சமத்காரம்னா என்னன்னு கேட்பவர்களுக்கு முன்னாடியே
அதற்கான பதிலை சொல்லிவிடுகிறேன். அதாவது
ஒருத்தரை புகழற மாதிரி புகழ்ந்து இகழ்வதுதான்
சமத்காரம் என்று சொல்வார்கள். வஞ்சப்புகழ்ச்சி
அணின்னு சொல்வாங்களே அப்படி கூட சொல்லலாம்.
உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்கிறேன்
தஞ்சை மாவட்டத்தில் ஒரு மடாதிபதி, புலவர்கள்
கூட்டத்தை கூட்டினார். மடாதிபதியே தலைமை
வகித்தார். எல்லாப் புலவர்களும் வந்துவிட்டார்கள்
"கடை மடை" என்ற ஊரிலிருந்து ஒரு புலவர்
கடைசியாக வந்தார். அவரை பார்த்த மடாதிபதி,
வாரும் "கடை கடை மடையரே" என்றார், அப்படி
என்றால் "கடைமடை" என்ற ஊரை சேர்ந்தவர்
என்றும் அர்த்தம், "கடைசியில் வந்த மடையன்"
என்றும் அர்த்தம்.
நம்ம ஊர்ல இதையே வேற மாதிரி சொல்வாங்க
"கடை பிகரா" இருந்தாலும் சட்டுன்னு கரெக்ட்
பண்ணிடுறாங்கப்பா அப்படின்னு.
உடனே புலவரும் பணிவோடு "வணக்கம்
மடத்தலைவரே!" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
இது மாதிரியானா சொல்லாடல்களைத்தான்
"சமத்காரம்" என்று சொல்வார்கள்.
இதுபோல பேசுவது அண்ணாவுக்கு கைவந்த
கலை!
கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் ஒரு நாடத்தில்
நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சரித்திர
நாடகத்தில் வந்த சக்ரவர்த்தி, தமக்கு எந்தெந்த
ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியை
பார்த்து கேட்டார்.
"வங்க ராஜா தங்கம் கட்டினார், கலிங்க ராஜா
நவமணிகள் கட்டினார்" என்றெல்லாம் அந்த
ராஜா அடுக்கினார்.
உடனே சக்ரவர்த்தி "சோழ ராஜா என்ன
கட்டினார்? என்று கேட்டார்!
வேலைக்காரனாக நின்ற என்.எஸ்.கே., "வேஷ்டி!
வேஷ்டி!" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
சமத்காரத்திற்க்கும் என்.எஸ்.கே சொன்னதற்கும்
சம்பந்தமில்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக
சொல்கிறேன்.
சரி பதிவு கொஞ்சம் சுவாரசியமா இருக்கணுமே
அப்படீங்கறதினால கீழே ஒரு சமத்காரத்தினை
கொடுக்கிறேன் அதற்கான பதிலை பின்னூட்டத்தில்
தெரிவிக்கலாம்! உங்களுக்கு தெரிந்தவற்றையும்
நீங்கள் இணைக்கலாம்!.
"காக்காய் கறி சமைத்துக்
கருவாடுமென்று தின்பர் சைவர்"
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
சமத்காரம் என்றால் ஆச்சரியமூட்டும் செயல் என்பதே பொருள்.
வஞ்சப்புகழ்ச்சி என்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.
ஆஹா...
தம்பி நீ ஒரு தங்க கம்பி.
நீ போய் விடாதே சோம்பி.
தமிழ்நாடு இருக்குது உன்னை நம்பி.
ஸ்டாலினுக்கு இல்லையே இப்படி ஓர் தம்பி.
(கலைஞர் குரலில் படிக்கவும்).
மேக்ரோமண்டையன்.
//அழகாக எழுதியிருக்கிறீர்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயராமன் ஐயா!
//தம்பி நீ ஒரு தங்க கம்பி.
