எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, April 08, 2007

எதிர்பாலின ஈர்ப்புகள்!!!

எதிர்பாலினம் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எந்த வயது
ஆனாலும் பருவத்துக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. வாலிபத்தில் பெண்களை கவர
ஏக்கப்பட்ட யுக்திகள் செய்கிறார்கள். அன்பை பெற, காதலைப் பெற, நட்பைப் பெற
என எந்த பருவத்திலும் ஏதாவதொன்றை செய்துகொண்டேதான் இருக்கிறோம்
தன்னிச்சை செயல்போல.

ரெண்டு நாள் முன்னாடி என்னோட நண்பன் ஒருத்தன் வந்தான். அதிக பழக்கமில்லை
நான் படித்த கல்லூரியில் படித்ததாக சொன்னான்.(ஒழுங்கா காலேஜ் போயிருந்தாதான
தெரியும்) அப்படியே துபாய் வந்து ஒரு வருட பழக்கம் மரியாதையான பையன்.
இங்க பக்கத்துலதான் இருக்கேன் பாத்து ரொம்ப நாளாச்சு வா பாப்போம்னு
கூப்பிட்டதால போனேன். அங்க ஒரு பொண்ணு கூட உக்காந்திருந்தான்.
மடிமேல ஒரு மடிக்கணினி(நாதாறி இதுல படம் பாக்கறது எப்படின்னு எங்கிட்ட
கேட்டது இது)

"வாடா எப்படி இருக்க?"

"அடப்பாவி இதுக்கு முன்னாடி என்னை வாடா போடான்னு கூப்பிட்டதில்ல
ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா எப்படிலாம் படம் காட்றானுங்க"

நான் நல்லாதான் இருக்கேன் இவுங்க யாரு?

"இவங்க என் கொலீக் பேரு கனிமொழி"

"நல்ல தமிழ்ப்பெயர் எனக்கு ரொம்ப பிடிச்ச பேருங்க"

"என்னோட பேர் கதிர்"

என்னடா மச்சி லேப்டாப்ல படம் பாக்கறது, பாட்டு கேக்கறதுலாம் எப்படின்னு
இப்ப கத்துகிட்டயா? பாவிப்பய ஒண்ணுமே தெரியாம லேப்டாப் வாங்கிட்டான்
நாந்தாங்க எல்லாத்தையும் கத்துகுடுத்தேன். (எனக்காடா ஆப்பு வைச்ச நீயி)

பையன் திரு திருன்னு முழிக்கறான்

மாப்ள நாம அந்தபக்கம் போய் தனியா பேசுவோம் வான்னு அப்படியே
அத்துவிட்டு கூட்டிகிட்டு வந்துட்டான்.

இந்த மாதிரி நண்பனா இருந்தாலும் பக்கத்துல ஒரு பொண்ணு இருந்துட்டா கெத்து
காமிக்கிறேன்னு இப்படி பண்றானுங்க. எது இவனுங்கள இப்படி பண்ண வைக்குது.

ஒரு பைக் சண்டியர் நம்ம ப்ரெண்டு தலகீழ ஓட்டுவாரு அதுவும் பொண்ணுங்க
ட்யூஷன் விட்டு வர்ற நேரம் வீலிங், ஸ்கிட்டிங்னு இல்லாத ரவுசு ஒருநாள்
எக்குத்தப்பா ஒரு பிகர் முன்னாடி வீலிங் பண்றேன்னு சில்லறை வாங்கி ரெண்டு
பல்லு அவுட்.

ஏன் இப்படி இயல்புக்கு மாறா நடக்கறது? எல்லாமே ஒரு ஈர்ப்புதான், எந்த
நேரத்துலயும் நாம அடுத்தவங்க கவனத்துல இருக்கணும். நம்மள பத்தி நாலு
பேர் நினைச்சிட்டே இருக்கணும். ஆனா இந்த பொண்ணுங்க பாருங்க எந்த
கவலையுமில்லாம அதுகபாட்டுக்கு இருக்கும். நம்மாளுங்கதான் உழுந்து பிறண்டு
வித்தை காட்டுவானுங்க.

சுகந்தி க்ராஸ் பண்ணான்னா பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடிக்குதுன்னு அடுத்த
மாச மளிகை லிஸ்ட்ல அதை சேக்க சொல்லி அடம்பிடிச்சி அடிவாங்கியிருக்கேன்.
நாமளும் அதே பவுடர போட்டா வாசனையாவும் இருக்கும் மேட்சிங்காவும்
இருக்கும்னு ஒரு எண்ணம்.

