இப்ப தமிழ்மணத்துல எல்லாரும் பின்நவீனத்துவ கதைகள் எழுத முயற்சி எடுத்துகிட்டு
இருக்காங்க. கவிதைய முன்ன பின்ன எழுதி பழக்கமே இல்லாதவங்க கூட
கொலவெறியோட கலப்பைய புடிச்சிகிட்டு திரியரதா டீவில கூட் பாத்தேன்.
அதுவுமில்லாம புனைவு எழுத புற்றீசல் போல அனைவரும் புறப்பட்டுட்டாங்க.
இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கும்போதே நேத்து
நம்ம வலைய படிக்கற ஒருத்தர் போன் பண்ணி இருந்தார்.
எவ்வளவு செலவானாலும் பரவால்லிங்க தம்பி! நான் எப்படியாச்சும் பின்நவீனத்துவாதின்னு பேர் எடுக்கணும். அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்.
ரொம்ப நாள் இல்லாம கொஞ்ச சீக்கரமே ஆயிட்டா பரவால்ல.
அண்ணே நீங்க தப்பான அட்ரசுக்கு வந்திருக்கிங்க. எனக்கு கவுஜைய கூட ஒழுங்கா
எழுத தெரியாது.
உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம். எல்லாரும் சொன்னாங்க. நீங்க ரொம்ப நல்லா
சொல்லித்தருவிங்க.
"எவன் சொன்னான் அந்த மாதிரி. எனக்கு அதெல்லாம் தெரியாது மரியாதையா
ஆள விடு இல்லன்னா அய்யனார்கிட்ட புடிச்சி குடுத்துடுவேன்.
"ஆமா தம்பி ஆமா தம்பி. அவர மாதிரி ஆயிட்டன்னா கூட பரவால்ல"
யோவ் என்னய்யா இப்படி சொல்லிட்ட? அவர் மாதிரி ஆகறது என்ன அவ்வளவு
சாதாரண விஷயமா? அதுக்கெல்லாம் நிறைய படிக்கணும், அதவிட நிறைய
குடிக்கணும்.
"என்னது குடிக்கணுமா?"
நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்க போலருக்கு. எனக்கும் நிறைய வேலையிருக்கு.
"தம்பி, தம்பி ப்ளீஸ் தம்பி சபதமெல்லாம் போட்டுருக்கேன் எண்ணி நாப்பதே
நாள்ல பீனாவானா ஆகி காமிக்கிறேன்னு. கொஞ்சம் தயவு பண்ணுங்க தம்பி".
சரி உங்கள பாத்தாலும் பாவமாதான் இருக்கு.
சரி ம்ம்...
சுலபமான விஷயத்துலருந்து ஆரம்பிப்போம்.
சினிமா பாப்பிங்களா?
நிறைய பாப்பேங்க. ஜுராசிக்பார்க், காட்சில்லா, டைட்டானிக், அனகோண்டா
படத்தையே அஞ்சு முறை பாத்திருக்கேங்க. சமீபத்துல ரிலீஸ் ஆன கானல்
நீர், துள்ளல், காசு இருக்கணும். இதெல்லாம் கொஞ்சந்தான் இன்னும் நிறைய
மறந்துட்டேன்.
யோவ் நிறுத்துய்யா போதும். நான் சொல்றது அந்த மாதிரி படங்கள் இல்ல.
நீ முதல்ல தமிழ், ஆங்கிலப்படம் பாக்கறத நிறுத்தணும். புரியுதா?
"நீலப்படம் பாக்க சொல்றீங்களா?"
கூட கூட பேசாதய்யா...
"ப்ரெஞ்சு, ரஷ்யா, மாண்ட்ரீன், துளு இன்னும் பழங்குடியினர் பேசற பாஷை
படங்கள சப் டைட்டிலே இல்லாம பாக்கணும்."
"எனக்கு அந்த மொழியே தெரியாதுங்களே அய்யா"
யோவ் பாக்கறவனுக்கு மட்டும் தெரியுமா? படத்தை பார்த்ததும் புரிஞ்சிதோ
இல்லையோ அதுக்கு விமர்சனம்ற பேர்ல நீயா யோசிச்ச ஒரு கதையை பதிவா
எழுதணும்.
