மருந்தடி நீ எனக்கு
மருந்துகள் தேவையில்லை
ஆகாரமும் அவசியமில்லை
எனக்கான நிவாரணிகளும்
கண்டறியவில்லை, அறியவும்
முற்படவுமில்லை
எனக்குள்ளே இருப்பது எப்படி பிறர்
அறியமுடியும்?
என்றெண்ணியே இருந்தேன்
தெரிந்த பின்னும் களையவில்லை
எனக்கு தெரியும்
உன் வருகைக்கான நறுமணமே
எனக்கான மருந்தென்று
சிறந்தது
சிறந்ததை விட சிறப்பானது
இருக்குமென்று சொல்வார்கள்
அது பொய்தானென்று
வாதம் செய்வேன்
உன்னை பார்த்ததனால்!
மழை
மழையை ரசித்துக்கொண்டிருந்தேன்
நீ வந்தாய்.
அட இவ்வளவுதானா மழை?
ரொம்ப நாள் சும்மா இருந்தா தூர்தர்ஷன்ல பேர் வந்துடுமோன்னு
ஒரு பயம் அதனாலதான் இந்த பதிவுக்கயமை(வேறெப்படி சொல்றது)
இதையும் கவிதை என்று சொல்பவர்களுக்கு என் நன்றிகள்.
அவர்களுக்கு என் விசுவாசம் (பின்னூட்டம்) கண்டிப்பாக
உண்டுங்கோவ்
போட்டிக்கு கதை எழுதற ரோசனைல இருக்கறேன்
(இன்னோரு சோதனை உங்களுக்கு)
இப்போதைக்கு அப்பீட்டு.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஹி ஹி ஹி பின்னூட்டக்கயமை
கிட்டாதவரை அதை பெருமையாகப் பேசுவதும் கிட்டியபின் ப்பு இவ்வளவுதானா? என்பதே இந்த மக்களுக்கு வாடிக்கை தம்பியையும் சேர்த்துதான் ஆமாம் ஆமாம் என்னையும் சேர்த்து தான் கவிதை நன்றி
kavithai nallayirukku
//போட்டிக்கு கதை எழுதற ரோசனைல இருக்கறேன்
All the best
//கிட்டாதவரை அதை பெருமையாகப் பேசுவதும் கிட்டியபின் ப்பு இவ்வளவுதானா? என்பதே இந்த மக்களுக்கு வாடிக்கை தம்பியையும் சேர்த்துதான் ஆமாம் ஆமாம் என்னையும் சேர்த்து//
நம்ம புத்தியே அப்படிதானே ரத்தினவேலு அவர்களே.
<><><><><><><>
நன்றி பரத்
Post a Comment