எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, August 15, 2006

1. யார் இவர்?

இவரை பற்றிய சுவையான தகவல் கீழே. ஆனால் யார்
என்று குறிப்பிடவில்லை. நீங்களே கண்டுபிடியுங்கள்,
அப்போதுதான்சுவாரசியமாக இருக்கும்.

முதன் முதலாக மேல்சபை உறுப்பினரான ஆன்மீகவாதி
இவர்தான். இவரை தேர்ந்தெடுத்தவர்களோ 'தெய்வம்
இல்லை' என்று முழங்குபவர்கள்! இவரோ பழுத்த
ஆத்திகர். 'ஓநாயின் பசியும் தீரவேண்டும்... ஆடும்
உயிரோடிருக்க வேண்டும்' என்கிற எசகு பிசகான
கொள்கையை வாழ்க்கையின் கடைசி விளிம்பு வரை
கடை பிடித்தவர். ஆத்திகர், நாத்திகர் என்ற இரு
துருவங்களுக்கும் வேண்டியவராக இருந்த ஒரே நபர்
இவர்தான்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடன் பொது
உடைமை மாநாட்டு மேடையில் காலையில் பேசினார்.
அதே தினம் மாலையில் பெரியார், அண்ணா கலந்து
கொண்ட வகுப்புரிமை பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு
கொண்டார். இரவு கோயில் திருவிழா ஒன்றில்
காமராஜ் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு
நிகழ்த்தினார். மூன்றும் ஒரே தினத்தில் நடந்தது!.
ஜிவா, அண்ணா, காமராஜ் மூன்று பேரும் மூன்று
வெவ்வேறு களன்களின் தளபதிகள்! மூன்று பேருக்குமே
வேண்டியவராக இருந்த ஒரே நபர் இவர்தான்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் குதித்த போது
மாநிலமே ஸ்தம்பித்தது. 'அரசியலில் இவரா' என்று
தேசம் முழுக்க கேள்விக்குறி...! மொழியை காப்பதற்காக
துறவை கூட துறக்க சித்தமாயிருந்த இவரை பார்த்து
ஆச்சரியபடாதவர்கள் இல்லை சொல்லப்போனால், இவர்
கலந்து கொண்டதால்தான் அந்த போராட்டத்திற்கே ஒரு
வெகுஜன அங்கீகாரம் கிடைத்தது! அதுவரைக்கும்
மொழிப்போராட்டம் என்னவோ ஆத்திகர்களுக்கு
சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற மாயையை
உடைத்தார். சமயவாதிகள் முணுமுணுத்தபோது
"அப்பரும் அருணகிரிநாதரும் போற்றி பாடின
தமிழுக்காக தான் நாமும் போராடுகிறோம். அந்த
மொழிக்கு ஆபத்து வரும்போது நம்மை விட போராடுகிற
உரிமை யாருக்கு உண்டு?" என்று கேட்டு அவர்களது
வாயை அடைத்தார்.

ஆன்மீக மேடைகளில் சுலோகங்களும், தேவாரமும்,
திவ்ய பிரபந்தமும் பாடப்படுவது தான் வழக்கம்! முதன்
முறையாக அதனை மாற்றி பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரத்தையும், கண்ணதாசனையும், ஸ்டாலினையும்,
லெனினையும் மேற்கோள் காட்டினது இவர்தான்! இந்த
அதிரடி செயலை பார்த்ததும் பழமைவாதிகளுக்கு
மூச்சடைத்தது. இவருக்கு எதிர்ப்போ எதிர்ப்பு. ஆனால்
இவர் அசைந்து கொடுக்கவில்லை.

மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட இவரை கைது
செய்ய அரசு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்
ராஜேந்திரன் கலங்கி போனார். தினசரி தான் வணங்கி
விட்டு வரும் மாமனிதரை கைது செய்வதா? மறுத்து
விட, கோபமான காங்கிரஸ் அவரை வேறு ஊருக்கு
மாற்றியது! புதிதாய் வந்த ஆட்சியரும் இவரை கைது
செய்ய தயங்கினார். கிராம மக்களையும் மீறி இவர் மீது
நிழல் கூட பட முடியாதே! நிலைமையை உணர்ந்த இவர்
தானாக போய் சென்று நீதிமன்றத்தில் சரணடைந்து
ரூ 350 அபராதம் கட்டினார். அண்ணா முதல்வரானதும்
அந்த தொகை திருப்பி தரப்பட்டது.

நாளை தொடரும்...

20 comments:

Anonymous said...

தன்மானத் தலைவர் கருணாநிதி?

-அனானி

கதிர் said...

தப்பு அனானி அண்ணா!

கதிர் said...

அட இன்னாபா, யாருக்குமே தெரியலயா?

ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடற பிரபலம்தான் இவர்.

இப்போது மறைந்து விட்டார்.

மீதி நாளைக்கு.

Anonymous said...

Maraimalai Adikalar ?!!

Anonymous said...

தேவர் அய்யா?

கதிர் said...

தவறு ஆறுமுகம்
பக்கத்துல வந்துட்டிங்க,
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க

அனானி நீங்க சொன்னதும் தவறு,

சித்தன் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்ங்க,
கண்டுபிடிக்கலாம்.

கதிர் said...

செந்தில்(சிங்கை நாதன்) நீங்க சரியா சொல்லிட்டிங்க!

G.Ragavan said...

காலம் சென்ற குன்றக்குடி அடிகளார். அவருடைய தமிழும் கருத்துகளும் என்று இனியவை. போற்றுதலுக்குரிய மாமணி அவர்.

கதிர் said...

வாங்க ராகவன்!

சரியா சொன்னீங்க.

நீங்க ஒருத்தர்தான் சுலபமா கண்டு பிடிச்சிட்டிங்க!

கைப்புள்ள said...

//தவறு ஆறுமுகம்
பக்கத்துல வந்துட்டிங்க,
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க//

தவத்திரு குன்றக்குடி அடிகளாரா?

வாசகன் said...

குன்றக்குடி அடிகளார் தானே!

கதிர் said...

கைப்புள்ள கைய குடுங்க!

நீங்க சொன்னது சரி தான்.

Geetha Sambasivam said...

குன்றக்குடி அடிகளாரா? அவர்தான் இம்மாதிரிச் செய்ததாக நினைவு? சரியா?

கதிர் said...

கீதா சாம்பசிவம்,

நீங்க சொன்னது சரிதான்!

உங்களுக்கு இந்த கேள்வியெல்லாம் அல்வா சப்பிடுற மாதிரி.

தி. ரா. ச.(T.R.C.) said...

தவத்திரு குன்றக்குடி அடிகளார்தானே தம்பி.

கதிர் said...

//அருமை தம்பி ,
அப்போ நாங்க என்ன கஸ்டபட்டா கண்டு புடிச்சோம். இதல்லாம் நல்லா இல்ல ஆமாம் .//

அப்டி ஒண்ணும் தெரியலயே, நெத்தியடியா இல்ல சொன்னீங்க!

கதிர் said...

//தவத்திரு குன்றக்குடி அடிகளார்தானே தம்பி.//

சந்தேகமே வேண்டாம், அதுதான் சரி!

Geetha Sambasivam said...

தம்பி,
முதல் வரியைப் படிச்சதுமே புரிஞ்சிடுச்சு, அதுவும் நான் மதுரைக்காரி, பக்கத்திலே குன்றக்குடி பத்தித் தெரியாமல் இருந்தால் தான் தப்பு.

Geetha Sambasivam said...

மேல்சபை உறுப்பினர்னாலே அவர்தான்.

கதிர் said...

நாந்தான் சொன்னனே உங்களுகு இதெல்லாம் சும்மான்னு!!