அழகிய தீயே படத்தில் வரும் விழிகளின் அருகினில்
வானம் என்ற பாடல் அடிக்கடி நான் கேட்கின்ற
பாடல்களில் ஒன்று.எளிமையான வரிகள், காதல்
வயப்பட்ட ஒருவனின் எண்ணங்களை அழகாக
பிரதிபலிக்கும்.
ரொம்பத்தான் குழம்பிபோனேன் அடுத்து என்ன
எழுதலாம்னு சரி அடிக்கடி நாம் கேட்கும்
பாட்டையாவது போட்டு ஒப்பேத்தலாம்னு தோணுச்சு.
அழகான கவிதையுடன் அமைந்த பாடல். இப்போ
வரும் இரைச்சலான பாடல்களுக்கு இடையில் தெளிவாக
புரியும்படி இருப்பதுதான் இதன் சிறப்பு. எல்லாரும்
இந்த பாடலை கண்டிப்பாக கேட்டு இருப்பீங்க.
கொஞ்சம் பழசுதான் ஆனால் அருமையா இருக்கும்.
கேட்டுதான் பாருங்களேன்.
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இந்த இரண்டு வரிகளுக்காகவே பலமுறை கேக்கலாம்.
தமிழ் சினிமா கண்டு கொள்ளாத ஒரு கதாநாயகன்
பிரசன்னா . பின்னால் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது
பாடலின் தொடுப்பு இங்கே
ahttp://www.raaga.com/playerV31/index.asp?pick=20901&mode=3&rand=0.2848494474713584&bhcp=1
பாடல் வரிகள் இங்கே.
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
எனக்கும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதது.
வணக்கம் தம்பி
எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. இப்பட இசையமைப்பாளர் ரமேஸ் விநாயகமே பாடியிருந்தார். இவரின் இன்னொரு அருமையான மெல்லிய இசை தழுவும் பாடல் நள தமயந்தி படத்தில் வரும் " என்ன இது என்ன இது என்னைக் கொல்லுது" கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன்.
நன்றி எனக்கு பிடித்த பாடல்
///
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
///
அரவிந்தன்,
உங்களுக்கும் பிடிக்குமா? சந்தோஷம்.
கானா பிரபா,
நட்சத்திர பதிவாளர் வருகை தந்ததற்கு நன்றிகள். நீங்கள் சொன்ன பாடலை முன்பே கேட்டிருக்கிறேன் அருமையான மெலடி.
வருகைக்கு நன்றி மதுமிதா
///
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
///
இதுவும் அழகான வரிகள்தான்.
அன்புடன்
தம்பி
எனக்கும் பிடித்த பாடல்.. அளவுக்கதிகமாய் கற்பனைக் குதிரையைத் தட்டாமல்..எளிமையான எதார்த்தமான வரிகள்.. மிதமான இசை .. உண்மையில் இந்த படமே கூட நன்றாகத்தான் இருந்தது...
நியாபகப்படுத்திவிட்டீர்கள் தம்பி.. இன்று கேட்டுவிட வேண்டியதுதான் :)
வாழ்த்துக்கள்
சுகா
வணக்கம் தம்பி! இந்த பாடலின் சிறப்பம்சம் என்ன தெரியுமா..?
இந்த பாடலில் காதல் என்ற வார்த்தையே உபயோகப் படுத்தி இருக்க மாட்டர்கள்.
காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல்.
இந்த படமும் சிறந்த படம்..பிரகாஷ் ராஜ் நம்பிக்கை அளிக்கிறார்..
பிரசன்னாவும் சிறப்பாக நடிக்கிறார்.அவர் நடிப்பை எல்லம் பார்த்து விட்டு விஜய்,அஜீத் படங்களை பாத்தால் அவ்வளவு தான்..!
தொடர்ந்து எழுதுங்கள் தம்பி.
ஹி,ஹி,ஹி,ஹி, தம்பி,
வலை உலகுக்குச் சேவை செய்யறேன்னு சொன்னீங்களா? அதை முதலில் உங்க பதிவிலேயே ஆரம்பிக்கலாம்னு வந்தேன். எப்படி வசதி?
வணக்கம் தம்பி சார்,
நானும் பலமுறை ரசித்து இருக்கின்றேன். இப்போதெல்லாம் எப்போதாவது தானே இப்படி நல்ல பாடல்கள் வருகின்றது.
enakkum romba romaba piditha paadalkalil onru ithu.
//எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதது.
//
100% unmai
வாங்க சுகா உங்களுக்கும் பிடிக்குமா. என் ரசனை எல்லாராலும் ஒத்து போகுதே!
கார்த்திக்,
//இந்த பாடலில் காதல் என்ற வார்த்தையே உபயோகப் படுத்தி இருக்க மாட்டர்கள்.
காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல்.
//
அட ஆமாம். இப்போதான் கவனிச்சேன்.
கீதா,
உங்கள் சேவை இந்த வலையுலகுக்கு கண்டிப்பாக தேவை.
கலை அரசன்,
//இப்போதெல்லாம் எப்போதாவது தானே இப்படி நல்ல பாடல்கள் வருகின்றது//
அப்படியாச்சும் வருதே! அதுவே சந்தோஷம்.
பரத்,
சில பாடல்கள் மட்டுமே 100% சுகத்தை தரும் என்பது சரிதான் பரத்.
நம்ம ரசிச்ச பாட்டை எல்லாரும் ரசிக்கறாங்கன்னா நம்மளுக்கும் ஒரு ரசனை இருக்கு. ரொம்ப நாள்
சந்தேகம் இப்போ தீர்ந்துடுச்சி.
thala enna padivaiye kanom..edhavdhu eludhungal..
நல்ல பாடல்,அற்புதமான சிந்தனை,ஆழ்ந்த கருத்துக்கள்....
இருந்தாலும் தீ பிடிக்க..தீ பிடிக்க மாதிரி வருமா...
வேறென்ன சொல்ல... :-)
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
அருமையான எதார்தமான வரிகள்!!
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயல் என வரும் சுவாசம்!!
இதயமே துடிக்கிறதா
இல்லை
துடிப்பது போல் நடிக்கிறதா?
அருமையான எதார்த்தமான வரிகள்!!
ஆமாம் காதல் என்ற வார்த்தை இல்லாமல்
காதல் பாடல்!
Post a Comment