நம்ம பய ஒருத்தன் இருக்கான் கார்த்தி கார்த்தின்னு சதா க்ளாஸ் பொண்ணுங்களுக்கு
சேவை செஞ்சிகிட்டே இருக்கணும்னு நல்ல எண்ணம். பயாலஜி லேப்ல எலி,
தவளை சோதனையின் போது அவங்கவங்க கண்டிப்பா எலி, தவளை பிடிச்சிட்டு
வரணும். நம்ம பய வீட்டுல எலி ஜாஸ்தி. மச்சி எனக்கும் சேர்த்து புடிச்சிட்டு
வாடான்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.

இதே தவளை பரிசோதனைன்னா கேக்கவே வேணாம் பக்கத்துல எதாச்சும் ஏரி,
குளம், குட்டைன்னு விழுந்து எந்திரிச்சி ரெண்டு கைலயும் அஞ்சாரு தவக்களைய
பிடிச்சிகிட்டு வீரமா நடந்து வருவாரு. இப்படி டிஸ்ட்ரிபியூட் பண்றதாலயே அவர்
பேர் தேவர் பிலிம்ஸ்னு ஆகிப்போச்சு.

அஞ்சாப்பு படிக்கும்போது மதியம் கணக்கு வாத்தி பீரியடுன்னா டவுசர் ஈரமாகும்
எல்லாருக்கும். ஒரு காதுல பெரிய ஓட்டை இருக்கறதுனால அவர் பேர் தொளக்காது
வாத்தி. இவர் குடுக்கற தண்டனையே வித்தியாசமா இருக்கும். அதாவது ஒரு
கேள்வி கேட்டு நமக்கு தெரியலன்னு வச்சிக்கோங்க அந்த கேள்விக்கு எவன்/எவள்
சரியாக சொல்றாங்களோ அவங்க வந்து ரெண்டு கன்னத்துலயும் ஒரே நேரத்துல
அடிக்கணும். பையனே சரியான விடை சொல்றான்னா முன்பகைய பொறுத்து அடி
பலமாவும்,சன்னமாவும் விழ வாய்ப்பிருக்கு. ஏதோ ஒரு புள்ளைக்கு விடை
தெரியாம போய் பையன் சரியா சொல்லிட்டான்னு வைங்க அந்த புள்ளைக்கு
கன்னம் நோகாம தடவி குடுத்துட்டு வருவான். தம்பி இங்க வா "இப்படி"
அடிக்கணும்னு செவுளே கிழியற மாதிரி அடிப்பாரு தொளக்காது வாத்தி.
இந்த மாதிரி பொண்ணுங்கள்னா மட்டும் தியாகி ஆகி வாத்திகிட்ட அடிவாங்கறது
எதனால?

நானே என் சட்டைய இஸ்திரி பண்ணா சுருக்கம் சரியா போகமாட்டேங்கதுன்னு
இஸ்திரிகாரன்கிட்ட போட ஆரம்பிச்சது சரியா மீசை அரும்பற வயசிலதான்.
யாராச்சும் நம்மள கவனிக்கணும், யாராச்சும் நம்மள நினைக்கணும். இந்த மாதிரி
ஏன் ஹார்மோன் திடீர்னு மாறிப்போகுது.

ஏண்டா இம்புட்டு பேசறியே நீ மட்டும் என்ன ஒழுங்கான்னு யாரும் கேக்காதிங்க
நான் அதே மாதிரிதான்னாலும் ஓவர் பந்தா விட மாட்டேன். சில பேர் இருக்கானுங்க
பிகர்கள பாத்தா ப்ரெண்ட்ஷிப்ப மறந்து ஏத்தமா பேசுவானுங்க பாருங்க அவன்களுக்கு
இந்த பதிவு கண்டனங்களை தெரிவிக்கிறது.

திருந்துங்கடா அரைடவுசர் மண்டையனுங்களா...

தலைப்ப பார்த்து பதிவு நல்லா இருக்கும்னு படிங்க வந்தவங்ககிட்ட மன்னிப்பு
கேட்டுக்கறேன்.

59 comments:

தமிழ்நதி said...

\\எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.\\

குசும்புன்னா இதானா தம்பி...? ரசித்தேன்.

கண்மணி said...

தம்பி என்ன கொஞ்ச நாளா உம்ம சொந்த கதையெல்லாம் எடுத்துவுடுகிறீர்.ஆமா நீரு எத்தனை எலி தவக்களை புடிச்சீர்?

எலி பிடிக்க தெரியாதவன்... said...

