எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, July 11, 2006

தங்கரும் பிரச்சினையும்

விகடனில் தங்கரின் கட்டுரை படித்தேன். என்னமோ இவருக்கு மட்டும்தான் ஈழ தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல அறிக்கை விட்டுருக்கார் அவ்வளவா நல்லா இல்லை. இவ்வளவு
சீற்றமா பேசுற மனிதர் இவ்வளவு நாளா எங்க போயிருந்தார்.

இவர் ஏன் எதை பேசினாலும் எதிர்ப்புகள் அதிகம் வருது என்று அவரின் பேட்டியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஒரு பிரச்சினைக்கு வித்திடாமல் இருக்குமாறு பேச்சு இருக்க வேண்டும். ஏதோ ஆவேசமா பேசிட்டா எல்லா பிரச்சினைக்கும் தீர்வு எப்படி வரும்.

பணிவு பாதையை எளிதாக்கும்னு சொல்வாங்க.

மேலே சொன்ன மாதிரி அவர் பேசி இருந்தா தமிழக மக்களே திரண்டு வருவாங்க. மாறாக அவரு இமயமலைக்கு ஆயில் மசாஜ் செய்யதான் போவாரு போராட்டத்துக்கு எல்லாம் வரமாட்டாரு என்பது போல இவரே பேசிட்டா அப்புறம் எப்படி வருவாங்க?. சொல்கிற விதத்தில் சொன்னா யார் வேணாலும் வருவாங்க.யாருக்கும் ஈழப்பிரச்சினையை வளர விடணும்னு ஆசையில்லை. கமலும், ரஜினியும் சொன்னா மக்கள் கேப்பாங்க என்று சொல்றதெல்லாம் வீண். ஒரு நல்ல இயக்குனர் அழகாக கதை சொல்லவும்
படமெடுக்கவும் தெரிந்த ஒருவர் வார்த்தை விஷயங்களில் தெளிவில்லாமல் தனி மனித காழ்ப்புண்ர்ச்சிகளை கொட்டி வெறுப்பையே சம்பாதிக்கிறார். இந்த விஷயத்தை ஒரு பணிவான வேண்டுகோளாக வைத்திருந்தால் கண்டிப்பாக செவிமடுப்பார்கள் அதை விட்டுட்டு தேவையில்லாத வார்த்தைகளை பேசி தான் ஒருத்தர் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாளன் என்பது போன்ற மாயையை ஏற்படுத்துவது விளம்பரமே. தமிழகத்தில் நடிகர்கள் பேச்சைதான் மக்கள் கேப்பாங்களா மற்ற தலைவர்களின் பேச்சை கேக்க மாட்டார்களா.

அங்கே துப்பாக்கிகுண்டுகளின் தாக்குதலுக்கும் இனவெறிக்கும் பயந்து கொண்டு இங்கே அடைக்கலம் வருபவர்களின் முன் நம்மவர்கள் வீண் வார்த்தை சண்டை போடாமல்
ஏதாவது உபயோகமாக செய்தால் நல்லது.

இதை சொன்னவுடனெ யாரும் என்னை ரஜினி ரசிகன்னு நினைச்சிட வேணாம். எல்லாருக்கும்
பொதுவானவன் நான். தங்கர் குறிப்பிட்ட விஷயம் நல்லது ஆனால் வார்த்தைகள் தான்
தடித்து விட்டன.

15 comments:

நாமக்கல் சிபி said...

நீங்கள் சொல்வது 100% சரி...
அவர் பேசுவது பிரச்சனையை தீர்க்கும் எண்ணத்தில் இல்லை...
தனிமனித காழ்ப்புணர்ச்சி தங்கரின் பேச்சில் தெரிகிறது.

Guru said...

i completely agree with your words. these kind of talks cause irritation rather than any useful happenings.

thangar & thiruma's talks sometimes make us think they are just creating scenes. cheap public stunts.

if thangar really wants that rajni has to give voice reagrding this, then whats the point in criticizing rajni?? who will be interested in helping once been criticized in such a way?

firts of all they have to stop creating scenes and have to have real interest in helping srilankan-tamil people genuinely.

மனதின் ஓசை said...

//இவ்வளவு சீற்றமா பேசுற மனிதர் இவ்வளவு நாளா எங்க போயிருந்தார். //

இதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல மாட்டோம்.. நாயகன் படம் மட்டும்தான் எங்களுக்கு ஞாபகம் வரும்..சும்மா பேசிக்கிட்டு...

//ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஒரு பிரச்சினைக்கு வித்திடாமல் இருக்குமாறு பேச்சு இருக்க வேண்டும். //

இது எங்களுக்கு தெரியாதா?...சிறுபிள்ளத்தனமா இல்ல சொல்றீறு..எங்களுக்கு அதுதான் வேணும்னு யார் சொன்னா?

//இந்த விஷயத்தை ஒரு பணிவான வேண்டுகோளாக வைத்திருந்தால் கண்டிப்பாக செவிமடுப்பார்கள் அதை விட்டுட்டு தேவையில்லாத வார்த்தைகளை பேசி தான் ஒருத்தர் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாளன் என்பது போன்ற மாயையை ஏற்படுத்துவது விளம்பரமே.//

இப்படியெல்லாம் பொதுவில பொட்டு உடைக்க கூடாது ஆமா... சொல்லிபுட்டேன்..

Anonymous said...

Everyone is asking "How come all of the sudden he is worried about the issue, where was he all this time, etc.?