"தலைவா இப்படிலாம் பதிவு போட்டா யாராச்சும் படிப்பாங்களா? பின்னூட்டமாச்சும்
போடுவாங்களா?"
யோவ் என்னய்யா இப்படி கேட்டுபுட்ட? இந்த மாதிரி பதிவுகளுக்காகவே பல பேர்
கொலவெறியோட சுத்திகிட்டு இருக்காங்க தெரியுமா உனக்கு?
அந்த மாதிரி படம்லாம் எங்க தம்பி கிடைக்கும்?
எதாச்சும் ஒரு வீடியோ கடைக்கு போ, அங்க எவனுமே சீண்டாத சிடி,டிவிடி எதுன்னு
கேளு அவனே எடுத்து கொடுப்பான் அதெல்லாம் நல்ல படங்கள்தான்.
அப்புறம் இந்த பீனாவானா கவுஜ....
"இவ்ளோ சொன்னேன் அத சொல்ல மாட்டனா? ஏன் இந்த அவசரம்?
"இல்லிங்க மறந்துடுவிங்களோன்னு பயந்துட்டேன்"
"மெயின் மேட்டரே அங்கதான் சார் இருக்கு"
"கடையில இருந்து எடுத்துட்டு வந்த டிவிடிய அப்படியே பாக்க கூடாது. அதெல்லாம்
பாக்கறதுக்குன்னு சில முறை இருக்கு?
தலைகீழ கவுந்தடிச்சி பாக்கணுங்களா தம்பி?
யோவ் இந்த மாதிரி கூட கூட பேசறத நிறுத்துய்யா மொதல்ல.
மன்னிக்கனும். என்ன மொறைல பாக்கணும் தம்பி?.
அப்படி கேளுய்யா சிங்கம். படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்
போடணும். அப்பதான் படம் தெளிவா புரியும்.
"நான் பதினஞ்சு நாளைக்கு ஒருக்கா தாங்க கட்டிங் போடுவேன்."
"யோவ் நான் நெப்போலியன் கட்டிங் சொல்றேன். நீயெல்லாம் பீனாவானா ஆகி
என்னத்த பண்ண போறியோ போ!
மன்னிக்கனும் நீங்க சொல்லுங்க தம்பி.
மூணு கட்டிங் அப்புறம் அரைவாசி படம் முடியும்போது ரெண்டு கட்டிங் போடணும்.
உன்னப்பாத்தா ஒரு கட்டிங்கே தாங்க முடியாத மாதிரி இருக்கு இருந்தாலும் பராவல்ல
அப்புறம் எப்பாடுபட்டாவது கிளைமேக்ஸ் மட்டும் பாக்காத ஆனா விமர்சனத்துல
நீ பாத்த மாதிரி உன்னோட கற்பனைய தட்டி விட்டு எழுதணும்.
ஒரிஜினலா படம் பாத்தவங்க படிச்சி திட்டுவாங்களே!
அதுக்கெல்லாம் கவலபடாத ராசா! அந்த மாதிரி படத்தை நாட்டுக்கே ஒருத்தந்தான்
பாக்க முடியும். விமர்சன பதிவா எழுதும்போது ஆகா, அருமை, கலக்கல்னு
ட்ரேட் மார்க் பின்னூட்டமா வரும். அதான் ஊக்கமா எடுத்துக்கணும்.
பீனாவானா கவுஜ...
கட்டிங்க போட்டு திரையில நீ பாக்கற பிம்பங்கள் அலை அலையா தெரியும்
அந்த கிறுகிறுப்புலயே பதினஞ்சி வரி, உனக்கு தோணுறதெல்லாம் எழுதிடு
கெட்ட வார்த்தையா இருக்குதேன்னு கவலபடாத. அதெல்லாம் இருந்தாதான்
பீனாவானா.
அப்புறம் இந்த புனைவு...
இப்ப கேட்டியே இது ஒரு நல்ல கேள்வி.
பதினஞ்சி வரி எழுதினா அதுக்கு பேரு பீனாவானா கவுஜ. அதையே கொஞ்சம்
நெருக்கியடிச்சி 150 வரி எழுதினா அதுக்கு பேரு புனைவு.
