிரியே உங்க புள்ளைங்களுக்கு முதலுதவிலாம் கத்துகுடுங்க. ஆனா இந்த மாதிரிபெரிய வியாதிலாம் வந்தா டாக்டர்கிட்டதான் போகணும்னும் சொல்லிகுடுங்க.
நன்றி.

கதிர் said...

//டம்பி!
போன பதிவில நீ கிண்டலடிச்ச ஒருத்தரோட குருவ இதில கிண்டலடிச்சிருக்க..உனக்கு நேரம் சரியில்லடி ..கிகிகிகி//

வத்திபெட்டி வேணுமா?

கதிர் said...

//இந்த மாதிரி எண்ணம் இருக்கற நீங்க முதல்ல உங்க தலைப்பில இருக்கற "பேரன்பும் மிகப் பேரன்பும் கொண்டவன்" மாத்துங்க.//

நான் எதுக்குங்க மாத்தணும்? என் ப்லாக்ல இருக்கற எழுத்துக்களின் மொத்த உருவமா நான் இருப்பேன்னு நினைக்கறது எந்த விதத்துல நியாயம்? அதது வரவேண்டிய நேரத்துல வரணும். :)

// சும்மா ஊரை ஏமத்தாதீங்க.//

சரி இனிமே யாமாத்தல.

// உங்க எழுத்து மேலயும் உங்க மேலயும் கொஞ்சம் நல்ல அபிப்ராயம் இருந்தது//
நன்றி!

///ஆனா சாரி சுத்த வேஸ்ட். அதுக்காக நீங்க சைட் அடிக்கிறது தப்புன்னு சொல்லற அளவு நாங்க கேன இல்ல.//

சரி.. இருக்கட்டும்

//தரம் தாழ்ந்த்து கமெண்ட் போடறதுதான் அருவெருப்பா இருக்கு.//

இதுல எங்கய்யா தரம் பாக்கற அளவுக்கு எழுதி இருக்கேன். தரமில்லாத ஒரு புத்தகத்த வாங்கி, தரமில்லாத ஒரு மருத்துவமனைக்கு போய் தேவையில்லாம காத்திருந்து. அரை குறை ஆங்கில அறிவு இல்லாத ஒரு அரபி டாக்டரிடன் அரை மணிநேரம் விளக்கி மருந்து வாங்கறதுக்குள்ள எனக்கு மாத்திரை போடணும் போல இருந்துச்சு.

இந்த பதிவ தரம்மிக்க பதிவுன்னு சொல்லல. தரமில்லாத பதிவுதான். ஆமா எப்படிங்க கரெக்டா கண்டுபிடிச்சிங்க?

ஆஸ்பத்திரில உங்கள அஞ்சு மணிநேரம் காக்கவெச்சா எப்படி இருக்கும்? ம்ம்ம்மருந்து நெடி கொலவெறிய கொண்டுவரும்.

/ மத்தவங்க நம்மள விமர்சனம் செய்யறதை ஏத்துகாத மனப்பான்மையுடய நீங்க எப்படி "பேரன்பும் மிகப் பேரன்பும் கொண்டவனா" இருக்க முடியும்? //
நீங்களா ஒரு நல்ல டையலாக் என்னை பத்தி சொல்லுங்க நாளைக்கே போட்டுடறேன். :)

//சான்சே இல்ல. உங்களோட இந்த மாதிரி பதிவுகளுக்கு அனானி மூஞ்சியே அதிகம்.//

நான் என்ன ஐஸ்வர்யாராய் மூஞ்சிய வச்சிகிட்டு வாங்கன்னு கேட்டனா? எந்த மூஞ்சிய வச்சிகிட்டுவேணாலும் வாங்க.

வர்றதும் வராததும் கமெண்ட் போடறதும் போடாததும் உங்க இஷ்டம். என்னோட பதிவுக்கு எந்த தொனில கமெண்ட் வருதோ அதே தொனிலதான் பதிலளிப்பேன்.

என்ன இருந்தாலும் நம்மளையும் இப்படி அலசி ஆராய்ந்ததற்கு நன்றி.

கப்பி | Kappi said...