Why not think, at least, he spoke out about the problems now. Thankar has been in the news, as far as I know, since Azhaki time only. From my point of view, I think that at least, he is speaking about it now. The way industry people are though, is that they will talk only when it comes to market. Look at Vairamuthu and Sarathkumar's speech in FETNA. Same people have not made any attempt to help Eelam Tamils.

I agree Thankar could have mellowed his tone so that he can suck up to people like the rest of the industry. But regarding the actors, he was pretty right. They complain about privacy problems, but the truth is, they do exploit the public and misuse their power. Even if they didn't vote for him, the truth is that TN people flocked election meetings of Karthik(who is a no show in these days). So that itself answers your questions about people only listening to actors.

It's sad, but that is the truth. Nobody likes to be picked at, and Thankar sure didn't take the right tone in asking for help. But the truth is, Thankar shouldn't even have had to do the asking...especially considering everything that Eelam Tamils have suffered in the last 6 months.

-Kajan

தம்பி said...

வாங்க வெட்டிப்பயலே.

சரியா சொன்னீரு. மனிதருக்கு எதெதில விளம்பரம் தேடணும்னு விவஸ்தை இல்லாம போச்சு.

அன்புடன்
தம்பி

தம்பி said...

வாங்க மனதின் ஓசை

"இப்படியெல்லாம் பொதுவில பொட்டு உடைக்க கூடாது ஆமா... சொல்லிபுட்டேன்.. "

அறிக்கைய தனியறைக்குள்ள விடலியே
பத்திரிக்கைலதான வெளியிட்டார்.

கார்த்திக் பிரபு said...

hi thambi nanall padhil sonnera mandhin oosaiku ..

nalla padhivu nan ninaithadhai neengal eludhi viteergal ..en saarbhaga nandri.

thinamala paartheeengal.."thayaaripaalar therdhalillum poi namma thangar prachinnai panni irukaar"

padichutu adhai parriyum oru padhivu podunga

கார்த்திக் பிரபு said...

hi thambi ungal pakkam sooperb ungal padhivirku nan en padhivil irundha link kodukkirane ungal anumadhiyudan ..anumadhipeeraaa?

கீதா சாம்பசிவம் said...

இது பொன்ஸ்தானா, போலியா தெரியலையே? வர வர ஒண்ணுமே புரியலை.

barath said...

nalla pathivu,
//அங்கே துப்பாக்கிகுண்டுகளின் தாக்குதலுக்கும் இனவெறிக்கும் பயந்து கொண்டு இங்கே அடைக்கலம் வருபவர்களின் முன் நம்மவர்கள் வீண் வார்த்தை சண்டை போடாமல்
ஏதாவது உபயோகமாக செய்தால் நல்லது//

sariya sonneenga..

தம்பி said...

வாங்க பரத். வருகைக்கு நன்றி

தம்பி said...

கீதா மேடம்,

"இது பொன்ஸ்தானா, போலியா தெரியலையே? வர வர ஒண்ணுமே புரியலை."

நான்கூட முதலில் அது பொன்ஸ்தான்னு நினைச்சி பப்ளிஷ் பண்ணிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது போலின்னு. மன்னிச்சிடுங்க.

அன்புடன்
தம்பி

பொன்ஸ்~~Poorna said...

இப்போ எடுத்துட்டீங்க போலிருக்கே.. நன்றி..

மு.கார்த்திகேயன் said...

உங்களின் கூற்று மிகவும் சரியே. அந்த பேட்டியை படித்த யாருக்குமே அப்படி ஒரு உணர்வு வராமல் இருக்காது தம்பி.

Leenaroy said...

தம்பி! தங்கரின் விடயத்தில் நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான். ஆனாலும் பலரது கோவம் அவர் தாங்கள் நேசிக்கும் ரஜனியைப்பற்றி சொல்லிவிட்டார் என்பதுதான். தங்கர் தனியறையில் சொல்லாமல் பத்திரிகையில் சொன்னது தவறுதான். ஆனால் தான் இமயமலை அடிவாரத்தில் பாபாவின் குகைக்குள் அமைதியாகத் தியானம் செய்யப் போகும் போது, ரஜனி ஏன் பத்திரிகைக்காரனைக் கூட்டிக் கொன்டு செல்ல வேண்டும். அவர் இமயமலைக்குப் போனால் என்ன, குகைகுள் தியானம் செய்தால் என்ன, இவை ஏன் சாதாரண மக்களுக்குச் செய்தியாகப் பரப்பப் பட வேண்டும். தான் ஒரு ஆண்மீகவாதியாக ரஜனி இருப்பது அவரது சொந்தப் பிரச்சனை ஆனால் இவரும் இளையராஜா போன்றோரும் தங்களை ஆண்மீகவாதிகள் என்று மக்களுக்கு அடிக்கடி பத்திரிகைகள் மூலமாக விளம்பரப் படுதுகிறர்களே. உன்மையான ஆண்மீகவாதி அடக்கமாகவே இருந்து கொள்வான்.வெளி நாடுகளுக்கு வந்திருந்த ரஜனி, ஈழத் தமிழர்கள் விடயத்திலும் ஈழத் தமிழர்களிடமும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். தமிழகத்தில் ரஜனி காட்டும் முகத்தை விட அவருக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை எனது சகோதரர்களான நீங்கள் அறிய வேண்டுமென்பதே எனது விருப்பம். உங்கள் யார் மனத்தையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.