எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, October 15, 2007

சேகர், உமா, சாலமன், அனு

ஒருபோட்டிக்கு ஒருத்தர் அதிகபட்சமா எத்தனை முறை நடுவரா வரலாம்னு தெரியல
ஆனா விஜய் டீவில வர்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சிய நான் பார்க்க ஆரம்பிச்ச
நாள்ல இருந்து சேகர் தம்பியும் உமா பாப்பாவும்தான் நடுவரா இருக்காங்க. ஒருவருச
காண்ட்ராக்ட் போட்டுட்டாங்களோ என்னவோ???

ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட
விடமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் அதைப்பற்றி
என் கருத்து "சிரிக்கறதே பெரிய விஷயம் அதுவும் பெருஞ்சிரிப்பு சிரிக்கறதுன்றது
வாங்கி வந்த வரம்" அதனால நோ கமெண்ட்ஸ்.

நல்ல நல்ல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி நம்மளை சிரிக்க வைக்கும் தென்கச்சி
சுவாமிநாதன் மாதிரி நம்ம சேகர் தம்பியும் மாறிட்டாருன்னு தோணுது. மனுசன்
கிச்சு கிச்சு மூட்டுனா கூட சிரிக்க மாட்டேங்கறாரு.

எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி பண்ணனும்னா நடிகர்கள்
குரலை விட்டா ஆளே இல்லியா. அதுவும் விஜயகாந்த ஏன் குறிவச்சு எல்லா
மிமிக்ரி ஆர்டிஸ்டும் வெளுக்கறாங்கன்னு புரியல. அவர் குரல வச்சுதான் எல்லாரும்
பயிற்சி எடுப்பாங்க போலருக்கு.

டீ.ஆர் வகையறாவுக்கும் தொலைக்காட்சி பேட்டிக்கும் அப்படியொரு ராசி. என்ன
ராசின்னு கேக்கறிங்களா இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க. மொக்கையான
மேட்டருக்கெல்லாம் எப்படி அழுவறதுன்னு இவங்க ரெண்டு பேர கேட்டாவே
போதும்.

சர்ச்சைக்குரிய, இதுல எனக்கு பெரிய டவுட்டே இருக்கு விஜய் டீவியே ப்ளான்
பண்ணி அடிச்சிருப்பாங்களோன்னு ஏன்னா என்னமோ பொங்கள் நிகழ்ச்சி நிரல
பத்து நிமிசத்துக்கு ஒரு முறை போடற மாதிரி ஓவரா போட்டாங்க.

"ஆடவே இல்ல" இந்த ஒரு வார்த்தைய சொன்னதுக்காக மட்டும் பிரிதிவிராஜ்
வெளிநடப்பு செஞ்சாருன்னு சொல்றது தப்பு. கூட ஆடின உமா பாப்பாவை
எக்சலண்ட் பர்பாமென்ஸ், சூப்பர், பிரமாதம்னு சொல்லிபுட்டு இந்தாள பாத்து
நீ ஆடவேல்லன்னு சொன்னதத்தான் அவரால தாங்கிக்க முடில.

ஒண்ணுமில்லாத இந்த மொக்கை பிரச்சினைல விஜய் டீவிக்கு டீஆர்பி ரேட்டிங்
அதிகமா வந்ததுதான் லாபம்.

பிரிதிவிராஜும் லூசுத்தனமாதான் பேசி இருக்கறாரு, இல்லயா பின்ன?? இத்தன
வயசாகியும் உலகத்த புரிஞ்சிக்கலயே... இந்த உலகம் யாருக்கு சாதகமா பேசும்னு
கூடவா தெரியாது.

இதுவே சிம்பு உமா பாப்பாவ பாத்து நீ "ஆடவேல்ல, நீ ஆடறதுக்கு சும்மாவே
இருக்கலாம்"னு சொல்லியிருந்தார்னு வைங்க, ஓசை செல்லா சிம்புவோட குறிய
அறுத்து காக்காய்க்கு போட்டுருப்பாரு. நான் சீரியசாதாங்க சொல்றேன்.

அட இந்த கொடுமைய விடுவோம்.