பதிவு செம காமெடி!!! அனானி கமெண்ட் அதை விட காமெடி!!! :))))

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் கிழிங்க கிழிங்க

ஆசுபத்திரிலே காத்துட்டு இருக்கறதெ போல ஒரு கொடுமெ கெடயாது. என்ன செய்யுறது

Anonymous said...

இதோ நீங்கள் கேட்ட தலைப்புகள்.

வாக்கு மாறாமல் மாற்றி விடவும். ஏமாற்ற வேண்டாம். (என்னை அல்ல ஊரை)

1.வழிசலும் அதைவிட வழிசலும் உடையவன்
2.கிறுக்கும் மிக அதிக கிறுக்கும் உடையவன்
3.ஜொள்ளும் மிக அதிக ஜொள்ளும்(மட்டும்) விடுபவன்
4.திட்டும் திட்டு மட்டுமே வாங்குபவன்
5.குப்பைகளும் குப்பைகள் மட்டுமே வாங்கி படிப்பவன்
6.அரைகுறை அறிவு மற்றும் அரைகுறை அறிவு மட்டும் உள்ளவன்
7.பல்பும் மிக லேட்டாக எரியும் பல்பும் போன்றவன்.
8.பாவனவிடம் உதையும் உதை மட்டுமே வாங்கப் போகிறவன்.
9.வேஸ்ட்டும் வேஸ்ட் மட்டுமே எழுதுபவன்
10.தற்பெருமையும் வெறும் தற்பெருமை மட்டுமே உடையவன்.

கதிர் said...

//பதிவு செம காமெடி!!! அனானி கமெண்ட் அதை விட காமெடி!!! :))))//

எலே கப்பி!
ஜாக்கிரதையா இருந்துக்க. நம்ம கைவசம் ஒரு அனானி இருக்குது சம்பந்தமே இல்லாம கமெண்ட் உனக்கும் வரும். பாத்துக்க.

கதிர் said...

//ம்ம்ம்ம்ம் கிழிங்க கிழிங்க

ஆசுபத்திரிலே காத்துட்டு இருக்கறதெ போல ஒரு கொடுமெ கெடயாது. என்ன செய்யுறது//

கரெக்டா சொன்னிங்க. அதுவும் உடம்பு சரியில்லாதவன் காத்திருக்கறது ரொம்ப கொடுமை.

கதிர் said...

//இதோ நீங்கள் கேட்ட தலைப்புகள்.

வாக்கு மாறாமல் மாற்றி விடவும். ஏமாற்ற வேண்டாம். (என்னை அல்ல ஊரை)


ஊரை ஏமாத்தற அளவுக்கு நம்மளுக்கு திறமை இல்லிங்க சாமி

//1.வழிசலும் அதைவிட வழிசலும் உடையவன்
2.கிறுக்கும் மிக அதிக கிறுக்கும் உடையவன்
3.ஜொள்ளும் மிக அதிக ஜொள்ளும்(மட்டும்) விடுபவன்
4.திட்டும் திட்டு மட்டுமே வாங்குபவன்
5.குப்பைகளும் குப்பைகள் மட்டுமே வாங்கி படிப்பவன்
6.அரைகுறை அறிவு மற்றும் அரைகுறை அறிவு மட்டும் உள்ளவன்
7.பல்பும் மிக லேட்டாக எரியும் பல்பும் போன்றவன்.
8.பாவனவிடம் உதையும் உதை மட்டுமே வாங்கப் போகிறவன்.
9.வேஸ்ட்டும் வேஸ்ட் மட்டுமே எழுதுபவன்
10.தற்பெருமையும் வெறும் தற்பெருமை மட்டுமே உடையவன்.//

என்னங்க அனானி நீங்க! நீங்க சொன்னது எல்லாம் ஓரளவுக்கு ஒத்துபோகுது ஆனா
முக்காவாசி எல்லாமே பொய்யா இருக்கு. எதுகை, மோனை, சந்தம், சரணம் இப்படி
எதுவுமே இல்லாம மொக்கையா இருக்கு. இன்னும் நல்லா பெட்டரா பீல் பண்ணி
போடுங்க. ஓகே.