நீ போய் விடாதே சோம்பி.
தமிழ்நாடு இருக்குது உன்னை நம்பி.
ஸ்டாலினுக்கு இல்லையே இப்படி ஓர் தம்பி.
(கலைஞர் குரலில் படிக்கவும்).//
கலைஞர் குரல் எனக்கு எப்படியா வரும்? என் குரல்லதான் படிச்சேன்.
கடைசில கேட்ட சமத்காரத்துக்கு யாருமே பதில் சொல்லலியே!
திரண்டு வாருங்கள் வலைமக்களே!!
தம்பி,
எங்களுக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கமே தவிர பதில் சொல்லி பழக்கமில்லை ;)
//தம்பி,
எங்களுக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கமே தவிர பதில் சொல்லி பழக்கமில்லை ;)//
உங்க கொளுகைக்கு எதிரா ஏதாவது பேசி இருந்தா மன்னிச்சுருங்கப்பு, சங்கத்துல வேற பெரிய ஆளாகிட்டிங்க அங்கிட்டுருந்து ஆள கூட்டி வந்துராதீக!
ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்!!
//காக்காய் கறி சமைத்து = கால் காய் அதாவது ஒரு காயை நான்காக வெட்டி அதில் ஒரு துண்டை மட்டும் எடுத்து அதை சமைத்து
கருவாடுமென்று = கரு வாடும் என்று அதாவது உயிரின் கருவானது வாடிப் போகுமே என்று
தின்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்//
மிகச்சரியாக சொன்னீர்கள் வைசா!
நான் நினைச்ச மாதிரியே வந்து எட்டிப்பாத்துட்டு எல்லாரும் ஓடறாங்க!
இனிமேல் கேள்வியே கேக்கக்கூடாது !
//தம்பி said...
//தம்பி,
எங்களுக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கமே தவிர பதில் சொல்லி பழக்கமில்லை ;)//
உங்க கொளுகைக்கு எதிரா ஏதாவது பேசி இருந்தா மன்னிச்சுருங்கப்பு, சங்கத்துல வேற பெரிய ஆளாகிட்டிங்க அங்கிட்டுருந்து ஆள கூட்டி வந்துராதீக!
ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்!!
//
தம்பி,
என்னப்பா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்ட...நம்ம என்னா அப்படியா பழகிட்டு இருக்கோம்...
இன்னைக்கு வேற பாசக்காரப்பயலுங்க வேலையக் கொடுத்து கொல்றானுங்க ;)
இனிமே கேள்வி ஏதாவது கேட்ட பதில நமக்கு தனியா மெயில்ல அனுப்பிடு ;)
நல்ல பதிவு தம்பி ஐயா. வைசாவின் விளக்கமும் நல்ல விளக்கம். 'கருவாடுமென்று'விற்குப் பொருள் தெரிந்தது. 'காக்காய்'க்குப் பொருள் தெரியாமல் இருந்தது - வைசாவின் விளக்கத்தைப் படிக்கும் வரை.
//காக்காய் கறி சமைத்து = கால் காய் அதாவது ஒரு காயை நான்காக வெட்டி அதில் ஒரு துண்டை மட்டும் எடுத்து அதை சமைத்து
கருவாடுமென்று = கரு வாடும் என்று அதாவது உயிரின் கருவானது வாடிப் போகுமே என்று
தின்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்//
அப்பாடா அன்சஸர் வந்திருச்சு,
ஹீ ஹீ கதிரு கலக்கீட்டே போ....
//இனிமே கேள்வி ஏதாவது கேட்ட பதில நமக்கு தனியா மெயில்ல அனுப்பிடு ;)//
கண்டிப்பா அனுப்பறேன் வெட்டி! ஐடி குடுங்க!
