
பலநூறு ஆண்டுகள் வேர் விட்ட ஆலமரத்தின்
நிழலைப்போல உன் அன்பு என் மீது படர்ந்திருக்கிறது.
அங்கே நிழலைத்தவிர வேறெதுவும் கண்டதில்லை
இலையுதிராத மரத்தின் மடியினைப்போல எவ்விதமான
காலநிலையிலும் நிழல் பரப்பும் உன்னதம்.
புகமுடியாக் கானகத்தின் உயர்ந்த கிளையிலிருந்து
வெடித்தெழுந்த பஞ்சு ஒன்று தென்றலென என்மீது
அமர்ந்தது போல நம் உறவு.
கட்டமைத்த வார்த்தைகளுக்குள் சிக்காதது
எவ்வித அலங்காரமும் அற்ற வார்த்தைகளின்
வடிவம் அது.
காதல்
நட்பு
வரம்
மகிழ்ச்சி
துயரம்
பகிர்தல்
பிரிவு
போன்ற வழமையான வார்த்தைளைக் கொண்டு
சிறப்பிக்க முயன்ற நான் தோற்றுப்போய்
இறுதியாக கண்டெடுத்த வார்த்தை
ஆகப்பொருத்தமாய் நீயும் ஓர் தாயடி.
8 comments:
கட்டமைத்த வார்த்தைகளுக்குள் சிக்காதது
எவ்வித அலங்காரமும் அற்ற வார்த்தைகளின்
வடிவம் அது.
manathil thontum unarvukal athu oru kattamaipil vadikka mudiyatha ontu.. appadi vadithal athan makathuvam seerkedum...punithathuvam kedum..athu oru theyveegam...
யாருக்கு அண்ணன், பிறந்தநாள்...
என் சார்பாகவும் வாழ்த்துக்கள் தம்பிண்ணன்...
டச்சிங் கவிதை....
என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிரு கதிரு....
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
அருமையான கவிதை...ரசித்தேன்..
என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுப்பா :)
நன்றி கோபி. சொல்லிட்டேன்
பேரன்பு கொண்டவள்... பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
கவிதை அருமை தம்பி....
///அங்கே நிழலைத்தவிர வேறெதுவும் கண்டதில்லை
இலையுதிராத மரத்தின் மடியினைப்போல எவ்விதமான
காலநிலையிலும் நிழல் பரப்பும் உன்னதம்.
புகமுடியாக் கானகத்தின் உயர்ந்த கிளையிலிருந்து
வெடித்தெழுந்த பஞ்சு ஒன்று தென்றலென என்மீது
அமர்ந்தது போல நம் உறவு.//
மிக ஆழமான பதிவு.வாழ்த்துக்கள்.
Post a Comment