//மச்சி எனக்கும் சேர்த்து புடிச்சிட்டு
வாடான்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

அடப்பாவி இது நீ என்கிட்ட சொன்ன பதில் தானே

சுகந்தி said...

//சுகந்தி க்ராஸ் பண்ணான்னா பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடிக்குதுன்னு அடுத்த
மாச மளிகை லிஸ்ட்ல அதை சேக்க சொல்லி அடம்பிடிச்சி அடிவாங்கியிருக்கேன்.//

அடப்பாவி எங்க வீட்ல பாண்ட்ஸ் டப்பா காணம போனதுக்கு நீ தான் காரணமா?

உடைஞ்ச பல்லு said...

//ஒரு பைக் சண்டியர் நம்ம ப்ரெண்டு தலகீழ ஓட்டுவாரு அதுவும் பொண்ணுங்க
ட்யூஷன் விட்டு வர்ற நேரம் வீலிங், ஸ்கிட்டிங்னு இல்லாத ரவுசு ஒருநாள்
எக்குத்தப்பா ஒரு பிகர் முன்னாடி வீலிங் பண்றேன்னு சில்லறை வாங்கி ரெண்டு
பல்லு அவுட்.//

நான் உடைஞ்சது இவன் வாயில இருந்துதான்

கனிமொழி said...

//என்னடா மச்சி லேப்டாப்ல படம் பாக்கறது, பாட்டு கேக்கறதுலாம் எப்படின்னு
இப்ப கத்துகிட்டயா? பாவிப்பய ஒண்ணுமே தெரியாம லேப்டாப் வாங்கிட்டான்
நாந்தாங்க எல்லாத்தையும் கத்துகுடுத்தேன். (எனக்காடா ஆப்பு வைச்ச நீயி)

பையன் திரு திருன்னு முழிக்கறான்//

கதிர்,
உங்களோட இந்த திறமைல தான் நான் உங்களுக்கு என் மனச பறி கொடுத்துட்டேன்

அப்பாவி தவளைகள் said...

//இதே தவளை பரிசோதனைன்னா கேக்கவே வேணாம் பக்கத்துல எதாச்சும் ஏரி,
குளம், குட்டைன்னு விழுந்து எந்திரிச்சி ரெண்டு கைலயும் அஞ்சாரு தவக்களைய
பிடிச்சிகிட்டு வீரமா நடந்து வருவாரு. //

இல்லை அநியாயமா எங்களை எல்லாம் பிடிச்சிது இந்த கதிரு தான்

மஞ்சுளா said...

//மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

அடப்பாவி எனக்கு தெரியாம கவிதாக்கும் நீ எலி கொடுத்தியா?

உன்னைய போய் நல்லவனு நினைச்சிட்டனே

விஜயக்குமார் said...

//மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

அடப்பாவி என் பொண்டாட்டிக்கு நீ தான் எலி பிடிச்சி கொடுத்தியா?

அருண்குமார் said...

//மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

எங்க அம்மாவுக்கு நீங்க தான் எலி பிடிச்சி கொடுத்தீங்களா?

எனக்கும் பிடிச்சி கொடுப்பீங்களா அங்கிள்?

கவிதா said...

//மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

அடப்பாவி நீ மஞ்சுளாக்கும் எலி பிடிச்சி கொடுத்தியா?

தம்பி said...

யாரப்பா நீங்கள்லாம்??

கன்னம் said...

//ஏதோ ஒரு புள்ளைக்கு விடை
தெரியாம போய் பையன் சரியா சொல்லிட்டான்னு வைங்க அந்த புள்ளைக்கு
கன்னம் நோகாம தடவி குடுத்துட்டு வருவான//

ஆமா. கதிருக்கூட எனக்கு நோகாத மாதிரி தான் தடவிக்கொடுத்தாரு

Nandha said...

என்ன நடக்குது இங்க. சுகந்தி, கனிமொழி,உடைஞ்ச பல்லு.... எங்க மஞ்சுளாவையும், கவிதாவையும் காணோம்.

//தலைப்ப பார்த்து பதிவு நல்லா இருக்கும்னு படிங்க வந்தவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். //

இதைப் போட்டதால தப்பிச்சீங்க. உண்மையாலே ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருப்பீங்களோன்னு ஒரு நப்பாசைல தான் வந்துட்டேன்.

கதிரின் மனசாட்சி said...

//தம்பி said...

யாரப்பா நீங்கள்லாம்?? //

நாங்கதான்

மற்ற பெயர்கள் said...