"தம்பி என்னால 150 வரியெல்லாம் டைப் அடிச்சிகிட்டு இருக்க முடியாதுப்பா"
அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்
வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி
விழும் பாத்துக்க...
ஓகேவா இதுதான் எனக்கு தெரிஞ்ச பீனாவானா. இத புடிச்சிகிட்டு பெரியாளா வந்துடு.
"யாருக்கு தெரியும் நீயே நாளைக்கு பெரிய பீனாவானா ஆனாலும் ஆகலாம்."
வர்ட்டா....
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
தம்பி!!!!!
சூப்பர் ஆப்பு!!!!!!
:))))))))))))))))))))))))
//படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்
போடணும். அப்பதான் படம் தெளிவா புரியும்.
//
ஸோ இப்ப அடிக்கிறத கொஞ்சம் குறைச்சுக்கனும் போல
//
கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்
வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி
விழும் பாத்துக்க...
//
இது எப்டினு யாராவது கம்பியூட்டர் ஆளுகிட்ட கேக்கனும்
யாரயோ தாக்கறீங்கன்னு தெரியுது.
மங்களூர் சிவா
கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில் :)
\\அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்
வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி
விழும் பாத்துக்க...\\
இது யார் யாருக்கு உள்குத்துன்னு புரிஞ்ச சரி :))
எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய மற்ற சித்தாந்தம் / நிலைப்பாடுகளைப்போல பின் நவீனமும் புனிதமயமாகி விடும் என்கிற பயத்தில் நீ அதற்காக உழைப்பது தெரிகிறது
நீதான்யா பெஸ்ட் பிந :)
தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?
சூப்பர் போஸ்ட்:))))
அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???
sooperu!! :)))))
//அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???//
அது அவனுக்கு புரிஞ்சுட்டா அவன் தான் பெரிய பீனாவானா....
என்ன தம்பி புரியுதா?
//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?//
ஒரு புல் பாட்டில் பீருக்கேவா... தம்பி உன்னைய நான் ரொம்ப பெரிசா நினைச்சேனேப்பா....
லொடுக்கு!
பின்நவீனத்துவாதிங்கள கலாய்ச்சாவே முதல் ஆளா பின்னூட்டம் போடறிங்களே!! அப்படி என்னங்க கோவம் அவங்க மேல. :)
ம. சிவா!
கூட்டுவிங்களோ குறைப்பிங்களோ தெளிவா புரிஞ்சா சரிதான்.
//கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில் :)//
கரெக்டாக புரிஞ்சிக்கிட்டயே என் கண்மணியே!
//இது யார் யாருக்கு உள்குத்துன்னு புரிஞ்ச சரி :))//
யாருக்குன்னு சொல்லுப்பா நாங்கலும் தெரிஞ்சிக்கறோம்.
//எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய மற்ற சித்தாந்தம் / நிலைப்பாடுகளைப்போல பின் நவீனமும் புனிதமயமாகி விடும் என்கிற பயத்தில் நீ அதற்காக உழைப்பது தெரிகிறது
நீதான்யா பெஸ்ட் பிந :)//
அவ்வ்வ்வ்வ்
நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல நல்லவருங்க அய்ஸ்.
//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?//
அதெல்லாம் யாராச்சும் இங்க கேட்டாங்களா? அன்னிக்கு ஹைக்கூ எழுதனது ஒருத்தன், பேர் வாங்கறது நானா?
குடிக்காமலே உளருனாதான் எனக்கு பிடிக்காது.
சூப்பர் போஸ்ட்:))))
//அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???//
அவரு சேம் சைடு கோல் போடறாராம்.
நன்றி கப்பியாரே
ஏலேய் கதிரு,
சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? சோடா நல்லதா இல்ல பூச்சி மருந்தா..??
நானும் ஆகப்போறேன் பி.நா.. :)
//அது அவனுக்கு புரிஞ்சுட்டா அவன் தான் பெரிய பீனாவானா....
என்ன தம்பி புரியுதா?//
இதுக்கு நான் என்ன பதில் சொல்றது?
