எல்லையற்ற அன்பு கொள்வோம்
Tuesday, September 05, 2006
யார் யாருக்கு லிஃப்ட் வேணும்?? போட்டிக்கு அல்ல!
தமிழ்மண முகப்பில் கடந்த ஒரு வாரமா எல்லாரும்
லிஃப்ட் குடுங்க, கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா
சார்?. இப்படின்னு கேட்டுகிட்டே இருக்காங்க.
இதை பாத்துட்டு நம்மளுக்கு நேத்திக்கு ராத்தூக்கமே
இல்லாம போச்சு. என்ன என்ன பண்ணலாம்னு
தாவாங்கொட்டைய புடிச்சி உலுக்கி ரோசனை
செஞ்சதுல சூப்பரா ஒரு ஐடியா சிக்குச்சி.
அதான் இந்த லாரி ஐடியா. லிஃப்டுக்காக காத்திருக்கிற
ஆரும் கவலைபடவேணாம். ஆராரு எங்க இருக்கீங்கன்னு
தம்பியோட நிரந்தர முகவரி எண் 6, துபாய் குறுக்கு
சந்து விவேகானந்தர் தெரு, இந்த அட்ரஸ்க்கு பேஃக்ஸ்
அனுப்பிடுங்க. நீங்க எங்க ஒளிஞ்சிருந்தாலும் லிஃப்ட் தர
நான் ரெடி. ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல, அம்பது
பேருக்கு மேல நம்ம வண்டி தாங்கும். ஆளுங்க
அதிகமாச்சின்னா ரெண்டு சிங்கிளா கூட அடிச்சிக்கலாம்
கவலைப்படாதிங்க சாமிகளா!! யாராரு எங்க போகணும்னு
சொல்லுங்க பத்திரமா இறக்கி விடறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
தம்பி,
ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...
பாஸ்டன் பக்கம் வந்தா ஒரு கொரல் கொடு.... வந்து ஏறிக்கிறன்
பாபாஜி,
//ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...
பாஸ்டன் பக்கம் வந்தா ஒரு கொரல் கொடு.... வந்து ஏறிக்கிறன் //
கொரலு எல்லாம் கொடுக்க முடியாது! வேணா பாட்டு பாடுரேன். உங்க "குடும்ப பாட்டு" எதுனா இருந்தா சொல்லுங்க. பாடிகிட்டே வாரேன்.
அட லாரிதானா!
நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்சுக்கு நினைச்சேன்.
:)))))
இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்புறம் பேசிக்கலாம் ;)
//நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்சுக்கு நினைச்சேன்.//
எம்பூட்டு நக்கலுயா உமக்கு!
//இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்புறம் பேசிக்கலாம் ;)//
இங்கயும் துண்டா?
ஐயா!
என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட்டுல இருந்து வர்ர மாதிரி இருக்குது... ஆளை உடுங்கப்பூ!!! நான் வரல இந்த ஆட்டத்துக்கு.
//என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட்டுல இருந்து வர்ர மாதிரி இருக்குது... //
முன்னாடி வீரப்பன்ஜி யூஸ் பண்ணிட்டு இருந்தாரு அவர்கிட்டா இருந்து லீசுக்கு வாங்கி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
என்ன பாட்டா???
தமிழ்நாட்டுக்கே ஒரே ஒரு குடும்ப பாட்டுதான் "நாளை நமதே..."
சத்தமா பாடு நான் வந்து ஏறிக்கிறன். அப்பறம் நமக்கு ஜன்னல் ஓரமா ஒரு சீட்டு போட்டு வை
//சத்தமா பாடு நான் வந்து ஏறிக்கிறன். அப்பறம் நமக்கு ஜன்னல் ஓரமா ஒரு சீட்டு போட்டு வை//
லாரில ஏதுப்பா ஜன்னல் சீட்டு?, எல்லாமே ஓப்பனா இருக்கும் ஒடிப்பிடிச்சீ கூட விளாடலாம்!!!
தம்பி அண்ணாச்சி திருநெல்வேலிப் பக்கம் வருவீயளா? எனக்கு லிப்ட் தருவீயளா? எப்ப வருவீயன்னு சொல்லுங்க. நானும் உங்க கூட வாரேன்.
நம்ம லாரிக்கு நேஷனல் பெர்மிட் இருக்கு! சோ கவலையே படாதிங்க! எங்கிட்டு போகணும்னு சொல்லவே இல்லயே?
வாங்க.... நமக்கு இங்கன போனும் அங்கன போனும்னு கணக்குல்லாம் கெடையாது. வாழ்க்க போற பக்கமெல்லாம் போக வேண்டியதுதான்..... நீங்க எங்கிட்டு போறீய?
யோவ் எலி, நிமிர்ந்து பாருயா எதுத்தாப்புலதான் நிக்கிறேன்!
கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்கு,அப்படி ட்ரைவர் ஓரமா ஒன்டிகிட்டு உள்ள உக்காந்து வர்ரனே
//கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்கு,அப்படி ட்ரைவர் ஓரமா ஒன்டிகிட்டு உள்ள உக்காந்து வர்ரனே//
கண்டிப்ப தரேங்க! ட்ரைவரயே தூக்கிட்டு உங்கள உக்கார வைக்கிறேன், கவலைபடாதிங்க! மதி எங்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே?. டீசலுக்காண்டி கொஞ்சம் டாலர மணியார்டர் அனுப்பிருங்க!
'தம்பி' இங்கே இருந்து டாலரை அனுப்பமுடியாது, வேணும்ணா வண்டிக்கு fuel போட்டுறேன். (நைஜீரியாவுல நைராதான்)
நைஜீரியாவா? ஆள விடுங்க சாமிகளா! அந்த பக்கம் என் வண்டிய பார்க் பண்ணா பார்ட் பார்ட்டா கழட்டி வித்துருவாங்களாமே!
எங்க ஊர்ப்பக்கம் போகணும், ஒரு இருபது பேருக்கு லிஃப்ட் கிடைக்குமா?
கொள்ள பேரு ஏறலாம்ணே நம்ம வண்டில இருவது பேருக்கா இடமில்ல!
Post a Comment