//"நல்ல தமிழ்ப்பெயர் எனக்கு ரொம்ப பிடிச்ச பேருங்க"//

அப்ப நாங்க எல்லாம் கெட்ட தமிழ் பெயர்களா

தம்பி said...

வேணாம் பாஸ் இன்னும் ரெண்டு மூணு நாளு பொழப்ப ஓட்டிக்கறனே பதிவு போட்ட அஞ்சாவது நிமிஷத்துலயே இவன தூக்கிவீசணும்னு கங்கணம் கட்டிகினு அலைவாங்க போலருக்கு.

அய்யா/அம்மா போதும் ஆட்டம். நிப்பாட்டிக்குவோம்.

கார்த்தி said...

//நம்ம பய ஒருத்தன் இருக்கான் கார்த்தி கார்த்தின்னு சதா க்ளாஸ் பொண்ணுங்களுக்கு
சேவை செஞ்சிகிட்டே இருக்கணும்னு நல்ல எண்ணம்.//

அடப்பாவி. உன் பதிவுக்கு என் பேர நார வெச்சிட்ட இல்லை. ஊர் பக்கம் வா. உனக்கு சங்கு தான்

மன்னிப்பு said...

//தம்பி said...

வேணாம் பாஸ் இன்னும் ரெண்டு மூணு நாளு பொழப்ப ஓட்டிக்கறனே பதிவு போட்ட அஞ்சாவது நிமிஷத்துலயே இவன தூக்கிவீசணும்னு கங்கணம் கட்டிகினு அலைவாங்க போலருக்கு.

அய்யா/அம்மா போதும் ஆட்டம். நிப்பாட்டிக்குவோம். //

சரி.
மன்னிச்சாச்சி.
மத்த கமெண்டை மட்டும் பப்ளிஷ் பண்ணிடு. நான் விட்டுடறேன்

மத்த பின்னூட்டங்கள் said...

என் மத்த பின்னூட்டங்கள் எங்கே?

மதி கந்தசாமி (Mathy) said...

தம்பி,

கொஞ்ச நாளா சொந்தக் கதையெல்லாம் எடுத்துவிட்டுட்டிருக்கீங்க.

//நம்ம பய வீட்டுல எலி ஜாஸ்தி. மச்சி எனக்கும் சேர்த்து புடிச்சிட்டு
வாடான்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.

இதே தவளை பரிசோதனைன்னா கேக்கவே வேணாம் பக்கத்துல எதாச்சும் ஏரி,
குளம், குட்டைன்னு விழுந்து எந்திரிச்சி ரெண்டு கைலயும் அஞ்சாரு தவக்களைய
பிடிச்சிகிட்டு வீரமா நடந்து வருவாரு. இப்படி டிஸ்ட்ரிபியூட் பண்றதாலயே அவர்
பேர் தேவர் பிலிம்ஸ்னு ஆகிப்போச்சு.//


இதுவும் நீங்கதான்னு தைரியமா சொல்லுங்க. ;)

-மதி

வெட்டிப்பயல் said...

அடப்பாவி!!!

என்னப்பா நடக்குது இங்க??? இந்த குத்து குத்திருக்கறீங்க???

எலேய் கதிரு,
நீ தானே அந்த ஒரே ஒரு எலினு கதைய விட்டது??? சொல்லு மேன்...

தம்பி said...

//குசும்புன்னா இதானா தம்பி...? ரசித்தேன். //

வாங்க தமிழ்நதி!


இதுல்லாம் சாம்பிள்தான் இன்னும் மெயின்பிக்சர் காட்டினா நானே நாறிடுவேன் போலருக்கு. அதனால மூச்ச்ச்

நல்லா எழுதுற நீங்கள்லாம் என்ன மாதிரி மொக்கைப்பதிவு போடறவங்க பதிவுக்கு வர்றது சந்தோசமா இருக்கு.

அடிக்கடி வாங்க!

வெட்டிப்பயல் said...

//நல்லா எழுதுற நீங்கள்லாம் என்ன மாதிரி மொக்கைப்பதிவு போடறவங்க பதிவுக்கு வர்றது சந்தோசமா இருக்கு.//

அடப்பாவி,
அப்ப நாங்க எல்லாம் வரதுக்கு என்ன அர்த்தம்???

தம்பி said...

//தம்பி என்ன கொஞ்ச நாளா உம்ம சொந்த கதையெல்லாம் எடுத்துவுடுகிறீர்.ஆமா நீரு எத்தனை எலி தவக்களை புடிச்சீர்? //

ம்ம் திருவிழால புடிச்சேன்.