:)))
//ஒரு புல் பாட்டில் பீருக்கேவா... தம்பி உன்னைய நான் ரொம்ப பெரிசா நினைச்சேனேப்பா...//
புலி நம்மள கொறச்சு எடை போடாத..
ஆக்சுவலா அன்னிக்கு என்ன நடந்துச்சின்னா....
ம்ஹிம் வேணாம்.
நான் பாட்டுக்கு ஏதாச்சும் உளறி வச்சுட போறேன்.
போட்டு வாங்கலாம்னு பாக்கறையா நம்மகிட்ட நடக்காதுவோய்.
//ஏலேய் கதிரு,
சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? சோடா நல்லதா இல்ல பூச்சி மருந்தா..??//
அண்ணே எத கலக்குறோம்னு முக்கியமில்ல. கலங்குறதுதான் முக்கியம் அப்புறமா ஈசியா கலங்கடிக்கலாம்.
//நானும் ஆகப்போறேன் பி.நா.. :)//
வாழ்த்துக்கள் பெங்களூரு பீனாவானா! :)
ஏன் இந்த மர்டர்வெறி..? எதுக்கு அய்யனாரை இப்படி காலி பண்றீங்க.. நீங்க என்ன செஞ்சாலும் அய்யனார் மாதிரி பீனாவானா கவுஜ எழுத முடியாது என்பதை மட்டும் ஆணித்தரமா சொல்லிக்கிறேன்.
அவர் ரொம்ப நல்லவராமே. எவ்ளோ அடிச்சாலும் ('கட்டிங்' க சொல்லலப்பா) கோச்சிக்க மாட்டாராமே.
அப்பேர்பட்டவரை ஏன்யா இப்படி படுத்தறீங்க.
பீனாவானாவில் ஆய்வியல் பட்டம் பெற ஒரு ஆய்வு பண்ணனும்னு சொன்னியே தம்பி... அது இதுதானா??
தம்பி! இதுல அய்யனார் போட்ட பின்னூட்டம் தான்யா சூப்பரு, உலகத்துல லொடுக்கர் எந்த மூலையில இருந்தாலும் வந்துடறார் பாருங்க பி.ந எதிர் பதிவுன்னா:-))
தம்பி, ஏற்கனவே அய்யனார் சொன்னதை இங்கே ஒரு CAP.
//இளா
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..
கவிதை என்பதென்ன பாஸ்ட் புட்டா போகிற போக்கில் சாப்பிட்டு கொள்ள உணர்வு ரீதியிலிருந்து வெளிப்படுவை ..என்னை கேட்டால் உயிருள்ளவை.. கவிதையை அணுகும் மனோநிலை இல்லாதவர்கள் தவிர்ப்பது நல்லது ..வெற்றுக்கூச்சல்கள் மூலம் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் சிக்கலான மனங்கள் தான் இப்படி புலம்பும் ..//
நமக்கு என்னமோ இந்த எதிர் அழகியலை பார்த்த கொமட்டிகிட்டுதான் வருது. கெட்ட வார்த்தைக்கே அர்த்தம் கண்டுபுடிக்க முடியல இதுல புனைவு வேறயா? ஆளை விடுங்கப்பா. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் மைக்ரோசாப்ட ஒரு வழி பண்ணி வெச்சு இருக்காங்களே, அதை உபயோகப்படுத்திக்குவோம். அதான் சோத்தாங்கை பக்கம் மேல மூலையில ஒரு X தான் அது.
ஆனாலும் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வா உங்களுக்கு? கலக்கல் பதிவு.
//இளா
எதிரழகியலை புரிந்து கொள்ள தேவை சற்று பரந்த மனம் ..அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தான உந்துதல்கள்.அது நம்மவரிடம் இல்லை இந்நிலையில் மேலும் அதை கிளறுவதோ வம்புக்கிழுப்பதோ தேவையற்ற ஒன்றாகத்தான் படுகிறது //
தம்பி உங்களுக்கும்தான் புரிஞ்சதா?
ஏங்க..இதுக்கு ரவண்டு புசுத்தகம் பேரு சொல்ல வேண்டாமா...அதுவும் எவனுமே படிச்சிருக்க முடியாத புசுத்தகம்...
Post a Comment