எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, September 03, 2006

டீக்கடை பெஞ்ச்...

"என்னதான் நம்ம வீட்ல தினசரிகள் வாங்கினாலும்
டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கிற சுகமே தனிதான்"
இப்படி சொல்றவங்கள நீங்க கண்டிப்பா கேட்டு
இருப்பிங்க.இது வியாதியாவே ஆகிப்போயிருச்சு.
சரி, என்னதான் அப்படி இதுல சொகம் இருக்குன்னு
பாக்கணும்னு ஒரு நாள் கிளம்பினேன். எட்டு மணி
வாக்கில டீக்கடை பக்கம் ஒதுங்கி மெதுவா ஒரு
நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். கொஞ்ச நேரத்தில கண்டிப்பா ஒரு
பேப்பராச்சும் நம்ம கைக்கு வந்து சேர்ந்திடும்.
"நகரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"

போச்சுடா எவன் வீட்டுல கன்னம் வச்சானோன்னு
உன்னிப்பா படிக்க ஆரம்பிப்போம். இதுக்கு முன்னாடி
நடந்த கொள்ளைகள விலாவிரிவா நாலு பத்தி எழுதி
இருப்பாங்க.பொறுமையோட அதையெல்லாம் படிச்சிட்டு.
இன்னிக்கு என்னதான் ஆச்சுன்னு பார்த்தா திடீர்னு
இதன் தொடர்ச்சி நாலாவது பக்கம், மூணாவது பத்தி
பார்க்கவும்னு இருக்கும். சரி நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.

டீக்கடைக்காரரை பார்த்து அண்ணே 'தினத்தந்தி
எக்ஸாம்'
நாளக்கிதானே! அப்படின்னு கேட்டு
பெருச ஒரு பார்வை பார்க்கணும்.

"தனியா மாட்டிகிட்டமோ" பொறவு வந்து படிச்சிக்கலாம்னு
பேப்பரை சுருட்டி கீழ வச்சிட்டு நைசா எஸ்கேப் ஆயிரும்.

வெற்றி!!

என்ன ஆச்சுன்னு நாலாவது பக்கம் போவோம் அங்கயும்
மொக்கையா ரெண்டு பத்தி எழுதிட்டு இரண்டாம் பக்கம்
ஏழாவது பத்தி பார்க்கவும்னு இருக்கும். இன்றைய
முட்டை விலை, வரிவிளம்பரம், இது நம்ம ஆளு,
பாக்யராஜ், ஷோபனா நடித்தது இதையெல்லாம் தாண்டி
ரொம்ப ஆர்வமா செய்திய தொடர்வோம். போலிஸாருக்கு
'டிமிக்கி' கொடுத்த கொள்ளையர்கள், கொள்ளையர்களை
விரட்டி பிடிக்க தனி போலிஸ் படை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பூக்கடை போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். அட எழவே.

இந்த சனியனை மொத பக்கத்திலயே போட்டா என்னா
கொறஞ்சி போயிரும்? ஒருவேளை இடம் பத்தலியோ
என்னமோ அப்படின்னு மொத பக்கத்துக்கு போனா, மேல
50 வருட பாரம்பரியமிக்க சுந்தரவிலாஸ் பாத்திரக்கடை,
வெற்றி பெற்ற மனிதர்கள் விரும்பும் பாக்கு, கீழ கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", ஹீரோ
ரெண்டு ஹீரோயினை கட்டி புடிச்சிகிட்டு சிரிப்பார்,
இந்தக்கலர், அந்தக்கலர், நொந்தக்கலர்னு ஒரு அம்மா
முந்தானய காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்கும்.

ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.

மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான். இளவரசிக்கு
என்ன நடந்தது? நாளை தொடரும்... நாலு படம்
போட்டு, மூணு வரி எழுதி இருப்பாங்க. நேத்திக்கு
என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் வர்றதுக்கே
ரெண்டு நிமிடம் ஆயிடுது, இதுல எங்க இருந்து
இத்தனை வருஷமா படிச்சிகிட்டு ஞாபகத்தில
வச்சிக்கிறாங்க?. ஒரே கொழப்பமா இருக்கு.

இதுல எதுனா சொகம் இருக்குதுங்களா?

"ஒண்ணுமே புரியல ஒலகத்தில"

32 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான்.//

தம்பி அவர்களே...!

கன்னித்தீவு டயலாக் ...வழக்கமா 2 லைனுதான் வரும் நீங்க 4 லைன் போட்டு கன்னித் தீவை கலங்க அடித்துவிட்டீர்கள்.

கண்டனம் !
:))))

லொடுக்கு said...

//நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். //
முற்றிலும் உண்மை. அனுபவித்திருக்கிறேன்.

//ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.
//
சில்க் படமோ இருக்குமோ???

//கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", //
கொடுமைடா சாமி.

தம்பி! நீங்க தினத்தந்தியை தானே இவ்ளோ நேரம் போட்டுத்தாக்குனீய??? அப்போ நீங்க ....

தம்பி said...

அப்போ நீங்க ....

அய்யா முத்திர குத்திடாதீங்க சாமிகளா!