யெக்கா இதுல்லாம் நானில்லங்க எவ்ளோ பெருந்தன்மையா பாண்ட்ஸ் மேட்டர்லாம் ஒளிக்காம சொன்னேன் அதுமாதிரி எலி,தவள மேட்டர்லாம் நான் செஞ்சிருந்தா சொல்லமாட்டேனா..

யோசிக்கணும்...

தம்பி said...

//எலிபிடிக்கதெரியாதவன்//

யோவ் எலி புடிக்கறதுக்கு என்ன ஸ்பெசல் ட்ரெய்னிங் தர்றாங்களா
எலிப்பொறில வடைய வச்சன்ன்னா தானே வந்து மாட்டிக்கும் இதுகூட தெரியாதவனா நீயி
ஹய்யோ ஹய்யோ

//சுகந்தி//

எப்படி செல்லம் இருக்க?

உங்க வீட்ல பாண்ட்ஸ் பவுடர் நான் எடுக்கலமா, உன் வீட்டு பக்கம் வந்தாவே உங்கண்ணன் மொறச்சி பாக்கறான்னு உங்க தெரு பக்கமே வராத ஆளு நானு, வீட்டுக்குள்ள பூந்து பவுடர் டப்பாவ எப்படி திருடுவேன் சொல்ல்லு பாக்கலாம்..

//உடைஞ்ச பல்லி//

யோவ் உடஞ்ச பல்லு நானே மொக்கையா ஒரு பதிவு போட்டா அதவிட மொக்கையா ஒரு கமெண்ட் போடற....

//கனிமொழி//

//கதிர்,
உங்களோட இந்த திறமைல தான் நான் உங்களுக்கு என் மனச பறி கொடுத்துட்டேன் //

வேணா வந்து எடுத்துக்கோ கனி...
காக்காசு பொறாத மனச வச்சிகிட்டு என்ன பண்றது...

//அப்பாவி தவளைகள்//

இதுவும் ஒரு மொக்கை கமெண்ட்.

//மஞ்சுளா//

//அடப்பாவி எனக்கு தெரியாம கவிதாக்கும் நீ எலி கொடுத்தியா?//

ஹி ஹி ஆமாண்டா மஞ்சு

//உன்னைய போய் நல்லவனு நினைச்சிட்டனே//

தப்பா நினைக்கறதே உன்னோட வேலையா போச்சு.

//விஜயகுமார்//

//அடப்பாவி என் பொண்டாட்டிக்கு நீ தான் எலி பிடிச்சி கொடுத்தியா?//

வா நாட்டாம!!!!

யோவ் எலிதான்யா புடிச்சி குடுத்தேன்
புலியா புடிச்சி குடுத்தேன்?

//அருண்குமார் said...
//மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.//

எங்க அம்மாவுக்கு நீங்க தான் எலி பிடிச்சி கொடுத்தீங்களா?

எனக்கும் பிடிச்சி கொடுப்பீங்களா அங்கிள்? //

என்னது அங்கிளா?

மண்டைல ஓங்கி ஒண்ணு வெச்சேன்னா நெல்லிக்க்கா சைசுக்கு வீங்கிரும்.

//கவிதா
அடப்பாவி நீ மஞ்சுளாக்கும் எலி பிடிச்சி கொடுத்தியா? //

எலிதான புடிச்சி குடுத்தேன் என்னவோ பாகிஸ்தானுக்கு பஸ் புடிச்சி குடுத்த மாதிரி ஓவர் எபெக்ட் போட்டு காட்டறிங்களே!!

தம்பி said...

//கன்னம் said...
//ஏதோ ஒரு புள்ளைக்கு விடை
தெரியாம போய் பையன் சரியா சொல்லிட்டான்னு வைங்க அந்த புள்ளைக்கு
கன்னம் நோகாம தடவி குடுத்துட்டு வருவான//

ஆமா. கதிருக்கூட எனக்கு நோகாத மாதிரி தான் தடவிக்கொடுத்தாரு //

கன்னமே வந்து பேசுதாம்.
எப்படிலாம் யோசிக்கறாங்கப்பா!

//என்ன நடக்குது இங்க. சுகந்தி, கனிமொழி,உடைஞ்ச பல்லு.... எங்க மஞ்சுளாவையும், கவிதாவையும் காணோம்.//

அதாங்க எனக்கும் புரியல! மஞ்சுளாவையும் கவிதாவையும் காணும்னு சொல்றத பாத்தா ஆட்டத்த நீங்கதான் ஆடியிருப்பிங்களோன்னு டவுட்டா இருக்கு.