இந்த தீபாவளி, பொங்கல் பட்டி மன்ற வியாபாரியான நம்ம சாலமன் பாப்பையா
அய்யாவ அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருந்தாங்க. அசத்தறதுக்கு
இல்லிங்க நடுவரா இருக்கறதுக்குதான். விஜய் டீவிலயாச்சும் பங்கேற்கற ஆளுகள
வாராவாரம் மாத்தி போடறாங்க ஆனா சன் டீவில "அரைச்ச மாவ அரைப்போமா"
டைப்புதான்.

அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம
கலந்துக்குவான் அவன் அங்க அசைவுகள பார்த்ததும் கோவம் வராத எனக்கே
கோவம் வருது. ங்கொய்யால அவன நேரல பாத்தன்னா ஒரு எத்து விடணும்
போலருக்கு.

படுபயங்கரமான ஆபத்துகளுக்கு இடையிலயும் இந்த டீவி புரொக்ராம்கள இறக்கி
பாத்ததுல கடுப்பு வந்ததுதான் மிச்சம். ஆனா ஒண்ணு காப்பி வித் அனு மட்டும்
என்னால குறை சொல்லவே முடில. சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகள சொல்லி
பேட்டிய கலகலப்பா கொண்டு போகறதிலகாட்டும், கேள்வி கேட்கும்போது
அவங்க முகபாவமாகட்டும் கைகோர்த்து நடக்கும் தோழியை போன்ற தோழமை.

பர்சனலி ஐ லைக் அனு... ஆனா கமலுக்கு அம்மாவா நடிச்சதுதான் என்னால
தாங்கிக்க முடில.

27 comments:

இராம்/Raam said...

//பர்சனலி ஐ லைக் அனு... ஆனா கமலுக்கு அம்மாவா நடிச்சதுதான் என்னால
தாங்கிக்க முடில.///

ரொம்பதான் ஃபீல் பண்ணாதே கதிரு... நீ கூடதான் பாவனா பைத்தியமா இருக்கிறது எங்களாலே தாங்கிக்க முடியலை... :)

மங்களூர் சிவா said...

//
ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
விட்டு நோண்டற மாதிரி இருக்கு
//
அப்ப ரியாஸ்கானோட நிலமைய நினைச்சு பாரு கதிரு

//
பர்சனலி ஐ லைக் அனு...
//
அப்ப பாவனா

வல்லிசிம்ஹன் said...

தாங்க முடியலைஇந்த அழுகையும்
கையாட்டமும்:)
நன்றி தம்பி.
இத டவுன்லோட் செய்து பார்த்தீங்களா!!!

பினாத்தல் சுரேஷ் said...

கதிர்..

ரொம்ப நல்லா எழுதி இருக்கே.. 99.9% ஒத்துப்போகிறேன். அனு-கமல்-அம்மா தவிர :)

//அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம
கலந்துக்குவான் அவன் அங்க அசைவுகள பார்த்ததும் கோவம் வராத எனக்கே
கோவம் வருது. ங்கொய்யால அவன நேரல பாத்தன்னா ஒரு எத்து விடணும்
போலருக்கு.// விடும்போது என்னையும் கூப்பிடு ங்கொய்யால இருக்கு அவனுக்கு!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கமலுக்கு அம்மாவா????????எதில??????

cheena (சீனா) said...

தொலைக்காட்சித் தொடர்கள் படுத்தும் பாட்டை நகைச்சுவையாய் எழுதி இருக்கிறார். முற்றிலும் உண்மை. சிம்பு ப்ருத்வி ராஜ் கலாட்டா தொலைக்கட்சியின் ரேட்டிங்கைக் கூட்டியதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

பின்னூட்டத்தில் நண்பர் ராமின் தகவலுக்கு நன்றி. (தம்பி - பாவனா பைத்தியம்).

ILA (a) இளா said...

//நீ கூடதான் பாவனா பைத்தியமா இருக்கிறது //
Child Abuseன்னு case போட்டுருவாங்களா?

Silver Prince said...

//பர்சனலி ஐ லைக் அனு...//
ஆனா ஐ லைக் சுச்சி....
சுச்சி தான் cute.....

கோபிநாத் said...

\\கோவம் வராத எனக்கே
கோவம் வருது. \\

உண்மையாவா சொல்ற கதிரு !!!

கப்பி | Kappi said...

:)

Ayyanar Viswanath said...