தம்பி said...

//கன்னித்தீவு டயலாக் ...வழக்கமா 2 லைனுதான் வரும் நீங்க 4 லைன் போட்டு கன்னித் தீவை கலங்க அடித்துவிட்டீர்கள்.//

என்னய விட நல்லாவே படிச்சிருக்கீங்க போல!!

இப்போ கன்னித்தீவு முடிஞ்சிருச்சா இல்லையா?

லொடுக்கு said...

//அப்போ நீங்க ....

அய்யா முத்திர குத்திடாதீங்க சாமிகளா! //
ஐயமில்லை. நீங்கதான் அந்த ஆஸ்திரேலிய........

நடுத்தெரு நாராயணன் said...

எங்க பேப்பரதான் கிண்டல் பண்றிங்களோன்னு நினைச்சேன். எங்க டீக்கடை பெஞ்சுல இதை விட கேவலமா எழுதுவோம்!!

உமா கதிர் said...

//ஐயமில்லை. நீங்கதான் அந்த ஆஸ்திரேலிய........//

ஆஸ்திரேலியாவா? அப்டினா என்ன?

நீங்க என்ன சொல்ல வரிங்க!!

எனக்கு ஒண்ணுமே பிரியலயே!!

Anonymous said...

நீ உருப்பட மாட்ட.

தம்பி said...

யோவ் அனானி,

போன பதிவு வரைக்கும் நல்லாத்தான இருந்த! என்னாச்சி உனக்கு கழகத்தில ஏதாச்சும் பிரச்சினையா?!

வெற்றி said...

தம்பி,
நல்ல பதிவு. நகைச்சுவையாக சில யதார்த்த உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள்.

//ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.//

என்ன செய்வது? விளம்பரங்கள் தானே
ஊடகங்களின் வருமானம். அந்த வகையில் அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்?

தம்பி said...

//என்ன செய்வது? விளம்பரங்கள் தானே
ஊடகங்களின் வருமானம். அந்த வகையில் அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? //

முதல்பக்கத்தை மட்டுமே எல்லாரும் படிக்கிறார்களா என்ன? எனக்கு வரும் கோபமே ஒரு செய்திய நாலா ஏன் பிச்சி பிச்சி போடணுங்கறேன்?

நமீதா ரசிகர் மன்ற தலைவர் said...

"சில்க் படமோ இருக்குமோ???"

யோவ் சிலுக்கு செத்து போயி ரொம்ப நாள் ஆச்சிய்யா!

நமீதா படமா இருக்கும்!

கார்த்திக் பிரபு said...

thambi ungalukku rasigar kootam adhigamayitey varudhey kavanicheengala?

தம்பி said...

//thambi ungalukku rasigar kootam adhigamayitey varudhey kavanicheengala?//

அப்படியா, என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலயே!!

தம்பி said...

//நமீதா ரசிகர் மன்ற தலைவர் said...
"சில்க் படமோ இருக்குமோ???"

யோவ் சிலுக்கு செத்து போயி ரொம்ப நாள் ஆச்சிய்யா!

நமீதா படமா இருக்கும்!//

ந.ர.ம. தலைவரே அடுத்து யாரு கூட நடிக்கிறாங்க உங்க தலைவி? சத்யராஜ்
பேரன்கூடவா?

சொல்லிட்டு போங்க தலவரே!!

கார்த்திக் பிரபு said...

thambi indha postai copy panni vaithu indru tha padithane..nalla iruku..idaiyidaye ungal nakkal naiyandi soopero sooper..neengalum vettipaiyalum kalkureenga..indha murai kadhai anuplaya?

தம்பி said...

//thambi indha postai copy panni vaithu indru tha padithane..nalla iruku..idaiyidaye ungal nakkal naiyandi soopero sooper..neengalum vettipaiyalum kalkureenga..indha murai kadhai anuplaya?//கார்த்திக்,

நன்றி கார்த்திக். நமக்கு நக்கல், நையாண்டியெல்லாம் கொஞ்சமா வரும்.
மத்தபடி வெட்டிப்பயல் அளவுக்கு நமக்கு திறமை பத்தாது!


இந்த முறை தலைப்பு ஒண்ணுமே விளங்கல, எதுனா கிறுக்க முயற்சி செய்யணும்
அனேகமா அடுத்த வாரம் கிறுக்கிடுவேன்

கடைசி பக்கம் said...

தம்பி!


சூப்பர்ப்!

தம்பி said...

வருகைக்கு நன்றி கடைசிபக்கம்!!

கடைசிபக்கம் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது இந்தியா டுடே தமிழ்பதிப்புதான். ஏன்னா அந்த புத்தகத்தை நான் வாங்கியவுடன் உடனே பார்ப்பது கடைசி பக்கத்தைதான், அங்கதான் கில்மா படமெல்லாம் வழவழப்பா போட்டுருப்பாங்க!!

மகேந்திரன்.பெ said...

துபாய்க்கு வந்தும் டீக்கடை தினத்தந்திய விடலியா? கொடுமையே ! நிலமை மோசமாத்தான் இருக்கும் போல :)

மகேந்திரன்.பெ said...