//இதைப் போட்டதால தப்பிச்சீங்க. உண்மையாலே ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருப்பீங்களோன்னு ஒரு நப்பாசைல தான் வந்துட்டேன். //

உண்மைலயே ஆரம்பிக்கும்போது ஆராய்ய்சிக்கட்டுரை ரேஞ்சுக்கு ஆரம்பிச்சேன். போக போக அதுஎன்னடான்னா வழக்கமான பக்கம் போயிடுச்சி.

மன்னிச்டுங்ணா

//கதிரின் மனசாட்சி said...
//தம்பி said...

யாரப்பா நீங்கள்லாம்?? //

நாங்கதான்//

யோவ் மீடியம் உன் வேலதான்யா இது..
நல்லா தெரியுது.


//அப்ப நாங்க எல்லாம் கெட்ட தமிழ் பெயர்களா //

நான் சொன்னனா?

//அடப்பாவி. உன் பதிவுக்கு என் பேர நார வெச்சிட்ட இல்லை. ஊர் பக்கம் வா. உனக்கு சங்கு தான் //

வாடா கார்த்தி.
நீயே ஒத்துகிட்ட எலி புடிச்சேன்னு..
பெரிய மனசுடா உனக்கு.


//சரி.
மன்னிச்சாச்சி.
மத்த கமெண்டை மட்டும் பப்ளிஷ் பண்ணிடு. நான் விட்டுடறேன் //

யோவ் வந்தது வந்துட்ட உன் பேர சொல்லிட்டு போய்யா..

//என் மத்த பின்னூட்டங்கள் எங்கே?//

பின்னாடி கூட்ஸ் வண்டில வந்துகிட்டு இருக்கு.

தம்பி said...

//இதுவும் நீங்கதான்னு தைரியமா சொல்லுங்க. ;)

-மதி//

வாங்க மதியக்கா!

என்னத்த சொல்றது, யார் எது செஞ்சாலும் அது நாந்தான்னு சொல்றாங்க நீங்களும் அப்படிதான் சொல்றிங்க. :)

Nandha said...

என்னதான் நடக்குது இங்க? யோவ் யாருப்பா நீங்க எல்லாம்?

கதிர் புலம்புறாரு: ஏண்டா டேய் ஒரு மொக்கைப் பதிவு போட்டது ஒரு குத்தமாடா? இப்படியா எல்லாம் கொலை வெறியொட கெளம்பி வருவீங்கன்னு.... இதே ரேஞ்சுல போச்சுன்னா அடுத்த பத்தாவது நிமிஷத்துல தம்பி அவுட் ஆகப் போறரு......

தம்பி said...

//வெட்டிப்பயல் said...
அடப்பாவி!!!

என்னப்பா நடக்குது இங்க??? இந்த குத்து குத்திருக்கறீங்க???//

இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா நானு.

எலேய் கதிரு,
நீ தானே அந்த ஒரே ஒரு எலினு கதைய விட்டது??? சொல்லு மேன்...//

இல்லன்னு சொன்னா நம்பவா போற?

//அடப்பாவி,
அப்ப நாங்க எல்லாம் வரதுக்கு என்ன அர்த்தம்??? //

அந்த நல்லா எழுதறவங்க லிஸ்ட்ல நீயும் ஒருந்தந்தான்றத மறந்துடாத வெட்டி.

இன்னிக்கு நீ நல்ல பதிவு போட்டுருக்க.
நாளைக்கு உன் மவன் போடுவான்..

இதெல்லாம் பாத்துகிட்டு நான் நல்ல பதிவு போடுவன்னு நினைச்சிடாதப்பூ

இதெல்லாம் என்ன பெருமையா???

கடமை...
ஒவ்வொருத்தனோட கடமை..

தம்பி said...

நந்தா உங்க கோட்டா முடிஞ்சி போச்சு இனிமே அடுத்த கமெண்ட் வந்துச்சின்னா பிரசுரிக்கப்படாது...

ஆம்ம்மா சொல்லிபுட்டேன்

இராம் said...

கதிரு,


பதிவை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்கேன்ப்பா :))

Ultimate comedy dude :)

இராம் said...

சுகந்தி,கனிமொழி,மஞ்சுளா,கவிதா'ன்னு இவ்வளோ பொண்ணுக பேரு தெரியுமாலே ஒனக்கு???

