எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 02, 2007

சுழற்சியின் உச்சங்கள்


வாரத்தின் ஆறுநாட்களும் ஏழாவது நாளை நோக்கியே
நகர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று செய்வதற்கென்று
நிறைய இருந்தாலும் மனம் யாருடன் சேர்ந்து பீர்
குடிக்கலாம் யாரைப்பற்றி புறம் பேசலாம், பார்த்த
படத்தை பீற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திருக்கிறது.
அந்த ஒருநாளை வாழ்ந்து தீர்ப்பதற்குள் என்னை
கடத்திக் கொண்டு போய் சுழற்சிக்கான முதல் நாளில்
உட்கார வைத்துவிடுகிறது இந்த சுழற்சியின் உச்சத்தில்
ஓர்நாள் என் மனமும் பிறழ வாய்ப்பிருப்பதாக
தோன்றுகிறது. ஒற்றை வாழ்க்கைக்கு மாற்றாக இருந்திருந்தால்
சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்த கணத்தில் வாழ்க்கை சுவாரசியமாககூடும்
என்ற எதிர்பார்ப்பு சலிப்படைந்து வருகின்ற
நாட்கள் இவை வரும்காலத்தில் நம்பிக்கையற்றும்
போகலாம் யாருக்கு தெரியும்.!
குடிக்க யாரும் முன்வராத வாரயிறுதியின் அடுத்த
நாளாவது ஆயிரம்காலத்து பயிரை மேய மனம்
பாயலாம் இதுவும் யாருக்கு தெரியும்.!

23 comments:

கப்பி | Kappi said...

நான் நேத்து இங்க புலம்புனது அங்க வரைக்கும் கேட்டுடுச்சாய்யா :))

மங்களூர் சிவா said...

ஃப்ரியா வுடு
ஃப்ரியா வுடு
ஃப்ரியா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டி

ஜொள்ளுப்பாண்டி said...

ஏதோ கவுஜை எழுதி இருகீகன்னு வந்தா என்னசொல்ல வாறீகன்னே பிரியலையேண்ணே? ஏதோ புரிஞ்ச மாதிரி கப்பி வேற வந்து கதைச்சிட்டு போயிருக்கார்?? :((((

நாகை சிவா said...

கப்பி நம்ம இரண்டு பேரும் சாட்டியது கதிருக்கு எப்படி தெரிஞ்ச்சு....

எங்கயோ சூது நடக்குது.. இனிமே உசாரா இருக்கனும்

இராம்/Raam said...

எழவு அங்கன போயும் VSOP தானா???? நல்ல ஃபாரின் சரக்கை உள்ளே விட்டு யோசிச்சு தொலைய்யா...... :)

அபி அப்பா said...

தம்பி! அய்யனாருக்கு வரவேர்ப்பு கவிதை எல்லாம் போடறீஙக சபாஷ்!

கதிர் said...

இதுவரைக்கும் பின்னூட்டம் போட்டவங்க எல்லாருமே இந்த கவுஜ மாதிரிதானோன்னு தோணுதே!

அப்படியா?

கப்பி
அங்கயும் சேம் ப்ளட்... :)

சிவா...
யார் அந்த ப்ரியா?
அவங்க என் வாழ்க்கைக்கு கேரண்டு குடுப்பாங்களா?

கதிர் said...

//ஏதோ கவுஜை எழுதி இருகீகன்னு வந்தா என்னசொல்ல வாறீகன்னே பிரியலையேண்ணே? ஏதோ புரிஞ்ச மாதிரி கப்பி வேற வந்து கதைச்சிட்டு போயிருக்கார்?? :((((//

எலே ஜொள்ளு உண்மையாலுமே உனக்கு புரிலயா இல்ல நான் இந்த லிஸ்ட்லாம் இல்ல நான் சந்தோஷமாதான் இருக்கேன்னு ஸ்டேட்மெண்ட் விடறியா?

கதிர் said...

//கப்பி நம்ம இரண்டு பேரும் சாட்டியது கதிருக்கு எப்படி தெரிஞ்ச்சு....

எங்கயோ சூது நடக்குது.. இனிமே உசாரா இருக்கனும்//

வா புலி.

நாமெல்லாம் ஒரே இனம்டான்னு அடிக்கடி சொல்லுவியே அப்பலாம் நான் நம்பவே இல்ல.
இப்ப்ப்ப நம்பறேன் செல்லம்.

கதிர் said...

//எழவு அங்கன போயும் VSOP தானா???? நல்ல ஃபாரின் சரக்கை உள்ளே விட்டு யோசிச்சு தொலைய்யா...... :)//

அண்ணே VSOP ய கண்ணுல பாத்தே ரொம்ப நாள் ஆகுது.

எச்சரக்கு யார் யார் வாய்க்கேட்பினும் அச்சரக்கின் மெய்ப்பொருள் காண்பதறிவு.

வள்ளுவன் வாக்கில எப்பவுமே நம்பிக்கை உண்டு எனக்கு.

கோபிநாத் said...