/இதுவே சிம்பு உமா பாப்பாவ பாத்து நீ "ஆடவேல்ல, நீ ஆடறதுக்கு சும்மாவே
இருக்கலாம்"னு சொல்லியிருந்தார்னு வைங்க, ஓசை செல்லா சிம்புவோட குறிய
அறுத்து காக்காய்க்கு போட்டுருப்பாரு/

இதுதாண்டா பஞ்ச் :)

கலக்குற கண்ணா..உன்னோடது பத்திரம்யா அவர் ரொம்ப கோவக்காரரு ...

நாகை சிவா said...

//இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க//

நம் கண்ணிலும் தண்ணி எட்டி பாக்க வச்சுடுவாங்க :(

காபி வித் அனு சூப்பர்...

மத்தது எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு... லொள்ளு சபா ரொம்பவே மொக்கை வர வர...

ஊலலலா நல்லா இருந்துச்சு.....

Anonymous said...

கதிர் காஃபி வித் அனு எவ்வளவோ பரவாயில்லை. ஐ டூ லைக் இட். ஆனால் வர்ற ஸ்பெஷல் கெஸ்ட்டை பொறுத்து அது சில சமயம் சொதப்பலாகவும் முடிஞ்சிடுது. ஆனால் மொத்தமா பார்க்கும் போது நல்லா இருக்குன்னுதான் சொல்லணும்.


அப்புறம் முக்கியமா இந்த ஜோடி நெம்பர் 1. வர வர இந்த ப்ரோக்ராமைக் காறித் துப்பணும் போல இருக்கு.

கண்ணில ரெடிமேட் கண்ணீரோடயே நின்னுட்டிருப்பாங்க போல இருக்கு. நடுநடுவில ஆளாளுக்கு அவனுங்களை அவனுங்களே புகழ்ந்துக்கிறாங்க. நான் கஷ்டப் பட்டேன். நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா என் தன்னம்பிக்கைதான் காரணம். ப்ளா ப்ளா ப்ளா......

உச்சகட்ட கடுப்பு சிம்பு செய்வது. (அவருக்கு ஜால்ரா போட பார்ட்டிசிபன்ட்ஸ்லயே சில கைத்தடிகள்).

எந்த ஒரு ப்ரோக்ராமிலும் Behind the scenes என்று சொல்லப்படும் விஷயங்கள் பல நடந்துக் கொண்டுதான் இருக்கும். அதிலும் இரண்டு பேர் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதையும், வெளியேறுவதையும், சமாதானப் படுத்துவதையும்,.....அடச் சே..

சிம்பு சில சம்யம் பேசும் வார்த்தைகள் கர்ர்ர்ர்ர்ர்ர்தான்.

"இங்க இவ்ளோவ் பேசறீங்க இல்லை. அங்க நாங்க சண்டை போடும் போது ஏன் பேசாம இருந்தீங்க என்று ஸ்கூல் பையனை போல எல்லாரையும் தூண்டி விடுகிறார்". டேய் நீ ஜூரிடா. ஒரு ஜூரியும், பார்ட்டிசிபன்ட்ஸும் விவாதம் செய்து கொள்ளும் போது என்ன வெங்காயத்துக்கு நாங்க நடுவில வரணும் என்று ஒருவரும் பதில் பேச வில்லை.

மாறாக you are the kings. you are our superiors. அது இது என்று லூசுத்தனமாக உளறி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கொடுமை போதாதென்று நடு நடுவே ஆடியன்ஸ் வேறு. ஏதோ எழவு வீட்டுக்கு வந்தது போல ஆளாளுக்கு கண்ணுல ஒரு லிட்டர் தண்ணியோட நின்னுக்கிட்டு கூவிக்கிட்டு இருக்காங்க.

கவுண்ட மணி ஒரு படத்துல சொல்லுவாரு : உன் புருஷன் செத்ததுக்கு இப்படி அழுதிருப்பியா?ன்னு.

இத்தனை பிரச்சினை நடக்கும் போதும் அங்கே டான்சில் ரொம்ப ரொம்ப சீனியர் மாஸ்டர் பரிதாபமாக நானும் ஒரு ஜூரிதான்பா என்பது போல பரிதாபமாக உட்கார்ந்துக்கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிம்பு சொல்றார். அங்க இருக்கிறது எல்லாம் என் பசங்க. அவங்க தப்பு பண்ணினால் நான் கேட்பேன். அவங்க என் குழந்தைங்கப்பா....ன்னு.