யாராவது ஒன்னே நமக்கு இண்டரோ கொடு மக்கா... ஹி ஹி :)

வெட்டிப்பயல் said...

//
Ultimate comedy dude :)//

தொற இங்கிலிபீஸெல்லாம் பேசுது...

இராம் said...

////இதுவும் நீங்கதான்னு தைரியமா சொல்லுங்க. ;)

-மதி//

வாங்க மதியக்கா!

என்னத்த சொல்றது, யார் எது செஞ்சாலும் அது நாந்தான்னு சொல்றாங்க நீங்களும் அப்படிதான் சொல்றிங்க. :)//

ஏலேய் தேவர் பிலிம்ஸ்,

எதுக்கு இப்பிடியெல்லாம் பொய் சொல்லுற?? நேத்து ஒன்னோட சுயசரிதை எழுத போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சுயே??? இதுதான் ஒன்னோட சுயசரிதையா??????

நல்லா இருக்கு மக்கா :)

இந்த பதிவை சங்கத்து சைடு தட்டியிலே சுட்டி காட்டியாச்சு:)

Nandha said...

அதான ஆம்பளை பேரு வந்தா மட்டும் கோட்டா அது இதுன்னு சொல்லி கழட்டி விட்டுடுவீங்களே!

சரி பொழச்சுப் போங்க....

இராம் said...

////
Ultimate comedy dude :)//

தொற இங்கிலிபீஸெல்லாம் பேசுது...//

கஷ்டப்பட்டு முணு இங்கிலிசு வார்த்தையை போட்டு அதையும் சரிதானா'ன்னு டிக்சனரிலே செக் பண்ணி பார்த்து கமெண்ட் போட்டா நக்கலா பண்ணிட்டு திரியுறே மவனே???

இன்னிக்கு ஒன்னையே ஆணி பிடுங்குற இடத்திலே சும்மா விட்டுடானுகளா???? :(

சந்தோஷ் aka Santhosh said...

எலேய் கதிரு கலக்கி இருக்கேலே. ஆமா யாருப்பா இது இந்த குத்து குத்தி இருக்காங்க. தாங்கலைடா சாமி கொலை வெறியேட கிளம்பி இருக்காங்க போல. ஒரு பத்து நிமிசம் கழிச்சி வரலாம் அப்படின்னு ஆணி புடிங்கிட்டு பாத்தா இந்த ஆட்டம் ஆடி இருக்காங்க.

இராம் said...

கமெண்ட்ஸ்ல்லாம் பப்ளிஷ் பண்ணு மேன்.... இல்லன்னா அந்த அ.மு.க கோஷ்டிகளை கூப்பிட்டு வந்துருவேன் :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

கமெண்ட்ஸ்ல்லாம் பப்ளிஷ் பண்ணு மேன்.... இல்லன்னா அந்த அ.மு.க கோஷ்டிகளை கூப்பிட்டு வந்துருவேன் :) //


இதுக்கு மேல கதிரு நாளைக்கு தான் கமெண்ட அனுப்புவான்...

ஏன்னா 40 தாண்டிடுமில்ல ;)

மின்னுது மின்னல் said...

தம்பி said...
//எலிபிடிக்கதெரியாதவன்//

யோவ் எலி புடிக்கறதுக்கு என்ன ஸ்பெசல் ட்ரெய்னிங் தர்றாங்களா
எலிப்பொறில வடைய வச்சன்ன்னா தானே வந்து மாட்டிக்கும் இதுகூட தெரியாதவனா நீயி
ஹய்யோ ஹய்யோ
//


உயிரோடு பிடிக்க தெரியாத


மின்னுது மின்னல்

Rasigan said...

thaliappa parthu emanthathula naanum oruthan...

ippadi usupethiye udambha ranagalam aakka evalavu per kelambi irukkenga??

தவக்களையின் தலைவன் said...

அடப்பாவிகளா....எங்களை வச்சுதான் பிகருகளை உசார் பண்றிங்களா?

கனிமொழி அப்பா said...

\\கதிர்,
உங்களோட இந்த திறமைல தான் நான் உங்களுக்கு என் மனச பறி கொடுத்துட்டேன்\\

மாப்புள எனக்கு பரிபூரன சம்மதம்.

ஆப்பு வாங்கியவர்கள் said...

\\தம்பி said...
வேணாம் பாஸ் இன்னும் ரெண்டு மூணு நாளு பொழப்ப ஓட்டிக்கறனே பதிவு போட்ட அஞ்சாவது நிமிஷத்துலயே இவன தூக்கிவீசணும்னு கங்கணம் கட்டிகினு அலைவாங்க போலருக்கு.