கவலைபடாதே செல்லம் இன்னும் ஒரு ரெண்டு நாளைக்குள்ள எவனாவது சிக்குவான்... ;))

CVR said...

கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்குன்னு தெளிவா டைரெக்டா சொல்லுங்களேன் தல!!!
எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு??? ;)

Unknown said...

சீக்கிரமே ஒரு குண்டு கேர்ள் பிரண்ட் ப்ராப்தி ரஸ்து !!!

ILA (a) இளா said...

எல்லாரும் புரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போட்டு இருக்காங்களே..:(. அப்புறம் ஏன் எனக்கு ஒன்னும் புரியலை.

தேவ், என்னமோ வரம் வேற குடுத்துட்டு போயிருக்காரு..
நம்ம லெவலுக்கு மேல ரொம்ப உசரத்துல இருக்கிற இந்தக் கவிதைக்கு நாம ஒரு சலாம் மட்டும்தான் போட முடியும்

ALIF AHAMED said...

தேவ் | Dev said...
சீக்கிரமே ஒரு குண்டு கேர்ள் பிரண்ட் ப்ராப்தி ரஸ்து !!!
///


ரீப்பீட்டேய்ய்ய்

ALIF AHAMED said...

ஓர்நாள் என் மனமும் பிறழ வாய்ப்பிருப்பதாக
தோன்றுகிறது
//

பாவனா வை காதலிக்கும் போதே எங்களுக்கு தெரியும்

:)

ALIF AHAMED said...

இராம்/Raam said...
எழவு அங்கன போயும் VSOP தானா???? நல்ல ஃபாரின் சரக்கை உள்ளே விட்டு யோசிச்சு தொலைய்யா...... :)
////

இதுக்கே நாங்க துண்ட காணும் துணியைகானும்னு ஓடுறோம் இதுல ஃபாரீன் சரக்கு வேற தம்பி அடிச்சா நாங்க காலி தான்

அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
சிவா...
யார் அந்த ப்ரியா?
அவங்க என் வாழ்க்கைக்கு கேரண்டு குடுப்பாங்களா?
//
நினைச்சேன் இப்படி கேப்பிங்கன்னு

'தலைநகரம்' படத்துல வற்ற வடிவேல் காமெடி மாதிரிதான்

"திரிஷா கிடைக்கலைனா திவ்யா"

பாவனாவுக்கு ஸ்டாண்ட்பை ப்ரியா வா??

என்ன கொடுமை 'குசும்பன்' இது?

(எவ்ளோ நாள் தான் பாவம் சரவணனை கூப்பிடறது)

கதிர் said...

//தம்பி! அய்யனாருக்கு வரவேர்ப்பு கவிதை எல்லாம் போடறீஙக சபாஷ்!//

இதுக்கு பேர் வரவேற்பா?

//கவலைபடாதே செல்லம் இன்னும் ஒரு ரெண்டு நாளைக்குள்ள எவனாவது சிக்குவான்... ;))//

நம்ம நல்ல மனசுக்கு ஒருத்தன் இல்ல ஓராயிரம் பேர் சிக்குவான். :)
ஸ்பான்சருக்கு சொல்றேன் வேற எதுக்காவது நினைச்சிக்க போறே.

கதிர் said...

//கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்குன்னு தெளிவா டைரெக்டா சொல்லுங்களேன் தல!!!
எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு??? ;)//

கவுஜய தப்பா புரிஞ்சிகிட்டிங்க தம்பி சிவி.

இதுல ஆசை ன்ற வார்த்தை வந்திருக்கா பாத்து சொல்லுங்க. அதுக்கெல்லாம் யாராச்சும் ஆசைப்படுவாங்களா...

கதிர் said...

//சீக்கிரமே ஒரு குண்டு கேர்ள் பிரண்ட் ப்ராப்தி ரஸ்து !!!//

ஒண்ணுதானா....

//எல்லாரும் புரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போட்டு இருக்காங்களே..:(. அப்புறம் ஏன் எனக்கு ஒன்னும் புரியலை. //

ஒங்களுக்கு புரியலன்னா எது புரியலன்னு கோபிகிட்ட கேளுங்க, அப்படி இல்லன்னா அபிஅப்பா கிட்ட கேளுங்க அவங்கல்லாம் எனக்கு குரு மாதிரி.

//தேவ், என்னமோ வரம் வேற குடுத்துட்டு போயிருக்காரு..
நம்ம லெவலுக்கு மேல ரொம்ப உசரத்துல இருக்கிற இந்தக் கவிதைக்கு நாம ஒரு சலாம் மட்டும்தான் போட முடியும்//

உங்கள் நகைச்சுவை உணர்வை நான் மதிக்கிறேன். :))

கதிர் said...

மின்னல் பாசக்கார நண்பா....
ஏம்பா எம்மேல இந்த கொலவெறி?
நல்லாதான இருந்த?

LakshmanaRaja said...

//வாரயிறுதியின் அடுத்த
நாளாவது ஆயிரம்காலத்து பயிரை மேய மனம்
பாயலாம் இதுவும் யாருக்கு தெரியும்.!//

:-)))))))))))))))))