யோவ் அதை இன்னொரு ஜூரி டான்ஸ் மாஸ்டர் ரகுராம் சொல்லலாம். நீ என்னத்தை சாதிச்சுட்டன்னு ஏதோ உன்னை நீயே ஏத்தி விட்டுக்கறன்னுதான் தோணுச்சு.

மெகா சீரியலுக்கும் இந்த ப்ரோக்ராமுக்கும் ஒண்ணும் அதிக வித்தியாசம் எனக்கு தெரியலை. அதனால இந்த ப்ரோக்ராம் பார்க்கிறதை நான் நிறுத்திட்டேன்.

கதிர் said...

ராம் பாவனா மேல பைத்தியமில்லங்க அவ மேல கொஞ்சம் பாசம் ஜாஸ்தி அவ்வளவுதான். ஆமா அத ஏன் உங்களால தாங்கிக்க முடில?
சம்திங் ராங்.
***

//அப்ப ரியாஸ்கானோட நிலமைய நினைச்சு பாரு கதிரு//

அவ்வ்வ்வ்வ்

//அப்ப பாவனா//

அதுவும்தான். :)

கதிர் said...

//தாங்க முடியலைஇந்த அழுகையும்
கையாட்டமும்:)
நன்றி தம்பி.
இத டவுன்லோட் செய்து பார்த்தீங்களா!!!//

வாங்க வல்லிம்மா
ஆமாங்க டவுன்லோட் பண்ணி பாத்தேன் அதனாலதான் கோவம் வந்துச்சு.


வாங்க பினாத்தல்ஸ்

//கதிர்..

ரொம்ப நல்லா எழுதி இருக்கே.. 99.9% ஒத்துப்போகிறேன். அனு-கமல்-அம்மா தவிர :)//

:)) இதுகுறித்து ஒரு பதிவு போடுங்க.

நீங்க மட்டுமில்ல பலபேர் அவன எத்து விட காத்திருக்காங்க :))

கதிர் said...

//கமலுக்கு அம்மாவா????????எதில??????//


வாங்க அறிவன்!
முதல் முறையா வர்றிங்க வரும்போதே மொழி பாஸ்கர் மாதிரி கேள்வி கேட்டுகிட்டு வர்றிங்க.

ஆளவந்தான்னு ஒரு கமல்படத்தில அனுஹாசன் கமல்ஹாசனுக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க.

நன்றி.

வாங்க சீனா!

அந்த தகவல் என்ன உலக அதிசயமா என்ன அதுக்கு போய் நன்றியெல்லாம் சொல்லிகிட்டு.

கதிர் said...

//நீ கூடதான் பாவனா பைத்தியமா இருக்கிறது //
Child Abuseன்னு case போட்டுருவாங்களா?//

இளா ஒருநாள் இல்ல ஒருநாள் நான் நினைக்கறது நடக்கும். நீங்க வேணா பாருங்க.

//பர்சனலி ஐ லைக் அனு...//
ஆனா ஐ லைக் சுச்சி....
சுச்சி தான் cute.....//

ஆமாம்பா ஜாவா!

கதிர் said...

//உண்மையாவா சொல்ற கதிரு !!!//

நான் என்னிக்குடா செல்லம் பொய் பேசியிருக்கேன். ஆமா அது எப்படி இருக்கும்?
உருண்டையா?
இனிப்பா?
கசப்பா?
எப்படி இருக்கும் சோல்லிக்குடுப்பா.

கப்பி வழக்கமான உன்னோட ரெடிமேட் கமெண்ட். :)
தேங்க்ஸ்.

கதிர் said...

//இதுதாண்டா பஞ்ச் :)

கலக்குற கண்ணா..உன்னோடது பத்திரம்யா அவர் ரொம்ப கோவக்காரரு ...//

யோவ் சந்துல சிந்து பாடணும்னா கிளம்பி வந்துருவிங்களே! :)

வா புலி!

//நம் கண்ணிலும் தண்ணி எட்டி பாக்க வச்சுடுவாங்க :(//

கரெக்ட் மச்சி.