அய்யா/அம்மா போதும் ஆட்டம். நிப்பாட்டிக்குவோம்.\\

தமிழ்மணத்துல எத்தனை பேரை இந்த மாதிரி ஓடவச்ச நீ இன்னைக்கு காலி

கோபிநாத் said...

கதிரு உன்மேல நிறைய பேரு கொலைவேறியோட இருக்காங்க போல அதுக்குள்ள தமிழ்மணத்தில் இருந்து உன்னை தூக்கிட்டானுங்க.

கோபிநாத் said...

\\இராம் said...
கதிரு,


பதிவை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்கேன்ப்பா :))

Ultimate comedy dude :)\\

ராம் இருந்தாலும் உனக்கு நக்கலு அதிகம்ப்பா.....எவ்வளவு சீரியஸ கதிரு பதிவு போட்டுயிருக்கான். அதை போயி காமெடின்னு சொல்லிக்கிட்டு

கிடேசன் பார்க் said...

கதிரு சார்....இங்க ரெண்டு எலி இருக்கு சார்....சீக்கிரம் வாங்க சார்

கோபிநாத் said...

சரி....பாஞ்சாயத்து ராஜ், புலி, ஜி, கப்பி , அய்யனார் எல்லாம் எங்கப்பா காணோம்.

Fast Bowler said...

:)

அய்யனார் said...

சாரிப்பா
ஊரே அடங்குன பிறகு வரேன்

பதிவு குத்து னா
பின்னூட்டங்கள் செம குத்து

தம்பி இந்த அமுக வுக்கெல்லாம் எவ்ளோ?
:)))

தம்பி said...

//கதிரு,


பதிவை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்கேன்ப்பா :))

Ultimate comedy dude :) //

நன்றி :))

தம்பி said...

//வெட்டிப்பயல் said...
//
Ultimate comedy dude :)//

தொற இங்கிலிபீஸெல்லாம் பேசுது... //

மூணு வார்த்தை பேசுனாவே இங்கிலிசா
நானெல்லாம் முப்பது வார்த்தை மூச்சு விடாம சொல்லுவேன்.

தம்பி said...

//இந்த பதிவை சங்கத்து சைடு தட்டியிலே சுட்டி காட்டியாச்சு:)

//

சங்கத்துல பதிவ சேத்தா மட்டும் போதாது. என்னையும் சேக்கணும்.

CVR said...

உண்மைய சொல்லனும்னா,பதிவை விட பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்து தான் அதிகமா சிரிச்சேன்!!:-)

நல்லா இருந்திச்சு தம்பி.
நான் உங்கள எப்பயாச்சும் பார்த்தா அப்போ எல்லாம் இதை நியாபகம் வெச்சுக்கோங்க!!
நீங்களும் ஃபிகருக்காக ஃபிரண்டை இன்சல்ட் பண்ணாதீங்க!! :-D

ACE said...

//அய்யனார் said...

பதிவு குத்து னா
பின்னூட்டங்கள் செம குத்து
//

ripeate !! :) :)

சேதுக்கரசி said...

"It is inherent in a man to impress an attractive woman" -- ரொம்ப வருசம் முன்னாடி நம்மூர்ல ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படிச்சது.

//ஆனா இந்த பொண்ணுங்க பாருங்க எந்த
கவலையுமில்லாம அதுகபாட்டுக்கு இருக்கும். நம்மாளுங்கதான் உழுந்து பிறண்டு வித்தை காட்டுவானுங்க.//

சமீபத்தில் ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தப்ப பார்த்தது. பெண் மயில் கண்டுக்காம "கூலா" இருந்தது. ஆண் மயில் பல்ட்டியடிச்சு தோகையை விரிச்சு அங்கிட்டும் இங்கிட்டும் "ஷோ"-வா நடந்துக்கிட்டு வச்ச கண்ணு வாங்காம.. ஒரே ஜொள்ஸ் தாங்கமுடியலப்பா!! :-D

செந்தில் said...

//ஆனா இந்த பொண்ணுங்க பாருங்க எந்த
கவலையுமில்லாம அதுகபாட்டுக்கு இருக்கும்.//

ஆருங்கண்ணா ஒங்களுக்கு சொன்னது, எவனோ நல்லா கொளுத்தி பொட்டிருக்கான்.

குழலி / Kuzhali said...

ஹா ஹா ஹா...நம்மகிட்டயும் கொஞ்சம் இது மாதிரி அயிட்டங்கள் இருக்கு.... :-)))