//இந்தியா டுடே தமிழ்பதிப்புதான். ஏன்னா அந்த புத்தகத்தை நான் வாங்கியவுடன் உடனே பார்ப்பது கடைசி பக்கத்தைதான்//

நீங்களுமா?

தம்பி said...

//துபாய்க்கு வந்தும் டீக்கடை தினத்தந்திய விடலியா? கொடுமையே ! நிலமை மோசமாத்தான் இருக்கும் போல :)//

சலூன்ல ஒரு பழைய தினத்தந்தி பாத்தேன், இன்னமும் திருந்தலை இவனுங்கன்னு நெனச்சி வேதனைல போட்டது இந்த பதிவு!

//நீங்களுமா? //

சேம் ப்ளட் :))

கடைசி பக்கம் said...

தம்பி!

நீங்க மட்டும் இல்ல எனக்கு தெரிந்து எல்லோரும் அப்படிதான் செய்றாங்க!

நானும் நிறைய தடவை கவனித்துவிட்டேன்!

கவலையே படாதீங்க சீக்கிரம் போட்டுறலாம்!

தம்பி said...

மேல வானம்! கீழ பூமி!
கவலைபட இந்த உலகில் ஒன்றுமில்லை!
இதான் நம்ம பாலிஸி!

வருகைக்கு நன்றி கடைசி பக்கம்!

நாமக்கல் சிபி said...

தம்பி,
மன்னிக்கவும்... இந்த பதிவ இத்தன நாள் படிக்காம விட்டுட்டனே :(

நான் பொதுவா இந்த மாதிரி பேப்பரெல்லாம் சலூன்ல தான் படிப்பேன்...

ஆனால் இவனுங்க ரவுசு தாங்க முடியாது. ஒண்ணுமே இல்லாத சப்ப மேட்டர ஓவர் பில்ட் அப் கொடுத்து மூணு நாளு பக்கம் போட்டுருப்பானுங்க...

இதுல குருவியார் பதில்னு வேற ஒண்ணு வரும்... என்ன இருந்தாலும் நம்ம அரசு பதில் அளவுக்கு அறிவு பூர்வமா தொப்புள் ஆராய்ச்சி எல்லாம் நடக்காது...

கன்னித்தீவு.. மூணு படத்துக்கும் மூணு வரி இருக்கும். அனாலும் ரவுசா இருக்கும்

தம்பி said...

//மன்னிக்கவும்... இந்த பதிவ இத்தன நாள் படிக்காம விட்டுட்டனே :(//

பாபாஜி,

நோ பீலிங்ஸ்!!

//இதுல குருவியார் பதில்னு வேற ஒண்ணு வரும்...//

அடடா இத விட்டுட்டனே!!

எனக்கு ஒரு டவுட்டு. இந்த பத்திரிக்கைகளில் எல்லாம் குருவியார் பதில்கள், ஆந்தையார் பதிகல்கள், கோழி பதில்கள், சேவல், மயில்னு ஒரே பறவை பேரா வச்சிகிட்டு பதில் சொல்லிகிட்டு இருக்கானுங்களே. இவனுங்க ஒரிஜினல் பேர போட்டு பதில் எழுதினா வீட்டுக்கு கல்லு வரும்னு பயமா இருக்குமோ!

இத பத்தி தனி பதிவே போடணும்!

நாமக்கல் சிபி said...

//"அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருக்கிறார்//
இதுல எதாவது உள்குத்து இருக்குதா???
(நம்ம பேர்தான் ஊருக்கே தெரியுமே ;))

//இத பத்தி தனி பதிவே போடணும்!
//
போடு போடு... படிக்க ரெடியா இருக்கோம்

Anonymous said...

i can't understand the concept of go to page....... 2..........5
what is the use of doing like this

anybody knows it -
your observation is correct
..bask

சந்தோஷ் aka Santhosh said...

ஆமாம்பா அந்த கொடுமைக்கு தான் நான் அந்த பத்திரிக்கையையே படிக்கிறது இல்ல. ஒரு சில சமயத்துல சுத்தி சுத்தி முதல் பக்கத்துலேயே வந்து நிப்பானுங்க. ஒரு வேளை மொத்த பத்திரிக்கையையும் படிக்க வெக்க முயற்சி செய்கிறார்களோ?

மின்னுது மின்னல் said...

ஒண்ணுமே புரிலங்க
1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா


ஒண்ணுமே புரியல ஒலகத்தில"
"டீக்கடை பெஞ்ச்..."


//

எனக்கு நெசமாவே புரியில தம்பி என்னாச்சி ஒனக்கு....


எனக்குள் நான்..:)

பெருசு said...

//நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்//

தம்பி, நீங்க மூணு மாசமா டீக்கடை
அக்கவுண்ட் செட்டில் செய்யலேன்னு
கடைக்காரரு சவுண்டு விட்டத எழுதவேயில்லே.

பெருசு said...

//ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.//

//சில்க் படமோ இருக்குமோ???//

லொடுக்ஸ், நீங்க கண்ணமூடிக்குவீங்களா??