//காபி வித் அனு சூப்பர்...//

கரெக்ட் மச்சி

//மத்தது எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு... லொள்ளு சபா ரொம்பவே மொக்கை வர வர...//

கரக்டோ கரெக்ட் மச்சி

//ஊலலலா நல்லா இருந்துச்சு.....//
இன்னும் பாக்கல.

கதிர் said...

//கதிர் காஃபி வித் அனு எவ்வளவோ பரவாயில்லை. ஐ டூ லைக் இட். ஆனால் வர்ற ஸ்பெஷல் கெஸ்ட்டை பொறுத்து அது சில சமயம் சொதப்பலாகவும் முடிஞ்சிடுது. ஆனால் மொத்தமா பார்க்கும் போது நல்லா இருக்குன்னுதான் சொல்லணும்.//

எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது நந்தா. அதுவும் சேரன், முரளி, ஸ்ரீகாந்த்தேவா நிகழ்ச்சிகள் கவனத்தை சுவாரசியாக்கியது. சுலக்சனா சித்ரா நிகழ்ச்சி பாக்கும்போது நம் வீட்டு பெண்கள் பக்கத்து வீட்டு பெண்களோட உக்காந்து ஊர்க்கதை பேசுவாங்களே அந்த மாதிரி முக்கியமான நிகழ்வா இல்லன்னாலும் அரைமணி நேரம் நல்லாவே போச்சு.

//அப்புறம் முக்கியமா இந்த ஜோடி நெம்பர் 1. வர வர இந்த ப்ரோக்ராமைக் காறித் துப்பணும் போல இருக்கு.//

இன்னும் துப்பலயா? :)

//மாறாக you are the kings. you are our superiors. அது இது என்று லூசுத்தனமாக உளறி வைத்திருக்கிறார்கள்.//

கொடுமடா சாமி. என்ன விட ரொம்ப நொந்து போய் இருக்கிங்க போலருக்கு:)

முரளிகண்ணன் said...

நந்தா நடுவர் சுந்தரம். ரகுராம் இல்லை. மற்றபடி உங்க கருத்தோடு ஒத்துப்போகிறேன்

Anonymous said...

THAMBI payankara vimarsakaraga kooda avatharam edukiraar

vimarsanam nantaga irunthathu..athuvera...

sakala kala vallavan?

Anonymous said...

உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட
விடமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் அதைப்பற்றி
என் கருத்து "சிரிக்கறதே பெரிய விஷயம் அதுவும் பெருஞ்சிரிப்பு சிரிக்கறதுன்றது
வாங்கி வந்த வரம்" அதனால நோ கமெண்ட்ஸ்.
இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க.

1st one...adiyum koduthuvittu..thaalaattu paadukira ragam...mmmmmmmmmm...
2nd one...are they emotional people? koodavae ala aal irukumpothu...veru enna pannuvarkal..irunthaalum...they have menmaiyana ithayam...illaiyaa

Anonymous said...

ரொம்பதான் ஃபீல் பண்ணாதே கதிரு... நீ கூடதான் பாவனா பைத்தியமா இருக்கிறது எங்களாலே தாங்கிக்க முடியலை

exactly.... why thambi ippadi...

just for relaxation?

Anonymous said...

கலக்குற கண்ணா..உன்னோடது பத்திரம்யா அவர் ரொம்ப கோவக்காரரு ...//

athuthaan thambi romba kaikku ettaatha thoorathilthanae irukaru..mun jakirathaiyaga

Unknown said...

தம்பி கோவத்தைக் கன்ட்ரோல் பண்ணுப்பா.. பாவம்ன்னா பாவம் கோபம் ரொம்ப பாவம்ம்ப்பா

மங்கை said...

//ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட டமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் //

உமா பாப்பா?...சரி தான்..:-))))
இது நேத்து சிரிச்ச சிரிப்ப பார்க்கனும் வாழ்கையில இனிமேல் சிரிக்கறதுக்கே யோசிக்கனும் நாம..

//அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம கலந்துக்குவா//

கொடுமைங்க அது...அதிலேயும் ஒருத்தன் பெண்கள கலாய்க்றதே தீமா வச்சி ரொம்ப புத்திசாலின்னு நினச்சுட்டு இருக்கான். இந்த கொடுமைய காபி அடிச்சி வேற சன் டிவியில இதே நிகழச்சிகள்..