//நல்ல பதிவு தம்பி ஐயா. வைசாவின் விளக்கமும் நல்ல விளக்கம். 'கருவாடுமென்று'விற்குப் பொருள் தெரிந்தது. 'காக்காய்'க்குப் பொருள் தெரியாமல் இருந்தது - வைசாவின் விளக்கத்தைப் படிக்கும் வரை.//
வாங்க குமரன். நமக்கு மட்டும் அது தெரியுமா என்ன! எல்லாம் கண்ணதாசனின் கடைசிபக்கம் என்ற புத்தகத்தில் இருந்து சுட்டதுதான்!
//அப்பாடா அன்சஸர் வந்திருச்சு,
ஹீ ஹீ கதிரு கலக்கீட்டே போ.... //
எப்பவுமே இப்படித்தானா?? :-))
ஓஹோ! இது அது மாதிரி மேட்டரா??
//கலைஞர் குரல் எனக்கு எப்படியா வரும்? என் குரல்லதான் படிச்சேன்.//
ஓ நீதான அது.
மைசூர் போண்டாவுல மைசூர் எங்கனு கேட்டது...
மேக்ரோமண்டையன்.
//ஓஹோ! இது அது மாதிரி மேட்டரா??//
எது மாதிரி?? சொல்லுங்கய்யா நீங்களே ஏதாவது ஒண்ண நெனச்சிகிட்டா நான் என்ன செய்யறது!
//கலைஞர் குரல் எனக்கு எப்படியா வரும்? என் குரல்லதான் படிச்சேன்.//
ஓ நீதான அது.
மைசூர் போண்டாவுல மைசூர் எங்கனு கேட்டது...
வாங்க மேக்ரோமண்டையன்.
நீங்க வருவீங்க எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு லேட்டா வருவீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு!
வல்லரசு டயலாக் மாதிரி இருந்தா நான் பொறுப்பல்ல!:))
தம்பி
கலக்குறீங்க....
நல்ல பதிவு.
நன்றி
// Sivabalan said...
தம்பி
கலக்குறீங்க....
நல்ல பதிவு.
நன்றி //
வருகைக்கு நன்றி சிவபாலன்!!
//நம்ம ஊர்ல இதையே வேற மாதிரி சொல்வாங்க
"கடை பிகரா" இருந்தாலும் சட்டுன்னு கரெக்ட் பண்ணிடுறாங்கப்பா அப்படின்னு// நாங்கல்லாம் "சடை பிகர்னு" சொல்லுவோம் சென்னைல.
லியோ சுரேஷ்
துபாய்
//சமத்காரம்.....பெரிய விசயமாத்தான் இருக்கு.. கலக்குங்க.. நெறைய படிப்பீங்களோ..//
இல்லீங்க சும்மானாச்சுகும் ஒரு பந்தாவுக்கு எழுதினது.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
தம்பி,
படிச்சிட்டு ஓடிப்போயிடலை. இந்த தடவை கமெண்டும் போட்டாச்சு. நல்லா எழுதிருக்கீங்க.
:)
தம்பி,
படிச்சிட்டு கமெண்டும் போட்டாச்சு. நல்லாருக்கு.
:)
//தம்பி,
படிச்சிட்டு கமெண்டும் போட்டாச்சு. நல்லாருக்கு.
:)//
வாங்க கைப்புள்ள. வருகைக்கு நன்றி.
நீங்க மொதல்ல சொன்னது வஞ்ச புகழ்ச்சி அணி. அதற்கு இன்னொரு உதாரணம் நம்ம ஓளவையார் அரசன் ஒருவனைப் பார்த்து பாடினது
"எட்டே கால் லக்ஷ்ணமே
எமனேறும் பரியே
கூரையில்லா குடிலே..."
நீங்கப் போட்ட புதிர் இரட்டுற மொழிதல்
பூனைக்கு ஆறு கால்.. என்ற பாடல் (முழுவதும் நினைவிலில்லை) அல்லது 23ம் புலிகேசியில் புலவர் பாடலை கேட்டுக்கொள்ளவும்.
Post a Comment